Saturday, 18 December 2010

தத்தெடுத்த SMS காதல் தத்துவங்கள்.


காதலில் விழுவது சுகம். காதலால் விழுவது மோசம்.

காதல்: சொர்க்கம்போல் இனிக்கும். நரகம் போல் தவிக்க வைக்கும்.

காதலில் விழுந்தவர்க்கு நித்திரை வருவதில்லை. கனவிலும்பார்க்க கற்பனை இனிக்கும்.

காதலால் உலகம் இயங்கவில்லை. உலக இயக்கத்தை காதல் இனிக்க வைக்கிறது.

காதலும் சண்டை போலே. தொடக்குவது சுகம். நிறுத்துவது கடினம்.

Love knows no reasons, Love knows no lies, Love defines all reasons, Love has no eyes..
But love is not blind, Love sees all but doesn't mind.


E. Y. Harburg
Oh, innocent victims of Cupid,
Remember this terse little verse;
To let a fool kiss you is stupid,
To let a kiss fool you is worse.

William Shakespeare
Love is a smoke made with the fume of sighs.

Victor M. Garcia Jr.
Love is like the truth, sometimes it prevails, sometimes it hurts.

Spanish proverb
Where there is love, there is pain.

George Granville
Of all pains, the greatest pain,
Is to love, and to love in vain.

James Baldwin
The face of a lover is an unknown, precisely because it is invested with so much of oneself. It is a mystery, containing, like all mysteries, the possibility of torment.

Anonymous
I never felt true love until I was with you, and I never felt true sadness until you left me.


Anonymous
Love begins with a smile, grows with a kiss, and ends with a teardrop.

Maureen Duffy
The pain of love is the pain of being alive. It is a perpetual wound.

Anonymous
No matter how badly your heart is broken, the world does not stop for your grief.

Love can touch you just one time but it can last for a life time.

Love is not about finding the right person, but creating a right relationship.
It's not about how much love you have in the beginning but how much love you build till the end.

It's hard to find someone whom you truly love, much less to find someone who loves you as much.
When the chance comes, don't ever let go.

Friday, 17 December 2010

ஹைக்கூ - இதய வேதனைகளின் வடிகால்கள்


உலக நாடகம் பார்க்கக் கிடைத்த
இலவச அனுமதிச் சீட்டு
வாழ்க்கை

இதயத்து வேதனையின்
இனிய வடிகால்கள்
கண்ணீர்த் துளிகள்

தீர்வுகள் பிரச்சனைகளாகின
தீர்ப்புக்கள் அநீதிகளாயாயின
ஈழம்

விற்பவனுக்கு ஒன்று போதும்
வாங்குபவனுக்கு ஆயிரம் வேண்டும்
கண்கள்

Thursday, 16 December 2010

விக்கிலீக் ஜூலியான் அசங்கேயிற்கு பிணை வழங்கப்பட்டது.


சற்று முன்னர் விக்கிலீக் நிறுவனர் ஜூலியான் அசங்கேயிற்கு பிரித்தானிய நீதி மன்றில் பிணை வழங்கப்பட்டது.

ஜூலியான் அசங்கே தனது விக்கிலீக் இணையத்தளமூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை சம்பந்தமான பல இரகசிய உரையாடல்களை அம்பலப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது அவர்மீது அமெரிக்க அரசிற்க்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர்மீது கற்பழிப்பு குற்றம் சுவீடனில் அவருடன் விரும்பு உடலுறவு கொண்ட இரு அழகிகளால் சுமத்தப்பட்டது. அவரை பிரித்தானியாவில் இருந்து கைது செய்து நாடுகடத்த வேண்டும் என்று சுவீடன் பன்னாட்டு காவல் துறை மூலம் வேண்டியது. இதனால் அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு பிணை வழங்குவதை சுவீடன் அரச சட்டவாளர்கள் எதிர்த்தனர். ஆனாலும் அவருக்கு இன்று பிணை வழங்கி வெளியே வந்துவிட்டார்.

இன்று சுவிடன் அரச அதிகாரிகள் விக்கிலீக் நிறுவனர் ஜூலியான் அசங்கேயிற்கு பிணை வழங்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை என்று அறிவித்துள்ளனர். அவரின் பிணை சம்பந்த்மில்லாத ஒன்று என்றும் தெரிவித்தனர். அவரது பிணைக்கு முடிக்குரிய வழக்குத் தொடுநர்தான் எதிர்த்ததாகவும் அவர்க்ள் கூறுகின்றனர். பிரித்தானிய நீதி மன்றம் 14-ம் திகதி பிணையில் விடுதலை செய்வதாக அறிவித்தது அதை சுவீடன் எதிர்ப்பதாகத் தெரிவித்து பிணை மறுக்கப்பட்டது. அப்படியாயின் பிணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது அமெரிக்க சதியா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. எப்படியோ இப்போது விக்கிலீக் நிறுவனர் ஜூலியான் அசங்கே வெளியில்.

