Monday, 30 August 2010

பத்மநாதன் தமிழர்களை பௌத்தத்திற்கு மாற்றுவாரா?

பத்மநாதன் கொழும்பில் இருந்து வெளிவரும் Daily Mirror பத்திரிகைக்கு கனடாவில் வசிக்கும் டி. பி. எஸ். ஜெயராஜ் என்பவருக்கு தொடர்ந்து நான்கு வாரங்களாகப் பேட்டியளித்துள்ளார்.

பத்மநாதனின் பேட்டி மிக மிகக் கவனமெடுத்து துல்லியமாகத் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என்பது அவர் பேட்டியில் கூறியவற்றில் இருந்து தெரிகிறது.

இப்பேட்டி ஆங்கிலத்திலேயே செய்யப்பட்டது. கொழும்பில் பல சிறந்த நிருபர்கள் இருந்தும் இப் பேட்டிகாண தமிழ்த்தேசியத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்வதில் வல்லவரானரும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்றவருமான டி. பி. எஸ். ஜெயராஜ் தெரிவு செய்யப்பட்டமை இதன் உள்நோக்கத்தைப் புலப்படுத்துகிறது. இவர் தமிழ்த் தேசியத்து எதிராக சேறு பூசுவதற்கு சென்னையில் இருந்து வெளிவரும் பார்ப்பன சஞ்சிகையான Frontline உடனும் இணைந்து செயற்பட்டவர்.

இப்போது உலகெங்கும் வாழும் தமிழர்கள் இலங்கை பற்றி உடன் செய்திகளை அறிவதற்க்கு கொழும்பில் இருந்து வெளிவரும் Daily Mirror இன் இணையத் தளத்தை பெரிதும் நம்புகிறார்கள். ஒரு சில தமிழ் இணையத் தளங்கள் தமது செய்திகளுக்கு Daily Mirrorஐயெ பெரிதும் நம்பி இருக்கின்றன. Daily Mirror வெளிவரும் சூடான செய்திகளை சில நிமிடங்களில் அவை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொள்ளும். Daily Mirror ஒரு இலங்கை அரசின் துதிபாடும் பத்திரிகை அல்ல என்றாலும் அது இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலியுறுத்தும் ஒரு பேரினவாதப் பத்திரிகை. FP என் அழைக்கப்படும் தந்தை செல்வாவின் Federal Partyஐ Foolish Party, Fickle Party என்றும் பல தமிழ்த் தலைவர்களை கேவலமாகச் சித்தரித்து வரும் பத்திரிகை Daily Mirror ஆகும். பத்மநாதனின் பேட்டி உலகெங்கும் வாழும் தமிழர்களைக் குறிவைத்தது. அதற்க்காகவே Daily Mirror பத்திரிகை அவரது பேட்டி வெளிவரத் தெரிவு செய்யப்பட்டது.

பாடகர் சாந்தன் உயிருடன் உள்ளார்
விடுதலைப் புலிகளின் பாடகர்களுள் பிரபலமானவரான சாந்தன் (எனக்கு மிகவும் பிடித்த பாடகர்) என்பவர் உயிருடன் உள்ளார் என்று பத்மநாதனின் பேட்டியில் கூறியுள்ளார். அவரை இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும்

பணிஸ் மாமாவாக மாறிய பத்மநாதனின் NERDOஇன் சாதனை
பத்மநாதன் வடகிழக்கு புரமைப்பு அபிவிருத்திச் சபை என்று ஒன்றை அமைத்துள்ளார். அது இதுவரை சாதித்தது தேர்வுகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஒரு தேநீரும் பணிஸும் 28 நாட்களுக்கு வழங்கியது என்று பத்மநாதன் பெருமையுடன் சொல்கிறார்.

பத்மநாதன் தனது பேட்டியை இப்படி முடித்தார்:

முதலாவது, எனது தமிழ் உறவுகளுக்கு நான் சொல்வது இதுதான்... போர் முடிந்துவிட்டது. பிரபாகரன் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் எம்மோடு இல்லை. தமிழ் ஈழம் ஒரு தோற்றுப்போன இலட்சியம். ஆயுதப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்னும் பொறுப்பில்லாதவர்கள் கூற்றை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். தயவு செய்து மோதல் மனப்பாங்கை விட்டொழித்து, உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமும் வீணான அலங்காரப்பேச்சுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இலங்கைத் தமிழர்கள் ஏனையோருடன் இணைந்து செழிப்புடனும் ஒத்திசைவுடனும் வாழ உதவுங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு இணக்கப்பாடும் ஒத்துழைப்பும்தான் தேவை. மோதலும் முரண்பாடும் தேவையில்லை

இரண்டாவது செய்தி... எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.. சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துபோன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.. யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக இலங்கையர்கள் எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து, சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்.
பத்மநாதன் பேட்டியின் நோக்கங்கள்:

  • பிரபாகரன் இறந்து விட்டார் என்று பிரகடனப் படுத்துவது.
  • கோத்தபாய ராஜபக்ச ஒரு கண்ணியவான என்று பிரகடனப்படுத்துவது.
  • புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் இருந்து பணம் கறந்து அதை இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை பராமரிக்கப் பயன்படுத்துவது.
  • தமிழர்களின் போராட்டம் தோற்றுப் போன ஒன்று என்று பிரகடனப் படுத்துவது.
  • தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடாது என்று வலியுறுத்துவது.
  • சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தமிழர்கள் ஏற்க வேண்டும் என்று பிரகடனப் படுத்துவது.
  • சகல தமிழ் இன உணர்வாளர்கள் மீதும் சேறு பூசுவது.
  • இலங்கை இனக் கொலையில் இந்தியாவின் பங்கை மறைத்து அது தமிழர்களுக்கு இறுதியில் உதவ முன்வந்தது என்று பொய்ப்பிரச்சாரம் செய்வது.
  • கருணாநிதிக்கு தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக ஒரு துருப்புச் சீட்டுக் கொடுப்பது.

