Saturday, 23 October 2010

பெண்ணே நீயும் ஒரு தெய்வமடி
மேலான பகைவன்
நண்பன் வேண்டியவன்
பகைவன் நண்பனிலும் மேலானவன்
கடன் கேட்க மாட்டான்

பட்டது போதும்
இராமனைப் போல்
எனக்கும் ஒருதாரம்
ஒன்றுடன் பட்டது போதும்

நீயும் தெய்வம் போலே
காணிக்கை செலுத்துவதால் பிரசாதம் தருதலால்
வேண்டுதல் சொல்லுதலால் பூவைத்துப் பார்த்தலால்
மணியடித்தலால் ஆறுகாலப் பூசை செய்வதால்
பெண்ணே நீயும் ஒரு தெய்வமடி

Friday, 22 October 2010

இலங்கைக்கு பன்னாட்டு அரங்கில் இந்தியா களம் அமைத்துக் கொடுக்கிறதா?


1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஒரு இனக்கொலை என்றார். இந்திய சட்டவாளர் சபையும் (Bar Council of India) அதையே சொன்னது. ஆனால் 2009/10இல் இலங்கையில் நடந்த மாபெரும் உயிரிழப்புக்களை இந்தியப் பாராளமன்றில் ஒரு இனக்கொலை என்று ஒரு உறுப்பினர் கூறியதை அவைக் குறிப்பில் பதிய இந்தியப் பாராளமன்றம் அனுமதிக்கவில்லை. இந்த அணுகு முறை மாற்றம் எப்படி வந்தது? தமிழனுக்கு என்று ஒரு நாடு இலங்கையில் உருவாகக்கூடாது என்று இந்தியாவின் ஒரு சக்திமிக்க கும்பல் உறுதியாக இருக்கிறது. இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் கண்டிக்கும் தீர்மானம் கொண்டு வந்த போது இந்தியா அதைச் சீனாவுடன் கைகோத்துக் கொண்டு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றித் தனது கேவலத் தன்மையை தமிழர்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்தியது.

இந்தியாவின் போரையே நாம் நடாத்தினோம் என்று இலங்கைப் போர் முடிந்த பின் இலங்கை அதிபர் ராஜக்சே கூறினார். இலங்கை அரசியல் வாதிகளும் படைத்துறையினரும் இந்தியாவின் உதவியின்றி எம்மால் இந்தப் போர வென்றிருக்க முடியாது என்று அடிக்கடி கூறிவருகின்றனர். பல தடவை இந்தியாவிற்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிங்களவர்கள் போரில் வெல்ல வேண்டும் என்று யாகங்களும் நடந்தன. இங்கு நினைவிற்கு வருவது:
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே!...
கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான்,
கண்ணனே கொலை செய்கின்றான்!...
காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக,
இக் களமெலாம் சிவக்க.


