Sunday, 31 July 2011

சிங்களவர்கள் பார்வையில் சனல்-4

சனல்-4 வெளிக்கொண்டுவரும் போர்க்குற்ற ஆதாரங்கள் தமிழர்களுக்கு இந்தியாவின் பேருதவியுடன் இலங்கை அரசால் இழைக்கப்பட்ட அநீதிகள் அப்படியே மறைக்கப்பட்டுவிடுமா என்று கலங்கிப் போயிருந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளது. சனல்-4 வெளிக் கொண்டு வந்தது உண்மையில் நடந்த இனக்கொலையின் ஒரு சிறு பகுதியே. இதை சிங்கள மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இல்ங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிக்கா விஜய குமாரணதுங்க பண்டாரநாயக்கவும் அவரது மகனும் கூறியதுதான் பொதுவான சிங்கள மக்களின் கருத்தா? சந்திரிக்கா இதற்கு முன்னர் இரண்டு முறை குடியரசுத் தலைவராக இருந்தவர். மஹிந்த ராஜபக்சவின் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி அவரது குடும்பச் சொத்தாக இருந்தது. மஹிந்தவை பிரதம மந்திரியாக்கியரும் அவரே. பின்னர் மஹிந்தவால் அரசியலில் இருந்தே ஓரம் கட்டப்பட்டவர் சந்திரிக்கா. அவருக்கு மஹிந்தவைப் பழிவாங்க பல காரணங்கள் உள்ளது. இவரின் கருத்து சிங்களவர்களின் கருத்தாகாது.

சனல்-4 பற்றி சிங்களவர்கள் சொல்பவை.
  • யாராவது நோர்வே கொலையாளியை வாடகைக்கு அமர்த்தி அவரை இலண்டனுக்கு அனுப்புங்கள்.
  • சனல்-4 தமிழ்ப் புலிகளின் நிதியால் இயக்கப்படுகிறது
  • நேட்டோப் படையினரின் விமானங்கள் லிபியாவின் உள்ள தொலைக்காட்சிச் சேவைகள் மீது குண்டுகள் வீசியது போல் சனல்-4இன் மீது குண்டு வீச வேண்டும்.
  • ஷவேந்திர சில்வாவும் கோத்தபாய ராஜபக்கசவும் போர்க் குற்றவாளிகள் என்றால் சகல நாடுகளிலும் உள்ள பாதுகாப்புச் செயலர்களும் தளபதிகளும் போர்க்குற்றவாளிகளே.
  • சனல்-4 நகைச்சுவைக் காட்சிகளைத் தருகிறது.
சில சிங்களவர்கள் போர்க்குற்றம் நடக்கவில்லை என்பதை விசாரித்து நிருபிக்கவும் என்று சொன்கின்றனர். சிலர் சனல்-4 சொல்வது பொய் என்றால் அவர்கள் மீது வழக்குத் தொடுங்கள் என்று சவால் விடுக்கின்றனர்.

சனல்-4 இனால் குற்றம் சாட்டப்படும் ஷவேந்திர சில்வா(The former General Officer Commanding (GOC) of 58 Division) சொல்பவை:
  • இலங்கைக்குக் களங்காம் ஏற்படுத்த எல்ரிரியினரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சனல்-4 இலங்கைக்கு அரச தந்திர முனையில் களங்கம் ஏற்படுத்த முயல்கிறது.
  • சனல்-4 இற்கு திராணி இருந்தால் தனது பேட்டியை முழுமையாக ஒளிபரப்பட்டும்.
  • எம்மீது குற்றம் சுமத்துபவர்கள் யாரென்பதை வெளியிடும்படி நான் சனல்-4இன் ஜோனார்தன் மில்லரிற்கு சவால் விடுகிறேன்.
  • முகமில்லாதவர்கள் சுமத்தும் குற்றச் சாடுகளுக்கு நாம் பொறூப்பல்ல. முடியுமானால் ஒரு பன்னாட்டு அமைப்பின் முன் அவர்கள் வந்து தாம் யார் என்பதைக் கூறட்டும்.
திவியன என்னும் சிங்களப் பத்திரிகை இலங்கைப் படையில் இருந்து துர் நடத்தைக்காக விலக்கப்பட்டவர்களே சனல்-4 இற்கு சாட்சியமளித்ததாகக் கூறுகிறது. அவர்கள் பெயர்கள் இதுவரை வெளிவிடப்படாத நிலையில் திவயின எப்படிக் கண்டு பிடித்தது?

