Saturday, 27 November 2010

படுக்கை தலையணை Bra மற்றும் ஆடை அணிகலன்களை எத்தனை காலம் பாவிக்கலாம்?


தலைவாரிகள்(சீப்புக்கள்)
வாரந்தோறும் சுடுநீரில் கழுவ வேண்டும். ஒரு மில்லி மீற்றர் தடிப்பான தலைமுடி சிக்குப்பட்டிருந்தால் அதில் 50,000 வரையிலான கிருமிகள் இருக்கலாம்.

காலணிகள்
250 இருந்து 500 மைல்கள் நடந்தவுடன் மாற்றவேண்டும். பழையகாலணிகளில் கழிப்பறையில் இருக்கும் கிருமிகளிலும் பார்க்க 100 மடங்கு அதிகமான கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு.

பற் தூரிகை(toothbrush)
பற்தூரிகைகள் மூன்று மாதத்திற்கு ஒருதடவை மாற்ற வேண்டும். அதற்கு மேல் பாவித்தால் அதன் பயன்படுதன்மை குறைகிறது.

Bras

உங்கள் Bra களை நாற்பது தடவை துவைத்த பின் பாவிக்கக் கூடாது அல்லது மூன்று மாதங்களுக்கு மேலும் பாவிக்கக் கூடாது. அதன் பின் அங்கு அதிக கிருமிகள் சேரும் அத்துடன் அதன் காப்புத் தன்மையும் குறைந்துவிடும். Department Of Sport And Exercise Science at the University of Portsmouth இன் கணிப்பின் படி ஒரு பெண் ஒரு மைல் அசைந்தால் அவளது மார்பு 135 மீட்டர் குலுங்குமாம். ( எப்படிக் கணக்குப் பண்ணினாங்க?)

படுக்கைகள்
வாரந்தோறும் கழுவ வேண்டும். எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு ஒருதடவை உங்கள் படுக்கைகளைப் புதுப்பிக்க வேண்டும். எமது படுக்கையில் ஒரு இரவில் அரைப் பைந்த் வேர்வையை நாம் வெளிவிடுகிறோம். ஆண்டு ஒன்றிற்கு ஒரு இறாத்தல் தோலை உதிர்க்கிறோம். house dust mitesஎன்னும் சிறு பூச்சிகள் 10,000 எமது படுக்கையில் இருக்கின்றன. அவை இருபது இலட்சம் மலம் கழிக்கின்றன.

துவாய்கள் (bath towels)
வாரந்தோறும் துவைக்க வேண்டும்.

தலையணைகள்
ஒவ்வொரு மூன்று மாதமும் துவைக்க வேண்டும். ஆறு மாதங்களில் புதிதாக மாற்ற வேண்டும்.
அங்குள்ள கிருமிகளின் கழிவுகளை சுவாசிப்பதால் பல நோய்கள் ஏற்படுகின்றன.

ஸ்பொன்ஞ்(Sponges)
தினசரி கிருமி நாசினி மூலம் துப்பரவாக்க வேண்டும். ஒரு நாள் பாவித்தவுடன் ஒரு பில்லியன் கிருமிகள் அங்கு வசிக்கும்.

Friday, 26 November 2010

அக வணக்கம் செலுத்த எனக்கு அருகதையில்லை


கோட்டையைப் பிடிக்கவுமில்லை
கொக்காவிலைச் சரிக்கவுமில்லை
கொக்கட்டிச்சோலையில் மார்தட்டி நிற்கவுமில்லை
அக வணக்கம் செலுத்த எனக்கு அருகதையில்லை

சாஹரவர்த்தனாவை மூழ்கடிக்கவுமில்லை
நெல்லியடியில் தவிடுபொடியாக்கவுமில்லை
பூநகரியை எதிரிக்கு புதைகுழியாக்கவுமில்லை
மலர் வணக்கம் செலுத்த தகுதி எனக்கில்லை

ஆனையிறவில் ஆணிவேரோடு அறுக்கவுமில்லை
சீக்கியைரை சிதறடிக்கவும் இல்லை
கூர்காக்களை கூறு போடவுமில்லை
அஞ்சலி செலுத்த ஆண்மை எனக்கில்லை


நீள் கடலெங்கும் நிமிர்ந்து நிற்கவுமில்லை
அம்பாறையில் மறைந்திருந்து தாக்கவுமில்லை
அம்பாந்தோட்டையில் அவர்களை துணிவோடு தூக்கவுமில்லை
உண்ணாமல் உறங்காமல் ஊருக்கு உழைக்கவுமில்லை
மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே

