Saturday, 30 October 2010

தலை சுற்ற வைக்கும் SMS & பலவுமிழந்த என் இனமே


Pls remind me 2 remind u about reminding me to send u dis reminder oh dat reminds me can u remind me wot the reminder was ive forgot!

if u notice this notice you will notice that this notice is not worth noticing!!!

MEN-opause MEN-strual pain MEN-tal illness GUY-necologist HIS-terectomy EVER NOTICED HOW WOMENS PROBLEMS START WITH MEN??


பலவுமிழந்த என் இனமே

பலமிழந்து நிலமிழந்து
பொருளழிந்து நிலையிழந்து
உரமிழந்து உயிரிழிந்து
பரிதவிக்கும் என் இனமே

பரிதவித்து பதை பதைத்து
உதைபட்டு வதைபட்டு
உயிரோடு புதைபட்டு
துணையற்ற என் இனமே


துணையற்று துயருற்று
துடிதுடித்து அடிபட்டு
கலைபட்டு எரியுற்று
கதியற்ற என் இனமே

கதியற்று உணவற்று
தெருவுழன்று கருவழிந்து
உருக்குலைந்து செருக்கழிந்து
பலவுமிழந்த என் இனமே.

துயர் நீக்கி துரோகம் தவிர்த்து
வேறுபாடு களைந்து ஒற்றுமைப்பட்டு
உணர்வெடுத்து உரிமை பெற
கிழர்ந்தெழு என் இனமே

Friday, 29 October 2010

அற்புதக் காட்சி.: ஆபிரிக்க யானைக்கு அபயமளிக்காத திருமால்!!!!


கஜேந்திரன் என்ற யானையின் கால் முதலையின் வாயில் அகப்பட்ட போது திருமால் வந்து காப்பாற்றினாராம். இதை இப்படிக் கூறுவார்கள்:
  • விசிஷ்டாதவைத்தின் மைய கருத்தே பூரண சரணாகதிதான் அந்த சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம். ஜீவாதமாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் "ஆதி மூலமே" என்று அலறிய அடுத்த கணமே வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்த பகதவத்சலன். ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்த கஜேந்திர மோக்ஷம்.
ஆபிரிக்காவில் ஒரு யானைக் குட்டி தண்ணீர் குடிக்கப் போன இடத்தில் அதன் துதிக்கையை ஒரு முதலை கவ்விக் கொண்டது. யானைக் குட்டி தனது நாலு கால்களையும் நன்கு பரப்பி போராடி தனது துதிக்கையை இழுத்தது. முதலையும் தனது பசிக்கு நல்ல காத்திரமான உணவு கிடைத்தது என்று நன்கு கவ்வி இழுத்தது. இரண்டுக்கும் இடையில் ஒரு கயிறு இழுத்தல் போட்டியே நடந்தது. துதிக்கையும் நீண்டு கொண்டு போனது. தென் ஆபிரிக்கவில் உள்ள Kruger National Park இல் நடந்தது. இதை Johhan Opperman தனது ஒளிப்பதிவுக் கருவியில் பதிந்து கொண்டார். யானைக் குட்டி ஆதி மூலமே என்று குரல் கொடுக்காததால் திருமால் சக்கர ஆயுதத்துடன் வரவில்லை. யானைக் குட்டியின் அலறல் கேட்டு மற்ற யானைகள் அங்கு வந்து தமது உரத்த பிளிறல்கள் மூலமும் கால்களால் நிலத்தில் உதைத்து எழுப்பிய அதிர்வின் மூலமும் முதலையை பயங்காட்டி விரட்டி விட்டன. பின்னர் யானைக் குட்டியை சூழ்ந்து அதன் உடல் நிலையை சரியென்று உறுதி செய்த பின் அங்கிருந்து பத்திரமாக அந்தக் குட்டியை அழைத்துச் சென்றன.

கஜேந்திரன் ஆயிரம் ஆண்டுகள் முதலையுடன் போராடினானாம். இந்திய யானைகள் கூட ஒன்றுக்கு ஒன்று உதவ மாட்டாதன போலும்.

