Sunday, 10 July 2011

ஒரு பெரிய இடத்து விபசாரி ஆடை மாற்றுகிறாள்

பிரித்தானியாவில் அதிக விற்பனையைக் கொண்ட பத்திரிகையான News of the World பத்திரிகை இன்றுடன் மூடப்படுகிறது. The Guardian, Independent போன்ற தரமான பத்திரிகைகள் தங்களது விற்பனைக்குத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் தரக்குறைவான அரை நிர்வாணப் படங்களையும் பிரபலமானவர்களின் அந்தரங்க செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் திருடிப் பிரசுரிப்பது Rubert Murdoch என்ற பத்திரிகை முதலாளி(முதலை)யின்News of the World இன் வெற்றியின் பின்னணி. வலதுசாரி அரசியல்வாதிகளை ஆதரிப்பது இப்பத்திரிகையின் வெற்றியின் இன்னும் ஒரு இரகசியம்.

2004-ம் ஆண்டு Clare Short என்னும் (பெண்) தொழிற்கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் சன் என்னும் Rubert Murdoch இன் பத்திரிகையின் மூன்றாம் பக்கத்தில் பிரசுரிக்கப்படும் மேலாடை அற்ற பெண்களின் படங்களுக்கு எதிராக ஒரு தனிப்பட்ட மதிய உணவு விருந்து உபசாரத்தில் கருத்துத் தெரிவித்தார். மறுநாள்  ‘Fat, Jealous’ Clare Brands Page 3 Porn” என்று சன் பத்திரிகை முதற்பக்க தலைப்புச் செய்தி. அத்துடன் சன் நிற்கவில்லை. Clare Short படத்தின் தலையை மேலாடை இல்லாத ஒரு பெண்ணின் படத்தில் ஒட்டிப் பிரசுரித்து Clare Shortஇற்கும் மார்பு உண்டு ஆனால் அது எங்களுடையதைப் போல் இல்லை என்று ஒரு page - 3அழகி கூறுவதாகப் பிரசுரித்திருந்தது. அப்போது சன் பத்திரிகையின் ஆசிரியப் பதவியில் இருந்தது Rebekah என்னும் பெண்மணி. அவர் பின்னர் Rubert Murdochஇன் News of the Worldஇன் ஆசிரியை ஆனார்.

168 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது News of the World. இதை 1969-ம் ஆண்டு Rubert Murdoch இன் News Ltd வாங்கிக் கொண்டது. 1969இல் 6மில்லியன் பிரதிகள் விற்பனையைக் கொண்டிருந்தது.  அது 1980இல் 4மில்லியன்களாகக் குறைந்தது. படவாய்ப்புப் குறைந்த தமிழ்ச் சினிமா நடிகை ஆடைக் குறைப்புச் செய்வதைப் போல் 1981இல் News of the World பரந்த தாள் வடிவத்தில் இருந்து மடிப்புத் தாள்(broadsheet to tabloid format)வடிவத்திற்கு மாறிக்கொண்டது. மடிப்புத்தாள் பத்திரிகைக்கு கவர்ச்சிப் படங்களுக்காக பத்திரிகை வாங்குவோரிடம் வரவேற்பு அதிகம்.

அந்தரங்கத் தகவல்கள் திருட்டுக்கள்
பிரித்தானிய மக்களிடை மற்றவர்களின் அந்தரந்கச் செய்திகளுக்கு வரவேற்பு அதிகம். அதிலும் அரச குடும்பத்தினர், அரசியல்வாதிகள், கலைத் துறையில் உள்ளோர், விளையாட்டுத் துறையில் உள்ளோர் சம்பந்தப்பட்ட அந்தரங்கச் செய்திக்கு பெரும் வரவேற்பு. இதை உணர்ந்த News of the World இவர்களின் அந்தரங்கச் செய்திகளைத் திரட்டிப் பிரசுரிக்கத் தொடங்கியது. 2002இல் பிரித்தானிய இளவரசர் (டயானாவின் இரண்டாம் மகன்) குறைந்த வயதில் மது அருந்தினார் என்ற செய்தியைப் பிரசுரித்தது. பல பிரபல்யங்களின் அந்தரங்கச் செய்திகளைப் பிரசுரிப்பதை தனது வாடிக்கையாக்கிக் கொண்டது. இந்தத் தகவல்கள் அவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம் பெற்றுக்கொண்டது News of the World. Clive Goodman and Glenn Mulcaire என்னும் இரு News of the World ஊழியர்கள் தொலைபேசி ஒற்றுக் கேட்டலுக்காக கைது செய்யப்பட்டனர். அப்போது News of the World ஆசிரியராக இருந்த Andy Coulson பதவி விலகினார். இவர் பின்னர் தற்போதைய பிரித்தானிய பிரதம மதிரியின் பத்திரிகைத் துறைத் தொடர்பாளராகப் பதவி வகித்தார். ஏப்ரில் 2011இல் News of the World இன் நிருபர்களான Ian Edmondson and Neville Thurlbeck தொலை பேசி ஒற்றுக் கேட்டல்களுக்காக கைது செய்யப்பட்டனர். பிரபல்யங்களின் தொலைபேசியை ஒற்றுக் கேட்டவர்களுக்கு அது அலுத்துவிட்டது. குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களது தொலைபேசிகளை ஒற்றுக் கேட்கத் தொடங்கினர். ஆப்கானிஸ்தானில் இறந்த பிரித்தானியப் படை வீரர்களின் குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள், தீவிரவாதிளின் குண்டுத்தாக்குதல்களால் இறந்தவர்களின் குடும்பத்தினரின் உரையாடல்கள், வெறியனால் கொல்லப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர்களின் உரையாடல்கள்.... எதையும் விட்டுவைக்கவில்லை News of the World. பிரித்தானியக் காவல்துறையினருக்கு இலஞ்சம் கொடுதும் News of the World பல தகவல்களைத் திருடிக் கொண்டது.

News of the Worldஇற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அம்பலமான நிலையில் வர்த்தக நிறுவனங்கள் அதற்கு கொடுக்கும் விளம்பரங்களை நிறுத்துவதாக அறிவித்தன. பாராளமன்றம், வானொலிகள், தொலைக்காட்சிகள் எனப் பட்டி தொட்டியெங்கும் News of the Worldஇற்கு எதிராக கருத்துக்கள் பரவின். பல பத்திரிகைகளின் உரிமையாளரான Rubert Murdoch தனது மற்றப் பத்திரிகைகளுக்கு எதிராகவும் கருத்துக்கள் கிளம்பும் என்று எதிர்பார்த்தார். மற்றும் பிரித்தானியாவின் SkyTv தொலைக்காட்சிச் சேவையையும் அவர் வாங்கும் முயற்ச்சியில் பாதி வெற்றி கண்டுகொண்டிருக்கிறார். தனது முதலுக்கே ஆபத்து வரும் என்று உணர்ந்த Rubert Murdoch தனது News of the World முடுவதாக அறிவித்தார். ஆனால் News of the Worldஆனது Sun on Sunday என்னும் இன்னொரு பெயரில் வரவிருக்கிறது. ஒரு மேலிடத்து விபச்சாரி ஆடையை மாற்றிக் கொள்கிறாள்


1 comment:

குறுக்காலபோவான் said...

உங்கள் தகவலுக்கு நன்றி.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...