Saturday, 28 August 2010

பத்மநாதன் தொடர்கிறார். அவர்மீது சந்தேகங்களும் தொடர்கின்றன.


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே. பத்மநாதன் கொழும்பின் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தமிழ்த்தேசியத்தின் விரோதியாகக் கருதப்படும் டி. பி. எஸ். ஜெயராஜிற்கு தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். கடந்த மூன்று வாரங்களாக இலங்கை அரசுடன் உடன்படு நிலையில் இல்லாத தமிழ்த் தேசியவாத ஆதரவாளர்கள் அனைவர்மீதும் சேறு பூசியும் கோத்தபாய ராஜபக்சவைக் கண்ணியவான் என்றும் விமர்சித்தும் வந்த பத்மநாதன் நாலாவது வாரமாக தனது பேட்டியைத் தொடர்கிறார்.

  • பேட்டி: பத்மநாதனுக்கும் இலங்கைக்கும் உங்களுக்கு ஏதாவது இரகசிய ஒப்பந்தம்(shady deal) ஏற்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் பத்மநாதன் சொல்கிறார் இரகசிய ஒப்பந்தம் ஏதும் இல்லை ஒரு உண்மையான புரிந்து கொள்ளல் மட்டுமே தனக்கும் இலங்கைக்கும் இடையில் என்கிறார். அது மட்டுமல்ல தனக்கும் இலங்கைக்கும் இடையில் பொது நோக்கங்கள் உள்ளது என்கிறார். அதனால் தானும் இலங்கை அரசும் அப்போது நோக்கங்களுக்காக ஒன்று பட்டு வேலை செய்கிறோம் என்கிறார் பத்மநாதன்.
சந்தேகம்: இலங்கை சிங்கள நாடு. தமிழர்களுக்கு இங்கு ஒரு உரிமைகளும் இல்லை. சிங்களவர்கள் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு வாழவேண்டும் என்பவர்களுடன் எப்படி உங்களுக்கு பொது நோக்கு ஏற்பட்டது. போரில் வெற்றி கொள்ளும் சிங்களப் படைகள் அதற்கு பரிசாக தமிழ் பெண்களைச் சுவைக்கலாம் என்று கூறியவர்களுடன் உங்களுக்கு எப்படி உடன்பாடு ஏற்பட்டது?

  • பேட்டி: பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்று பத்மநாதன் கூறுகிறார்.
சந்தேகம்: ஒருவருடமாக நீங்கள் கண்ணியவானாக விமர்சித்த கோத்தபாய ராஜபக்சவுடன் நல்ல உறவைப் பேணிவருகிறீர்கள். ஒரு பொது நோக்கில் சிங்கள் அரசுடன் வேலை செய்கின்றீர்கள். தடுப்புக் காவலில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகளுக்காகத்தான் நீங்கள் இப்போது செயற்படுவதாகக் கூறுகிறீர்கள். இப்படிப் பட்ட உங்களுக்கு இன்னும் கூட எத்தனை முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்று தெரியாமல் இருக்கிறது மிகவும் வியப்பாக இருக்கிறது. காவலில் இருக்கும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து கொல்லப் பட்டுக் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகத்தை இது எழுப்புகிறது. இதனால் தான் இதுவரை காவலில் உள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்ற தகவலை இலங்கை அரசு அதிகார பூர்வமாக வெளிவரவில்லை.

  • பேட்டி: இலங்கை அரசு காவலில் உள்ள போராளிகளினதும் பாதிக்கப் பட்டமக்களினது மறுவாழ்விற்காக பனனாட்டுத் தொண்டு நிறுவனங்களையோ அல்லது தமிழ் கட்சிகளையோ ஈடுபடுத்தாமல் ஏன் உங்களை ஈடுபடுத்துகிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த பத்மநாதன் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு கடந்த கால அனுபவங்கள் அடிப்படையில் நம்புவதில்லை என்றும் முன்பு சில தமிழ்க் கட்சிகள் தடுத்து வைத்திருப்பவர்களை சந்திக்க அனுமதித்ததை தவறாகப் பயன்படுத்தின என்றும் கூறினார்.
சந்தேகம்: இதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் என்று பிரகடனப் படுத்திய உங்களை கைது செய்து கொண்டுவந்தார்களா? பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் தமது மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டுவந்துவிடும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள். உங்களை வைத்து மொத்தத் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மீது சேறை வாரி இறைக்கும் பணியை இலங்கை அரசு செய்கிறதா? தமிழ் கட்சிகள் தடுத்து வைத்திருப்போரை தவறாக நடாத்தியது எங்கே, எப்போது, எப்படி நடந்தது?

(சந்தேகங்கள் தொடரும்)

1 comment:

Yoga.s said...

கடந்த வாரப் பேட்டியில் கே.பி வை.கோ. மீது சேறு பூசியிருந்தார்!போர்? நிறுத்தத்துக்கு தடங்கலை ஏற்படுத்தினார் என்பது அது.இதனைப் பார்த்த க(கொ)லைஞர் ஆகா துருப்புச் சீட்டு கிடைத்து விட்டது என்ற புளகாங்கிதத்தில் யாரிடம், எதை, எப்போது,எப்படிக் கேட்பது என்று தெரியாமல் வேலிக்கு ஓணான் சாட்சிக் கதை கேட்கிறார்!சிதம்பரம் பக்கத்தில் தானே இருக்கிறார்!அவர் உண்மை பேசுபவராயிற்றே?ஏன் அவரிடம் கேட்கவில்லை?அவரும் போர்??? நிறுத்தத்துக்கு முயன்றவராயிற்றே?????

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...