Thursday, 12 August 2010

பிரபாகரன் பத்மநாதனை சிறைபிடிக்க முயன்றாரா?


நேற்றைய பதிவின் தொடர்ச்சி - நேற்றைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர்
கே பத்மநாதனின் பேட்டி தொடர்பான சந்தேகங்கள்
.

  • பத்மநாதன்: ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். "உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது" என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம்ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.


சந்தேகம்: நீங்கள் தமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக நடக்கிறீர்கள் என்றுணர்ந்து உங்களுக்குத் தெரியாமல் பலவற்றை விடுதலைப் புலிகள் உங்களுக்கு மறைத்தார்களா? விடுதலைப் புலிகளைப் பற்றி உங்களிலும் பார்க்க இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு அதிகம் தெரிந்திருந்தது என்று ஏன் பெருமையுடன் சொல்கிறீர்கள்? இதனால் விடுதலைப் புலிகள் பலவீனமாகவும் அவர்களுக்குள் பல புல்லுருவிகள் இருந்தார்கள் என்றும் சொல்ல முயல்கிறீர்களா? விடுதலைப் புலிகளைப் பற்றி அவதூறான பிரச்சாரம் ஏன்? அவர்களை இப்போது நீங்கள்தான் வழிநடத்தப் போவதாகக் கூறினீர்களே?

  • பத்மநாதன்: 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.....2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்' ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை....எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு (பிரபாகரனுக்கு) சினமூட்டியது.

சந்தேகம்: பிரபாகரன் கே பத்மநாதனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கைது செய்து விசாரிக்க முயன்றாரா? அதற்காகத்தான் பத்மநாதனை வன்னி வரும்படி அழைத்தாரா? இதை உணர்ந்து தான் பத்மநதன் வன்னி செல்லவில்லையா?

  • பத்மநாதன்: அது(பத்மநாதனுக்கு எதிரான) ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை. தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.

சந்தேகம்: கே பத்மநாதன் இனி தமது விடுதலை இயக்கத்திற்கு சரிவர மாட்டார் என அப்போதே சகலரும் உணர்ந்து விட்டார்களா? உங்களிடமிருந்து படிப்படியாக தமது பன்னாட்டு கட்டமைப்பை மீட்டெடுக்கத்தான் இந்த நகர்த்தல்கள் மேற்கொள்ளப் பட்டதா?

  • பத்மநாதன்: இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.

சந்தேகம்: ராஜபக்சேக்கள் பலதடவை சொல்லிவிட்டார்கள் தாங்கள் கொடுப்பதைப் பெற்று அதன் மூலம் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று. இந்நிலையில் உங்களால் எதை உங்களது மக்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்திய விற்பன்னர்(?) கேர்னல் ஹரிகரன் தமிழர்களுக்கு Hobson choice மட்டுமே எஞ்சியுள்ளது என்று சொல்லிவிட்டார். இந்நிலையில் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்.

(சந்தேகங்கள் இன்னும் வரும்)

7 comments:

Anonymous said...

இப்படியெல்லாம் சந்தேகம் தெரிவிக்கும் அறிவாளியே காஸ்ரோவிடமிருந்து தலைவர் சர்வதேசத்தொடர்பாளர் பொறுப்பை மீண்டும் பறித்து பத்மநாதனிடம் கொடுத்தது உங்கள் அறிவுக்கு இன்னமும் எட்டவே இல்லையா??அதை அறிய வேண்டுமென்றால் தமிழோசையுடன் தொடர்பு கொண்டு நடேசன்,புலித்தேவனின் இறுதிப்பேட்டியை வாங்கி கேளுங்கள்.உங்களின் சந்தேகங்களின் படி தலைவரே துரோகியானாலும் ஆச்சரியமில்லை.

Anonymous said...