வித்தியாசமான சட்டங்களைக் கொண்ட சுவீடன்.
சுவீடன் தேசத்துச் சட்டங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் வித்தியாசமானவை. சுவீடனில் ஜூலியான் அசங்கே தனது இணையம் விக்கிலீக்கில் அமெரிக்க இரகசியங்களை வெளிவிடுவது குற்றம் ஆகாது. அதனால் அவர் அங்கிருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள சுவீடன் அரசிடம் விண்ணப்பித்திருந்தார். சுவீடனில் கற்பழிப்புச் சட்டங்களும் விநோதமானவை. ஆகஸ்ட் மாதம் 11-ம் 18-ம் திகதிகளில் ஜூலியான் அசங்கே இரு பெண்களுடன் அவர்களின் சம்மதத்துடன் மேற்கொண்ட உடலுறவு அவருக்கு எமனானது. முதற் பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பாவித்த ஆணுறை கிழிந்து விட்டது. இரண்டாவது பெண் ஆணுறை அணியச் சொல்லியும் ஜூலியான் அசங்கே ஆணுறை அணியாமல் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது உடலுறவு கொண்டாராம். இவை இரண்டும் சுவிடன் நாட்டுச் சட்டப்படி குற்றமாகுமாம். ஆனால் இரு பெண்களும் தங்கள் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இரு பெண்களும் ஜூலியான் அசங்கேஇற்கு அமெரிக்காவால் வைக்கப்பட்ட பொறியா?

விக்கிலீக்கை வைத்து பாக்கிஸ்த்தானில் அந்த மாதிரி விளம்பரம்


இப்போது உலகெங்கும் அடிபடும் பெயர் விக்கிலீக். பாவம் அதன் நிறுவுனர் இன்று பிரித்தானிய நீதிமன்றில் நிற்கிறார். அவரின் நிறுவனத்தை வைத்து பாவிகள் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள்.

ஒரு சொல் பிரபலமானல் அத வர்த்தக ரீதியில் சுரண்டுவதற்கு பலர் தயாராவார். விக்கிலீக்கின் பிரபலத்தை ஒரு பாக்கிஸ்த்தானிய நிறுவனம் பயன்படுத்துகிறது அது எந்த உறபத்திப் பொருளுக்கு? பெண்கள் மாத விலக்கு காலத்தில் ( அந்த 3 நாட்கள் ) அணியும் sanitary padsஇற்கு விளம்பரம் செய்வதற்கு விக்கிலீக்கின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
விக்கிலீக் பல இரகசியங்களைக் கசிய விட்டது.

விக்கிலீக் கசியும் ஆனால் எங்கள் பட்டர்fளை sanitary pads கசியாது என்று விளம்பரம் பண்ணியுள்ளார்கள்.

Wednesday, 15 December 2010

பால் அருந்துவது இருதயத்திற்கு நல்லதாம் - விஞ்ஞான ஆய்வு


தினமும் மூன்று கிளாஸ் (750மில்லி லீட்டர்) பால் அருந்துவது உங்கள் இருதயத்திற்கு நல்லதாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பவிலும் ஜப்பானிலும் மேற்கொள்ளப்பட்ட 17 ஆய்வுகளின்படி தினமும் மூன்று கிளாஸ் (750மில்லி லீட்டர்) பால் அருந்துவது உங்கள் இருதய நோயகளை 18%தத்தால் குறைக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல பால் அருந்துவதால் உங்கள் உடலில் கல்சியம் அதிகமாகி புற்று நோய் வரும் வாய்ப்புக்களை 25%ஆல் குறைக்குகிறது.

அவுஸ்திரேலியாவில் 16 வருடங்களாக 15299 பேர்களிடை நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பாலும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பவர்களிடை இருதய நோயால் இறக்கும் (cardiovascular death) வாய்ப்பு 69% குறைவடைகிறது என்று அறியப்பட்டுள்ளது.

உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டியவை


ஒரு நாள் 40 நிமிடங்கள் படி வாரத்தில் மூன்று தடவை துரிதமாக நடந்தால் உங்கள் மூளை கூர்மையடையும். ஊடகம் ஒன்று இப்படிக் கூறுகிறது: By studying brain scans, psychologists at Illinois University found cognitive function levels among nearly 100 self-confessed couch potatoes improved dramatically after a year in which they walked a few times a week, compared with participants who only did stretching exercises.
Scientists say moderate walking enhances connections between the brain's circuits, combats a drop in brain function linked to ageing and even improves performance in reasoning tasks. வாரத்திற்கு குறைந்தது ஆறு மைல்கள் 10கி.மீ நடத்தல் மிக அவசியம். அது சுத்தமான சூழலில் துரித நடையாக இருந்தால் மிகவும் நல்லது.

நடப்பது மூளையினுடனான மற்ற உறுப்புகளின் தொடர்புகளை மேம்படுத்தி முதுமையடைவாதால் மூளையில் ஏற்படும் குறைபாடுகளையும் சரி செய்கிறது. அமெரிக்க இலினொய்ஸ் பல்கலைக்கழகம் செய்த ஆய்வின்படி குண்டானவர்கள் நடக்கத் தொடங்கியபின் அவர்களின் மூளையின் செயாற்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாம்.

பிரித்தானிய Northumbria University இன் ஆய்வின்படி சூயிங்கம் சப்புவது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறதாம். இந்த சப்பல் உங்கள் இருதயத்தின் செயற்பாட்டை அதிகரித்து அதிக அளவு இரத்தம் மூளைக்குப் பாய வழி வகுக்கிறது. இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

அதிகம் மது அருந்துவது உங்கள் மூளையைப் பாதிக்கும். அதிலும் 25வயதுக்குக் குறைவானவர்களிற்கு இந்த அதிக மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றவர்களிலும் அதிகம்.

நல்ல சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்ணுவது உங்கள் மூளையை மேம்படுத்தும்.

மீன் சாப்பிடுதல் மூளைக்கு நல்லது. சில வகை மீன்களில் காணப்படும் omega 3 oils உங்கள் மூளைக்கு மிகச் சிறந்தது.

புகைத்தல் மூளைக்கு கூடவே கூடாது.

மூச்சுப்பயிற்ச்சி மூளையை வளப்படுத்தும். பிராணாயாமம் யோகா போன்றவை மன அழுத்தங்களை நீக்கி மூளையின் செயற்பாட்டை மேம்படுத்தும்.

நல்ல ஆழ்ந்தநித்திரை தினமும் செய்தால் மூளைக்கு ஓய்வு கிடைத்து அது பொலிவடையும்.

உடலுக்கு உடற்பயிற்ச்சி போல மூளைக்கும் பயிற்ச்சி அவசியம். மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுக்கள் தினமும் விளையாட வேண்டும். Researchers from the German Institute For Quality And Efficiency In Health Care showed brain training products do improve certain functions, but only the ones they are aimed at.
For instance, a crossword may improve your ability to do crosswords but it won't boost your memory.

உங்கள் இரத்த அழுத்தத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இரத்தம் அழுத்தம் சீராக இருப்பது மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கு அவசியம்.

விட்டமின் -பி மூளைக்குத் தேவை. Vitamin B is found in a wide range of foods - broccoli, milk, and fortified breakfast cereals.

Tuesday, 14 December 2010

SMS தத்துவங்கள்


The truth of the matter is that you always know the right thing to do. The hard part is doing it.

Mistakes are painful when they happen,But years later a collection of mistakes called Experience Which leads us to success...

Lucky means who get the opportunity.
Brilliant means who create the opportunity.
Winner means who use the opportunity.
Be a winner always.

To love someone is nothing. To be loved by someone is something. To love and be loved by someone is everything.

When GOD drops needles and pins along ur path in LIFE, dont stay away,, instead pick them up and collect them..they were designed to be STRONG!

Speak less to people whom u love most…..
Because if they cant understand ur silence…..
They can never understand your words….

A BLIND MAN ONCE ASKED A WISE MAN:
"Can there be anything worse than losing
your eye sight ?"
THE WISE MAN REPLIED :
Yes, losing your "vision".

What you do today is important because you are exchanging a Day of your Life for it.

Life gives answer in 3 ways…
It says Yes & gives u what u want,
It says no and gives u something better,
It says wait and gives u the Best!

To handle yourself, use your head;
To handle others, use your heart.

He, who loses money, loses much;
He, who loses a friend, loses much more;
He, who loses faith, loses all.

Great minds discuss ideas;
Average minds discuss events;
Small minds discuss people.

Anger is only one letter short of danger
If someone betrays you once, it is his fault;
If he betrays you twice, it is your fault.

