Saturday, 21 August 2010

காணொளி: சிவந்தனின் ஜெனிவா நோக்கிய நடை நிறைவு


• இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மானுடத்திற்கெதிரான முறையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களிற்கான சுதந்திரமான சர்வதேச விசாரணை.
• சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பார்வையிடுவதற்கான படிமுறைகள், போரினால் இடம் பெயர்ந்து நிர்க்கதி நிலையில் உள்ள தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்.

• இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மதிக்கும்வரை அதனை புறக்கணித்தல்.


ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சிவந்தன் என்னும் பிரித்தானியத் தமிழ் இளைஞர் இலண்டனில் இருந்து ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தை நோக்கி 27 நாட்கள் நடந்து பயணம் செய்து 20-ம் திகதி வெள்ளிக்கிழமை தனது இறுதி இலக்கை அடைந்தார். ஆயிரம் மைல்கள் வரை நடந்த இவரை ஜெனிவா ஐநா முன்றலில் வரவேற்க ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் அங்கு திரண்டிருந்தனர்.

இது தொடர்பான காணொளிப் பதிவுகள்:
Thursday, 19 August 2010

மனைவியின் பலான சேவை


மற்றக் கணவன்கள் போலவேஅந்தக் கணவனும் களைத்துப் போய் வேலையால் வீடு திரும்பிய வேளை மற்ற மனைவிகள் போலவே அந்த மனைவியும் சமையலறையில் மின்சார விளக்கு வேலை செய்யவில்லை அதை என்ன வென்று பாருங்கள் என்றாள். அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் Electrician என்று எழுதி ஒட்டி இருக்கிறதா என்று கோபத்துடன கூறினான்.

மறு நாள் அதே போலவே வேலையால் வரும்போது குளியலறையின் கதவைச் சரியாகப் பூட்ட முடியவில்லை என்றாள். அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் Carpenter என்று எழுதி ஒட்டி இருக்கிறதா என்று கோபத்துடன கூறினான்.

மறுநாள் அதே போலவெ கணவன் வேலையால் வரும்போது கூரையில் ஓடு விலகி இருக்கிறது அதைச் சரிபடுத்துங்கள் என்று மனைவி கூறினான். அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் Builder என்று எழுதி ஒட்டி இருக்கிறதா என்று கோபத்துடன கூறினான்.

மறுநாள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மனைவி புன்முறுவலுடன் இருந்தாள். கணவன் பார்த்தான் வீட்டில் எல்லாப்பிழைகளும் திருத்தப் பட்டிருந்தது. கணவன் ஆச்சரியத்துடன் என்ன நடந்தது என்று கேட்டான். எனது தங்கையின் கணவர் வந்தார் சகலவற்றையும் சரி செய்து விட்டார் என்றாள். அதற்கு பிரதி உபகராமாக என்ன செய்தாய் என்று கணவன் கேட்டான். அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு கட்டிலில் அல்லது சமையலறையில் விருந்து தரும்படி கேட்டார். கணவன் இடைமறித்து சற்றுப் பதட்டத்துடன் கேட்டான் என்ன சமைத்துக் கொடுத்தாய் என்று. மனைவி அமைதியாகப் பதிலளித்தாள். எனது நெற்றியில் சமையல்காரி என்று எழுதி ஒட்டி இருக்கிறதா?

இத்தால் சகல கணவன்களும் அறிய வேண்டியது யாதென்றால் நீங்கள் சோம்பேறியாக இருந்தால் விளைவு விபரீதமாகும்.

தொலையும் அந்தரங்கங்கள்


முன்பெல்லாம் ஒரு வீட்டுக்குத் திருடப் போவதென்றால் அதன் பின்புறமுள்ள பாதைகள் தப்புவதற்கான வழிகள் பற்றி அறிந்து கொள்வதற்கு திருடர்கள் மிகுந்த சிரமப்பட வேண்டும். இப்போது கூகிளில் இந்தத் தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். 50 வருடங்களுக்க்கு முன்பு கிழக்கு ஜேர்மன் அரசு தனது நாட்டு மக்களைப் பற்றிய தகவல்களை பல கோடி செலவளித்து திரட்டியது. இப்போது அத் தகவல்களை இலகுவாகத் கூகிள் மூலம் எந்தச் செலவுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.

