Wednesday, 27 July 2011

மேலும் போர்க்குற்ற ஆதாரங்களை சனல்-4 தொலைக்காட்சி அம்பலப் படுத்துகிறது.

"மக்களைக் கண்டபடி சுட்டனர். கத்திகளால் குத்தினர். நாக்குகளை அறுத்தனர். பெண்களின் மார்புகளை அறுத்தனர். மக்களை இரத்த வெள்ளத்தில் நனைந்தபடி கண்டேன்" இப்படி விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் இறுதி நாள் காட்சிகளை இலங்கைப் படையில் 58வது அணியில் முன்னணிப் படை அதிகாரியான பெர்னாண்டோ என்பவர் சனல்-4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

"இதை ஒரு வெளி ஆளாக இருந்து பார்க்கும் போது அவர்கள் நான் நினைகிறேன் அவர்கள் கொடிய மிருகங்கள். அவர்களது இருதயம் மனிதாபிமானமற்ற மிருகங்களினுடையதைப் போன்றது." என்று நடந்தவற்றை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார் பெர்னாண்டோ என்கிறது சனல்-4.

மண்ணால் மூடப்பட்ட 50,000 பிணங்கள்.
"அப்பாவிச் சிறுவர்கள் பெருந்தொகையானோரும் முதிர்ந்தோரும் கொல்லப்பட்டனர் காயப்பட்டவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒரு பெண்ணை ஆறு பேர் கற்பழித்ததை என் கண்ணால் கண்டேன். போர் முனையில் இருந்த படைவீரர்களின் இருதயங்கள் கல்லாகிவிட்டன. அவர்கள் மானிடத் தன்மையை இழந்து விட்டனர். அவர்களை நான் இரத்தக் காட்டேரிகள் என்பேன். 1500 பிணங்களை புல்டோசர்களால் மண்போட்டு மூடுவதைக் கண்டேன். இப்படி 50,00பிணங்கள் மண்ணால் மூடப்பட்டன." என்றார் பெர்னாண்டோ.

சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் படி கோத்தபாய ராஜபக்ச தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான உதவித் தூதுவராக இருப்பவரும் போரின் போது 58வது படையணியின் பிரிகேடியருமான ஷவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டார் என்று இன்னொரு அதிகாரி சஸ்ருத்த சனல்-4 இற்கு தெரிவித்துள்ளார்.

சனல் - 4 இன் செய்தியைக் காண கீழே சொடுக்கவும்:
சனல் - 4 

 சனல் - 4 தொலைக்காட்சி இதுவரை பல காணொளிகளை வெளிவிட்டுள்ளது. ஒரு 49 நிமிடக் காணொளியை ஐக்கிய நாடுகள் சபையிலும் அதன் மனித உரிமைக் கழக்த்திலும் வெளியிட்டது. இன்று வெளிவிட்ட காணொளி மிக நம்பிக்கைக்குரிய சாட்சியத்துடன் வெளிவிடப்பட்டுள்ளது. பெர்னாண்டோ என்பவரை இனி இலங்கை அரசு ஒரு பொய்யன் என்றோ அல்லது ஒரு போலியான ஆள் என்றோ அல்லது ஒரு தமிழரை வைத்துத்தான் சனல்-4 நாடக மாடுகிறது என்று பரப்புரை செய்யலாம்.

இன்னும் சாட்சியங்கள் வருமா?
சனல்-4 இன்னும் காணொளிகளை வெளிக் கொண்டுவருமா? அல்லது வைத்திருக்கும் சான்றுகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவிடுகிறதா? இன்னும் பல வெளிவர வேண்டும் இதுவரை வெளிவந்தவை ஒரு சிறு பகுதியே. பாவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றிய சான்றுகள் வரவேண்டும். போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கு அம்பலப்படுத்தப் படவேண்டும்.

கலக்கமடைந்துள்ள ராஜபக்ச குடும்பம்
கோத்தபாய ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு புதிய சாட்சியங்கள் பற்றி வினவிய சனல்-4 செய்தியாளர் ஜொனார்த்தன் மில்லர் ரஜபக்ச குடும்பம் கலங்கமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பெர்னாண்டோவின் சாட்சியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட மார்க் எலிஸ் என்னும் பன்னாட்டு சட்டவாளர் சபையின் நிர்வாக இயக்குனர் போர்க்குற்றத்திற்கான போதுமான சாட்சியம்(prima facie) இது என்றார்.

பான் கீ மூன் இனி சும்மா இருக்க முடியாது.
சனல்-4 இற்கு மேற்படி சாட்சியத்தைப் பார்த்த சட்ட நிபுணர் இது போர்க்குற்றத்திற்கு போதுமான சாட்சி என்கிறார். பெர்னாண்டோ என்பவரை ஐநா தேடிப் பிடித்து அவரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும். இன்னும் ஏன் மௌனம் பன்னாட்டு நீதி மன்றமே பான் கீ மூனே?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...