Sunday, 27 June 2010

ஐநா ஆலோசனைச் சபை: ரஷ்யா பாய்ந்ததின் பின்னணி என்ன?


மாக்சிசம் என்று புரட்சி செய்து லெனினிசமாகி இஸ்டாலினிசமாகத் திரிபுபட்டு இப்போது மபியாஇசத்தில் மாட்டுப்பட்டிருக்கும் ரஷ்யாவிற்கு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு நாளாந்தம் அறிக்கை விடுவது வேலை. ஆனால் இலங்கை தொடர்பாக அறிக்கை விடுவது அதன் வழமையல்ல. லெனின் தனது ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் என்னும் நூலில் சொன்னார் முதலாளிகள் உலகத்தை தங்களுக்குள் பிராந்திய ரீதியாகப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று. ரஷ்யாவைப் பொறுத்தவரை இலங்கை இந்தியாவின் பங்கிற்கு உட்பட்டது. இந்த அடிப்படையிலேயே ஐநா மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானதை இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றியபோது தென் ஆபிரிக்கா இந்தியாவிற்கு இசைவாக வாக்களித்தது.

இலங்கையில் நடந்த இனக்கொலையை இனக்கொலையாக ஏற்றுக் கொள்ளாமல் குறைந்த அளவு ஒரு போர் குற்றம் நடந்ததாக சர்வ தேச மன்னிப்புச் சபை, சர்வ தேச நெருக்கடிக் குழு, சர்வ தேச மனித உரிமைக் கழகம் ஆகியவை கூறி அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒரு வருடமாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான சாட்சியங்களும் முன் வைக்கப்பட்டன. இந்த சாட்சியங்களை சீன நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலங்கை அழிக்க முயல்வதாகவும் செய்திகள் வந்தன. சனல்-4 தொலைக்காட்சியும் சில ஆதாரங்களை முன்வைத்தது. அது போலியானது என இலங்கை அரசும் இல்லை அது போலியானது அல்ல உண்மையானது என்று ஐநா விசாரணையும் முடிபுகளை வெளிவிட்டன.

சர்வ தேச மன்னிப்புச் சபை, சர்வ தேச நெருக்கடிக் குழு, சர்வ தேச மனித உரிமைக் கழகம் ஆகியவற்றின் வற்புறுத்தல் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ம் திகதி இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடார்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழு அமைக்கப் படவிருப்பதாகத் தெரிவித்தார். மூன்று மாதகாலமாக அது இழுத்தடிக்கப் பட்டது. ஐநாவைச் சேர்ந்த லியோம் பொக்ஸ் அவர்கள் இலங்கை சென்று பேச்சு வார்த்தை நடாத்திய பின்னர் நிபுணர் குழு அமைக்கப் படும் என்று சொல்லப் பட்டது. அவர் இலங்கை வந்தவுடன் மேலும் பலர் இலங்கை வந்தனர். ஜப்பானின் யசூசு அகாசி வந்து இலங்கை அரசின் பேச்சாளர் போல் பேசினார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புத் தூதுவர் ஒருவர் இலங்கை வந்தார். மௌனித்திருந்த எரிக் சொல்ஹெய்ம் வாய்திறந்தார். இந்தியா சும்மா இருக்கவில்லை நடிகர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
ஐநா செயலர் அறிவித்தது அலோசனைக் குழுவே விசாரணைக் குழு அல்ல. இருந்தும் இலங்கை துள்ளிக் குதித்தது. இலங்கை எதிர் கட்சிகள் முழங்கின. புலம் பெயர் தமிழர்களிடம் இலங்கை தோற்று விட்டது என்றன சிங்கள இனவாதக் குழுக்கள். இலங்கை ஆலோசனைக் குழு அமைத்ததைக் கண்டித்தது. இந்தியா மௌனமாக இருந்தது. அமெரிக்கா வரவேற்றது. ரஷ்யக் கரடி ஒரு பாய்ச்சல் பாய்ந்தது. விரைந்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.

  • இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்காக இலங்கை அரசு குழுவொன்றை அமைத்துள்ள நிலையில் இவ்வாறான குழுவொன்று பான் கீ மூனுக்கு தேவையற்றது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இலங்கை தனது நாட்டு இறைமைக்குள் ஐநா தலையிடமுடியாது என்று ஒரு பெரும் கூச்சலிட்டது. இலங்கை இந்த ஆலோசனைக் குழுவால் பெரிதும் ஆடிப் போய்விட்டது என்பது அது விடும் அறிக்கைகளில் இருந்து தெரிய வருகிறது. இலங்கைக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. அது ரஷ்யாவிடம் இருந்து விரைந்து வந்தது.

2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரித்தானிய சனல்-4 தொலைகாட்சி கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டதாக செய்தி வந்தவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். சனல்-4 தொலைகாட்சியின் படுகொலைகள் சம்பந்தமாக தாம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்தார். இன்று வரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அந்த காணொளியை கண்ட இந்தியத் தரப்பு ஏன் அதிர்ச்சியடந்தது? இலங்கை படையுடன் இந்திய்ப் படைகளும் இணைந்து செயற்பட்டதாலா? அதற்கான காணொளி ஆதாரங்கள் இருக்கலாம் என்று இந்தியா அதிர்ச்சியடைந்ததா? இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான விசாரணை வரும் பட்சத்தில் அதில் இந்தியப் பங்களிப்பு வெளிவரும் என்று பயந்து இந்தியா ரஷ்சியாவூடாக விசாரணைக்கு முட்டுக் கட்டு போடுகிறதா?

இலங்கையில் நடக்கும் வல்லாதிக்க நாடுகளின் போட்டியில் இந்தியாவிற்குப் பின்னால் தான் இலங்கை நிற்கும். 1987இல் இலங்கையின் "இறைமையில்" இந்தியா தலையிட்டபோது வாய் மூடி இருந்த ரஷ்சியாக் கரடி இந்த வெறும் ஆலோசனைக் குழுவிற்கு மட்டும் ஏன் இந்தப் பாய்ச்சல் பாய்கிறது?

Times of India விற்கு ராஜபக்சவிற்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே அளித்த பேட்டியில் போர் குற்ற விசாரணை தொடர்பாகக் கேட்டபோது
"Why should I worry about others? If India and neighbours are good with me, that is enough for me. நான் ஏன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படவேண்டும் இந்தியாவும் மற்ற நல்ல அயலவர்களும் என்னுடன் நல்லபடியாக இருக்கிறார்கள். அது எனக்கு போதும் என்றார். இரஷ்சியா தன்னுடன் இருப்பதாக அவர் கூறவில்லை. ரஷ்யாவின் கூற்றுக்கு அவர் நன்றி தெரிவிக்கவுமில்லை. இதிலிருந்து தெரிகிறது ரஷ்யாவின் பாய்ச்சலின் பின் யார் இருக்கிறார்கள் என்று.

1 comment:

Anonymous said...

All trouble for Tamils because of bloody India

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...