நேற்றைய ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கவிஞர் தாமரை இப்படிக்கூறுகிறார்:
  • "சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம்! இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்! இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றா மல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்!"
பழ நெடுமாறன் ஐயா இப்படிக் கூறுகிறார் ஜூனியர் விகடனுக்கு:
  • ''இலங்கையில் போர் முடிந்தவுடன் மகிந்தா ராஜபக்ஷேவின் தம்பி பசில் ராஜபக்ஷே சில உண்மைகளை வெளியிட்டார். 'போர் நெருக்கடியான நேரத்தில் இந்திய - இலங்கை அரசுகள் இணைந்து செயல்படுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், உள்துறைச் செயலாளரும் இலங்கைத் தரப்பில் பசில், கோத்தபய ராஜபக்ஷே, வெளியுறவுச் செயலாளரும் இடம்பெற்றனர். அந்தக் காலகட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என இந்தக் குழு கூடிப் பேசி, அதன்படி இந்திய அரசு உதவிகளைச் செய்தது. இதற்காகவே நாராயணனும் சிவசங்கர் மேனனும் அடிக்கடி கொழும்பு வந்து சென்றனர்' என்பது பசில் ராஜபக்ஷேவின் ஒப்புதல் வாக்குமூலம்.
இலங்கைமீது பன்னாட்டு அரங்கில் போர் குற்றம் சுமத்தப்படும் நிலையில் இலங்கையின் இப்போதைய பிரச்சனை பன்னாட்டு அரங்கில் தன் மீதான பார்வையை மாற்றி அமைக்கவேண்டும் என்பதே. இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமானால் அதில் இந்தியாவின் பங்களிப்பும் வெளிவர வாய்ப்புண்டு. ஐக்கிய நாடுகள் சபை அமைத்த போர் குற்ற ஆலோசனக் குழு தேவையற்றது என்று இரகசியமாக ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனிடம் வற்புறுத்தியதாக செய்திகள் வெளிவந்தன. ஐநாவின் ஆலோசனைக் குழு எந்த ஒரு விசாரணையும் மேற் கொள்வதாகத் தெரிவில்லை. விசாரணைக்கு மக்களை வந்து சாட்சியளிக்கும் படி அது வெளிவிட்ட வேண்டுகோள் பகிரங்கப் படுத்தப் படாமல் வைக்கப் பட்டது. இலங்கை இணையத் தளம் ஒன்றின் செய்திக்கு அதன் வாசகர் இட்ட பின்னூட்டம் மூலமாகவே பான்கீமூனின் ஆலோசனைச்சபை சாட்சிகளை அழைக்கும் அறிவிப்பு பகிரங்கப்படுத்தப் பட்டது. இது ஐநா போர்குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது. ஒரு வலிமையான துணையுடனேயே இலங்கையால் இதைச் சாதிக்க முடியும். இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகிறதா? இலங்கயில் செயற்பட்ட ராஜீவ் காந்தியின் கொலைப் படையில் செயற்பட்ட சித்தார்த் சட்டர்ஜீயும் விஜய் நம்பியாரும்( கொலை வெறிப்படையில் செயற்பட்ட சதீஷ் நம்பியாரின் சகோதரர்.

கூட்டி வைத்த "மல்லு ஆண்டி"
இலங்கை அதிபர் ராஜபக்ச டெல்லியில் நடந்த பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமர்த்தப் பட்டதில் ஒரு மல்லு ஆண்டி சம்பந்தப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளிவிட்டு இந்தியக் கேவலத்தை அம்பலப் படுத்தியது.

இலண்டனில் ஜீ எல் பீரிஸ்
இலங்கை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தந்திரோபாயக் கற்கைகான பன்னாட்டு நிலையத்தில் (International Institute of Strategic Studies (IISS) in London) வந்து இலங்கை பற்றி கருத்துரைக்க களம் அமைத்துக் கொடுக்கப் பட்டது. ராஜபக்ச அரசின் அமைச்சர் ஒருவர் முதல் முறையாக பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டதும் கவனிக்கப் படவேண்டியது. இதன் பின்னணியில் ஒரு வலுவான நாடு இலங்கைக்கு உதவி இருக்க வேண்டும். இதே வேளை இலங்கையின் பிரச்சாரகர் ஒருவருக்கு இந்திய ஆதரவு தமிழ வானொலி ஒன்று களம் அமைத்துக் கொடுத்து ஒரு நீண்ட நேர பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பன்னாட்டு அரங்கில் இலங்கையின் மதிப்பை உயர்த்தும் பல நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று நாம் எதிர் பார்க்கலாம். மேற்கு நாடுகள் நாக்கைத் தொங்கப் போடும் ஒரு அம்சம் இந்தியாவிடம் உண்டு. மேற்கு நாட்டு வர்த்தகர்களுக்கு மத்திய தர வர்க்கத்தினரை மிகவும் பிடிக்கும். அவர்களிடம்தான் தமது பொருட்களை பெருமளவிலும் இலகுவாகவும் சந்தைப் படுத்த முடியும். இந்திய மத்தியதர வர்க்கம் பெரிதும் மேற்குநாட்டு மோகம் கொண்டது. இந்திய மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அவுஸ்திரேலிய மொத்த மக்கள் தொகையினரிலும் பார்க்க அதிகம்.Thursday, 21 October 2010

Currency War: நாணயமற்ற நாடுகளின் நாணயப் போர்.


நாணயப் போர் என்றால் என்ன?
ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணய்ப் போர் உருவாகிறது.

