Saturday, 23 January 2010

ராஜபக்சவிற்கு எதிராகக் குவியும் குற்றச் சாட்டுக்கள்.


இலங்கையில் பௌத்தமதத்தில் மிக உயர்ந்தவராகக் கருதப் படும் கண்டி மல்வத்தை பீடாதிபதி அதிவணக்கத்துக்குரிய திப்பெட்டுவேம ஸ்ரீ சுமங்கள மஹாநயக்க தேரர் அவர்கள் மஹிந்த ராஜபக்சே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

The Mahanayake thera is commenting on the non compliance of the recent Supreme Court order regarding the media coverage during the run up to the presidential elections. A five-member bench chaired by the Chief Justice Asoka de Silva last Friday ordered the state and private media institutions to obey election commissioner's guidelines.

அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் செயலாளர் டிரான் அலஸின் வீட்டைப் பார்வையிடுவதற்கு நேரடியாக சென்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கார்டியன் பத்திரிகையில் எழுதிய நிலாந்த இலங்கமுவ அவர்கள் மஹிந்த ராஜபக்சே இலங்கையின் நல்லடையாளத்தை கொலைசெய்கிறார் என்று எழுதியுள்ளார். மஹிந்த ஒழுங்கானதாகவோ அல்லது மோசடியாகவாகவே தேர்தலை நடத்தி வெற்றி பெற்றாலும் அவரால் உருவாக்கப் பட்ட திருடர்கள் தொடர்ந்தும் நாட்டைக் கொள்ளையாடிப்பார்கள் என்று எழுதியுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைத் தேர்தலுக்கு முன்னரான அரசியல்வாதிகள்மீதான தாக்குதல்கள் நிறுத்தப் படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து வெற்றி பெற்றவர் என்று நன்சான்றிதழ் கொடுத்தவர்கள் இப்போதாவது இலங்கையில் நடந்தது ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பயங்ரவாதத்தின் வெற்றி என்பதை உணர்வார்களா?

Friday, 22 January 2010

இலங்கைத் தேர்தல் நிலவரம் = குளறுபடிகள்இலங்கையில் இம் மாதம் 26-ம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தல் மிகவும் வன்முறை மிக்கதாகவும் மோசடிகள் நிறைந்ததாகவும் அமையவிருக்கிறது. குளறுபடியான் செய்திகளுக்கு பஞ்சமில்லை:

குளறுபடி - 1
இம்மாதம் 13-ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தியதாக தகவல் வந்தது. அவர்களை இந்தியா மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் படி வற்புறுத்தும் என்று எதிர்பார்ககப் பட்டது. தாம் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை இந்தியா ஆட்சேபிக்கவில்லை என்று தகவல் வந்தது. பொய்பிரச்சாரத்திற்கு பெயர்போன இலங்கையில் இது பற்றி வேறு விதமாக பேசப் படுகிறது. மஹிந்த தரப்பு ஒரு பொய்ச்செய்தியைப் பரவவிட்டுள்ளதாம்: இந்தியா த.தே.கூ. ஐ அழைக்கவில்லை. சரத் பொன்சேக்காவிற்கு இந்தியா ஆதரவு வழஙகும் படி இந்தியாவை வேண்டும்படி சரத் பொன்சேக்காவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவிகு அனுப்பிவைத்தாரம். இந்தியா-சரத்-த.தே.கூ சேர்ந்து இயங்குகிறாம்.

குளறுபடி - 2
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், இன்று தமது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவர் மஹிந்த ராஜபக்சவிற்காக தேர்தல் பிரசாரம் செய்வதாக வாக்குறுதி அளித்து இருந்தாராம். அப்படிச்செய்தால் தமிழ் மக்களால் துரோகிப் பட்டம் கட்டப் பட்டு விடுவார் என்று பயந்து தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள தன்னைத் தானே சுட்டுக் காயப்படுத்தினாராம். இதே போல் இன்னொரு தமிழ் நாடாளமன்ற உறுப்பினர் வெளிநாடு சென்று விட்டாராம்.