சோனியை(Sony)ஐயும் Facebookஐயும் ஆப்பிள் விழுங்குமா?
ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-பொட், ஐ-போன், ஐ-பாட் ஆகியவற்றால் பெரும் இலாபம் ஈட்டி வருகிறது. ஆப்பிளின் கைவசம் உள்ள பணக் கையிருப்பு 51பில்லியன் டொலர்களுக்கு மேலாக வளர்ந்து வருகிறது. ஆப்பிளுக்கு கடன் எதுவும் இல்லை. இவ்வளவு தொகை கையிருப்பு உள்ள நிறுவனங்கள் தமக்கு போட்டியாக உள்ள நிறுவனங்களை விலை கொடுத்து வாங்குவது வழக்கம். இந்த வாரம் ஆப்பிள் சோனி நிறுவனத்தை வாங்குமா என்ற தகவல் உலக பங்கு வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதையொட்டி சோனியின் பங்குகளின் விலையில் அதிகரிப்பும் ஏற்படுத்தியுள்ளது. சோனி நிறுவனத்தின் மொத்தப் பெறுமதி 40பில்லியன் டொலர்கள். இந்தப் பெறுமதி ஆப்பிளின் கையிருப்புக்குள் அடங்குகிறது அது மட்டுமா கடந்த ஆண்டு சோனி 41மில்லியன் டொலர் நட்டம் அடைந்துள்ளது.

வெறும் வதந்தி
சிலர் இந்த ஆப்பிள் சோனியை வாங்கும் என்ற செய்தி சோனியின் பங்கு விலைகளை உயர்த்த சிலர் வேண்டு மென்றே பரப்பிய வதந்தி என்றும் உலக பங்கு வர்த்தகள்கள் மத்தியில் பேசப் படுகிறது.

ஆப்பிளுக்கு பசி எடுத்துவிட்டது.
ஆப்பிளின் கையிருப்பில் இருக்கும் பெருந்தொகை நிதி அது வேறு நிறுவனங்களை நிச்சயம் வாங்கும் என்பதில் சந்தேகமில்லை என்று பலரும் கூறுகிறார்கள். ஆப்பிள் வாங்கக் கூடிய மற்ற நிறுவங்களாகக் கருதப் படுபவை Facebook, Adobe and Disney. இதில் அடொப் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் அண்மையில் ஒரு கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தன. ஆப்பிள் வெளியிட்ட ஐ-பாட்டில் அடொப்பின் flash player செயற்பட முடியாமல் இருந்ததே இதற்குக் காரணம். ஐ-பாட்டில் அடொப்பின் flash player செயற்பட முடியாமல் இருப்பது பலரை அதிருப்திப் படுத்தியது. அடொப்பின் flash player செயற்பட முடியாமல் இருப்பதை பல ஊடகங்கள் ஐ-பாட்டின் ஒரு பலவீனமாகவே கருதின. இதற்குப் பதிலளித்த ஆப்பிள் அடொப்பின் flash player ஒரு காலாவதியான செயற்படு மென் பொருள் என்று தாக்கியது. இதில் Facebook மட்டும் தம்மை ஆப்பிள் வாங்காது என்று மறுத்துள்ளது.

ஆப்பிள் தொடர்ந்து கவர்ச்சிகரமான கருவிகளை சந்தைப்படுத்தி அசத்துவது அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது.

Thursday, 28 October 2010

விசித்திரமான விண்ணப்பம் ஆனால் வேலை கிடைத்தது


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மக்டொனல்ட் இற்கு ஒரு விசித்திரமான விண்ணப்பம் வந்தது. அதில் உள்ள நகைச்சுவைக்கும் விண்ணப்பதாரியின் நேர்மையான கூற்றுக்கும் வேலை கிடைத்தது. அந்த விண்ணப்பம் இப்படி இருந்ததாம்:

NAME: Greg Bulmash.

SEX: Not yet. Still waiting for the right person.

DESIRED POSITION: Company's President or Vice President. But seriously, whatever's available. If I was in a position to be picky, I wouldn't be applying here in the first place.

DESIRED SALARY: $185,000 a year plus stock options and a Michael Ovitz style severance package. If that's not possible, make an offer and we can haggle.

EDUCATION: Yes.

