Monday, 25 April 2011

இலங்கையின் போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கு.

"இந்தியாவின் உதவியின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எம்மால் வென்றிருக்க முடியாது" இது இலங்கையின் பல படைத்துறை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் அடிக்கடி சொன்ன வாசகம். இதை இந்தியத் தரப்பில் இருந்து எவரும் மறுக்கவில்லை. இலங்கையின் போர் வெற்றியில் மட்டும்தான் இந்தியாவிற்கு பங்கு உண்டா? இலங்கை இழைத்த போர் குற்றங்களில், மனுக் குலத்திற்கு எதிரான குற்றங்களில் பங்கு இல்லையா என்பது தான் இப்போதைய பில்லியன் டொலர் கேள்வி. பிரணாப் முஹர்ஜி, சிவ சங்கர மேனன், எம் கே நாராயணட் ஆகியோர் இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கான பயணம் என்று சொல்லிக் கொண்டு கொழும்பு சென்று கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேக்கா, லலித் வீரதுங்க ஆகியோரைச் சந்தித்து தமிழர்களைக் கொன்றொழிக்கும் போரை எப்படி நடத்துவது என்ற கலந்துரையாடல்களை மேற் கொண்டனர். இதற்கான பதிவுகள் இலங்கை அரசிடம் உண்டு. இந்தப் பதிவுகள்தான் இலங்கையின் சொற்படி இந்தியாவை ஆடவைத்துக் கொண்டிருக்கிறது. கோத்தபாயவின் MASTER STROKE "ஐநாவின் பானிற்கான சவால்: போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி" என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் இந்தியாவைப்பற்றிய பல உண்மைகளை அம்பலப்படுத்தினார். அதில் ஒன்று போர் முடிந்த பின் இந்தியா தன்னிடம் உள்ள இலங்கை இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைக் காட்டி இலங்கையை இந்தியா மிரட்ட, கோத்தபாய ராஜபக்கச தன்னிடம் இலங்கையின் போரில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான ஆதாரங்களைக் காட்டிப் பதிலுக்கு மிரட்டினார் என்கிறார். இந்த மிரட்டலை வீ எஸ் சுப்பிரமணியம் துடுப்பாட்டப் பாணியில்(கிரிக்கெட்) கோத்தபாயவின் MASTER STROKE என்று வர்ணித்தார். ஆகஸ்ட் மாதம் இலங்கை முடிக்க விருந்த போரை இலங்கை மே மாதத்தில் முடிக்க இந்தியா வற்புறுத்தியாதால் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர் என்றும் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் சங்கடமான நிலை 
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட ஒரு சில தினங்களில் அது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டு பேசினார். மஹிந்த முதலில் தொடர்பு கொண்ட வெளிநாடு இந்தியாவே. இந்தியாதான் தனக்கு தன்மீதான் போர்க்குற்றத்திற்கு எதிராக உதவி செய்யும் என்று மஹிந்தவிற்கு நன்கு தெரியும். இந்தியா இலங்கைக்கு உதவி செய்தால் அது போர்க்குற்றத்தை மறைக்க செய்த உதவி என்று பல நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் குற்றம் சாட்டலாம். இலங்கைக்கு உதவி செய்யாவிடில் இலங்கை அரசு தனது போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கைப் பகிரங்கப்படுத்தலாம். இரண்டும் இந்தியாவின் ஐக்கிய நாடுகள் பாது காப்புச் சபையில் ஒரு நிரந்தர இடம் தேடுவதற்கான முயற்ச்சியிக்கு தடை போடலாம். இந்தியாவின் போர்க் குற்றப் பங்களிப்புகளுக்கு மேலும் ஆதாரம் இலங்கையின் இறுதிப் போரில் இந்தியா செய்தவற்றையும் செய்யாமல் விட்டவை பற்றியும் கொழும்பிற்கான முன்னாள் ஐநாவின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் அவர்கள் பிபிசி யின் சிங்களச் சேவைக்கு இப்படிக் கூறியிருந்தார்:

The former UN spokesman said the Indian government which wanted to "see the Tamil Tigers destroyed" was "fully aware" of the real situation in the battle zone, including the civilian casualties.

"I believe that Indians were aware of the civilian casualties that were happening, because they had pretty good intelligence inside the siege zone."

He admitted that Ban Ki-moon's chief of staff, Vijay Nambiar, made an agreement between the LTTE and the Sri Lanka authorities to arrange the surrender of senior Tamil Tiger leaders including B Nadesan and Pulithevan.

மீண்டும் ஒரு நாடகம்
"ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கைக்குப் பின்னரான சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர்மட்டக் குழு புதுடில்லி செல்வதற்கு இலங்கையால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்தியா நிராகரித்துள்ளது." என்று ஒரு செய்தி இப்போது வெளிவந்துள்ளது. இது இந்தியாவின் ஒரு நாடகமே. பகிரங்கமாக இப்படி அறிவித்துவிட்டு இந்தியா திரை மறைவில் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கும். இதே வேளை இலங்கைக்கு போர்குற்றம் தொடர்பாக ஆலோசனை வழங்க ஒரு உயர்மட்டக் குழுவை இந்தியா அமைத்துள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. இது மட்டுமல்ல தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்கு இலங்கை இணங்கி வராவிட்டால், ஐ.நா. நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாமல் இலங்கையை கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் வந்துள்ளது. இத்துடன் நிற்கவில்லை ஐ.நா. நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்று இந்தியா இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தமும் கொடுத்துள்ளது .தமிழர்களுக்கு எதிராக இந்தியா திரைமறைவில் திருகுதாளங்கள் மிகுந்த சதி செய்யும் போது இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட தகவல்கள் டில்லியில் இருந்து வேண்டுமென்றே கசியவிடப்படும். இலங்கையின் தூண்டுதலின் பேரில் இந்தியா இரசியாவைத் வேண்ட ஐநாவின் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக இரசியா தனது கருத்தை வெளியிட்டது. ஆனால் இந்தியா தனக்கு ஒன்றும் தெரியாது போல் மௌனமாக இருக்கிறது. 

தேவை ஒரு வீட்டோ 
ச்இலங்கைக்கு இப்போது அவசியம் தேவைப்படுவது ஐக்கிய நாடுகள் சபையில் இரத்து(வீட்டோ) அதிகாரம் பிரயோகிக்கும் ஒரு நாடு. இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் சுமத்துதல் சம்பந்தமான தீர்மானம் ஏதாவது வரும்போது ஒரு நாடு அதை இரத்து செய்ய வேண்டும். இதை இலங்கை இரு வழிகளால் பெற முடியும். ஒன்று இந்தியாவூடாக இரசியாவிடம் இருந்து பெறுதல். மற்றது சீனாவிடம் இருந்து பெறுதல்.2009இல் இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு போட்டி போட்டுக் கொண்டு உதவியதால் சீனாவும் இரசியாவும் இலங்கைக்கு இணக்கமாகவே செயற்பட்டன. இன்றும் அதே நிலையா?

1 comment:

Mohamed Faaique said...

பாஸ்.. நீங்க நடிகர் விஜய்’யுடன் சேருங்களெ!!! அவர்தான், இலங்கையை உலக வரை படத்திலிருந்தே அழிக்க பார்த்தவரு....
ச்சும்மா போங்க பாஸ்.. நாங்கெல்லாம் அப்பிடித்தான்... அப்பிடித்தான்னா..அப்ப்டிடித்தான்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...