ஒரு பிரித்தானியப் பவுண்டின் பெறுமதி இந்திய ரூபாவிற்கு எதிராக £1=Rs75 என்று இருக்கையில் இந்தியாவில் 15000ரூபா பெறுமதியான ஒரு சேலையை பிரித்தானியாவில் இருநூறு பவுண்களுக்கு வாங்க முடியும். ரூபாவின் பெறுமதி £1=Rs100 என்று விழ்ச்சியடைந்தால் அச்சேலையின் விலை நூற்றைம்பது பவுண்களாகும். இதனால் பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களும் இலங்கையர்களும் அதிக சேலைகளை வாங்குவர். இது இந்தியச் சேலை உற்பத்தியை அதிகரிக்கும். இப்படிப் பல இந்தியப் பொருட்கள் பிரித்தானியாவில் அதிகம் விற்கப்பட இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இப்பின்னணியிலேயே நாடுகள் தமது நாணயப் பெறுமதியை குறைந்த மதிப்பில் வைத்திருக்க முயல்கின்றன.

சர்வ தேச நாணயத்தின் (IMF)நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ரௌஸ் கான் அண்மையில் இப்படிக் கூறினார்: There is clearly the idea beginning to circulate that currencies can be used as a policy weapon. Translated into action, such an idea would represent a very serious risk to the global recovery... Any such approach would have a negative and very damaging longer-run impact

ஜப்பான் தனது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தையும் உதவிகளையும் செய்து உலகெங்கும் தனது உற்பத்திப் பொருள்களை சந்தைப் படுத்தியதால் அதன் நணயத்தின் பெறுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் 1980களில் வலியுறுத்தின. 1985இல் ஜப்பான் தனது யென் நாணயத்தின் பெறுமதியை அதிகரிக்க இணங்கியது. அமெரிக்க டொலருக்கு எதிராக ஜப்பானிய யென் மூன்றுபங்கு பெறுமதி வளர்ச்சியடைந்தது. இதனால் தென் கொரியாவும் சீனாவும் தமது நாணயங்களின் பெறுமதியக் குறைவாக வைத்துக் கொண்டு தமது ஏற்றுமதிகளை பெருமளவு அதிகரித்தது. இதன் விளைவு சீனாவின் அந்நியச் செலவாணிக் கையிருப்பு அபரிமித நிலையை அடைந்தது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியை அதிகரிக்க மறுத்து வருகின்றது.

சீன வட்டி வீத அதிகரிப்பு
இந்த மாதம் 19-ம் திகதி சீனா தனது வட்டிவீதத்தை மூன்று வருடங்களின் பின் அரை வீதம் அதிகரித்தது. சீனாவின் இந்த நடவடிக்கை சீனா ஒரு நாணயப் போருக்கு நவம்பர் மாதம் நடக்க்க விருக்கும் ஜீ-20 நாடுகளின் மாநாட்டுக்கு முன்னதாகத் தயார்படுத்திக் கொள்வதாக கருதப் படுகிறது. சீனாவின் வட்டிவீத அதிகரிப்பால் சீன மக்களின் கொள்வனவுத் திறன் பாதிக்கப்பட்டு சீனா பிறநாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதியைக் குறைக்கும். இது மற்றநாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். மாறாக சீனா தனது பணவீக்கத்தையும் அதிகரித்து வரும் கட்டிட விலைகளையும் கட்டுப்படுத முடியும்.

கலங்கி நிற்கும் ஜேர்மனி
சீனாவிற்கு அடுத்தபடியாக உலக ஏற்றுமதியில் இரண்டாம் நிலை வகிக்கும் ஜேர்மனி யூரோ நாணயத்திற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி தனது ஏற்றுமதியையும் பொருளாதரத்தையும் பாதிக்கிறது என்று கலங்கி நிற்கிறது.
நாணய வர்த்தக முதலைகள்
சில நாணய வர்த்தகர்கள் உலகப் பொருளாதார உற்பத்திக்கு எந்தப் பங்களிப்பும் செய்யாமல் பெரும் செல்வம் ஈட்டியுள்ளனர். இவர்களின் வருமானம் மைக்ரோசொfரின் வருமானத்தைவிடப் பலமடங்காகும். ஒரு நாட்டின நாணயத்தை எப்போது வாங்கி எப்போது விற்க வேண்டும் என்ற சூட்சுமத்தை இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். ஒரு நாட்டுக்கு அந்நியக் கடன் தேவைப் படும்போது இவை கடனாகக் கொடுத்து பின்னர் அந்த நாட்டு நாணயத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க இவர்களால் முடியும். ஒரு யூதக் கும்பல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சீனப் பொருளியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். Rothschild Family ஐ சீனப் பொருளியலாளர்கள் இதற்கு உதாரணம் காட்டுகின்றனர். இவர்களின் சொத்து 5 trillion dollars ஆம், இதேவேளை பில் கேட்ஸின் சொத்து 40 billion dollars மட்டுமே.