என்றும் ஒளிரும் தீபங்கள்


கார்த்திகைப் பூக்கள்
மலர்ந்தன உதிர்ந்தன
வித்துக்கள் பலப் பல
மீண்டும் முளையாகும்
கார்த்திகைத் தீபங்கள்
என்றும் ஒளிரும்

They may destroy your tombs
Every grit of our soil sings about you
Some may forget what you sacrificed
Every atom of the wind praises you forever
Flame lilies may wither
The seeds will germinate forever
Goals of you souls will be materialized.

Thursday, 25 November 2010

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஆங்கிலத் துணுக்குகள்Every man should marry. After all, happiness is not the only thing in life.

Success is a relative term. It brings so many relatives.

Before you borrow money from a friend, decide which you need more.

I haven't spoken to my wife in 18 months.
I don't like to interrupt her.

If your feet smell
and your nose runs,
you're built upside down.


Confession is good for the soul,
but bad for your career.


Remember, half the people in the world
are below average.


I saw a woman wearing a sweat shirt with "Guess" on it.
...So I said, "Implants?"

No one ever says, "It's only a game."
when their team is winning.


It's a small world so you
have to use your elbows a lot.


If at first you don't succeed,
destroy all evidence that you even tried.


Blood is thicker than water
and tastier, too.

Never Go to Bed Angry.
Stay Awake and Plot Your Revenge

Lord, if I can't be skinny,
please let all my friends be fat.

God Made Pot.
Man Made Beer.
Who Do You Trust?

Wednesday, 24 November 2010

விதைத்தவை மலருமுன்னே புதைபட்டவர்


உன்னை எண்ணி நெஞ்சம் தவிக்குது
மண்ணை எண்ணி மனம் பதறுது
தியாகத்தை எண்ணி நிதம் துடிக்குது
மாவீரா - புலி
வீரா

விதைத்தவை மலருமுன்னே
புதைக்கப்பட்ட உத்தமரே


கொடுங்கோலர் ஆட்சி
அவர் மறைவுடன் முடியும்
மாவீரர் மாட்சி
அவர் மறைவில் தொடங்கும்


உங்களைச் சிரிக்க வைக்க தேடிப் பிடித்தவை சில:

"People say nothing is impossible, but I do nothing every day."

Just remember... if the world didn't suck, we'd all fall off.

- Trevor Myers

Roses are red violets are blue, God made me pretty, what happened to you?

- Roxy Quiksilver

SEX is not the answer. SEX is the question and YES is the answer!!

Don't think of yourself as an ugly person. Think of yourself as a beautiful monkey!

A wise man once said, "I don't know, go ask a woman."

Q. What do you call a woman who knows where her husband is every night?
A. A widow.Q. Why are married women heavier than single women?
A. Single women come home, see what's in the fridge and go to bed. Married women come home, see what's in bed and go to the fridge.Q: Why are hurricanes normally named after women?
A: When they come they're wild and wet, but when they go they take your house and car with them.

Tuesday, 23 November 2010

இருதய நோய்களுக்கு இலகுவான மருந்துகள்


இரண்டு கிளாஸ் தோடம்பழச் சாறு( Two glasses of orange juice) அதாவது 500மில்லி லீட்டர் நாள் தோறும் அருந்தி வந்தால் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைவடையச் செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

American Journal of Clinical Nutrition இல் தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு கிளாஸ் தோடம்பழச் சாறு அருந்தி வந்தவர்களிடையே இரத்த அழுத்தம் குறைவடைந்துள்ளதை கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. குறைந்த இரத்த அழுத்தம் பல இருதய நோய்களை குணப்படுத்தும்.

apple cider vinegar

இன்னொரு ஆய்வில் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கரண்டி apple cider vinegar படி எட்டு வாரங்களுக்கு அருந்தி வந்தால் உங்கள் இரத்தத்தில் உள்ள வேண்டத் தகாத கொழுப்பை அது கரைத்துவிடும் என்று அறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற் கொண்டவர்கள் இப்படித் தெரிவிக்கிறார்கள்:
  • A clinical trial, currently underway in ­Minnesota in the U.S., has been looking at 120 people, half of whom have had the vinegar while the others are being given a placebo ­containing a 2 per cent balsamic vinegar ­solution in water. Apple cider vinegar — a common kitchen remedy for arthritis and gout — has already been shown to lower blood sugar levels and reduce appetite.
  • A separate study based on animals with ­diabetes, has already shown that apple cider vinegar lowered levels of bad cholesterol and improved good cholesterol.