லங்காபுவத்: சனல்-4 இன் பொறுப்பற்ற நடவடிக்கை. மக்களாட்சி மனப்பான்மை கொண்ட இலங்கை மக்களுக்கு எதிரான தனது மனப்பாங்கை சனல்-4 வெளிப்படுத்துகிறது.இந்தச் சின்னஞ்சிறு தீவு மற்ற அணு வல்லரசுகள் செய்ய முடியாத பயங்கரவாத ஒழிப்பைச் செய்ததை அந்த வெள்ளையர்களால் பொறுக்க முடியவில்லை.

இலங்கை அரசின் கொள்கை.
இலங்கை அரசைப் பொறுத்தவரை அவர்கள் செய்த போர் ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்த அப்பாவி மக்களை விடுவிக்க செய்த "மனிதாபிமான நடவடிக்கை". இலங்கைப் படையினர் ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் மனித உரிமை சம்பந்தமான கையேட்டையும் வைத்துக் கொண்டே போர் புரிந்தனர். இலங்கையில் ஒரு அப்பாவிப் பொது மகன்கூடக் கொல்லப்படவில்லை.

சிங்களவர்கள் இறந்ததாக மாரடிக்கும் நிருபாமா.
சிங்களவர்களின் ஆருயிர் "நண்பியான" நிருபாமா மேனன் ராவ் அவர்கள்: சனல்-4 காணொளியின் படி போரின் கடைசி சில நாட்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளது. தெற்கிலும்(சிங்கள) மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்( மார்பில் அடித்து அழுகின்றரா?). நிருபாமா கூறியது: “They have to look at it carefully. As per the (Channel 4) video, there were human right violations during the last few days of the war they were fighting.” அவர் இலங்கை இதை கவனமாகப் பார்க்க வேண்டும் என்றுதான் சொல்கிறார். ராஜபக்ச சகோதரர்கள் மீதுள்ள பாசத்தால்.. நேசத்தால்...கரிசனையால....அக்கறையால் கூறுகிறார். இது பற்றி பன்னாட்டு மட்டத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று நிருபாமா ஏன் சொல்லவில்லை? வரவு குறைந்து விடுமா? சில இந்தியாவின் வால் பிடி ஊடகங்கள் இதை மிகைப்படுத்தியும் திரிபு படுத்தியும் ஏதோ இந்தியா தமிழர்களுக்கு சார்பாக குரல் கொடுப்பது போல் எழுதியிருக்கின்றன. அமெரிக்க தூதுவராக செல்லும் நிருபாமா இனி அங்கு சிங்கள நலன்களைக் கவனிப்பாரா? அவருக்கு மஹிந்த "விருந்து" கொடுக்கிறாரே! நன்றி மறப்பது நன்றன்று நிருபாமா.

2 comments:

செல்வராஜா மதுரகன் said...

Daily Mirror இல் பின்னால் இடப்படும் Comments ஒன்று விடாமல் வாசிக்கிறீர்கள் போலும்.. அங்கு நடக்கும் கருத்துக்கணிப்பில் பங்கேற்குமாறு தமிழர்களைக் கோரலாமே..

Anonymous said...

ஏற்கனவே ஐநா மனித உரிமைக் கழகத் தில் இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக கண்டனத் தீர்மானம் வந்த போது மானம் கெட்ட இந்தியா அதை திரிபு படுத்தி இலங்கையைப் பாராட்டும் திர்மானமாக மாற்றியதை எந்தத் தமிழனும் மன்னிக்க மாட்டான்....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...