எம்மைப் பற்றிய தகவல்களை எமது விருப்பத்திற்கு மாறாக கூகிள் திரட்டுகிறது, எமது அந்தரங்கத்துள் மூக்கு நுழைக்கிறது என்ற குற்றச் சாட்டுக்கள் கூகிள் மீது பாய்கின்றது இப்போது.

இனி வரும் காலங்களில் தனிமனித அந்தரங்கம் என்று ஒன்று இல்லை என்றாகிவிடுமா என்ற கேள்வி எழுகிறது.

இனி பலர் தமது பெயர்களை மாற்றித்தான் இணைய உலகில் உலாவவேண்டி வரும். அல்லாவிடில் நிலமை மோசமாகிவிடும். கடைத் தெருவில் ஒரு பெண்ணைக் கண்டால் அப்பெண்ணை கைப்பேசி மூலம் படமெடுத்து உருஇனங்காணும் மென்பொருள் மூலம் அவரை அடையாளம் கண்டு. பின்னர் fஎஸ்புக்கிலோ அல்லது வேறு சமூகத் தளங்களிலோ அவர் பற்றிய சகல தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

தொழில்நுட்பம் வளர எமது அந்தரங்கள் இழக்கப்படுகின்றன.

Wednesday, 18 August 2010

ஆராய்ச்சி: அண்ணன் தம்பி உடையாள் அடங்கி நடப்பாள்.


அண்ணன் தங்கைகளுடன் பிறந்த பெண்கள் விரைவில் வளரமாட்டார்கள், விரைவில் வயசுக்கு வரமாட்டார்க்ள் என்று ஒர் ஆராச்சி முடிபு தெரிவிக்கிறது. 300ஆண் பெண்களிடையே நடாத்திய ஆய்வின் முடிவே இது.

அண்ணன் உள்ள பெண்கள் மற்றப் பெண்களிலும் பார்க்க ஒரு வயது பிந்தியே வயதுக்கு வருகிறார்களாம். முதற்பிள்ளை வயிற்றில் இருக்கும் போது தாயின் ஊட்டச் சத்துக்கள் பாவிக்கப் பட்டு முடிந்து விடுவதால் இப்படி இருக்கலாம் என்றும் எண்ணப் படுகிறது. அது மட்டுமல்ல வயிற்றில் ஆண் மகவை சுமக்கும் தாய் பெண் மகவைச் சுமக்கும் தாயிலும் பார்க்க அதிகம் உண்ணுவாராம். பல சமூகங்களில் மூத்த ஆண்பிள்ளைமீது பெற்றோரின் அதிக கவனிப்புக்காட்டுகிறார்களாம். இதற்கு ஒரு ஆராய்ச்சி தேவையா????

தம்பியுடைய பெண் மற்றப் பெண்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பிந்தியே பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துக் கொள்வாராம். என்ன மாதிரி எல்லாம் ஆராய்ச்சி செய்கிறாங்களப்பா!!! இதற்கான காரணம் பெற்றோர் பெண்பிள்ளைகளிடம் அவர்களின் தம்பியைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதாலாம்.

இந்த அண்ணன் தம்பிப் பாதிப்பு பெண்களிற்கு வாழ் நாள் முழுக்கத் தொடருமாம். தம்பி தங்கை உள்ள பெண்களுக்கு குறைந்த அளவில்தான் பிள்ளைகளும் பிறக்குமாம். சின்ன வயதில் குழந்தைகளுடன் மல்லுக் கட்டியதால் வந்த வினையோ?