குளறுபடி - 3
இலங்கை மத்திய வங்கி திடீரென இலங்கையில் வாழும் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு திறந்து அதற்கு இலங்கையில் இருந்து பணம் அனுப்ப முடியுமென்று அறிவித்தது. இந்தச் அனுமதி ஒரிரு தினங்களில் இரத்துச் செய்யப்பட்டது. ராஜபக்சே குடும்பம் தமது செல்வங்களை வெளிநாட்டிற்கு அனுப்பவே இந்த ஏற்பாடு என்று சில செய்திகள் தெரிவித்தன.

குளறுபடி - 4
தேர்தலுக்கு அடுத்த நாள் ராஜபக்சே குடும்பம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஒரு விமானம் தயார் நிலையில் உள்ளதாம். பங்களாதேசத்தில் நடக்கும் விளையாட்டு விழாவைப் பார்க்கச் செல்ல என்று இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம்.

குளறுபடி - 5
அண்மையில் கோத்தபாய ராஜபக்சே இருதயச் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றாராம். அவர் சென்றது பெருந்தொகைப் பணத்தை அங்கு கொண்டு போய்ச் சேர்க்கவாம் என்றும் செய்திகள் வெளிவந்தன.

குளறுபடி - 6
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுடெனிஸ் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் வாக்களித்தால் தான் சரத் வெல்லுவார் என்று அறிந்துதான் இப்படி அறிக்கை விடப்பட்டதாம்.

குளறுபடி - 7
இந்தியாவில் இருந்து சில நிபுணர்கள் மஹிந்த ராஜபக்சே வெற்றி பெறச் செய்ய இலங்கை வந்து செயல் படுகிறார்களாம். சிதம்பர(ம் வென்ற) இரகசியம் இலங்கையிலுமா?

குளறுபடி - 8
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய வடக்கு - கிழக்கு மீளிணைப்பு தொடர்பான உடன்படிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் தெரிவித்துள்ளனர்.

குளறுபடி - 9
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்று தகவல் வெளியிட்டுள்ளது

குளறுபடி - 10
மஹிந்த தரப்பு 5இலட்சம் வாக்குக்கள் மோசடி செய்வதாகத் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி.

குளறுபடி - 11
விடுத்லைப் புலிகளின் பெயரில் தேர்தலைப் புறக்கணிக்கும் படி துண்டுப் பிரசுரங்களை தமிழினத் துரோகக் குழுக்கள் விநியோகிக்கின்றனவாம்.

குளறுபடி - 12
மஹிந்தவிற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழினத் துரோகக் குழுக்கள் சரத் பொன்சேக்காவை விமர்சிப்பதில்லையாம். அவர் வென்றால் அவர்காலையும் பிடிக்கவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.

குளறுபடி - 13
தேர்தல் ஒழுங்காக நடந்தால் சரத் பொன்சேக்கா வெல்லுவார் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றனவாம். மோசடி செய்து மஹிந்த வென்றால் தேர்தலைச் செல்லுபடியற்றதாக்க தேர்தல் ஆணையாளருடன் இணைந்து மேற்குநாடுகள் சதிசெய்கின்றனவாம்.

குளறுபடி - 14
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றால் இராணுவ ஆட்சியொன்றை அமைக்கும் நடவடிக்கையில் அரசுத் தரப்பு ஈடுபட்டு வருகின்றது என ஜே.வி.பி தெரிவிக்கிறது.

Thursday, 21 January 2010

நாலு சிங்களவர் செத்ததிற்கு ஒப்பாரி வைக்கும் பான் கீ மூன்


ஒரு நாளில் 25,000 பேரை கொன்ற இலங்கையில் நாலு சிங்களவர்கள் தேர்தல் வன்முறையால் இறந்துள்ளனர். இதற்காக ஒப்பாரி வைக்கும் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் செயலரும் உலகின் மிக ஆபத்தான கொரிய நாட்டவர் என்று வர்ணிக்கப் பட்டவருமான பான் கீ மூன் அவர்களும் இணைந்துள்ளார்.