    It’s thought the vinegar speeds up the processing of fats.

கொழுப்பைக் கரைக்கும் பணியை வினாகிரி(vinegar) விரைவு படுத்துகிறது.

Monday, 22 November 2010

மாவீரர்களை கொச்சைப்படுத்துவோரை மன்னிக்க மாட்டோம்


உங்களை இன்று மறந்த
எம்மவர்களை மன்னிப்போம்
உங்களைக் காட்டிக் கொடுத்த
துரோகிகளை மன்னிப்போம்
உங்கள் கல்லறைகள் சிதைத்த
கயவர்களை மன்னிப்போம்
அன்று முன்னூட்டம் கொடுக்காமல்
எம் பின்னடைவுகளை சாதகமாக்கி
இன்று பின்னூட்டம் கொடுத்து
உங்கள் தியாகங்களை
கொச்சைப்படுத்தும்
ஈனர்களை என்றும்
மன்னிக்க மாட்டோம்

Sunday, 21 November 2010

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கான குரு மாற்றப் பலன்கள்


பொதுப் பலன்கள்

எந்திரம் போல் உழைப்பதே வாழ்க்கையின் மந்திரமாக இருக்க வேண்டும் என்று தவத்திரு குண்டாந்தடி அடிகள் சுவாமிகள் கூறியுள்ளார். இந்தக் கூற்றை உணர்ந்த நீங்கள் என்றும் எந்திரம் போல் உழைத்துக் கொண்டே இருக்கும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே உங்களுக்கு இந்தக் குரு மாற்றம் நற்பலன்களையும் தீய பலன்களையும் கலந்தே கொண்டுவரும். உங்களில் பலர் இன்னும் வருடத்தில் இன்னும் எத்தனை நாட்களை பாராளமன்றத்தின் முன் செவழிக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருகிறீர்கள். அது மட்டுமா அந்தத் தேர்தலுக்கு வந்து வாக்களியுங்கள் இந்தத் தேர்தலுக்கு வந்து வாக்களியுங்கள் என்று உங்களை எத்தனை விதமாக அலைக்கழித்தனர். அத்துடன்உங்கள் வாழ்வில் உங்களை அறியாமல் பல மாற்றங்கள் நிகழப் போகிறது. இந்த இடியப்பம் பிழியக் கஷ்டமாக இருகிறது கொஞ்சம் பிழிஞ்சு தாருங்கோ, நான் இந்த புட்டு மாவைக் கொத்துறன் நீங்கள் கொஞ்சம் தேங்காயைத் துருவித்தாங்கோ இந்த இட்லிமா புளிச்சிருக்கோ என்று ஒருக்கால் பார்த்துச் சொல்லுங்கோ என்பது போன்ற வார்த்தைகள் உங்கள் வீடுகளில் அடிக்கடி கேட்க முடியாது. Sampal express kaveri express, saampar express, pongal express என்று பல Tamil Fast food கடைகள் இனி உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தப் போகின்றன.


மேட ராசித் தோழர்களே

இதுவரை கும்பத்தில் அமர்ந்திருந்து ஜம்பம் அடித்து வந்த குருபகவான் இனி மீனத்திற்கு மாறி உங்கள் குடும்பத்தையே நாறடிக்கப் போகிறார். கும்பத்திலிருந்து U-Turn அடித்து வக்கிரமாக மீனத்திற்குப் பாய்வதால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் ஏழு வயது மகள் நாலு வயதாக இருக்கும் போது மூன்று தடவை தும்மியதற்காக ஆறுபடை வீட்டிற்கும் மகளை அழைத்து வந்து தரிசிப்பதாக நேர்த்திக் கடன் வைத்ததாகவும் அதனால் உடனடியாக இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்றும் உங்கள் மனைவி நச்சரிப்பார். நீங்களும் அழைத்துச் செல்வீர்கள். அங்கு போன பின்னர் தான் தெரியும். குமரன்ஸ், பிரின்ஸ் ஜுவல்லேர்ஸ், போத்தீஸ், நல்லீஸ், ராசி சில்க், சென்னை சில்க்ஸ் ஆகிய ஆறு கடைவீடுகள் தான் உங்கள் மனைவியின் திட்டம் என்று. இதே சாக்காக நீங்களும் கோடம்பாக்கம் திருத்தலம் சென்று ஸ்ரீ தமனாம்பாளைத்தரிசித்து வரலாம். அதனால் உங்கள் மன உளைச்சல் நீங்கி வாழ்வில் நிம்மதி ஏற்படும்.