Tuesday, 17 August 2010

இங்கிலாந்துப் பந்து வீச்சாளர் மீது வழக்கு. பூனையால் வந்த வினை


விலை உயர்ந்த Porsche மகிழுந்து (கார்) விரைவாகச் செல்வதைக் கண்ட இங்கிலாந்துக் காவல் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி அதைத் தொடர்ந்து சென்றனர். அதற்குள் கையில் screw driver உடன் இருப்பவர் மது போதையில் இருப்பதை அவரிடம் இருந்து வந்த மணத்தில் உணர்ந்து கொண்டு அவரின் மூச்சைப் பரிசோதனை செய்தனர். அவர் அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்ததால் அவரைக் கைதும் செய்தனர். கைது செய்யப்பட்டவர். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் சுழல் பந்து வீச்சாளர் கிரஹாம் சுவான்(Graeme Swann). உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பவர்.

அவருக்கு நடந்தது என்ன
அவர் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு சென்று நன்கு குடித்துவிட்டு வீடுதிரும்பினார். வீட்டில் அவரது செல்லப் பூனை தரைப் பலகைக்குள் மாட்டுப் பட்டுத் தவித்துக் கொண்டிருந்தது. அதை மீட்பதற்கு ஒரு screw driver தேவைப்பட்டது. அவர் உடனடியாக தனது Porscheஇல் அண்மையில் உள்ள கடைக்கு விரைந்து சென்றார். அப்போது பிடிபட்டார்.

Monday, 16 August 2010

உலகின் சிறந்த நகரங்கள் - சிங்காரச் சென்னையைக் காணவில்லை.


உலகப் பொருளாதாரத்தின் 30% உலகெங்கும் உள்ள நூறு நகரங்களிற்கு சொந்தமானவை. 21-ம் நூற்றாண்டில் நாடுகளல்ல நகரங்கள்தான் ஆதிக்கம் செலுத்தப் போகின்றனவாம். உலகமக்களின் அரைப்பங்கினர் பெருநகரங்களில் வாழுகின்றனர். ஆ ஊ ன்னா ஒரு மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு நகரத்துக்கு வந்துவிடுவார்களோ?

தேராட்டம் காரினிலே
ரொம்ப திமிரோட போறவரே

எங்க ஏரோட்டம் நின்னு போனா

உங்க காரோட்டம் என்னவாகும்


என்ற கேள்விக்கு என்ன விடை?
பட்டணத்தான் வாங்காவிடில் உங்க ஏரோட்டம் என்னவாகும் என்பதோ?

நியூ யோர்க் நகரப் பொருளாதாரம் ஆபிரிக்காவைச் சேர்ந்த 46 நாடுகளின் ஒன்றிணந்த பொருளாதாரத்திலும் பெரியது. ஹொங்ஹொங் நகரத்திற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் தொகை இந்தியாவிற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் தொகையிலும் கூடியது. உலகமயமாக்கலின் எந்திரங்களாக நகரங்கள்தான் திகழ்கின்றனவாம்.

சிறந்த 65 நகரங்கள்
கலாச்சாரம், பொருளாதாரம், கண்டுபிடிப்புக்கள், உலகச் சந்தையுடன் ஒருங்கிணைப்பு பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டுக் கொள்கை சஞ்சிகை உலகின் 65 சிறந்த நகரங்களைத் தெரிவு செய்துள்ளது:

 1. நியூயோர்க்
 2. இலண்டன்
 3. டோக்கியோ
 4. பாரிஸ்
 5. ஹொங் ஹோங்
 6. சிக்காக்கோ
 7. லொஸ் எஞ்சல்ஸ்
 8. சிங்கப்பூர்
 9. சிட்னி
 10. சியோல்
ஆசிய நகரங்கள் நான்கு இதில் இடம்பெற்றுள்ளமை ஒரு சிறப்பு அம்சமாகும்.
சீன பீஜிங் நகர் 15ம் இடத்திலும் , ஷாங்காய் நகர் 21ம் இடத்திலும் இருக்கின்றன. வகன நெருக்கடியில் இலண்டனிலும் பார்க்க சிங்கப்பூர் பல மடங்கு சிறந்தது. குற்றச் செயல்களை வைத்துப் பார்த்தால் சிங்கப்பூர் நியூயோர்க்கிலும் பலப்பல மடங்கு சிறந்தது.