சென்ற வாரம் வந்த செய்திக் குறிப்பு இப்படிக் கூறுகிறது:
The war of words over international currency valuations escalated yesterday when the Chinese premier Wen Jiabao told the European Union to stop pressuring Beijing to revalue the yuan as any rapid shift risked unleashing serious social unrest in China.
Speaking in Brussels, Wen said that China would move towards making its currency more flexible but he rejected calls for a rapid appreciation as the issue threatened to dominate this weekend's meeting of the International Monetary Fund and G7 countries in Washington.
"Do not work to pressurise us on the renminbi [yuan] rate," Wen said, departing from a prepared speech on the sidelines of a summit with EU leaders. "Yes, we are going to proceed with the reforms.

சீனாவிடம் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான அந்நியச் செலவாணிக் கையிருப்பைக் கொண்டு அதனால் மற்ற நாட்டு நாணயங்களை வாங்குவதன் மூலமும் விற்பதன் மூலமும் அந்நாட்டு நாணயத்தின் பெறுமதியை தான் விரும்பிய நிலையில் வைத்து கொள்ள முடியும்.
இன்னொரு செய்திக் குறிப்பு இப்படிக் கூறுகிறது:

Mr Soros (ஒரு நாணய வர்த்தகர்) told BBC Radio 4’s Today programme that China had a “huge advantage” over international competitors because it can control the value of its currency. He said China could also influence the value of other world currencies because they have a “chronic trade surplus”, which means the Chinese have a lot of foreign currencies. “They control not only their own currency but actually the entire global currency system,” he said.
Writing in the Financial Times, Mr Soros added: “Whether it realizes it or not, China has emerged as a leader of the world. If it fails to live up to the responsibilities of leadership, the global currency system is liable to break down and take the g

நாணயத்தின் பெறுமதியை குறைத்து வைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் கைங்கரியத்தை இப்போது பல நாடுகள் செய்கின்றன. அதில் இந்தியாவும் பிரேசிலும் முன்னிற்கின்றன. சீனா தனது நாணயப் பெறுமதியை அதிகரித்தால் அதனால் பெரும் பயனடையப் போவது இந்தியா என்பதை சீன உணர்ந்துள்ளது. அந்நியச் செலவாணிக் கையிருப்பின் முதலாம் இடத்தில் இருக்கும் சினா 159 இடத்தில் இருக்கும் இந்தியாவின் கண்களுக்குள் விரல் விட்டு ஆட்ட முடியும். சீனா இந்திய ரூபாக்களை வாங்கி இந்திய ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க முடியும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் பலத்த பாதீட்டு பற்றாக் குறையால் பரிதவிக்கின்றன. அவை தமது பொருளாதாரத்தை ஏற்றுமதியின் மூலம் பிரச்சனையில் இருந்து மீட்கத் துடிக்கின்றன. இதற்கு அவை தமது நாணயங்களின் பெறுமதிகளைக் குறைத்து வைத்திருக்க விரும்புகின்றன. 1985 இல் மேற்கு நாடுகள் நாணயப் பிரச்சனையை ஜப்பானுடன் தீர்துக் கொண்டது போல் இப்போது சீனாவிடன் தீர்த்துக் கொள்ள முடியவில்லை இப்போது பல நாடுகள் ஏற்றுமதி வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாடுகள் சுமூகமாகத் தீர்க்காமல் போட்டி போட்டுக் கொண்டு தமது நணயங்களின் பெறுமதியைக் குறைக்கும் போது உருவாகும் நாணயப் போர் உலக வர்த்தகத்திலும் உலகத் பொருளாதார நடவடிக்கைகளிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஐக்கிய இராச்சியத்தின் மத்திய வங்கி ஆளுனர் இப்படி எச்சரிக்கிறார்:
முன்னணிப் பொருளாதார நாடுகள் தங்களின் நாணய மதிப்புக்கள் மீதான போட்டிகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளாவிடில் சில நாடுகள் தங்கள் பொருதாரத்தைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தி அது 1930களில் ஏறபட்டது போன்ற உலகப் பொருளாதர நெருக்கடிக்கு வழிவகுக்க்கும்.