இடப ராசி இனிய அன்பர்களே

அடிக்கடி இடம் மாறுவதை விரும்பும் இடப ராசி அன்பர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு இனிதே அமையும். இந்த மந்தமான பொருளாதாரச் சூழலிலும் இன்னும் ஒரு பெரிய வீடு வாங்குவீர்கள். உங்கள் மகளுக்கு திருமணம் நடக்கவில்லை. அவள்அடிக்கடி கணனி முன்னிருந்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறாள் என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மகள் ஒரு நல்ல மணமகனை facebookஇல் நீங்களே வியந்து போகும்படி தெரிந்தெடுத்துக் கொள்வார். அதுவும் உங்களுக்குத் தெரிந்தவர்களின் குடும்பத்தில் இருந்து என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும். கலைஞர்கள் கிசு கிசுத் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு சுபப்பலன் உண்டாகும்.

இடபராசிப் பெண்களே உங்கள் ஏழாம் வீட்டை சனிபகவான் சைட் அடிப்பதால் உங்கள் கணவன் தன்னுடன் வேலை செய்யும் ஒரு கரிபியப் பெண்ணிற்காக பணத்தைக் கரியாக்குவார் கவனமாக இருங்கள். அண்மையில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று துளசி இலை வில்வம் இலை, இலந்தம் இலை, வேப்பம் இலை, பூவரசம் இலை வாதநிவாரணி இலை முள் முருக்கம் இலை சாத்தி வழிபட்டால் நற்பலன் உண்டாகும்.

மிதுன ராசியினரே

காரில்லார்க்கு இந்த நாடில்லை. வீடில்லார்க்கு இவ்வுலகில்லை என்று அருள்மிகி மார்கிரட் தச்சர் அம்மையார் கூறியுள்ளார். இந்தக் கூற்றை உணர்ந்து கொண்ட மிதுனராசி அன்பர்களே! பத்திலே குரு பரமனைப் பிச்சா பாத்திரம் ஏந்த வைத்தது. உங்களை மட்டும் சும்மா விட்டு வைக்குமா. படாத பாடு படுத்தும் முதலில் உங்கள் மனைவியிடம் உள்ள கடன் அட்டைகள் யாவற்றையும் எடுத்து ஒரு பலமான கத்திரிக்கோலால் இரண்டாகக் கத்தரித்து அவற்றை ஒரு அமாவாசை இரவில் ஹமர்சிமித் பாலத்திற்கு சென்று உங்கள் தலை மூன்று முறை அவற்றால் சுற்றிவிட்டுவீசா நாசமாய் போவாய் நமஹ.. மாஸ்டர் கா(ர்)ட் மண்ணாகிப் போவாய் நமஹ என்ற மதிரத்தை மூன்று முறை உச்சாடனம் செய்து அப்படியே புண்ணிய தேம்ஸ் நதியில் யார் கண்ணிலும் படாமல் வீசவும். பின்னர் இடது பக்கம் திரும்பி மூன்று முறை துப்பவும். உங்கள் பணக் கஷ்டங்கள் யாவும் தீரும். அல்லாவிடில் உங்கள் வீட்டை வங்கி சுவீகரிக்கும் நிலை ஏற்படலாம். கன்னிப் பெண்கள் வாரத்தில் இரண்டு முறை எந்தக் கோவிலிற்காவது சென்று வந்தால் அங்கு யார் கண்ணிலாவது பட்டு திருமணப் பலன் கிடைக்கும்.