LAST POSITION HELD: Target for middle management hostility.

SALARY: Less than I'm worth.

MOST NOTABLE ACHIEVEMENT: My incredible collection of stolen pens and post-it notes.

REASON FOR LEAVING: It sucked.

HOURS AVAILABLE TO WORK: Any.

PREFERRED HOURS: 1:30-3:30 p.m., Monday, Tuesday, and Thursday.

DO YOU HAVE ANY SPECIAL SKILLS?: Yes, but they're better suited to a more intimate environment.

MAY WE CONTACT YOUR CURRENT EMPLOYER?: If I had one, would I be here?

DO YOU HAVE ANY PHYSICAL CONDITIONS THAT WOULD PROHIBIT YOU FROM LIFTING UP TO 50 LBS?: Of what?

DO YOU HAVE A CAR?: I think the more appropriate question here would be "Do you have a car that runs?"

HAVE YOU RECEIVED ANY SPECIAL AWARDS OR RECOGNITION?: I may already be a winner of the Publishers Clearing house Sweepstakes.

DO YOU SMOKE?: On the job no, on my breaks yes.

WHAT WOULD YOU LIKE TO BE DOING IN FIVE YEARS?: Living in the Bahamas with a fabulously wealthy dumb sexy blonde super model who thinks I'm the greatest thing since sliced bread. Actually, I'd like to be doing that now.

DO YOU CERTIFY THAT THE ABOVE IS TRUE AND COMPLETE TO THE BEST OF YOUR KNOWLEDGE?: Yes. Absolutely.

SIGN HERE: Aries.

Wednesday, 27 October 2010

எச்சரிக்கை: ஐ-போனில் கிருமி(bug)ஐ-போனில் உள்ள மென்பொருள் குறைபாடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் போனைத் திருடுபவர் கடவுச் சொல் இல்லாமலேயே உங்கள் ஐபோனில் இருந்து அழைப்புக்களை விடுக்க முடியும். இதன்படி உங்கள் ஐ-போனில் இருந்து ஒருவர் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஐ-போனில் இருந்து அழைப்புக்கள் விடமுடியும், உங்கள் ஐ-போனில் உள்ள உங்கள் படங்களைப் பார்க்க முடியும்.

சென்ற ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இதே போன்ற் ஒரு கிருமி வைரச் பரவவிடப்பட்டது. அதை ஆப்பிள் நிறுவனம் தனது மென்பொருள் மூலம் சரி செய்தது. நேற்றில் இருந்து 4-iphone software ஐப் பாதிக்கும் இன்னொரு கிருமி(bug) கண்டறியப்பட்டுள்ளது. முன்பு வெளியிட்ட கிருமி(bug) மூலம் குறுந்தகவல்களையும் அனுப்பலாம் ஆனால் நேற்று பரவவிடப்பட்டுள்ள கிருமி படங்களைத் திருட்டுத் தனமாகப் பார்க்கவும் அழைப்புக்களை விடவும் மட்டுமே பயன்படுத்தப் படும். மெக்சிக்கோவைச் சேர்ந்த ஐ-போன் பாவனையாளர் இந்த கிருமி(bug) பரவியுள்ள்மையை கண்டறிந்துள்ளார்.

இந்த கிருமி(bug) பற்றி ஆப்பிள் நிறுவனம் இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆப்பிள் இது தொடர்பாக திருத்த மென்பொருளை விரைவில்வெளிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐ-போன் பாவனையாளர்கள் தமது மென்பொருளை update செய்வதன் மூலம் இந்த கிருமி(bug) இருந்து தமது ஐபோன்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்

Tuesday, 26 October 2010

சாட்சியில்லாத பிரபாகரனின் இறப்பு. பின்னணியில் என்ன?