Dam shittt... you genius ...don't you have anything else to do in your life. you guys are fukedUP !! don't you know that. . i am tamilan too. i born in srilanka and that's my country, that's my mother land. I give my hart to do something better for my country. But you guys already done a damage to my country. for 30 years what have you achieve other than putting Tamils in to terrorist list ha..? and now while your siblings are swimming in the sea for a life you guys are blaming on each other...!!!. Now we wipe off the cancer form my country. still you want to do this shiiit. please get a life.. or leave us alone.

Anonymous said...

கேபி விசுவாசியே கேளும்

//இப்படியெல்லாம் சந்தேகம் தெரிவிக்கும் அறிவாளியே காஸ்ரோவிடமிருந்து தலைவர் //சர்வதேசத்தொடர்பாளர் பொறுப்பை மீண்டும் பறித்து பத்மநாதனிடம் கொடுத்தது உங்கள் அறிவுக்கு இன்னமும் எட்டவே இல்லையா??///

ஒரு தொடர்பாளர் பதவி மட்டுமே !இறுதி முடிவு கூட எடுக்க முடியாத ஒரு பதவி தான் அது !

அதை கேபி ஏதோ தலைவருக்கு அடுத்த பதவியாக சித்தரித்து தலைமைப் பொறுப்பை எடுக்க முற்பட்ட சதியும் அம்பலமானது அறிவீரோ !

கஸ்ரோவின் பொறுப்பை பறிக்கவும் இல்லை அதை கேபியிடம் கொடுக்கவும் இல்லை !

கஸ்ரோவின் கீழ் இருந்த பொறுப்புக்கள் கொடுக்கப்படவில்லை

அதனால் தான் இன்னும் கேபியால் எதனையும் பெரிதாகக் காட்டிக் -கூட்டிக் கொடுக்கமுடியாமல் இருக்கின்றது

Anonymous said...

கேபி விசுவாசியே

இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் நடேசன் - ஜெகத் கஸ்பார் கனிமொழி சுப வீ போன்றோருடன் தொடர்பில் இருந்தது ஏன் ?

அதுவே போதும் கேபியை முழுமையாக நம்பாததற்கு !!!!

கேபி ஒரு வகையில் பார்த்தால் கேபியின் கூட்டு சர்வதேச வல்லரசுகளின் வலையில் புலிகள் வீழ்ந்தார்களா ? அல்லது புலிகளின் வலையில் கேபி வீழ்ந்தாரா ? காலம் தான் பதில் சொல்லவேண்டும்

கேபி இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதைப் பார்த்தாலே தெரிகின்றதே அவர் என்ன செய்திருப்பார் என்று !!!

எல்லாளன் said...

''நான்தான் தலைவர். நாடுகடந்த தமிழீழத்தின் மூலமும் நானே..

அதைமுடிக்கப்போவதும்நானே.

ஆயுதப்போராட்டத்தை அழித்தும் நானே.

கோத்தாவிடம் சரணடைந்ததும் நானே.

13 கப்பலுக்கு முடிவுரை எழுதியதும் நானே.

நடேசனை சரணடையச் சொன்னதும் நானே.

எத்தனை நாளைக்குத்தான், இன்டர்போல் வேட்டையிலிருந்துஒளிந்து வாழ்வது. சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல் எண்ட பழமொழி எவ்வளவு அற்புதமானது.

பொது மன்னிப்பின் மூலம், இயல்பு வாழ்க்கை எனக்கு கிடைத்து விடும். விடுதலையாவது.. மண்ணாங்கட்டியாவது. சரணாகதிச்சுகம் இவங்களுக்கு புரியாது. முன்னாள் துரோகி டக்லஸ் , பழைய நண்பர் கருணா போன்றோர் ,அறுசுவை உண்டு, கும்மாளமடித்து ,கோத்தாவின் அணைப்பில் சுகமாக வாழுதுகள். எனக்கென விசரே. போராளிகளின் விடுதலைக்காக போராடுறன் எண்டு சொன்னால்தானே, புலத்துப் புண்ணாக்குகள் பேசாமல் இருக்கும், சிலதுகள் காசை அள்ளித்தரும்.