கடகராசி கண்ணிய அன்பர்களே

வீட்டுச் செல்வம் பெருஞ்செல்வம் அச்செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலை என்று மஹரிஷி ரொனி பிளேயர் அவர்கள் கூறியுள்ளார். இக்கூற்றின் படி நடக்கும் கடக இராசி அன்பர்களே, நாலு பேர் சொற்படி நடப்பது உங்களுக்கு எப்போது நற்பலனைத் தரும். ஒன்பதிலே வரும் குரு உங்களுக்கு பலவற்றையும் அள்ளித் தரும். அது உங்கள் மனைவியின் வாக்குஸ்தானத்தைப் பார்பதால் இதுவரை உங்கள் மீது வள்ளென்று பாய்ந்து வந்த உங்கள் மனைவி இனி பெட்டிப் பாம்பாக அடங்கிப்போவார். இனி வீட்டில் உங்கள் ஆணைப்படி யாவும் நடந்தாலும் உங்கள் மகள் வீட்டில் அமர்ந்திருக்கும் சனிபகவான் பிள்ளைகள் வழியில் பல தொல்லைகளைத் தரப்பார்ப்பார். அவற்றை உங்கள் இயல்பான மதிநுட்பத்தால் சமாளித்து விடுவீர்கள்.


சிம்மராசித் சிங்காரத் தோழர்களே

உள்ளார் இல்லார் என்ப்பது அவரவர் Mortgage Loanஆல் துணியப்படும் என்று அலிஸ்டர் டார்லிங் சுவாமிகள் கூறியுள்ளார். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட சிம்மராசி அன்பர்களே! இது வரை உங்கள் மனைவியின் வீடான ஏழாம் வீட்டில் இருந்து குரு பகவான் மனைவி வழியில் நற்பலன்களைச் செய்து வந்தார். மனைவியின் தாய் கனடாவில் சுகவீன முற்றிருக்கிறார் என்று உங்கள் மனைவி ஆறு மாதம் கனாடாவில் இருந்ததால் வீட்டில் எவ்வளவு நிம்மதியக இருந்தீர்கள். குருபகவான் அவர் இப்போது தன் வீடு வந்து விட்டார். இனி வீட்டுக்குள் சிகரட் பிடிக்க முடியாது. குடிச்சு முடிச்ச பீர் குவளையக் கண்ட இடத்தில் வைக்க முடியாது குரு எட்டாம் வீட்டில் இருப்பது வீண் சச்சரவுகளைத் தோற்றுவிக்கும். Freshy என்றும் சோறு என்றும் பாடசாலையில் விமர்சிக்கப் பட்ட உங்கள் மகன் ஜீசிஎஸ்சியில் நல்ல பெறுபெறுகள் எடுப்பார். பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களில் அறிமுகமாகும் முன் பின் தெரியாதவகளிற்கு மூன்று பிள்ளைகள் என்பதற்காக அவர்களை ஜேர்மனியில் இருந்து வந்தீர்களா என்று கேட்டு வீண் சண்டையில் மாட்ட வேண்டாம்.


கன்னி ராசி அன்பர்களே

ஓடு ஓடு உலகெலாம் ஓடு தேடு தேடு பணம் தேடு என்று தவத்திரு கோர்டன் பிரவுன் அவர்களின் கூற்றுப்படி நடக்கும் கன்ன்னிராசி அன்பர்களே! ஏழாம் வீட்டிற்கு வரும் குருபகவான் இதற்கு முன் உங்களை வேண்டாம் என்று போன மாப்பிள்ளை இப்போது உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்தபடியால் உங்கள் வீட்டு வாசலில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி தவம் கிடக்கச் செய்வார். பல சுபச் செலவுகள் ஏற்படும். இருக்கும் நகைகளை கொடுத்து புது நகை வாங்கும் பாக்கியம் கிடைக்கும். facebookஇல் இருக்கும் கன்னிராசிப் பெண்கள் தங்கள் சொந்தப்படத்தை profile picture ஆகப் போடாமல் cinesouth.com website இல் உள்ள ஒரு தெலுங்கு நடிகையின் படத்தை போடவும் அல்லது அடுத்த அம்மன் கோவில் தேருக்குப் பின்னால் செல்லும் போது கண்டவர்களும் உங்கள் பெயரை சொல்லிக் கூப்பிடும் நிலை ஏற்படலாம்.


