Monday, 25 October 2010

இந்திய சீனப் போட்டி: பின்னை இட்ட தீ நுரைச் சோலையிலே?


வருங்கால பெரு வல்லரசுப் போட்டியில் முன்னிற்பவையாக சீனாவும் இந்தியாவும் கருதப்படுகிறது. இவை இரண்டும் இப்போது உலகில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டவை. 2009-ம் ஆண்டு சீனாவின் பொருளாதாரம் 8.7% வளர்ச்சியும், இந்தியா 6.4% வளர்ச்சியும் பெற்றன.

இந்தியாவின் பாதுகாப்புச் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் சீனாவின் பாது காப்புச் செலவீனம் மூன்று மடங்குக்கு மேல் எனக் கருதப் படுகிறது. பாதுகாப்புச் செலவீனத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் இரண்டாம் இடத்தையும் இந்தியா ஒன்பதாம் இடத்திலும் இருக்கின்றன.

இந்திய படையினரின் எண்ணிக்கை 1,325,000 சீனப் படையினரின் எண்ணிக்கை 2,255,000. போர் விமானங்களைப் பொறுத்தவரை இந்தியாவிலும் பார்க்க சீனாவில் ஏறக்குகுறைய மூன்று மடங்கு எண்ணிக்கையுடைய விமானங்கள் உண்டு.

சீனாவினதிலும் பார்க்க இந்தியக் கடற்படை நவீனமானதாகக் கருதப் படுகிறது. சீனாவிடம் ஒரு விமானந்தாங்கிக் கப்பல் கூட இல்லை. இந்தியக் கடற்படை விமானந்தாங்கிக் கப்பல்கள் நவீன நீர் முழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது. சீனக் கடற்படைக்கு போர் முனை அனுபவங்கள் கிடையாது. இந்தியக் கடற்படைக்கு பாக்கிஸ்த்தானுக்கு எதிரான போர் அனுபவம் உண்டு.

அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை சீனா இந்தியாவிலும் பார்க்க வலிமையானதும் நவீனமானதுமாகும். சீனாவிடம் 200இற்கும் 400இற்கும் இடைப்பட்ட அணுஆயுதங்கள் இருக்கிறதாம். இந்தியவிடம் ஆகக்கூடியது 70 இருக்கலாம். சீனாவின் வலிமையான அணு ஆயுதம் 4 மெகா ரன்கள், இந்தியாவினுடையது 0.05 மெகா ரன்களாகும். உலகிலேயே அதி தீவிரமாக அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடு சீனா.
இலங்கையில் இந்திய சீனப் போட்டி - முன்னை இட்ட தீ முள்ளி வாய்க்காலிலே!
தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு சிங்களவர்களுக்கு உதவி செய்தன. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் கைகோத்துக் கொண்டன. இதற்கான பலாபலன்களைப் பெறுவதில் சீனாவின் எச்சங்களையே இந்தியா சுவைக்க வேண்டிய பரிதாப நிலை. போருக்குப் பின்னால் இந்தியாவை இலங்கை நன்றாக ஏமாற்றி விட்டது என்பது அண்மையில் இந்துப் பத்திரிகை வெளிவிட்ட ஆசிரியத் தலையங்கத்தில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கை அரசின் கைக்கூலியாகக் கேலி செய்யப்படும் சிங்கள ரத்தினா இப்படி எழுதுவது ஏன்? இந்தியாவின் இந்த விரக்தி நிலை இலங்கையில் வேறு விதமாக வெளிப்படுகிறதா?

பின்னை வெடித்தது கிழக்கிலங்கையிலேயே!
இந்த ஆண்டு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சீனாவின் தெரு அபிவிருத்திக்கு என்று வைத்திருந்த மூன்று கொள்கலன்கள் நிறைந்த வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின.

நேற்று இட்டதீ நுரைச்சோலையிலேயே
இப்போது சீனாவின் நுரைச் சோலை அனல் மின்நிலையத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது சாதாரண் விபத்தாக இலங்கை அரசு கருதவில்லை என்று தெரிகிறது. இது பற்றி விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

புதுவகையான மிரட்டலா
நீ எனக்கு எதிராக சென்றால் இனித் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து உன்னை அடியபணியச் செய்ய மாட்டோம். வேறு விதமாக எமது அணுகு முறை இருக்கும் என்று யாராவது இலங்கைக்குச் சொல்ல முயல்கிறார்களா?

அம்பாந்தோட்டை துறை முகத்தில் என்ன மாதிரி விபத்து நடக்கும்???

2 comments:

Anonymous said...

ராஜீவ் எனும் குரங்கு இட்ட தீ தமிழீழத்திலே!!!
பின்னை இட்ட தீ முள்ளிவாய்க்காலிலே
இத்தாலிச் சனியன் இட்ட தீ எம்மை அழிக்கவே
எங்கு போய் எல்லாம் முடியுமோ???

Anonymous said...

நாளை இடும் தீ இரண்டு நாசமாய் போன நாடுகளும் அடிபட்டு அழிவதே. அதைப் பார்த்து தமிழீழம் கை கொட்டிச் சிரிக்கும். யாழ்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...