A "smile" is a sign of joy...a "hug" is a sign of love...
a "laugh" is a sign of happiness & a "friend" like "me" is a sign of "GOOD CHOICE"

When GOD takes away
something from your hand,
dont think He’s punishing u…
he is merely emptying ur hand,
for u 2 receive something better.
Have Faith!!!

What's Love?
In Math:
A Problem.
...In History:
A War
In Chemistry:
A Reaction.
In Art:
A Heart.
In Me:
You
Love You


A happy person is not a person
in a certain set of circumstances,

but rather a person with
a certain set of attitudes.

பிணை வழங்கப்பட்டும் மீண்டும் விக்கிலீக் அசங்கே சிறையில்


விக்கிலீக்கின் நிறுவனர் ஜூலியான் அசங்கே இன்று நீதிமன்றில் தாக்கச் செய்த பிணைமனுவை ஏற்று பிரித்தானிய நீதிமன்றம் அவரை நிபந்தனைகளின் பேரில் பிணையில் விட முடிவு செய்தது ஆனால் சுவிடன் அரச சட்டவாளர்களின் எதிர்ப்பில் அவர் மீண்டும் சிறையிலிடப்பட்டுள்ளார். சுவிடன் அரச சட்டவாளர்களுக்கு அவர்கள் தரப்பு விவாதத்தை முன் வைப்பதற்கு இரு மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டது .
  1. கடவுச் சீட்டை கையளித்தல்
  2. ஒரு இடத்தில் மட்டும் இருத்தல்
  3. இரண்டு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட் பிணைப்பணம்
  4. நாற்பதினாயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் பொறுப்புப்பணம்
  5. தினசரி காவல் நிலையத்திற்கு செல்லுதல்
ஆகிய ஐந்து நிபந்தனைகளுடன் வெஸ்ற்மின்ஸ்டர் நீதிபதி பிணை வழங்கினார். ஆனால் சுவீடன் அரச சட்டவாளர்களின் எதிர்ப்பால் அது சரிவராமல் போனது. அவர் இன்னும் 48 மணித்தியாலங்கள் சிறையில் இருக்க வேண்டும். பின்னர் மீண்டும் பிணை மனு மீதான விசாரணை நடக்கும்.

நீதி மன்றத்தின் முன் ஜூலியான் அசங்கேயின் ஆதரவாளர்கள் பலரும் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். பல ஊடகவியலாளர்களும் அங்கிருந்தனர்.

இரு பெண்களுக்கும் ஜூலியான் அசங்கே செய்தமை பிரித்தானியச் சட்டப்படி கற்பழிப்புக் குற்றம் ஆக மாட்டாது.

பொது உணர்விற்கு(common sense) கிடைத்த வெற்றி
ஜூலியான் அசங்கேஇற்கு பிணை வழங்கச் சம்மதித்தமை பொது உணர்விற்கு(common sense) கிடைத்த வெற்றி எனப்பலரும் தெரிவித்தனர்.

கடுமையான தடுப்புக்காவல்
ஜூலியான் அசங்கே மற்ற சிறைக்கைதிகளின் தொடர்புகள் அற்றவராகவும் பத்திரிகை தொலைக்காட்சி பார்க்க தடை செய்யப்பட்டவராகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பலம் மிக்க கைப்பேசி - JCB phone


கைப்பேசிப் பாவனையாளர்கள் பொதுவாக கைப்பேசிகள் வாங்கும்போது அதன் செயற்பாடுகளைப்பற்றியே கவலைப்படுவார்கள். கைப்பேசி நிலத்தில் விழுந்தால் என்ன ஆகும்? கைபேசி மழையில் நனைந்தால் என்ன ஆகும்? கைப்பேசியை சட்டைப்பையில் சாவிக் கொத்துடன் வைத்திருந்தால் அதில் கிறுக்கல் விழுமா? என்பவற்றைப்பற்றிக் கவலைப்படுபவர்கள் மிக்கக் குறைவு. ஆனால் இந்த மாதிரிக் கவலை உள்ளவர்களுக்கு JCB phone நல்ல பதில் தருகிறது

JCB phoneஇன் சிறப்பு அம்சங்கள்
1. நீருக்குள் விழுந்தாலும் பழுதடையாது. ஒருவர் இந்த JCB phoneஉடன் நிச்சலடித்தும் அது பழுதடையவில்லையாம்.
2. ஆவிக்குளியல் அறையிலும் வைத்திருக்கலாம். It can withstand 48 hours at 70C and 90 per cent-relative humidity.
3. தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு JCB phone உப்புத் தண்ணீரில் இருந்தும் பழுதடையவில்லையாம்.
4. கார் ஒன்று இதன் மேல் ஏறினாலும் பழுதடையாது
5. ஆறடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் பழுதடையாது.
6. -30 டிகிரி சென்ரிக்ரேட் குளிரையும் தாங்கும்.

