Sunday, 8 May 2011

இலங்கைக்கு மீண்டும் பயந்தோடும் இந்தியா


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த 2008/09 நடந்த இலங்கைப் போரின் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமைகள் மீதான வகைசொல்லல் தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்குக் கிடைத்தவுடன் இலங்கை தொடர்பு கொண்ட முதல் வெளிநாடு இந்தியா. தமிழின அழிப்புப் போரில் எல்லா உதவிகளையும் வழங்கிய நாடாகிய இந்தியாவிற்கும் இலங்கையி இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களில் பங்கு உண்டு. இலங்கைப் போரை 2009 ஆகஸ்ட் மாதம் இலங்கை முடிக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியா போரை மே மாதம் இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன் வேண்டும் என்று இலங்கையை வற்புறுத்தியது. இந்தியா அதற்கான ஆதரவுகளை இலங்கைக்கு வழங்கியது. இது தொடர்பாக இந்தியா இலங்கைக்குச் செய்த உதவிகள் விடுத்த வேண்டுகோள்கள் பற்றிய ஆதாரங்கள் இலங்கை அரசிடம் இருக்கின்றன. அவை இந்தியா மீது போர்க் குற்றம் சுமத்தப் போதுமானவை. அவை இந்தியாவின் ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர இடம் பெறும் கனவுக்குப் பாதகமாக அமையும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த இலங்கைப் போர் மீதான வகைசொல்லல் தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்குக் கிடைத்த சில நாட்களில் இலங்கை அரசு தனது பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ச, குடியரசுத் தலைவரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழு இந்தியா சென்று அறிக்கை தொடர்பாக கலந்துரையாட இந்தியா செல்லும் விருப்பம் தெரிவித்தனர். அதை உடன் இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் பார்த்துக் கொள்வோம் என்றது. இச் செய்தி வந்தவுடன் இந்தியாவிற்கு வால்ப் பிடிக்கும் தமிழ் ஊடகங்கள் இலங்கையின் தமிழர் தொடர்ப்பான நிலைப்பாடில் இந்தியாவிற்கு உடன்பாடில்லை அதனால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அதன் வெளிப்பாடாகாவே இந்தியா இலங்கையின் உயர்மட்டக்குழுவின் டெல்லிப் பயணத்தை பின் போட்டது என்று ஆனந்தக் கூச்சலிட்டன. இந்த அறிவிலிகளுக்கு டெல்லிப் பார்ப்பனக் கும்பலின் வேண்டுதலின் பேரிலேயும் உதவியுடனுமே இலங்கை தமிழர்களுக்கு எதிரான சகல அட்டூழியங்களையும் செய்து வருகிறது என்ற உண்மை என்றுதான் புரியப்போகிறதோ?

ஐரோப்பிய ஒன்றியப் பாராளமன்றம் இலங்கை தொடர்பான் ஐநா நிபுணர்குழு அறிக்கை மீதான ஒரு விவாதம் 12-05-211இலன்று நடத்தப் போகிறது என்ற செய்தி வந்தவுடன் இந்தியா பதை பதைத்து எழுந்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொபோ்ட் ஓ பிளேக் கடந்த வாரம் இலங்கை சென்றதும் இந்தியாவை உசுப்பியுள்ளது. இத்துடன் நிற்கவில்லை இலங்கையில் செயற்படும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனம் ஒன்று இலங்கையும் அதற்கு ஆதரவளிக்கும் நாடுகளும் எப்படி போர்க் குற்றத்தில் ஈடுபட்டன என்பது பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அதிபருக்கு ஒரு நீண்ட அறிக்கையை அண்மையில் அனுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு வெளியில் இலங்கைக்கு எதிராக சில நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மேற்கொள்ளும் சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. ஐநா மனித உரிமைக் கழகத்தில் அல்லது நேட்டோவில் அல்லது இரண்டு இடங்களிலும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படலாம். தமிழின விரோதிகளான வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ், தேசிய பதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், பதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இப்போது இலங்கைக்கு விரைந்தோடிச் செல்லப் போகின்றனர். இவர்கள் இலங்கைக்குப் போய் தம்மையும் இலங்கையையும் போர்க்குற்றங்களிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி ஆலோசிக்கப் போகின்றனர். இந்தியா பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதற்குப் பிரதி உபகாரமாக சில வட இந்தியப் பணமுதலைகள் இலங்கையில்முதலீடு செய்ய இலங்கை அனுமதி வழங்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...