இலங்கைத் தேர்தலில் நடக்கும் வன்முறை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூன் அவர் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

“The peaceful conduct of the first post-conflict national election is of the highest importance for long term peace and reconciliation in Sri Lanka,” the Secretary-General Ban ki Moon stressed. முரண்பாடுகளுக்கு பின்னரான முதல் தேர்தல் அமைதியாக நடைபெறுவது நீண்டகால அமைதிக்கும் இணக்கப் பாட்டிற்கும் மிக முக்கியமாகும் என்கிறார் அந்த மோசமான சொறியர் மன்னிக்கவும் கொரியர்.

ஐயா பான் கீ மூன் அவர்களே அது என்ன "முரண்பாட்டிற்கு பின்னரான" முதற் தேர்தல்? முரண்பாடு முடிந்துவிட்டது என்று யார் சொன்னது? முதலில் இலங்கையில் முரண்பாடு என்பது என்ன அது எப்படித் தொடங்கியது என்று உமக்குத் தெரியுமா பான் கீ மூன் அவர்களே. ஆயுத மோதல்கூட முடிவிற்கு வந்ததாக் நாம் நம்பவில்லை. இருவர்களிற்கிடையில் முரண்பாடு அதனால் அவர்கள் மோதிக் கொண்டனர்.

நீரும் உமது சர்வ தேச சமூகமும் ஒரு பக்கச் சார்பாகச் செயற்பட்டு ஒருவரை விழுத்தி விட்டீர்கள்.

ஒருவன் விழுந்தவுடன் முரண்பாடு முடிந்து விடுமா பான் கீ மூன் ஐயா?

அவன் விழுந்தது இது முதற் தடவை அல்ல. விழுந்தவன் சாதாரணமானவன் அல்ல. அவன் விழ விழ எழுபவன்.

நீங்கள் சொல்வது போல் "post-conflict national election" இலங்கை பிளவு பட்டபின்தான் ஏற்படும்.

Wednesday, 20 January 2010

தேர்தல் ஆராவாரத்தில் மறந்ததும் மறைந்ததும்.


(மம கப்பனவா....தேரனவாத: நான் அறுப்பேன் விளங்குதா)

தேர்தல் என்பது எமது ஆவலை மிக மிகக் கவரும். யாருக்கு வாக்களிப்பது? யார் வெல்லுவார்? என்ற வாதப் பிரதிவாதங்கள் எம்மை எல்லாவற்றையும் மறக்கச் செய்யும். இலங்கைக் குடியரசுத் தேர்தலில் இம்முறை தமிழர்களுக்கு இன்னும் ஒரு கேள்வியை எழச்செய்தது: யாருக்கு வாக்களிக்கக் கூடாது? மெக்சிக்கோ நாட்டுப் பழமொழி ஒன்று: இரத்தம் சிந்திய இடத்தில் மறதி என்ற மரம் வளராது.(Where blood has been spilt the tree of forgetfullness cannot flourish) எமது ஈழ பூமியில் சிந்திய இரத்தம் வேறு எங்கும் சிந்தியிருக்க முடியாது. குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் எம்மக்கள் சிந்திய இரத்தத்துடன் முடிந்ததா? தொடர்ந்த அவலம். நெருக்கமான இடத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வதைக்கப் பட்டனர் பல இலட்சம் மக்கள். மனித மலம் கலந்த உணவு கொடுத்ததை யார் மறப்பர்? உணவை வீசி சண்டை பிடித்து உண்ணுங்கள் என்று கட்டளையிட்டதை யார் மறப்பர்?

இரண்டு வருடங்கள் முன் கூட்டியே தேர்தல் ஏன் நடக்கிறது? ராஜபக்சேக்களின் புகழ் உச்சிக்குச் சென்றதால் தேர்தல் நடக்கிறது. அவர்கள் புகழ் உச்சிக்கு ஏன் சென்றது? தமிழர்களைப் போரில் தோற்கடித்ததால் நடக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்து அங்கங்கள் இழந்து உடமைகள் இழந்து மானம் இழந்து .... சிங்களம் போரில் வென்றதால் தேர்தல் நடக்கிறது.

மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்தனர். திடீரென திறந்து விட்டனர். இருக்க இடமின்றி கையில் ஏதுமின்றி வெளியில் சென்றவர் என்ன அவலப் படுகின்றனர்? நாம் கவலைப் படவில்லை. அவர்கள் அவலங்கள் தேர்தல் ஆரவாரத்தில் மறைந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்ற பட்டி மன்றத்தில் அவர்களை நாம் மறந்து விட்டோமா? அவர்களின் தற்போதைய நிலை என்ன? எந்த ஊடகமாவது தெரிவிக்கிறதா? எந்த அரசியல்வாதியாவது கவனம் எடுக்கிறார்களா? எந்த நாடாவது கவலைப் படுகிறதா?

பக்கத்து நாட்டின் பட்டமளிப்பு விழாவை எம்நாட்டுப் பிரேதங்கள் மேல் ஏறி நின்று எட்டிப் பார்த்து மகிழ்கிறோமா?

Tuesday, 19 January 2010

ஹெய்டியிலும் ஐநாவின் கபடம் அம்பலம்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைப் போரில் நடந்து கொண்டது போலவே ஹெய்டியிலும் மோசமாக நடந்து கொள்வது மேலுள்ள இரு படங்களிலும் தெரிய வந்துள்ளது.ஹெய்டியில் ஐநா ஊழியர்கள் இறந்தபின் மிகுந்த மரியாதை செலுத்தப் பட்டது. ஆனால் சாதாரண ஹெய்டி வாசிகளின் உடலங்களை ஐநா குப்பை போல் வீசுகிறது.

இலங்கையில் தமிழ் ஐநா ஊழியர்களை இலங்கை அரசு கைது செய்து மோசமாக நடத்தியபோது ஐநா பாராமுகமாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களினதும் ஊழியர்கள் பலரை இலங்கை அரசு தனது வதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது சென்ற ஆண்டு அம்பலமாகியது. ஐநா இவர்களை விடுவிக்கும் படி பலமுறை இலங்கை அரசைக் கோரியும் இலங்கை அரசு இவர்களை விடுவிக்க மறுத்துள்ளதை ஐநா மறைத்து வைத்திருந்ததை Inner City Press அம்பலப் படுத்தியுள்ளது. இதை அடுத்து ஐநா இரட்டை வேடம் பூணுகிறதா என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

Inner City Press e-mailed the spokespeople for The Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) and UNICEF, repeating the question. OCHA spokeswoman Stephanie Bunker replied first:

Subj: Re: Q if there are UN system staff / family in Sri Lankan government's "IDP" camps, and if so...
From: [OCHA at] un.org
To: Inner City PressSent: 4/13/2009 3:17:39 P.M. Eastern Daylight Time

Among those tens of thousands of people who have managed to flee the No Fire Zone in northern Sri Lanka, we are aware that some UN and NGO staff and their dependents have managed to flee as well. As far as we know, they are still in the camps for displaced people set up in the area, and we have repeatedly asked the Government of Sri Lanka to allow them freedom of movement so that they can eventually resume their role as aid workers. While the Government has repeatedly assured us that this request would be met, the staff still remain in the camps.

Inner City Press' sources in Sri Lanka say that OCHA chief John Holmes was informed of these people while he was in Sri Lanka, that local staff dissatisfaction with his public silence about it has been growing.

Monday, 18 January 2010

மேற்குலகை நம்பி சரத்திற்கு வாக்களிக்கலாமா?


ஐக்கிய நாடுகள் சபையில் சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வழங்குவதை தடுப்பீர்களா என்று பிரித்தானியப் பிரதிநிதியிடம் கேட்டபோது அதற்கும் தமிழர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரத்தானியப் பிரதிநிதி பதிலளித்தார். சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கான கடனுதவி வாக்கெடுப்புக்கு வந்தபோது பிரித்தானியப் பிரதிநிதி எதிர்த்து வாக்களிக்க வில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டார். இலங்கைக்கு பிரித்தானியா இரகசியமாக ஆயுத விற்பனையும் செய்தது.