எனது பிரச்சன. மறந்து போய் சட்டையுடன் சேர்த்து washing machine க்குள் கைப்பேசியையும் போட்டுவிடுவேன். ஆனால் JCB phone washing machine க்குள்அகப்பட்டால் பழுதடைந்து விடும். வாட்டர்லூவைச் சந்திக்காத நெப்போலியன் இல்லை.

Monday, 13 December 2010

கலைஞர் ஐயா ஒரு கவிதையாவது எழுதுங்கள்.


இலங்கையில் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிரான போரில் அப்பவித் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்கள் இழைக்கப் பட்டதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் சனல்-4 தொலைக்காட்சி தொடர்ந்து பல ஆதாரங்களை வெளிவிட்டு வருகிறது. தமிழினத்தின் தலைவனாக உங்களை நீங்களே கருதிக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்கள் குடும்பத்திற்கு சொந்தமான தொலைக்காட்சிகளில் இந்த போர்குற்றம் என்ற வார்த்தையையே பாவிப்பதில்லையே. இது உங்கள் டில்லி எசமானி அம்மாவிற்கு பிடிக்கது என்று நீங்கள் இலங்கையில் நடந்த போர்குற்றம் பற்றி வாயே திறப்பதில்லையா? அல்லது அந்த எசமானி அம்மாவே போர் குற்றவாளியா?

தமிழ்ப் பெண்கள் எவ்வளவு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று உலகமே ஆத்திரம் கொள்கிறது. கலைஞர் ஐயா நீங்கள் ராசாவின் பிரச்சனையில் மூழ்கி இருக்கிறீர்களா?

இலங்கையின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப் படமாட்டாது என்ற செய்தி வந்த சில மணித்தியாலங்களுக்குள் அதை நீங்கள் கண்டித்தீர்கள். இலங்கையின் தேசிய கீதத்தையோ தேசியக் கொடியையோ அரசியல் அமைப்பையோ தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது எந்த மொழியில் பாடப்பட்டாலும் நாங்கள் கவலைப்படவில்லை. அதை மதிக்கப் போவதுமில்லை. சனல் - 4 தொலைக்காட்சி காணொளி ஒளிபரப்பியதையும் விக்கிலீக் இணையத் தளம் இலங்கையில் நடந்த போர்குற்றத்திற்கு இலங்கை ஆட்சியாளர்கள் பொறுப்பு என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அறிக்கை சமர்ப்பித்ததையும் தொடர்ந்து 17 அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் இலங்கயில் நடந்த போர்குற்றம் தொடர்பாக ஒரு சுயாதீன பன்னாட்டு விசாரணை தேவை என்று ஹிலரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். உங்கள் கட்சியிலும் எத்தனையோ சட்ட சபை உறுப்பினர்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் மந்திரி சபை உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்களில் யாராவது இப்படி ஒரு கடிதத்தை யாருக்காவது எழுதினார்களா? அல்லது உங்களுக்குத்தான் கடிதம் எழுதுவது சிறந்த பொழுது போக்கு தானே! நீங்களாவது ஒரு கடிதம் எழுதலாமே.

இலங்கை சென்று வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தான் இலங்கையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியதாக உங்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் சிவசங்கர மேனன் இனப்பிரச்சனை தொடர்பாக எந்த அழுத்தமும் இலங்கைமீது பிரயோகிக்கப் படமாட்டாது என்று சொல்கிறார் இருவருமாகச் சேர்ந்து உங்களை ஏமாற்றுகிறார்களா? அல்லது அவர்களுடன் நீங்களும் சேர்ந்து எங்கள் எல்லோரையும் ஏமாற்றுகிறீர்களா?

இலங்கியின் போர்குற்றம் தொடர்பாக உங்கள் டில்லி எசமானர்கள் நிறை ஆதாரங்களை வைத்திருக்கிறார்களாம்.அவற்றை வைத்து அவர்கள் இலங்கையை மிரட்டினார்களாம். அதற்குப் பதிலாக கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் போர்குற்றத்தில் இந்தியாவிற்கு உள்ள பங்கு தொடர்பான தொலைபேசி உரையாடல்களை தான வெளியிடுவதாக பதிலுக்கு மிரட்டினார்களாம்.