2010 ஜனவரி 31-ம் திகதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் தமக்குக் கிடைக்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வுத் துறை அறிவித்தது. அதுவும் சும்மா அறிவிக்கவில்லை தகவலறியும் சட்டத்தின் கீழ் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அறிவித்தது. இந்த இரகசியம் வெளிவந்ததால் சிங்கள் அரசிற்கு சங்கடமான நிலை ஏற்படும் என்று கவலைப் பட்ட சிவகங்கைத் தொகுதியில் ஏதோ செய்து வெற்றி பெற்ற சிதம்பரம் அண்ணாச்சி ஒரு அறிக்கை வெளியிட்டார். ராஜபக்சேக்கள் என்னும் எஜமானிகளின்மீதான எஜமான விசுவாசம் அவரை இப்படி ஒருஅறிகை விடத் தூண்டியதா என்ற சந்தேகம் கூட எழலாம். அவர் விட்ட அறிக்கை தொடர்பாக வந்த செய்தி:
  • India’s Union Home Minister P, Chidambaram said that India’s Central Bureau of Investigation (CBI) has received the 'documentation' from Sri Lanka confirming the death of LTTE Chief Vellupillai Prabhakaran.
  • Speaking to reporters today, Chidambaram said, "The CBI has told me that they received documentation from the Government of Sri Lanka confirming the death of Prabhakaran."

பிரபாகரன் இறந்தது தொடர்பான பத்திரங்கள் இந்திய மத்திய புலனாய்வுத் துறைக்குக் கிடைத்ததாக சிதம்பரம் தெரிவித்தார். அது என்ன பத்திரம் என்பது சிதம்பர இரகசியம். சிதம்பரத்தின் கூற்றில் "Death Certificate" என்ற பதம் பாவிக்கப் படவில்லை. சிதம்பரத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இலங்கை ஊடகங்கள் இறப்புச் சான்றிதழ் கிடைத்ததாக சிதம்பரம் தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டன. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களும் இப்படி அறிவித்தன:
  • இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சிபிஐ (CBI) க்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை மரணச் சான்றிதழ் என்பது இலங்கை பதிவாளர் திணைகளத்தில் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்து அத்திணைக்களம் வழங்கும் பத்திரமே இறப்புச் சான்றிதழ். பிரபாகரனின் இறப்பு இதுவரை இலங்கை பதிவாளர் திணைகளத்தில் பதிவு செய்யப் பட்டதாகத் தகவல் இல்லை. லக்ஷ்மண் கதிர்காமர் கொலைவழக்கில் பிரபாகரனுடையதோ அல்லது பொட்டு அம்மானுடையதோ இறப்புச் சான்றிதழ் சமர்கபிக்கப் படவில்லை. பிரதி சட்டமா அதிபர் ஒரு அறிக்கை மட்டுமே சமர்ப்பித்தார். சிவகங்கைத் தொகுதித் தில்லுமுல்லு சிதம்பரமும் பிரபாகரனுடையதோ அல்லது பொட்டு அம்மானுடையதோ இறப்புச் சான்றிதழ்இந்தியாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டதாகக் கூறவுமில்லை. சிதம்பரம் ஐயா இப்படிச் சொன்ன பின்னரும் இந்திய நீதிமன்றில் பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் எதிரான வழக்கு நிலுவையில் இருந்தது. இந்திய உளவுத் துறை இலங்கையில் இருந்து பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்தமைக்கான நம்பகரமான சாட்சியங்கள் கிடைக்கப் பெறவில்லை என்று அறிவித்தது.

ஏற்கனவே இருமுறை பிரபாகரன் இறந்தபோதும் மரணச் சான்றிதழ்கள் வழங்கப் படவில்லை ஆனால் பகிரங்க அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.

இப்போது இந்திய உளவுத்துறை திடீரென பிரபாகரன் இறந்து விட்டதாகக் கூறுகிறது. இதற்கு அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை வழக்கில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்தமையை இலங்கை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது ஒரு சாட்சியாக இப்போது இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் இலங்கையில் இருந்து இறப்புச் சான்றிதழ் கிடைக்காமலேயே இந்திய உளவுத்துறை ஏன் இப்படிச் சொல்கிறது? ஏன் இறப்புச் சான்றிதழை இலங்கை பதிவு செய்யவில்லை என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

