Sunday, 16 January 2011

அடேங்கப்பா இந்தியாவிற்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?


தந்தி அடித்த கலைஞர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஆனந்தராஜ் 12.01.2011இலன்று கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்து கடலில் இருந்து தப்பி வந்தவர்கள் இலங்கைக் கடற்படைதான் அவர்களை சுட்டதாகச் சொன்னார்கள். கலைஞர் கருணாநிதி வழமை போல் கடிதம் எழுதாமல் தந்தி அடித்தார் இந்தியப் பிரதம மந்திரிக்கு.

சிங்களக் கைக்கூலிகளின் கூச்சல்
தமிழ் மீனவர் கடலில் வைத்து சுடப்படுவது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பும் பல தடவை சுடப்பட்டனர். யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சோ போன்ற பார்ப்பார பயலுகள் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் சுடுவதாக பொய்ப் பரப்புரகளும் செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகள் மீனவர்கள் எல்லையைக் கடந்து இலங்கைக் கடலுக்குள் செல்லும் போது அவர்களைச் சிங்களக் கடற்படையினர் கொல்கிறாரகள். சிங்களவனுக்கு அந்த உரிமை இருக்கிறது என்று வாதிடுவதும் உண்டு. ஒரு நாட்டு குடிமகன் தன்னாட்டு எல்லையைக் கடந்து மற்ற நாட்டுக்குச் செல்லும் போது அவரைக் கொல்வது இல்லை கைது செய்வது தான் வழக்கம். இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கும் போதுதான் எல்லை தாண்டுபவர் சுட்டுக் கொல்லப்படுவர். இந்திய பாக்கிஸ்த்தானிய எல்லையிலும் பார்க்க அதிக இந்தியர்கள் இலங்கை இந்தியக் கடல் எல்லையில் கொல்லப்படுகிறார்கள். தமிழ் மீனவர்களை இந்திய மத்திய அரசு இந்தியர்களாகக் கருதுவதில்லையா? அல்லது இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் பலரும் பார்ப்பனர்காளாக இருப்பதால் மீனவர்கள் கொல்லப்படுவதை அவர்கள் விரும்புகிறார்களா?

இந்தியக் கைக்கூலிகளின் பொய்ப்பரப்புரை
தமிழ்நாட்டு மீனவர் கொல்லப்படுவதைப் பற்றி இந்திய மத்திய அரசு பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் இந்த முறை இந்திய வெளியுறவுத்துறையினர் இலங்கையின் டில்லிக்கான தூதுவரை அழைத்து மீனவர் சுடப்பட்டது தொடர்பாகதமது கரிசனையை வெளியிட்டது. உடனே இந்தியப் பேரினவாதிகளின் கைக்கூலி ஊடகங்கள் இலங்கைக்கு இந்தியா கண்டனம் என்று பொய்ப்பரப்புரை செய்தன. அரச தந்திர மொழியில் கரிசனைக்கும் கண்டனத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

சிங்களவர்களின் கைக்கூலியாக இந்தியா
1986இற்கு பின் கிட்டத்தட்ட இலங்கையின் கைக்கூலியாகவே இந்தியா செயற்பட்டு வருகிறது. 1983இல் இலங்கை திருக்கோணாமலை துறைமுகத்தில் அமெரிக்கா காலடி வைக்க முற்பட்ட போது இந்தியா கொதித்தெழுந்து தமிழர்கள் தலையில் ஏறி இலைங்கையை வழிக்குக் கொண்டுவந்தது. இன்று இலங்கையில் பல பகுதியில் சீனா ஆழ அகலக் காலூன்றிய போது இந்தியா தனது உதவிகளையும் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலையில் இலங்கையின் கைக்கூலியாகச் செயற்படுகிறது.

அம்பலத்தில் வேறு!! அந்தரங்கத்தில் வேறு!!!
இப்படி இலங்கைக்கு பயந்து செயற்படும் இந்தியா திடீரென்று இலங்கைத் தூதுவரை அழைது "கரிசனையை" வெளியிட்டது ஏன்? தமிழ்நாட்டில் இந்த வருடம் வரும் தேர்தலை ஒட்டியதா? தமிழ்நாட்டு வாக்கு இப்போது காங்கிரசுக்கு தேவைப்படுகிறது. இதனால்தான் இந்த கரிசனை வெளிப்பாடா? அல்லது இலங்கைக்கு கரிசனை விடுவது போல் சும்மா பவ்லா காட்டிவிட்டு திரைமறைவில் நீ விரும்பியபடி தமிழ் மீனவர்களைக் கொன்று குவிக்கலாம் என்று தெரிவித்துள்ளதா? 2008-2009இல் போர் நிறுத்தம் வலியுறுத்துவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே இந்தியா தமிழர்களை கொன்று குவிக்க சகல உதவிகளையும் செய்தது. இந்த இந்தியாவின் இரட்டை வேடத்தை மீனவர் ஆனந்தராஜின் கொலைச் சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி அவர்கள் வசம் இருந்த இறால் மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவர்களின் வலைகளை கடலில் வீசிவிட்டு சென்று இருக்கின்றனர்.

மீண்டும் திருமலையில் அமெரிக்கா?
இலங்கை இப்போது திருக்கோணாமலை துறை முகத்தை மீண்டும் அபிவிருத்தி என்ற போர்வையில் ஒரு வெளிநாட்டுக்கு கொடுக்கத்தயாராகி வருகிறது. இலங்கையின் துறைமுக அபிவிருத்திச் சபை திருக்கோணாமலையின் அபிவிருத்திக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்களை தருமாறு முதலீட்டாளர்களை கேட்டுள்ளது. அமெரிக்கா கடந்த சில மாதங்களாக இலங்கையின் போர் குற்றம் தொடர்பாக கரிசனை காட்டி வருகிறது. அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவை சரிக்கட்ட இலங்கை அதற்கு இலங்கையின் திருக்கோணாமலையைக் கொடுக்க விருக்கிறதா? அமெரிக்காவிற்கு இலங்கையின் சீன ஆதிக்கத்திற்கு சமமான ஒரு ஆதிக்கத்தை நிலைநாட்ட இலங்கை ஏதாவது செய்யாவிட்டால் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக பன்னாட்டு அரங்கில் ஏதாவது செய்யும். இதை உணர்ந்து தான் இந்தியாவின் மீனவர் கொலை தொடர்பான கரிசனை வெளிப்பாடா?

சவால் விடும் இலங்கை
இலங்கை ஒன்றும் இந்தியாவின் கரிசனையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக சாட்சியத்தை சமர்ப்பிக்கவும் என்று சவால் விட்டுள்ளது.

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இல்லிங்க தேர்தல் கூத்து நடக்கப் போகுதுங்களே. இத்தனை காலமாக சுட்டுக் கொன்ற போது விழி திறக்காத மத்தியும் மாநிலமும் சட்டென்று விழித்துக் கொண்டது தமிழக மக்களை ஏமாற்ற. எது எப்படியோ பாருங்கள் உங்கள் எச்சரிக்கை கடிதங்கள் கொலைவெறி மஹிந்தனின் குப்பைக் கூடைக்குள் இருக்கும். பக்கத்தில் தட்டிக் கொடுக்க சீனாவும் பாக்கிஸ்தானும் இருக்கும் வரை இந்தியா இலங்கைக்கு ஒரு பொருட்டே அல்ல.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...