உங்கள் நாட்டிலேயே இப்படி எழுதுகிறார்கள்:
  • போர் உக்கிரமாக நடைபெற்ற போது ஏற்பட்ட உண்மையான இழப்புக்களை உறுப்படுத்தும் வான்வழியே எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை எடுக்கும் அருமையான வாய்ப்பு இந்திய உளவு அமைப்பான “றோ”வுக்குக் கிடைத்தது. தமிழ் ஆயுதக் குழுக்களின் மறைவுக்குப் பின்னானதொரு சூழலில் கொழும்பு மீது காத்திரமான அழுத்தத்தினைப் பிரயோகித்து அதனை அடிபணிய வைப்பதற்கான ஓர் ஆயுதமாகவே புதுடில்லியும் “றோ”வும் போர்க்குற்ற ஆதாரங்களைப் பார்த்தன.
  • ஆனால், பாவம் இந்தியா கொழும்பு இதுபோன்ற அழுத்தங்களுக்கு அடிபணியாது நேரெதிர் மாறான நிலைப்பாட்டினை எடுத்துச் செயற்பட்டது. புதுடில்லியின் இந்தக் குற்றச்சாட்டினால் கோபமடைந்த கோத்தபாய, கொழும்பு போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால் அதற்கு புதுடில்லியின் தென்தொகுதியும்(South Bloc) உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தான் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆள்களுடனான தொடர்பாடல் பதிவுகளைக் கையிலெடுத்தார். நீ உனது ஆதாரங்களை வெளியிட்டால் நான் இந்த உரையாடல் பதிவை வெளியிட்டு போர்குற்றத்தில் உனது பங்கை வெளிவிடுவேன் என்று பதில் மிரட்டல் கொழும்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இது டில்லியின் வாயை முழுமையாக அடைத்தது. இதனால் குழப்பமடைந்த புதுடில்லி துரிதமாகவும் நிதானமாகவும் செயற்பட்டது. மே 2009இல் ஐ.நாவினது மனித உரிமைச் சபையில் இலங்கை மீது குற்றஞ்சாட்டிக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.
நீங்கள் பங்காளராக இருந்த சோனியாவின் ஆட்சியே இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்க உடந்தையா? தோழர் சீமான் வெளியில் வந்துவிட்டார் இனி அவர் இதை வைத்து உங்களை வாங்கு வாங்கென்று வாங்கப்போகிறார்.

எல்லாவற்றையும் விடுங்கள் உங்கள் தமிழ்நாட்டு மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் கடற்படையின் 60-ம் ஆண்டு விழாவில் உங்கள் மைய அரசின் கடற்படைக் கப்பல்களும் பங்குபற்றினவே.

தேர்தலும் வரப்போகிறது யாரோடு கூட்டணி என்ற நிச்சயமும் இல்லை. கொடூரமாகக் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒரு கவிதையாவது எழுதித் தப்பித்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்க கடற்படையின் அதி பயங்கரத் துப்பாக்கி - Railgunஅமெரிக்க கடற்படை ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் பாய்ந்து நூறு மைல் தொலைவில் உள்ள இலக்கை இருபது இறாத்தல் எடையுள்ள குண்டால் தாக்கும் துப்பாக்கியை உருவாக்கியுள்ளது. ஒலியைவிட ஏழு மடங்கு வேகம் என்னும் போது மணிக்கு 5376மைல்கள் அல்லது 8600கிலோ மீற்றர்கள்.

Railgun எனப்படும் இந்தத் துப்பாக்கிவீசும் குண்டுகள் 33 megajoules உந்துவிசையுடன் 100 மைல் தொலைவில் உள்ள குண்டுகளைத் தாக்கும். இந்த 100மைல்களையும் சில நொடிகளில் பயணித்துவிடும். ஒரு megajule என்பது ஒரு தொன் எடையுள்ள வாகனம் ஒன்று மணித்தியாலத்திற்கு நூறு மைல் வேகத்தில் மோதுவதற்கு ஒப்பானது.

Railgun எனப்படும் இந்தத் துப்பாக்கி இலக்கை மிகத் துல்லியமாகவும் தாக்கவல்லது. இதனால் எதிரிப் படைகளின் வெடி பொருட்கள் உள்ள இடத்தில் இதன் குண்டுகள் தாக்கும் போது விளைவு படு பயங்கரமானதாக இருக்கும். தற்போது அமெரிக்கக் கடற்படையினரிடம் உள்ள துப்பாக்கிகள் 13மைல்கள் மட்டுமே பாயக்கூடிய குண்டுகளை வீச வல்லன. Railgun எனப்படும் இந்தத் துப்பாக்கிகளைத் தாயாரிக்கும் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா 211மில்லியன் டொலர்களை செலவிட்டது.

