Saturday, 4 June 2011

கடாஃபி எப்படித் தாக்குப் பிடிக்கிறார்?வீடு வாங்க முயல்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மூன்று அம்சங்கள் 1. location, 2. location, 3. location என்று சொல்வார்கள். லிபியாமீது மேற்கு நாடுகள் காட்டும் அக்கறைக்கும் லிபியாவில் உள்ள எண்ணெய் வளத்திலும் பார்க்க இதே மூன்று காரணங்கள்தான் காரணம். லிபியாவின் பூகோள அமைப்பு மிகவும் படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது. சூயஸ் கால்வாயும் எகிப்தும் மற்றும் மத்தியதரைக்கடல் பிராந்தியமும் மற்றும் அரபு நாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டுமாயின் லிபியா எதிரியின் கையில் இருக்கக்கூடாது என்று மேற்குலக படைத்துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள். 1941இல் சூயஸ் கால்வாய் உட்பட பெரிய பிரதேசத்தை இத்தாலியிடம் இருந்து கைப்பற்றுவதற்கான தாக்குதலை பிரித்தானியப் படைகள் லிபியாவில் இருந்தே மேற்கொண்டன.

கடாஃபியின் தவறு
ஒரு சிறந்த எண்ணெய் வளம் மிக்க நாடு லிபியா. ஆபிரிக்காவில் லிபியாதான் அதிக தனி நபர் வருமானம் கொண்ட நாடு. தனி நபர் வருமானம் என்பது தேசத்தின் மொத்த உற்பத்தியை மக்கள் தொகையால் வகுக்க வருவது. ஆனால் லிபிய மக்களின் வாழ்க்கைத் தரம் மற்ற எண்ணெய் வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்ததே. அங்கு தேச வருமானம் சரியான முறையில் பங்கிடப்படவுமில்லை; பாவிக்கப்படவுமில்லை. லிபிய மக்களின் கல்வித்தரம் மிகவும் பிந்தங்கியது. மற்ற அரபு நாடுகள் நகர நிர்மாணம் தெரு நிர்மாணம் என்பவற்றில் அதிக ஈடுபாடு காட்டிய போது லிபியா என்ன செய்தது என்ற கேள்வி உண்டு. லிபியக் கிராமப் புறங்கள் மிகவும் பின் தங்கியவை. லிபிய் அதிபர் மும்மர் கடாபியின் பொருளாதர நிர்வாகம் மோசமானது. தவறுகள் நிறைந்தது. இதுதான் லிபிய மக்களை துனிசியா எகிப்திய மக்களைப் போல் அரசுகு எதிராக கிளர்ந்தெழத் தூண்டியது.

சென்ற மாதம் மும்மர் கடாஃபியின் படைகளை அவருக்கெதிரான கிளர்ச்சிக்காரர்கள் நேட்டோப் படைகளின் உதவியுடன் மிசரட்டா நகரில் இருந்து விரட்டினர். சென்ற வாரம் கடாஃபியின் படையில் இருந்து ஐந்து ஜெனரல்கள் உட்பட எட்டு உயர் படைத்துறை அதிகாரிகள் தப்பி ஓடி இத்தாலியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இருந்தும் கடாஃபி தாக்குப் பிடிக்கிறார். கடாஃபிக்கு எதிரான போர் ஓர் தேக்க நிலையிலேயே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நேட்டோப் படையினர் கடாஃபியின் படைகளை அழித்தொழிப்பதிலும் பார்க்க அவர்களைச் சரணடையச் செய்வதையே தங்கள் உபாயமாகக் கொண்டுள்ளனர்.

கடாஃபியின் தாக்குப் பிடித்தலுக்கு மேற்கு நாட்டு படைத்துறை ஆயவாளர்கள் கூறும் நொண்டிச் சாட்டு "எமது படைக்கு இந்தப் போர் ஒரு மனிதாபிமான நடவடிக்கை. கடாஃபியின் படைக்கு இது வாழ்வா சாவா என்ற பிரச்சனை. இதனால் அவர்கள் அதிக முனைப்புடன் போராடுகிறார்கள்". கடாஃபி மீது பன்னாட்டு நீதிமன்றில் போர்க்குற்றம் சுமத்தி கைது உத்தரவு பிறப்பித்தமை அவருக்கு போரைத் தவிர வேறு தெரிவு இல்லை என்று ஆக்கப்பட்டுவிட்டது.

கடாஃபி பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு எதிரான புரட்சிச் சதிக்கு எதிராக சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து விட்டார். கடாபியின் படையில் இருந்து விலகி பலர் கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்தாலும் இந்த விலகல்கள் கடாஃபியின் படைபலத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. கடாபியின் எதிரி நாடுகள் ஆட்சி முறை மாற்றமா? ஆட்சியாளர் மாற்றமா? மக்களைப் பாதுகாப்பதா? என்பதில் குழம்பி நிற்கின்றனர். இந்தக் குழப்பம் கடாஃபிக்கு சாதகமாக அமைந்தது.

நேட்டோப்படைகள் பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்க்க விரும்புவதால் தங்கள் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதாகக் கூறுகின்றன.

கடாஃபியின் தாக்குப் பிடித்தலின் இரகசியம் அவர் அழுத்தங்களுக்கு மசியாதவர், அழுத்தங்களை எதிர் கொண்ட அனுபவம் நிறைய உடையவர். தன்னை கொல்வதற்கு எதிரான சதியை எப்படிக் கையாள்வது என்ற அனுபவம் நிறைய உள்ளவர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...