Sunday, 12 December 2010

விக்கிலீக் அசங்கேயின் சட்டவாளர் வைத்திருக்கும் இரகசியம் என்ன?


சுவீடனில் விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசங்கேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் தன்னிடம் ஜூலியன் அசங்கே மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக முக்கிய தகவல் உள்ளதாகவும் அதை வெளியிட சட்டம் தன்னைத் தடுப்பதாகவும் கூறியுள்ளார். சுவீடன் அரச புலன் விசாரணைப் பத்திரங்களின்படி அசங்கே தம்முடன் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றம் சாட்டும் இரு பெண்களும் பொய் சொல்கிறார்கள் என்றும் அவர்கள் ஒரு இரகசிய ஏற்பாட்டின் பேரில் செயற்படுகிறார்கள் என்றும் சொல்கிறார் ஜூலியன் அசங்கேயின் சட்டவாளர் பி. ஹன்ரிங். மேலும் பி. ஹன்ரிங் தெரிவிக்கையில் இருவரும் பொறாமையுள்ளவர்களென்றும் ஒருவர் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் செயற்படுகிறார் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு பிரித்தானிய நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு ஒரு நாடகம் என்று தன்னால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். சுவீடனில் உள்ள சட்டம் ஜூலியன் அசங்கேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் இத்தகவல்களை வெளியிடத் தடை செய்கிறது. மீறி வெளிய்ட்டால் அவர் தனது தொழிலை இழக்கவேண்டிவரும்.
பிரித்தானியப் பத்திரிகை டெய்லி மெயிலிற்கு சட்டவாளர் பி. ஹன்ரிங் அசங்கேயைப்பற்றிக் கூரியது:
  • ‘He denied vehemently that he had raped or in any way indulged in non-consensual sex. He was very upset. He kept saying, “How can they do this to me? I’ve done nothing wrong. They are trying to destroy my credibility.” He kept saying it was a witch-hunt and we must fight it.’விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசங்கேயின் குற்றத்தின் பின்னணி
ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் போரில் ஊடகங்களின் பங்கு பற்றி ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) நடந்த மாநாட்டில் உரையாற்ற ஜுலியன் அசங்கே என்னும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்த முன்னாள் கணனி ஊடுருவி(computer hacker) அழைக்கப்படுகிறார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மத்திய இடது சாரி சகோதரத்துவ இயக்கம். இந்த இயக்கத்திற்காக பணியாற்றிய அழகி-1 (இவர் பெயர் வெளிவிடப்படவில்லை) ஜுலியன் அசங்கேயுடன் தொடர்புகொள்கிறார். ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) தனது தங்குமிடத்தைப்பற்றி அழகி-1 இடம் ஜுலியன் அசங்கே விசாரிக்கிறார். தனது வீட்டில் (Flat) தங்கலாம் மாநாடு நடக்கும் வேளையில் தான் வீட்டில் இருக்கமாட்டேன் நகரத்திற்கு வெளியில்தான் தங்குவேன் என்று அழகி-1 கூறுகிறார்.
மாநாட்டிற்கு சென்ற ஜுலியன் அசங்கே அழகி-1 இன் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அழகி-1 குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்கூட்டியே தன் விட்டிற்கு திரும்புகிறார். ஜுலியன் அசங்கேயும் அழகி-1 இரவு ஒரு உணவகத்திற்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வீடுவந்து இருவரும் அழகி-1 இன் சம்மதத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். பாவம் ஜுலியன் அசங்கே அவர்கள் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் பாவித்த ஆணுறை கிழிந்து விடுகிறது. (காய்ந்த மாடோ?) மறுநாள் அழகி-1 ஜுலியன் அசங்கேஇற்கு ஒரு விருந்தும் வழங்குகிறார்(உணவுதான்).

அழகி-1 ஒரு பெண்ணுரிமைப் போராளி. பல்கலைக்கழகமொன்றில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார். பெண்ணுரிமை உட்படப் பல முற்போக்கு இயக்கங்களில் பங்கு கொள்பவர். பல நாடுகளுக்கும் சென்று வருபவர்.

ஜுலியன் அசங்கே மாநாட்டில் உரையாற்றும் போது அழகி-2 முன்வரிசையில் இருக்கிறார். அவர் அதிக புகைப்படங்கள் ஜுலியன் அசங்கே உரையாற்றும் போது எடுக்கிறார். மாநாட்டின் பின்அழகி-1 அழகி-2ஐ ஜுலியன் அசங்கேயிற்கு அறிமுகம் செய்கிறார். இருவரும் நகரத்தை சுற்றுகின்றனர். அழகி-2 இல் ஜுலியன் அசங்கே மயங்கிவிடுகிறார். நீ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறாய் என்று ஜுலியன் அசங்கே பிதற்றவும் செய்கிறார். இங்கும் உடலுறவு நடக்கிறது. அழகி-2 இன் சம்மதத்துடன்தான். ஆனால் அழகி-2 ஆணுறை அணியும்படி வேண்டியதை ஜுலியன் அசங்கே மறுத்துவிடுகிறார். (Rain coat போட்டுக் கொண்டு குளிப்பதை யார்தான் விரும்புவர்.)

அழகி-1ம் அழகி-2ம் பின்னர் சந்தித்துக் கொள்கின்றனர். ஜுலியன் அசங்கே உடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பெண் உரிமைப் போராளியான அழகி-1 ஆணுறை இன்றி அழகி-2 உடன் உடலுறவு கொண்டதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தாராம். பின்னர் இருவரும் காவல் துறையில் முறையீடு செய்கின்றனர். உங்களையும் என்னையும் போலவே ஜுலியன் அசங்கே இற்கு சுவீடன் தேசத்து கற்பழிப்புச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். பெண் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ஆணுறை கிழிப்பது ஆணுறை அணிய மறுத்து உறவு கொள்வது எல்லாம் அங்கு குற்றமாம். அழகி-2 தான் ஜூலியன் அசங்கேயில் காமம் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அழகிகள் ஜுலியன் அசங்கே நடந்த விததைப் பற்றி பத்திரிகைகளிலும் வெளியிருகின்றனர் ( தங்கள் பெயர் வெளிவராமல்தான்). தங்கள் சம்மதத்துடன் தான் ஜுலியன் அசங்கே தம்முடன் உறவு கொண்டதாகவும் பத்திரிகைகளில் ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

மேற்படி அழகிகளின் குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து பிரித்தானியாவிலிருந்து ஜுலியன் அசங்கேயை நாடுகடத்தும் வழக்கு இப்போது நடக்கிறது

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...