துலா ராசித் தோழர்களே

எப்போதும் சமநிலையாக இருக்க விரும்பும் நீங்கள், ஓடி ஓடி உழைத்தும் ஒரு குண்டு மணி கூட வாங்க முடியவில்லையே என்று தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிரித்தானியா வந்து மூன்று வருடம் ஏழு மாதத்திற்குப் பிறகு வந்த உங்கள் மைத்துனர் உங்களிலும் பார்க்க நல்ல கார் வாங்கி விட்டார் என்று பொருமிக் கொண்டிருக்கிறீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்தமாக வீடு வாங்க எந்தனை முயற்சி எடுத்தீர்கள். உங்களுக்கு வீட்டு ஈட்டுக் கடன் வாங்கி வருதாகச் சொல்லி உங்களை இதுவரை மூன்று பேர் ஏமாற்றினார்கள். இந்த நிலை இன்னும் ஒரு வருடம் தொடரும். அதன் பின்னர் உங்களுக்கு யாவரும் பார்த்து வயிற்றெரிச்சல் படும் படி நல்ல சிறந்த வீடு அமையும். அது வரை டெஸ்ஸாவில் தொடர்ந்து சேமிக்கவும். துலா இராசிப் பெற்றோர்களே! ஐரி படித்த பெண் உங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தால் உங்கள் மகனுக்கு நல்லபடியாகச் சம்பாதிப்பாள் என்று எண்ணியிருந்தீர்கள். ஆனால் மருமகள் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார். சரி உணவு சமைத்தாவது உதவி செய்கிறார் என்று பார்த்தால் அதுவும் பிரச்சனை. சொதிக்கு எவ்வளவு உப்புப் போட வேண்டும் என்பதை அறிய சமையலரைக்கு லப்டொப்பைக் கொண்டு போய் கூகிளில் தேடிப்பார்க்கிறார். மருமகளுடன் ஒன்றும் கதைக்க முடியாமல் சிவனே என்று தலையில் அடித்துக் கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட்


விருச்சிக ராசியினரே

உள்ளார் இல்லார் என்பது அவரவர் mortgageஆல் துணியப்படும் என்றார் டெவிட் கமரோன் சுவாமிகள். அப் பெருந்தகை கூற்றுப்படி செயற்படும் விருச்சிக இராசிகாரர்களே. ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் குருபகவான் இனி அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறார். நவக் கிரகங்களின் வங்கியாளரான குருபகவான் இனி உங்கள் வங்கிக் கணக்கை நிறைக்கப் போகிறார். பட்டேல் அன் கோ வை விட்டு விலகி இனி நல்ல இடத்தில் நீங்கள் நினைத்தது போல் வேலை கிடைக்கும். ஜீசிஎஸ்சீ தேர்வில் உங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் பிள்ளைகளிலும் பார்க்க உங்கள் மகன் மோசமான பெறு பெறு பெற்றதால் அவமானத்தால் வெளியில் தலைகாட்ட முடியாமல் இருந்தீர்கள். இனி அதே மகன் யாவரும் வியக்கும் வண்ணம் சகல பாடங்களிலும் உயர்தரப் பரீட்சையில் ஏ தரத்தில் சித்தி பெற்று அசத்துவார்.. வதிவிட அனுமதியின்றிக் கரைச்சல் படுபவர்கள் அண்மையில் உள்ள அம்மன் கோவிலிற்கு சென்று செவ்வாய்க் கிழமை தோறும் பட்டு சாத்தி (பக்கத்து வீட்டு பட்டு அல்ல) வழிபடவும்.


தனு ராசியினரே

தயாள குணம் படைத்த தனு இராசி அன்பர்களே,

பாரப்பா நாலிலே குரு இருந்தால்

காரப்ப கடுங்குளிரில் breakdown ஆகும்

காலையில் startஆக மறுக்கும்

ஏதப்பா இதைவிடத் தொல்லை என்று எலிப்பாணி சோதிடர் சொல்லியுள்ளார்.

உங்களுக்கு வகனம் மூலமான பல பிரச்சனைகள் ஏற்படும். மாணவர்கள் Facebookஇல் மிகக் கவனமாக இருக்கவும். உங்களுடன் நடிகை திரிஷாவின் profile picture உடன் 19years old Dhiviya Menon from Triplicane என்று சொல்லி தினசரி மூன்று வேளை சாப்பட்டிற்கு முன் chat பண்ணிகொண்டிருக்கும் பெண் உண்மையில் ஒரு ஐ ரி படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இலங்கை வத்தளையைச் சேர்ந்த ஒரு 41 வயதுப் பெண் என்று அறிந்து ஏமாற்றம் அடைவீர்கள்.

