Friday, 22 October 2010

இலங்கைக்கு பன்னாட்டு அரங்கில் இந்தியா களம் அமைத்துக் கொடுக்கிறதா?


1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஒரு இனக்கொலை என்றார். இந்திய சட்டவாளர் சபையும் (Bar Council of India) அதையே சொன்னது. ஆனால் 2009/10இல் இலங்கையில் நடந்த மாபெரும் உயிரிழப்புக்களை இந்தியப் பாராளமன்றில் ஒரு இனக்கொலை என்று ஒரு உறுப்பினர் கூறியதை அவைக் குறிப்பில் பதிய இந்தியப் பாராளமன்றம் அனுமதிக்கவில்லை. இந்த அணுகு முறை மாற்றம் எப்படி வந்தது? தமிழனுக்கு என்று ஒரு நாடு இலங்கையில் உருவாகக்கூடாது என்று இந்தியாவின் ஒரு சக்திமிக்க கும்பல் உறுதியாக இருக்கிறது. இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் கண்டிக்கும் தீர்மானம் கொண்டு வந்த போது இந்தியா அதைச் சீனாவுடன் கைகோத்துக் கொண்டு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றித் தனது கேவலத் தன்மையை தமிழர்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்தியது.

இந்தியாவின் போரையே நாம் நடாத்தினோம் என்று இலங்கைப் போர் முடிந்த பின் இலங்கை அதிபர் ராஜக்சே கூறினார். இலங்கை அரசியல் வாதிகளும் படைத்துறையினரும் இந்தியாவின் உதவியின்றி எம்மால் இந்தப் போர வென்றிருக்க முடியாது என்று அடிக்கடி கூறிவருகின்றனர். பல தடவை இந்தியாவிற்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிங்களவர்கள் போரில் வெல்ல வேண்டும் என்று யாகங்களும் நடந்தன. இங்கு நினைவிற்கு வருவது:
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே!...
கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான்,
கண்ணனே கொலை செய்கின்றான்!...
காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக,
இக் களமெலாம் சிவக்க.


நேற்றைய ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கவிஞர் தாமரை இப்படிக்கூறுகிறார்:
  • "சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம்! இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்! இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றா மல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்!"
பழ நெடுமாறன் ஐயா இப்படிக் கூறுகிறார் ஜூனியர் விகடனுக்கு:
  • ''இலங்கையில் போர் முடிந்தவுடன் மகிந்தா ராஜபக்ஷேவின் தம்பி பசில் ராஜபக்ஷே சில உண்மைகளை வெளியிட்டார். 'போர் நெருக்கடியான நேரத்தில் இந்திய - இலங்கை அரசுகள் இணைந்து செயல்படுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், உள்துறைச் செயலாளரும் இலங்கைத் தரப்பில் பசில், கோத்தபய ராஜபக்ஷே, வெளியுறவுச் செயலாளரும் இடம்பெற்றனர். அந்தக் காலகட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என இந்தக் குழு கூடிப் பேசி, அதன்படி இந்திய அரசு உதவிகளைச் செய்தது. இதற்காகவே நாராயணனும் சிவசங்கர் மேனனும் அடிக்கடி கொழும்பு வந்து சென்றனர்' என்பது பசில் ராஜபக்ஷேவின் ஒப்புதல் வாக்குமூலம்.
இலங்கைமீது பன்னாட்டு அரங்கில் போர் குற்றம் சுமத்தப்படும் நிலையில் இலங்கையின் இப்போதைய பிரச்சனை பன்னாட்டு அரங்கில் தன் மீதான பார்வையை மாற்றி அமைக்கவேண்டும் என்பதே. இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமானால் அதில் இந்தியாவின் பங்களிப்பும் வெளிவர வாய்ப்புண்டு. ஐக்கிய நாடுகள் சபை அமைத்த போர் குற்ற ஆலோசனக் குழு தேவையற்றது என்று இரகசியமாக ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனிடம் வற்புறுத்தியதாக செய்திகள் வெளிவந்தன. ஐநாவின் ஆலோசனைக் குழு எந்த ஒரு விசாரணையும் மேற் கொள்வதாகத் தெரிவில்லை. விசாரணைக்கு மக்களை வந்து சாட்சியளிக்கும் படி அது வெளிவிட்ட வேண்டுகோள் பகிரங்கப் படுத்தப் படாமல் வைக்கப் பட்டது. இலங்கை இணையத் தளம் ஒன்றின் செய்திக்கு அதன் வாசகர் இட்ட பின்னூட்டம் மூலமாகவே பான்கீமூனின் ஆலோசனைச்சபை சாட்சிகளை அழைக்கும் அறிவிப்பு பகிரங்கப்படுத்தப் பட்டது. இது ஐநா போர்குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது. ஒரு வலிமையான துணையுடனேயே இலங்கையால் இதைச் சாதிக்க முடியும். இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகிறதா? இலங்கயில் செயற்பட்ட ராஜீவ் காந்தியின் கொலைப் படையில் செயற்பட்ட சித்தார்த் சட்டர்ஜீயும் விஜய் நம்பியாரும்( கொலை வெறிப்படையில் செயற்பட்ட சதீஷ் நம்பியாரின் சகோதரர்.