இலங்கை அரசை சங்கடங்களில் இருந்து பாதுகாக்கவா இந்திய உளவுத் துறை இப்படிச் சொல்கிறது. இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு சங்கடமான நிலையிலேயே இருக்கிறது என்பது அண்மையில் இந்தியாவில் நடந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டும் போட்டிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சிறப்பு விருந்தினராக அழைத்தது. பின்னர் அவருடன் இந்தியப் பிரதமர் பாராமுகமாக நடந்து கொண்டார் என சில செய்திகள் வெளிவந்தன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு வர முன்னர் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் சீனா செல்லவிருக்கிறார். இதற்காகத்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கைப் பயணம் தள்ளிப் போடப்பட்டதா? அது மட்டுமா பாக்கிஸ்த்தானிய அதிபர் இலங்கைக்கு வரவிருக்கிறார். பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு பற்றியும் அவர் பேச விருக்கிறார். இலங்கை இந்தியாவிற்கு அடங்க மறுக்கிறதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்துகின்றன. இதற்கு இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் தேவைப் படுகின்றார்களா? அதற்கு முன்னோடியாக பிரபாகரன் இறந்து விட்டார் என்று அறிவித்து விடுதலைப் புலிகள் மீதான தடைய நீக்கிவிட்டோ அல்லது நீக்காமலோ மீண்டும் தமிழர்களை ஆயுத மயமாக்கி அவர்கள் முதுகில் இந்தியா சவாரி செய்து விட்டு மீண்டும் உதைத்துத் தள்ளுமா?

காலை உணவைத் தவிர்த்தால் பல நோய்கள்.


சேமிப்பது நல்ல பழக்கம் என்பது எமது உடலுக்கும் தெரியும். சேமித்து வைத்து பற்றாக்குறை ஏற்படும் போது அதை உபயோகிக்க எமது உடலும் பழகிக் கொள்கிறது. காலை உணவை நாம் அடிக்கடி தவிர்த்தால் எமது உடல் உணவு சேமித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. எமது உடல் உணவை கொழுப்பாகவே சேமித்து வைக்கிறது.

அடிக்கடி காலை உணவைத் தவிர்த்தால் உயிராபத்து விளைவிக்கக் கூடிய இருதய நோய்களுக்கு வழிவகுக்கும் என Clinical Journal என்னும் அமெரிக்க சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவைத் தவிர்த்தால் உடலின் கொழுப்புச் சேமிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறதாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ரஸ்மேனியாப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானிகள் கடந்த இருபது வருடங்களாக 2184 பேரில் நடாத்திய ஆய்விலிருந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

கால உணவைத் தவிர்த்தலால் ஏற்படுபவை:

  • உடல் பருமன் அதிகரித்தல்.ட
  • வயிற்றைச் சுற்றிவர கொழுப்புச் சேமித்து வைக்கப்படல்.
  • இரத்தத்தில் கொலஸ்ட்ரல் அதிகரிப்பு.
  • இரத்தத்தில் இன்சுலீன் அதிகரிப்பு.
இவையாவும் இருதய நோய்களையும் சர்க்கரை வியாதியையும் கொண்டு வரும்.

Monday, 25 October 2010

இந்திய சீனப் போட்டி: பின்னை இட்ட தீ நுரைச் சோலையிலே?


வருங்கால பெரு வல்லரசுப் போட்டியில் முன்னிற்பவையாக சீனாவும் இந்தியாவும் கருதப்படுகிறது. இவை இரண்டும் இப்போது உலகில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டவை. 2009-ம் ஆண்டு சீனாவின் பொருளாதாரம் 8.7% வளர்ச்சியும், இந்தியா 6.4% வளர்ச்சியும் பெற்றன.

இந்தியாவின் பாதுகாப்புச் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் சீனாவின் பாது காப்புச் செலவீனம் மூன்று மடங்குக்கு மேல் எனக் கருதப் படுகிறது. பாதுகாப்புச் செலவீனத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் இரண்டாம் இடத்தையும் இந்தியா ஒன்பதாம் இடத்திலும் இருக்கின்றன.

இந்திய படையினரின் எண்ணிக்கை 1,325,000 சீனப் படையினரின் எண்ணிக்கை 2,255,000. போர் விமானங்களைப் பொறுத்தவரை இந்தியாவிலும் பார்க்க சீனாவில் ஏறக்குகுறைய மூன்று மடங்கு எண்ணிக்கையுடைய விமானங்கள் உண்டு.