மகரம்

இந்த ஆண்டு உங்களுக்கு விரயச் செலவு அதிகமாகும். உங்கள் மகளின் திருமணம் இனிதே நடக்கும். ஆனால் நகைகளும் சேலைகளும் இலண்டனில் வாங்குவதிலும் பார்க்கச் சென்னையில் வாங்கினால் சிக்கனமாக முடிக்கலாம் என்று உங்கள் மனைவி சொல்வார். நீங்களும் குடும்ப சமேதராய் சென்று பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து யாவற்றையும் வாங்கி வருவீர்கள். பின்னர் உங்கள் மனைவியின் அண்ணனின் மனைவி வந்து வாங்கி வந்த நகைகளையும் சேலைகளையும் பார்த்து விட்டு இவை எல்லாம் இப்போது பழைய fஷன் நகைகள் சேலைகள் என்று உங்கள் மனைவியை உசுப்பேத்தும் படி நக்கலடித்து விட்டுப் போவார். பின்னர் உங்கள் மனைவி கண்ணீர் வடித்து மீண்டும் சகலவற்றையும் வெம்பிளிக்குப் போய் வாங்கி விடுவார். இதனால் உங்களுக்கு இரட்டிப்புச் செலவு உண்டாகும்.

ஓம் நமீதா துவஜாஜ வித்மகி

கால்கள் தூண்கள் போன்ற தீமஹி

தன்னோ தமிழ்ச் சினிமா பிரச்சோதாயா

என்ற காயத்திரி மந்திரத்தை தினமும் 108 தடவை பாராயணம் செய்யவும். சிரமங்கள் தணியும்


கும்பம்

கும்பராசியினரே

உங்கள் இராசியில் இருந்து பல தொல்லைகள் கொடுத்து வந்த குருபகவான் இரண்டாம் இடத்திற்கு மாறுவதால் சிண்டிகேட் மூலமாக லாட்டரி சீட்டு வெற்றி பெறும் யோகம் உண்டு. உங்கள் சொல்லை பிள்ளைகள் கேட்டு நடப்பர். புதுக் கார் வாங்கி பக்கத்து வீட்டுக் காரர்களையும் நண்பர்களை பெரும் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாக்குவீர்கள். உங்கள் செல்வாக்கு நிலைகண்டு உங்கள் மைத்துனருக்கு blood pressure அதிகமாகும். கும்பராசிப் தாய்மார்களே உங்களுக்கு ஒரு அடக்கமான பெண் தான மருமகளாக வரவேண்டும் என்று அடாவடியாக நிற்கிறீர்கள். அடக்கமான பெண் எங்கும் இல்லை சுடலைக்குள் தான இருக்கிறாள் கிளறித்தான் எடுக்க வேண்டும் என்ற உண்மையை இனி உணர்ந்து கொள்வீர்கள் உங்கள் மகனுக்கு இனித் திருமணம நடக்கும்.


மீனம்

மீன இராசி அன்பர்களே. உங்கள் ஜென்ம இராசியில் வரும் குரு வன்மம் வைத்துச் செயற்படும். கோயிலுக்குப் போனமா கும்பிட்டமா என்று இருக்கவும் அங்கு நடக்கும் அறங்காவலர் சபைத் தேர்தலில் எல்லாம் சம்பந்தப் படவேண்டாம். அங்கு நடக்கும் அடிபிடிகளால் அவலப் படுவீர்கள். சீட்டுக் கட்டுவதை தவிர்க்கவும். அப்படிக் கட்டினாலும் முன்கூட்டியே எடுக்கவும். சூர்யாவைப் போல் ஒருவனைத்தான் கல்யாணம் செய்வேன் என்று உங்கள் மகள் அடம்பிடிப்பாள். டெபனம் புளு குறொஸ் சேலில் உங்கள் மனைவி வாங்குவதில் முக்கால் வாசியை திருப்பிக் கொடுத்து refund எடுப்பதிலேயே உங்கள் வாழ்நாள் போய்விடும். உங்கள் 17 வயது மகனின் அறையில் சில ஆண்டுகளுக்கு முன் லயன் கிங்கின் படம் இருந்தது பின்னர் மைக்கேல் ஜக்சனின் படம் இருந்தது இப்போது கேற்றி பெரியின் முக்கால் நிர்வாணப் படம் இருக்கிறதே என்று ஆத்திரப் பட வேண்டாம். கண்டுகொள்ளாத மாதிரி இருக்கவும்.12இராசிகளின் மீதும் 9 கிரகங்கள் மீதும் சத்தியமாக சொல்கிறேன் இதற்கும் சோதிடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...