சென்ற ஆண்டு அமெரிக்கா இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு 73 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்தே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் பலதரப்பிலிருந்தும் முக்கியமாக பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களிடம் இருந்தும் தினசரி போர்முனைத் தகவல்களைத் திரட்டியுள்ளது என்பது அவ்வறிக்கையைப் பார்க்கும் போது புலப்படுகிறது. இந்த அறிக்கை சிங்களவர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க செனட் சபைக்கு ஒரு அறிக்கை (சரத் பொன்சேக்கா அமெரிக்க வேண்டுகோளின் பேரில் தேர்தல் களத்தில் இறங்கியபின்) சமர்க்கிக்கப் பட்டது. அதில் அமெரிக்கா சிங்களவர்களைத் திருப்திப் படுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப் பட்டது.

இந்து சமூத்திரத்தில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை இலங்கையின் அயல்நாடான இந்தியாவிற்கு முன்னர் அமெரிக்கா நன்கு உணர்ந்து கொண்டது.உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் ஊடாகவே நடை பெறுகிறது. நீர் மூழ்கிக் கப்பல்களுக்கிடையிலான தொலை தொடர்பு நிலையம் அமைப்பதற்கு இலங்கை மிக உகந்ததாக கருதப் படுகிறது. இலங்கைக்கு இந்தியா வெளியுறவுத் துறை கொடுக்கும் முன்னுரிமையிலும் பார்க்க அதிக முன்னுரிமையை அமெரிக்கா இலங்கை சுதந்திரம் அடைந்தில் இருந்தே கொடுக்கத் தொடங்கிவிட்டது. இதே வேளை சீனா ஒரு காத்திரமான நட்புறவை இலங்கையுடன் நிதானமாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கட்டி வளர்த்து வந்தது. சீனா மத்திய கிழகில் இருந்து இறக்குமதி செய்யும் தனது எரிபொருள்களும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் மூலப் பொருட்களினது தடையின்றிய விநியோகத்திற்கு இலங்கியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தே இதைச் செய்தது. இப்போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சீனா முதலாம் இடத்தைப் பிடித்து விட்டது. இந்தியாவிற்கு ஒருபுறம் சீன-பாக்கிஸ்த்தானிய நட்பு அச்சு ஒரு சவால். இன்னொரு புறத்தின் சீன-மியன்மார் நட்பு ஒரு சவால். அத்துடன் நிற்காமல் சீன-இலங்கை-ஈரானிய நட்பு அச்சு இன்னொரு புறமாக இந்தியாவிற்கு ஆப்பு வைக்கிறது. இலங்கை தான் கூட்டுச் சேராக் கொள்கையுடைய நாடு என்று சொல்லிக் கொண்டே இந்த இந்திய எதிர்ப்புக் கூட்டணிகளில் இணைந்து கொண்டது.