சீனாவினதிலும் பார்க்க இந்தியக் கடற்படை நவீனமானதாகக் கருதப் படுகிறது. சீனாவிடம் ஒரு விமானந்தாங்கிக் கப்பல் கூட இல்லை. இந்தியக் கடற்படை விமானந்தாங்கிக் கப்பல்கள் நவீன நீர் முழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது. சீனக் கடற்படைக்கு போர் முனை அனுபவங்கள் கிடையாது. இந்தியக் கடற்படைக்கு பாக்கிஸ்த்தானுக்கு எதிரான போர் அனுபவம் உண்டு.

அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை சீனா இந்தியாவிலும் பார்க்க வலிமையானதும் நவீனமானதுமாகும். சீனாவிடம் 200இற்கும் 400இற்கும் இடைப்பட்ட அணுஆயுதங்கள் இருக்கிறதாம். இந்தியவிடம் ஆகக்கூடியது 70 இருக்கலாம். சீனாவின் வலிமையான அணு ஆயுதம் 4 மெகா ரன்கள், இந்தியாவினுடையது 0.05 மெகா ரன்களாகும். உலகிலேயே அதி தீவிரமாக அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடு சீனா.
இலங்கையில் இந்திய சீனப் போட்டி - முன்னை இட்ட தீ முள்ளி வாய்க்காலிலே!
தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு சிங்களவர்களுக்கு உதவி செய்தன. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் கைகோத்துக் கொண்டன. இதற்கான பலாபலன்களைப் பெறுவதில் சீனாவின் எச்சங்களையே இந்தியா சுவைக்க வேண்டிய பரிதாப நிலை. போருக்குப் பின்னால் இந்தியாவை இலங்கை நன்றாக ஏமாற்றி விட்டது என்பது அண்மையில் இந்துப் பத்திரிகை வெளிவிட்ட ஆசிரியத் தலையங்கத்தில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கை அரசின் கைக்கூலியாகக் கேலி செய்யப்படும் சிங்கள ரத்தினா இப்படி எழுதுவது ஏன்? இந்தியாவின் இந்த விரக்தி நிலை இலங்கையில் வேறு விதமாக வெளிப்படுகிறதா?

பின்னை வெடித்தது கிழக்கிலங்கையிலேயே!
இந்த ஆண்டு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சீனாவின் தெரு அபிவிருத்திக்கு என்று வைத்திருந்த மூன்று கொள்கலன்கள் நிறைந்த வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின.

நேற்று இட்டதீ நுரைச்சோலையிலேயே
இப்போது சீனாவின் நுரைச் சோலை அனல் மின்நிலையத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது சாதாரண் விபத்தாக இலங்கை அரசு கருதவில்லை என்று தெரிகிறது. இது பற்றி விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

புதுவகையான மிரட்டலா
நீ எனக்கு எதிராக சென்றால் இனித் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து உன்னை அடியபணியச் செய்ய மாட்டோம். வேறு விதமாக எமது அணுகு முறை இருக்கும் என்று யாராவது இலங்கைக்குச் சொல்ல முயல்கிறார்களா?

அம்பாந்தோட்டை துறை முகத்தில் என்ன மாதிரி விபத்து நடக்கும்???

தகவல் "கொள்ளை" அடித்ததை ஒப்புக் கொண்டது கூகிள்


கூகிள் நிறுவனம் பிரித்தானிய மக்களின் வலைய முகவரிகளையும் இ-மெயில்களையும் கடவுச் சொற்களையும் அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்தமையை ஒப்புக் கொண்டுள்ளது. கார்க்ளில் பொருத்தப் பட்டுள்ள ஒளிப்பதிவுக் கருவிகளுடன் பிரித்தானியாவில் உள்ள சந்து பொந்துக்களில் எல்லாம் திரிந்து தெருப்படங்களைப் பதிவு செய்து அவற்றைத தமது வலையத்தளத்தில் வெளியிட்டுள்ளது கூகிள். இந்த காரிகளில் இன்னும் ஒரு உணரி(அண்டென்னா)யும் பொருத்தப் பட்டிருக்கும். அது வீடுகளில் உள்ள கணனிகளில் இருந்து தகவல்களையும் பெற்றுக் கொண்டது. இந்தக் கார்களை கூகிள் Streetview cars என்று சொல்கிறது.