Unless it is, it will be only a matter of time before one or more countries resort to trade protectionism as the only domestic instrument to support a necessary re-balancing" of economies.

That could, as it did in the 1930s, lead to a disastrous collapse in activity around the world. Every country would suffer ruinous consequences -- including our own.

Tuesday, 19 October 2010

தம் கண்களைத் தயார் செய்கின்றன முதலைகள்


கண்களைத் தயார் செய்யும் முதலைகள்
வரும் தேர்தலுக்கு
தம் கண்களைத் தயார்
செய்கின்றன முதலைகள்

நரகத்து அடிமைகள்

சொர்க்கத்தில் அடிமையாக
இருப்பதை விட
நரகத்தில் அரசர்களாக
இருப்போம் என எண்ணினோம்
காட்டிக் கொடுத்த துரோகிகளாலும்
அடுத்து கெடுத்த அயலவராலும்
நரகத்தில் அடிமையானோம்.

இழப்புக்களும் இருப்புக்களும்
இழப்புக்கள் இழந்தவையைப்
பெருமைப்படுத்தும்.
இருப்புக்களை இழப்புக்களை எண்ணி
பாதுகாக்க வேண்டும்.

நாம் தொலையவில்லை
தனித்து விடப்பட்டோம்
தளர மாட்டோம்
அடுத்துக் கெடுக்கப்பட்டோம்
அயர மாட்டோம்
காட்டிக் கொடுக்கப் பட்டோம்
கலங்கமாட்டோம்
மழுங்கடிக்கப் பட்டோம்
மயங்க மாட்டோம்
நாம் தொலையவுமில்லை
துவளவுமில்லை

Monday, 18 October 2010

எஸ்.எம்.எஸ் - படிக்க வேண்டியவையும் படிக்கக்கூடாதவையும்Why do they call it common sense if it’s so rare?

A lie will make it around the world before the truth has time to put on it’s shoes.

You do not really understand something unless you can explain it to your grandmother.
- Albert Einstein

Optimism has no inhibitions based on past experience.

The future belongs to those who believe in the beauty of their dreams.

Beauty is not in the face; beauty is a light in the heart.

A best friend shares the good times and help you out by listening during the bad times.

Weeping may endure for a night, but joy cometh in the morning.

A baby is an angel whose wings decrease while his legs increase.

There has never been a better office communication system than the coffee break.

A man likes his wife to be just clever enough to appreciate his cleverness, and just stupid enough to admire it.


U picked me up,
U took me home,
U put ur hands around my waist,
U took off my top,
then U put ur lips om mine.
THANK GOD im a bottle of PEPSIWhich Part...of a man's body
has no bone,full of veins
loves pumping
and responsible for making LOVE!
ANSWER:
HEART!!! But i luv the way u think...Both of you go up and down,
protection is tight,
keeping it up all damn night,
never tired always alert.....
I Know you love....
Your job as a SECURITY GUARD.Wat is it dat a girl & boy
do secretly wen they reach adulthood?
Think! Think!! Think!!!
Donno

Voting..
Wat Else.


Q: to make it straight she pulls it,
to make it stand she rubs it,
to make it stiff she licks it,
to let it in she pushes it.
what is she doing?

A: threading a needle

பிறர் தர வராது துரோகிகளோடு கைகூடாது - ஹைக்கூ அந்தாதி


கனவில்லை கரைவதற்கு
கனல் அல்ல கருகுவதற்கு
விடுதலை வேட்கை 1

வேட்கை தீராது
வேதனை போகாது
விடிவின்றி 2

விடிவின்றி ஒளியில்லை
இருளின்றிப் பகலில்லை
முயற்ச்சி 3

முயற்ச்சிகள் தோற்கலாம்
முடியாது போராட்டம்
உழைப்பு 4

உழைப்பு மூலதனம்
தளரா மனம் எந்திரம்
வெற்றிக்கான வழி 5

வழி தவறினர் பலர்
துரோகிகளாயினர் துணைவர்
ஈழப் போர் 6

போர்கள் முடியலாம்
போராட்டம் முடியாது
வேண்டும் சுதந்திரம் 7

சுதந்திரம் பிறர் தர வராது
துரோகிகளோடு கைகூடாது
களை பிடுங்கு 8

பிடுங்குகின்றனர் எரியும் வீட்டில்
நாம் துயிலும் நேரத்தில்
நாம் காண்பது கனவில்லை 9

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...