இந்தப் பின்னணியில் தமிழர்கள் சரத் பொன்சேக்காவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மேற்குலகப் பத்திரிகைகள் ஆலோசனை தெரிவிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் மேற்குலகம் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு தொடர்பாக தமது கருத்துக்கள் என்ன என்பதை தெளிவு படுத்தவில்லை. முன்பு அதிகாரப் பரவலாக்கம் என்று கூறிவந்த மேற்குலக நாடுகள் இப்போது அதிகாரப் பரவலாக்கம் என்ற சொல்லைப் பாவிப்பதில்லை. அதிகாரப் பரவலாக்கம் என்ற பதம் சிங்களவர்களுக்கு பிடிக்காது என்று அவை உணர்ந்து கொண்டுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாயந்த ஒரு நாட்டின் பெரும் பான்மை சமூகத்தின் அதிருப்தியை சம்பாதிப்பதில்லை என்று அவை எண்ணுகின்றன. ஆனால் இலங்கை இனப் பிரச்சனை இலங்கைத்தீவில் அமைதிக்கு என்றும் பங்கமாக இருக்கும் என்று அவை நன்கு அறியும் அதற்காக அவை தமது நிலைப்பாட்டில் இரு அம்சங்களைக் கொண்டுள்ளன:
  1. இலங்கையில் இனங்களுக்கிடையிலான இணக்கப் பாடு தேவை.
  2. இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைக்குள் இருந்தே உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்க முடியாது.
மேற்குலகம் இலங்கைப் பிரச்சனைக்கு அதிகாரப்பரவாலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வு தீர்வாகும் என்று சொல்வதை விட்டு வீட்டன. மேற் கூறிய இரண்டும் சிங்கள மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிநாடுகள் உணர்ந்து கொண்டமையின் வெளிப்பாடே. இணக்கப் பாடு தமிழர்களின் தாயம், தேசியம், தன்னாட்சி ஆகிய மூன்றும் ஏற்றுக் கொள்ளப் பட்ட நிலையில்தான் உருவாகும். ஆனால் அதை ஏற்றுக் கொள்வதாக எந்த மேற்குலகும் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கைக்கு இதுதான் தீர்வு என்று ஒரு தீர்வை எந்த மேற்குலகமும் தெரிவிக்காது. அப்படி ஒன்று தெரிவிக்கப் படும் இடத்தில் சிங்கள மக்களின் ஆத்திரத்திற்கு அவை உள்ளாகும். அதனால்தான் இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைக்குள் இருந்தே உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்க முடியாது என்று மேற்குலக நாடுகள் தெரிவிக்கின்றன.
இப்படிச் சிங்கள மக்களின் விருப்பிற்கேற்ப கருத்து வெளியிடும் மேற்குலக கருத்துக்க்களை தமிழ் மக்கள் நம்பக் கூடாது.

Sunday, 17 January 2010

சிவாஜிலிங்கத்தின் சாயம் வெளுக்கிறது.


சிவாஜிலிங்கம் இலங்கைக் குடியரசுத் தேர்தலில் போட்டியிடும் ஒரு சுயாதீன வேட்பாளர். அவர் இன்னொரு வேட்பாளர் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கிறார். உலக வரலாற்றில் இரு வேட்பாளர்கள் இணைந்து ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போட்டியிடுவது இது முதல் தடவையாக இருக்கலாம். இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேக்கவும் தமிழின விரோதிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்று தனது கட்சி உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழ்மக்களுடன் எந்தவித சந்திப்பையோ கலந்துரையாடல்களையே மேற் கொள்ளாமல்போட்டியில் குதித்தவர் சிவாஜிலிங்கம். இவர் இந்தியாவின் தூண்டுதலின் பேரால் தமிழர்களின் வாக்கு சரத் பொன்சேக்காவைற்கு சார்பாக திரும்பாமல் இருக்க தேர்தலில் போட்டியிடுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது.

இப்போது சிவாஜிலிங்கம் அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்: "வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளார்".

இப்படிச் செய்யப் போவதாக சரத் பொன்சேக்காவோ அவருடன் ஒரு உடன் பாட்டிற்கு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தெரிவிக்கவில்லை. சிவாஜிலிங்கம் கூறுவது உண்மையாயின் இருதரப்பும் திரைமறைவில் இப்படி ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கலாம். இத் தகவல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என்றவகையில் சிவாஜிலிங்கத்திற்கு தெரிய வந்திருக்கலாம். அதை ஏன் சிவாஜிலிங்கம் பகிரங்கப் படுத்துகிறார்? இதைப் பகிரங்கப் படுத்துவதன் மூலம் சிவாஜிலிங்கத்துக்கு தமிழர்களும் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவிற்கு சிங்களவர்களும் வாக்களிப்பார்களா?

மஹிந்த ராஜபக்சவிற்கு இப்போதைய பசி சரத் பொன்சேக்கா தமிழர்களுக்கு ஏதோ வழங்கப்போகிறார் என்ற செய்தியே. அதை வைத்து அவர் இனவாத நஞ்சைக் கக்கி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று விடலாம். இந்தப் பசிக்கு சிவாஜிலிங்கம் தீனி போடுகிறார்.

சிவாஜிலிங்கம் இன்னும் பல தீனிகளை மஹிந்தவிற்கு போடுவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...