பத்மநாதன் சொல்லாமல் விட்டது
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு. பத்மநாதன் இனிவரும் காலங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லை என்றும் கூறலாம். இலங்கை அரசால் "கைது" செய்யப்பட்டபின் ஒரு வருடமாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.

பிரபாகரனின் செல்வாக்கை இலங்கை அரசு உணர்ந்துள்ளது
விடுதலைப் புலிகளைப் பற்றியும் அதில் எஞ்சி உள்ளவர்களைப் பற்றியும் பல அவதூறுகளைத் தனது பேட்டியில் தெரிவித்தார் பத்மநாதன். ஆனால் பத்மநாதன் தனது பேட்டியில் எங்கும் பிரபாகரனுக்கு எதிராக ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இது பிரபாகரனுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு இருக்கிறது என்று இலங்கை அரசு உணர்ந்துள்ளது என்று புலப்படுகிறது.

பத்மநாதன் பௌத்தராக மாறி தமிழர்களையும் மாற்றுவாரா?
இத் தலைப்பைப் பார்த்தவுடன் சிலர் தமிழர்கள் இந்துக்களாக இருந்து என்னத்தை கிழித்தார்கள் என்று சொல்வது கேட்கிறது. ஒரு காலத்தில் சில பார்ப்பன ஊடகங்கள் ஈழத் தமிழர்கள் மலையாளிகள் என்று ஆராய்ச்சி செய்தார்கள். பின்பு பல தமிழின உணர்வாளர்கள் அதன் அபத்தத்தை நிரூபித்தார்கள். இப்போது ஈழத் தமிழர்கள் சிங்கள பௌத்தர்கள் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். பத்மநாதன் பௌத்த மதத்தை உயர்த்தி பேட்டியளித்துள்ளார். அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் பௌத்த மதத்திற்கு மாறினால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நிலை தோன்றலாம். பத்மநாதனுக்கு மொட்டை அடித்தாயிற்று. காவி உடை தரிக்க வேண்டியதுதான் மிச்சம்.

4 comments:

Harish.M said...

பத்மநாபன் ஒரு பச்சை துரோகி. இது வரை கைதான பல புலி தலைவர்கள் கொல்லபட்டிருக்கிரர்கள்.. கைதானவர்கள் பற்றி எந்த விபரமும் இல்லை. ஆனால் இந்த கே.பி (எ) பத்மநாபன் மட்டும் தான்,சுதந்திரமாக இப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறான். இவனது இத்தகைய கபட நாடகங்களை நம்பும் அளவிற்கு நமக்கு அறிவு மங்கி விடவில்லை.

அணைத்து பிரச்சினைகளுக்கும் பௌத்த மதத்தை பரப்பி தமிழர்களை,இந்துக்களை ஒடுக்கு வேண்டும் என்ற நோக்கமே காரணம். இன துரோகிகள் இந்தியாவில் மாநில அளவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருப்பது மிகவும் கேவலமான விஷயம் தான்.

Harish.M said...

//பார்ப்பன சஞ்சிகையான Frontline

தங்களது இந்த வரிகளை படிக்கும் பொழுது பார்ப்பனர் என்றால் ஈழ எதிர்ப்பாளர்கள்,தமிழர் எதிர்ப்பாளர்கள் என்பது போன்ற ஒரு எண்ணத்தை உணர முடிகிறது.சில பார்ப்பனர்கள்,பார்ப்பனரால் நிறுவப்படும் பத்திரிக்கைகள் தமிழர்களுக்கு எதிராக செயல் பட்டிருக்கலாம். ஆனால் பார்ப்பனரால் நிறுவப்படும் வேறு சில பத்திரிக்கைகள் ஈழ போராட்டத்தை ஆதரிக்கின்றன. பல பார்ப்பனர்களும் இவ்விஷயத்தில் ஈழத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். ஆகையால் தங்களின் இது போன்ற வரிகளை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்(just a request).

Anonymous said...

சோ இராமசாமி, இந்து ராம், சுப்பிரமணிய சுவாமி மணிசங்கர ஐயர், இப்படி தமிழின விரோதிகள் கொண்ட நீண்டபட்டியலே உண்டு. இவாளெல்லாம் யார்?

Harish.M said...

Mr.Anonymous- ஜூனியர் விகடன்,ஆனந்த விகடன்,தினமணி இந்த பத்திரிக்கைகள் எல்லாம் விடுதலை புலிகளை ஆதரித்து தான் எழுதுகின்றன.. இவையும் பார்ப்பனரால் தான் நிறுவப்படுகிறது.. புலி ஆதரவு தெரிவித்த சீமானை கைது செய்தது பார்ப்பன முதல்வரின் அரசல்ல,பார்ப்பனரை வசைபாடும் முதல்வரின் அரசு தான்..

சோ.ராமசாமி மட்டுமல்ல,பல புலி எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.. வாழப்பாடி ராமமுர்த்தி(அமரர்), ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவன் போன்ற பலரும் இருக்கிறார்களே. இவர்களும் பார்ப்பனர்கள் தானா? ஒரு சமூகத்தை விமர்சிப்பது அநாகரிகமான செயல்..
இவை என் அறிவுக்கு எட்டியவை,இவற்றை ஏற்றுக்கொள்ள தங்களின் பகுத்தறிவு மறுக்கலாம்.. அதைப்பற்றி கவலை இல்லை.. இது தான் என் கருத்து

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...