இரசியாவின் மாஸ்கோ நகர் பரிதாபகரமான 25ம் இடத்தில் இருக்கிறது.

பாங்கொக் நகர் 36-ம் இடத்தில் இருக்கிறது.

களவாணிப்பயலுக மதராசிப் பட்டணத்தை என்ன பண்ணினாங்க?
இந்தியத் தலைநகர் டில்லி 45, மும்பை 46, பெங்களூர் 58. மலேசிய நகர் கோலலும்பூரை(48) இரு இந்திய நகரங்கள் முந்தியது முக்கியமானதாகும். இந்த 65 நகரப் பட்டியலில் சிங்காரச் சென்னை இடம்பெறவில்லை. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையை ஆயி போற இடமாக்கியதாலோ? ஆளவந்தவர்கள் வாழவந்ததாலோ?

பாவம் பாக்கிஸ்த்தான்
பங்களாதேசின் டாக்கா 64ம் இடத்தைப் பெற்றுள்ளது. பாக்கிஸ்த்தானியப் பட்டினங்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. ராஜபக்சவின் கொழும்பு பாதாளத்திலோ?

பத்மநாதனிடம் மேலும் சில கேள்விகள்விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர்
கே பத்மநாதனின் தொடரும் பேட்டி தொடர்பான தொடரும் சந்தேகங்கள்
.
இதற்கு முந்திய சந்தேகங்களைக் காண இங்கு சொடுக்கவும்: பகுதி-1, பகுதி-2

 • பத்மநாதன்: நான் இயக்கத்திலிருந்து விலகி தாய்லாந்தில் எனது குடும்பத்துடன் ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தேன். எனக்கு மீண்டும் இயக்கத்தில்(விடுதலைப் புலிகள்) இணையும் எண்ணம் இருக்கவில்லை. இருப்பினும் தலைவர் பிரபாகரன் கேட்டுக்கொண்டால் நான் மீண்டும் இயக்கத்தில் சேருவேன் என எனது மனைவி எண்ணினார்
சந்தேகம்: உங்கள் மனைவிக்கு ஏன் அப்படி ஒரு எண்ணம்? இந்த ஆள் உழைப்புப் பிழைப்பின்றி இருக்கிறார். மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தால் தொடர்ந்து உழைக்கலாம் என்பதற்காக அப்படி எண்ணினாரா?

 • பத்மநாதன்: நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் என்ன நடக்கின்றது என்பதை செய்திகள் ஊடாக அறிந்து வந்தேன். நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் எல்.ரி.ரி.ஈ சிறப்பாக செயற்படவில்லை என்பதை செய்திகளினூடாக அறிந்துக்கொண்டதால் தொடர்ந்து வந்த நிகழ்வுகளால் கவலைக் கொண்டு இருந்தேன்.
சந்தேகம்: நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தீர்கள் ஆனால் இயக்கமே அழிந்து விட்டதாகக் கூறுகிறார்கள். நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தாதால்தான் அழிந்ததா? அல்லது அழிக்கும் நோக்கத்துடந்தான் சேர்ந்தீர்களா?