காட்டிகொடுத்தும் பணம் சம்பாதிக்கலாம். அவலத்தை வைத்தும் காசு பார்க்கலாம். கருணா காலை வெட்ட, நான் கழுத்தை அறுத்துவிட்டன் பாருங்கோ. எனது புலத்து பினாமிகள் , நேர்மைக் கொழுந்துகள். நான் சேர்த்த சொத்துக்கள வித்துக்கொண்டு வந்து என்னிடமே தருகுதுகள்.

சிலபேர் கொஞ்சம் அடிச்சிருப்பினம். பரவாயில்லை. இவங்கள் மூலமாத்தானே இனி புலத்துப் புண்ணாக்குகளிடமிருந்து வறுக வேண்டும். இப்ப சங்கம் ஒண்டு அமைச்சிருக்கிரன். வியாபாரம் எப்படி போகுதெண்டு பார்ப்பம். சரிவராவிட்டால், பசிலிட்ட அல்லது கோத்தா அண்ணனிட்ட கேட்டு அரசியலில குத்திப்பம்.

மேர்வின் ஜக்கடையாவே , அரசியல் பண்ணும் பொது என்னால முடியாதே. எடுபிடி பிள்ளையானைப்போல, இடைக்கிடை அறிக்கைவிட்டால் போதும். அதை எழுதிதரத்தானே நோர்வேயிலையும், பிரான்சிலையும் ஆக்கள் இருக்கினம். காசு கொடுத்தா எழுத சுவிசிலையும் ஒருவர் இரிக்காராம். பணம் தான் கடவுள். கோத்தாவின் பொன்மொழிகளில இது மிக பெறுமதியான தத்துவம்.

வெகுவிரைவில 'அண்ணன் கோத்தபாயாவின் சிந்தனை' எண்ட சிவப்புப் புத்தகமொன்றை வெளியிடப்போரன். பிரபாவிட 50 வது பிறந்த நாளுக்கு 'விடுதளைபேரொளி' எண்ட புத்தகம் அடிச்ச சில பேரிட்ட கேட்கலாமெண்டு இருக்கிறன். அவையல்ல சிலர், மலேசியா காலத்தில இருந்து என்னோட நல்ல நெருக்கம். காசை எறிஞ்சா வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வருவாங்கள்.

இந்த விடுதலை விண்ணானங்களை விட்டுப்போட்டு, மகிந்தாவின்ற காலில வந்து விழுங்கோ. அவர் நம்பினவர கைவிடமாட்டார். டக்கையும், கருவையும் பாருங்கோ. .. எவ்வளவு வடிவா வச்சிருக்கிறார் மகிந்த அண்ணன். சொல்லு மாறமாட்டார். என்னை நம்புங்கோ. பிரபாகரன நான் கைவிட்ட மாதிரி, உங்களை நான் கைவிடமாட்டன்.

மாவீரர் மீது சத்தியம். முதலில ரத்த சொந்தங்கள வெல்ல வேண்டும். பிறகு ஊரை வெல்ல வேண்டும். அப்புறம் நாட்டை வெல்லலாம். செத்ததுகளுக்காக, போர்க்குற்ற விசாரணை அது இது எண்டு நேரத்த வீணடிக்காமல் என்னிட்ட வாருங்கோ.

எந்த மூனும், மகிந்த எண்ட சூரியப்புதல்வன நெருங்க முடியாது.. பாண் கீ மூனைத்தான் சொல்றன். இனி எண்ட சூரியப்புதல்வன் 'மஹிந்தாதான். சோதியில கலக்க ஓடிவாருங்கோ என் உடன் பிறப்புக்களே.. '' என்னோட சேராட்டி நான் உண்ணாவிரதமிருப்பன் கண்டியளோ.

-காலக் கண்ணாடி

ஜோதிஜி said...

எல்லாளன் நீங்கள் யார் எங்கு இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் எழுதியுள்ளதைப் படித்துவிட்டு முதன் முதலான என்னை அறியாமல் கண்ணீர் நீர் வழிகின்றது.

சத்தியம் உண்மை.

Anonymous said...

lol..you guys are jokers of the current world

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...