கூட்டி வைத்த "மல்லு ஆண்டி"
இலங்கை அதிபர் ராஜபக்ச டெல்லியில் நடந்த பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமர்த்தப் பட்டதில் ஒரு மல்லு ஆண்டி சம்பந்தப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளிவிட்டு இந்தியக் கேவலத்தை அம்பலப் படுத்தியது.

இலண்டனில் ஜீ எல் பீரிஸ்
இலங்கை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தந்திரோபாயக் கற்கைகான பன்னாட்டு நிலையத்தில் (International Institute of Strategic Studies (IISS) in London) வந்து இலங்கை பற்றி கருத்துரைக்க களம் அமைத்துக் கொடுக்கப் பட்டது. ராஜபக்ச அரசின் அமைச்சர் ஒருவர் முதல் முறையாக பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டதும் கவனிக்கப் படவேண்டியது. இதன் பின்னணியில் ஒரு வலுவான நாடு இலங்கைக்கு உதவி இருக்க வேண்டும். இதே வேளை இலங்கையின் பிரச்சாரகர் ஒருவருக்கு இந்திய ஆதரவு தமிழ வானொலி ஒன்று களம் அமைத்துக் கொடுத்து ஒரு நீண்ட நேர பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பன்னாட்டு அரங்கில் இலங்கையின் மதிப்பை உயர்த்தும் பல நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று நாம் எதிர் பார்க்கலாம். மேற்கு நாடுகள் நாக்கைத் தொங்கப் போடும் ஒரு அம்சம் இந்தியாவிடம் உண்டு. மேற்கு நாட்டு வர்த்தகர்களுக்கு மத்திய தர வர்க்கத்தினரை மிகவும் பிடிக்கும். அவர்களிடம்தான் தமது பொருட்களை பெருமளவிலும் இலகுவாகவும் சந்தைப் படுத்த முடியும். இந்திய மத்தியதர வர்க்கம் பெரிதும் மேற்குநாட்டு மோகம் கொண்டது. இந்திய மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அவுஸ்திரேலிய மொத்த மக்கள் தொகையினரிலும் பார்க்க அதிகம்.3 comments:

Anonymous said...

இந்தியாவின் கேவலத்தனம் முறையாகப் பகிரங்கப்படுத்தப் பட்டுள்ளது. இந்தியா என்ற ஒரு கேவலமான நாடு இருக்கும்வரை தமிழன் நிம்மதியாக இருக்க முடியாது

Anand said...

அருமையான பதிவு

Anonymous said...

ஒரு காலத்தில் ஈழத்தமிழினம் இந்தியாவினால் ஈழத்திற்கு ஆதரவு கிட்டும் என்று கனவுகண்டனர். அக் கனவை இந்தியாவின் இன்றைய கொலைவெறி அரசியல் வாதிகள் சிதறடித்து விட்டனர். இனியும் இந்தியா என்றோரு நாடு இருநதால் தமிழினம் மெல்ல மெல்ல அழிவை நோக்கியே செல்லும். சிதறட்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...