கூகிளின் இந்தத் தகவல் திருட்டு பிரித்தானிய மக்களையும் அரசையும் பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே கூகிளின் செய்மதிப் படங்கள் திருடர்களுக்கு ஒரு வீட்டில் திருடிவிட்டுத் தப்பிச் செல்வதற்கான வழிகளைக் காட்டிக் கொடுகின்றன என்ற குற்றச் சாட்டு இருந்தது. ஹொலண்டில் ஒரு பெண் தனது வீட்டின் பின்புறத்தில் முழு நிர்வாணமாக இருந்து சூரியக் குளியல் செய்து கொண்டிருந்ததையும் கூகிள் வெளியிட்டு பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தது.

தான் பெற்ற தகவல்கள் தெரியாத்தனமாக நடந்த ஒன்று என்று கூகிள் சொல்கிறது. Streetview cars களில் உள்ள கணனிகளில் தெரியாத்தனமாக ஒரு பரீட்சார்த்த மென்பொருள் உள்ளடக்கப் பட்டிருந்ததால் இப்படி நடந்தது என்று கூகிள் சாட்டுச் சொல்கிறது. இது கலைஞரின் நாலு மணி நேர உண்ணாவிரத நாடகம் போன்றது.

கூகிள் தான் Streetview carsகள் மூலம் பெற்ற தகவல்களை விரைவில் அழித்து விடுவதாகவும் கூகிள் தெரிவிக்கிறது.

இப்படிப் பட்ட பரீட்சார்த்த மென்பொருள் உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன?
தனிய வர்த்தக நோக்கம் மட்டுமா அல்லது "பாதுகாப்பு" நோக்கங்களுமா?
இதன் பின்னால் பெரிய வல்லரசுச் சதிகள் உண்டா?

Sunday, 24 October 2010

வாசிக்கக்கூடாத SMS Messages


Keep the school clean ... stay home!

Loving you could take my life, but when I look into your eyes, I know you're worth that sacrafice!

It's not the length, it's not the size, it's not how many times u can make it rise. It's not how well it fits, but how late it spits.

Marriage is the process of finding out what kind of man your wife would have preferred.

I m getting married next month.... its small party and only few people will be invited...... dont bring any gift.....just bring someone who ll marry me.

Be quiet in the classroom, respect the fact that others sleep!


What is Long & Hard, has a hole at the tip and when u insert it into a wet, hairy & tight hole makes u feel better?
Vicks Inhaler.


What do I miss about my wife? Her absence.

Q: What's difference between cricketers n condoms?
A: Cricketers drop the catches n condoms catch the drops!

Man gives blood to save his girlfriends life. Later on they split up & man wants blood back. She throws a used tampon at him & says: Pay u monthly, u bastard!

Cricketer describing a nude girl:
There is no cover, there is no extra cover, there 2 silly points, 2 fine legs & a deep gully, with little grass on the pitch.


The IDEAL man does not smoke, does not drink, does not flirt, goes to bed early, in short ... does not exist

Some people live because it is illegal to kill them!

பாதை தேடிச் செல்கின்றோம்


குறுங்கவிதை

நம் பயணம்
கொலைகளும் ஓயவில்லை
அலைகளும் ஓய்வதில்லை
பாதையில் செல்லவில்லை
பாதை தேடிச் செல்கின்றோம்
தலைமையின் கீழ் செல்லவில்லை
தலைமை தேடிச் செல்கின்றோம்
விலைகள் கொடுத்தோம்
கொள்வனவு செய்யவில்லை


ஹைக்கூ கவிதைகள்

நல்ல பணியாள்
மோசமான மேலாள்
பணம்

கிழவன் துள்ளும் வீடு
எலிகள் போடும் கொட்டம்
ஈழம்

அவளுக்கு என்னைப் புரியவில்லை
எனக்கும் அவளைப் புரியவில்லை
ஒற்றுமை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...