 • பத்மநாதன்: நான் ஒன்றை தெளிவாக கூறுகின்றேன். நான் 2002 டிசெம்பரிலிருந்து எல்.ரி.ரி.ஈ க்கு வெளியே இருந்தேன் என்பது தெளிவானது. ஆனால் அதற்கு முன்னரே 2002 இல் பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் வந்தவுடனேயே எல்.ரி.ரி.ஈ யின் கப்பல் தொகுதியை கையாளும் பணி என்னிடம் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப்பொறுப்பு சூசையினால் தலைமை தாங்கப்பட்ட கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.......2007 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் ஒரு கப்பலால் கூட கிழக்குக் கரைக்கு எதையும் கொண்டுவர முடியவில்லை என எனக்கு கூறப்பட்டது. ஒரு ஒரு பனடோல் கூட வரவில்லை என சூசை என்னிடம் கூறினார்.
சந்தேகம்: நீங்கள் மறுத்தாலும் நீங்கள் யாருக்கோ விடுதலைப் புலிகளின் கப்பல்களைப்பற்றியோ அல்லது அவற்றின் நடமாட்டம் பற்றியோ தகவல் வழங்கியதால் இது சாத்தியமானதா என்ற சந்தேகம் தீரவில்லை.

உங்கள் பேட்டியின் இரண்டாம் பகுதி காஸ்ரோவையும் நெடியவனையும் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறது. முதல் பகுதியில் தமிழ்ச்செல்வனிற்கு எதிராக நீங்கள் கூறிய கருத்துக்கள் உலகெங்கும் வாழ் தமிழர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளில் காஸ்ரோவும் நெடியவனும்தான் முக்கியமானவர்கள் என்று கருதப்படுகிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிராக உங்கள் பேட்டியின் பெரும் பகுதி அமைந்திருக்கிறது?

ஐயா பத்மநாதன் அவர்களே உங்களுக்கு மகாபாரதக் கதை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாரதப் போரின் பதினெட்டாம் நாளன்று துரியோதனன் நீருக்கடியில் மறைந்திருந்து சிரஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருந்தான். அவனை தனது சண்டைக்கான சவால்களால் உசுப்பேத்தி வீமன் வெளியே வரச் செய்தான். வெளியே வந்த துரியோதனனிடம் தருமன் நீ எங்களுடன் சமாதானமாகப் போ. உன்னை எங்கள் அரசனாக ஏற்றுக் கொண்டு உனக்குக் கீழிருந்து நாம் ஐவரும் உனது குற்றேவல் செய்வோம் என்று அழைக்கிறான். தனது நண்பன் தம்பிமார் உடபடச் சகலரும் போரில் இறந்தபின் எனக்கு பதவி வேண்டாம். நானும் சாகவே விரும்புகிறேன் வாருங்கள் சண்டைக்கு என்று கூறி துரியோதனன் பாண்டவர்களுடன் மோதினான். போர் விதிகளின் படி அடிக்கக்கூடாத இடத்தில்(ஆணுடம்பில்) அடித்து போர்குற்றம் புரிந்து வீமன் துரியோதனனைக் கொன்றான். ஐயா பத்மநாதன் அவர்களே நீங்களும் துரியோதனன் நிலையில்தான் இருந்தீர்கள். நீங்கள் இப்போது எதிரிகளுடன் இருக்கிறீர்கள். என்ன சாதிக்க்ப் போகிறீர்கள் என்று பார்ப்போம்.

நீங்கள் ஒரு புறம் இப்படிப் பேட்டி கொடுத்து கோத்தபாய ராஜப்க்சவைக் கண்ணியவான் என்று சித்தரித்துக் கொண்டிருக்க இன்னொரு புறத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று உங்கள் சொகுசு வாழ்க்கையை இலங்கை அரசு பறித்து இப்போது உங்களை கிளிநொச்சியில் குடியேற்றி விட்டதாகவும் அங்கு உங்களின் கீழ் செயற்பட இலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் பத்தாயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை அரசு கொல்லவும் முடியாமல் வெளியில் விடவும் முடியாமல் தவிக்கிறது. அவர்களை பத்மநாதன் கீழ் திரட்டி அவர்களை இலத்திரன் காப்பு (Electronic tag ) செய்து ஒரு சிறு பிரதேசத்தின் கீழ் முடக்கி வைத்திருக்க முயல்கிறது. பதமநாதன் ஐயா அவர்களே அதற்காக இலங்கை அரசு உங்களைப் பாவிக்கிறதா?
சந்தேகங்கள் இன்னும் வரும்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...