Thursday, 5 May 2011

பின் லாடனின் மகள்: தந்தையைக் கைது செய்த பின் கொன்றனர் என்கிறார்.


ஒசாமா பின் லாடனின் 12 வயது மகள் பின் லாடன் இருந்த அறையில் தந்தையுடன் இருந்தார். அவர் தந்தை மீதான தாக்குதலின் போது காயத்துடன் தப்பியவர். அவர் தனது தந்தையை அமெரிக்க சீல் படையினர் முதலில் கைது செய்து அதன் பின் சுட்டுக் கொன்று விட்டு அவரது உடலை இழுத்துச் சென்று ஹெலிக்கொப்டரில் ஏற்றிச் சென்றனர் என்கிறார்.

குத்துக் கரணம் அடித்த அமெரிக்கா.
அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுத் தலைவர் ஜோன் பிரெமன் முதலில் தெரிவித்தவை:
1. பின் லாடன் தன் 27வயது மனைவி அமல் அல் சதாவை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்.
2. பின் லாடன் தன் மனைவியின் பின் இருந்து ஏகே-47ஆல் சுட்டார்.
3. அவரது மனைவியைச் சுட்டுக் கொன்றபின் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம்.
இது அமெரிக்கா திங்கட் கிழமை வெளிவிட்ட அறிக்கை.


பாக்கிஸ்த்தானில் ஒரு மருத்துவமனையில் பின் லாடனின் இளைய மனைவியும் மகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வேறு விதமாக இருந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா தனது கருத்தை மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் கூற்றில் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது:
1. பின் லாடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை.
2. அவர் மனைவியை மனிதக் கேடயமாகப் பாவிக்கவில்லை.
3. அவரது மனைவி தாக்குதல் படையினரை நோக்கி வந்த போது அவர் தற்கொலை உள் அங்கி அணிந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அவரது காலில் சுடப்பட்டது.
வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்ணியே மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜே கார்ணி பின் லாடனை உயிருடன் பிடிக்கும் உத்தரவே தாக்குதல் அணிக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க சிஐஏ இன் இயக்குனர் லியோன் பனெட்டா தொலைக்காட்சிச் சேவை ஒன்றிற்கு வழங்கிய தகவலில் கூறியவை:
அமெரிகப் சீல் பிரிவு -6 படையினர் பின் லாடன் இருந்த மாளிகைக்குள் இறங்கியவுடனேயே அங்கு எதிர்தாக்குதல் நடந்தது. முதலில் அமெரிக்கப் படியினர் எதிர் கொண்டது பின் லாடனின் நம்பிக்கைக்குரிய தகவல் பரிமாற்றக் காரரின் தம்பி. அவர் தனது ஆயுதத்தை எடுத்துத் தாக்குதல் செய்ய முற்பட்டவேளை கொல்லப்பட்டார். பின்னர் தாக்குதல் அணியினர் பின் லாடன் இருந்த மாடிக்கு ஏறிச் சென்றபோது அவரது மகனை எதிர் கொண்டனர். அவரும் கொல்லப்பட்டார். பின் லாடனின் படுக்கை அறைக்குச் சென்றபோது ஏகே-47 துப்பாக்கியும் மகரோவ் பிஸ்டலும் பின் லாடனின் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தன. உடனே அவரைக் கொன்றதுடன் அவருடன் இருந்த அவரது மனைவியும் சுடப்பட்டார்.

பின் லாடனின் அறையில் இருந்து 100 thumb drives, DVDs and computer disks, along with 10 computer hard drives and 5 computers. ஆகியவையும் எடுக்கப்பட்டன.

போர் மூடுபனிக்குள்(fog of war) மறையும் அமெரிக்கா
ஏன் இத்தனை முரண்பட்ட தகவல்கள் வெளிவிடப்படுகின்றன என்பதே படைத்துறை ஆய்வாளர்கள் முன் வைக்கும் கேள்வி. இதற்கு அமெரிக்க அரசு தன்னைப் பாது காக்க முன்வைக்கும் பதம் போர் மூடுபனி(fog of war). போர் முடுபனி என்ற பதம் போரில் ஈடுபட்டவருக்கு போரின் போது நடந்தவை பற்றி சரியாக நினைவு கூராமுடியாமல் இருக்கும் என்று பொருள்படும். தாக்குதல் அணியில் 12 பேரின் தலைக்கவசத்தில் காணொளிப்பதிவு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவை நடப்பவற்றைப் பதிவு செய்து நேரடி ஒளிபரப்பை சிஐஏக்கு வழங்கிக் கொண்டிருந்தன. அந்த ஒளிப்பதிவுகளுக்கும் போர் மூடுபனியா?

பின் லாடனை மயக்கச் செய்வதற்காக அவர்மீது மயக்க வைக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?

தொடர்புடைய பதிவுகள்:
பின் லாடனின் இருப்பிடம் அறிந்த விபரமும் தாக்குதல் விபரமும்

பின் லாடனைக் கொல்லவில்லை. உயிருடன் பிடித்தனராம்

பின் லாடன் கொல்லப்படுவதை நேரடி ஒளிபரப்பில் பார்தார் பராக் ஒபாமா

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...