இப்படியான ஆயுதங்களை சதாம் ஹுசைன் தயாரிக்கக்கூடாது அமெரிக்கா தயாரிக்கலாம்.Sunday, 12 December 2010

விக்கிலீக் அசங்கேயின் சட்டவாளர் வைத்திருக்கும் இரகசியம் என்ன?


சுவீடனில் விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசங்கேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் தன்னிடம் ஜூலியன் அசங்கே மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக முக்கிய தகவல் உள்ளதாகவும் அதை வெளியிட சட்டம் தன்னைத் தடுப்பதாகவும் கூறியுள்ளார். சுவீடன் அரச புலன் விசாரணைப் பத்திரங்களின்படி அசங்கே தம்முடன் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றம் சாட்டும் இரு பெண்களும் பொய் சொல்கிறார்கள் என்றும் அவர்கள் ஒரு இரகசிய ஏற்பாட்டின் பேரில் செயற்படுகிறார்கள் என்றும் சொல்கிறார் ஜூலியன் அசங்கேயின் சட்டவாளர் பி. ஹன்ரிங். மேலும் பி. ஹன்ரிங் தெரிவிக்கையில் இருவரும் பொறாமையுள்ளவர்களென்றும் ஒருவர் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் செயற்படுகிறார் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு பிரித்தானிய நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு ஒரு நாடகம் என்று தன்னால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். சுவீடனில் உள்ள சட்டம் ஜூலியன் அசங்கேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் இத்தகவல்களை வெளியிடத் தடை செய்கிறது. மீறி வெளிய்ட்டால் அவர் தனது தொழிலை இழக்கவேண்டிவரும்.
பிரித்தானியப் பத்திரிகை டெய்லி மெயிலிற்கு சட்டவாளர் பி. ஹன்ரிங் அசங்கேயைப்பற்றிக் கூரியது:
  • ‘He denied vehemently that he had raped or in any way indulged in non-consensual sex. He was very upset. He kept saying, “How can they do this to me? I’ve done nothing wrong. They are trying to destroy my credibility.” He kept saying it was a witch-hunt and we must fight it.’விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசங்கேயின் குற்றத்தின் பின்னணி
ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் போரில் ஊடகங்களின் பங்கு பற்றி ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) நடந்த மாநாட்டில் உரையாற்ற ஜுலியன் அசங்கே என்னும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்த முன்னாள் கணனி ஊடுருவி(computer hacker) அழைக்கப்படுகிறார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மத்திய இடது சாரி சகோதரத்துவ இயக்கம். இந்த இயக்கத்திற்காக பணியாற்றிய அழகி-1 (இவர் பெயர் வெளிவிடப்படவில்லை) ஜுலியன் அசங்கேயுடன் தொடர்புகொள்கிறார். ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) தனது தங்குமிடத்தைப்பற்றி அழகி-1 இடம் ஜுலியன் அசங்கே விசாரிக்கிறார். தனது வீட்டில் (Flat) தங்கலாம் மாநாடு நடக்கும் வேளையில் தான் வீட்டில் இருக்கமாட்டேன் நகரத்திற்கு வெளியில்தான் தங்குவேன் என்று அழகி-1 கூறுகிறார்.
மாநாட்டிற்கு சென்ற ஜுலியன் அசங்கே அழகி-1 இன் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அழகி-1 குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்கூட்டியே தன் விட்டிற்கு திரும்புகிறார். ஜுலியன் அசங்கேயும் அழகி-1 இரவு ஒரு உணவகத்திற்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வீடுவந்து இருவரும் அழகி-1 இன் சம்மதத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். பாவம் ஜுலியன் அசங்கே அவர்கள் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் பாவித்த ஆணுறை கிழிந்து விடுகிறது. (காய்ந்த மாடோ?) மறுநாள் அழகி-1 ஜுலியன் அசங்கேஇற்கு ஒரு விருந்தும் வழங்குகிறார்(உணவுதான்).

அழகி-1 ஒரு பெண்ணுரிமைப் போராளி. பல்கலைக்கழகமொன்றில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார். பெண்ணுரிமை உட்படப் பல முற்போக்கு இயக்கங்களில் பங்கு கொள்பவர். பல நாடுகளுக்கும் சென்று வருபவர்.

ஜுலியன் அசங்கே மாநாட்டில் உரையாற்றும் போது அழகி-2 முன்வரிசையில் இருக்கிறார். அவர் அதிக புகைப்படங்கள் ஜுலியன் அசங்கே உரையாற்றும் போது எடுக்கிறார். மாநாட்டின் பின்அழகி-1 அழகி-2ஐ ஜுலியன் அசங்கேயிற்கு அறிமுகம் செய்கிறார். இருவரும் நகரத்தை சுற்றுகின்றனர். அழகி-2 இல் ஜுலியன் அசங்கே மயங்கிவிடுகிறார். நீ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறாய் என்று ஜுலியன் அசங்கே பிதற்றவும் செய்கிறார். இங்கும் உடலுறவு நடக்கிறது. அழகி-2 இன் சம்மதத்துடன்தான். ஆனால் அழகி-2 ஆணுறை அணியும்படி வேண்டியதை ஜுலியன் அசங்கே மறுத்துவிடுகிறார். (Rain coat போட்டுக் கொண்டு குளிப்பதை யார்தான் விரும்புவர்.)

அழகி-1ம் அழகி-2ம் பின்னர் சந்தித்துக் கொள்கின்றனர். ஜுலியன் அசங்கே உடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பெண் உரிமைப் போராளியான அழகி-1 ஆணுறை இன்றி அழகி-2 உடன் உடலுறவு கொண்டதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தாராம். பின்னர் இருவரும் காவல் துறையில் முறையீடு செய்கின்றனர். உங்களையும் என்னையும் போலவே ஜுலியன் அசங்கே இற்கு சுவீடன் தேசத்து கற்பழிப்புச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். பெண் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ஆணுறை கிழிப்பது ஆணுறை அணிய மறுத்து உறவு கொள்வது எல்லாம் அங்கு குற்றமாம். அழகி-2 தான் ஜூலியன் அசங்கேயில் காமம் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அழகிகள் ஜுலியன் அசங்கே நடந்த விததைப் பற்றி பத்திரிகைகளிலும் வெளியிருகின்றனர் ( தங்கள் பெயர் வெளிவராமல்தான்). தங்கள் சம்மதத்துடன் தான் ஜுலியன் அசங்கே தம்முடன் உறவு கொண்டதாகவும் பத்திரிகைகளில் ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

மேற்படி அழகிகளின் குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து பிரித்தானியாவிலிருந்து ஜுலியன் அசங்கேயை நாடுகடத்தும் வழக்கு இப்போது நடக்கிறது

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்?


இலங்கையில் இலங்கை அரசபடையினாலும் இந்திய அமைதிப்படையினாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர் என்பதற்கான சரியான கணிப்பீடுகள் இருப்பதாகத் தெரிவில்லை.

செஞ்சிலுவைச் சங்கம் முன்பு ஒரு முறை வெளியிட்ட கணிப்பின் படி 1983இற்கும் 2002இற்கும் இடையில் அறுபதினாயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடையிலான மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்கிறது. ஆனால் தமிழர்களைக் கொல்வது 1956-இல் ஆரம்பித்துவிட்டது.

08-11-2010இலன்று ஏசியன் ரிபூனில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித்த கொஹென்ன இப்படி எழுதுகிறார்:
For over twenty seven years, our resources remained under utilized, were diverted to the war effort, sometimes haphazardly, enterprises struggled to survive, tourism and inward investment suffered seriously, the cream of our youth went gallantly and voluntarily to the front and many paid with their lives, others were maimed, while quite a few took the easy way out and left the country, and a country that was meant to be a beacon to the region, stagnated in the global backwater. There are 80,000 women widowed by the conflict. Now that the conflict is over and the guns are silenced, Sri Lanka has the opportunity to stand up, dust itself, and rejoin the world as a proud and confident country.

இதில் சிங்களவர்களும் அடங்குவர். இதில் அறுபதினாயிரம் தமிழர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். நவம்பர் 2010இல் இலங்கையில் 60,000 தமிழ் விதவைகள். இன்னும் 20,000 விதவைகள் வெளிநாடு சென்றிருக்கலாம். 5,000பெண்கள் கணவனுடன் இறந்திருப்பார்கள். மொத்தத்தில் 85,000 திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
85000 திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்குமிடத்தில் திருமணமாக 25இற்கு வயதுக்குக் குறைந்த ஆண்கள் 70,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முதிய ஆண்கள் 10,000பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் கொல்லப்பட்ட ஆண்கள் 165,000.

165,000 ஆண்கள் கொல்லப் பட்டிருக்குமிடத்தில் 145,000 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொகை 310,000.


சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தன்னார்வு தொண்டு நிறுவனமொன்று நடத்திய ஆய்வின் படி இலங்கையில் போரினால்250,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. 2009இல் மட்டும் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதுவும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்கிறது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...