Saturday, 20 February 2010

தமிழத் தேசியக் கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலிலா?


இலங்கைத் தமிழர்களின் நண்பன் போல் நடித்து இந்தியா அவர்களைப் பலமுறை கால் வாரிவிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் போரில் பேரழிவைத் தடுக்க பல நாடுகள் எடுட்த முயற்ச்சி இந்தியாவின் சதியால் தடுத்து நிறுத்தப் பட்டது. இலங்கை அரசு ஆகஸ்ட் 2009இல் முடிக்க இருந்த போரை இந்தியா வற்புறுத்தி இந்தியப் பொதுத் தேர்தலுக்குமுன்( மே 2009)அப்பாவிகளின் உயிரிழப்புக்களைக் கருத்தில் கொள்ளாமல் இலங்கையும் இந்தியாவும் இலங்கையில் போரை முடித்தன. இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான துரோகம் இன்று நேற்கு ஆரம்பமானதல்ல.

இந்தியப் பிரதமர் ஜவகர்லால நேரு இலங்கையைக் கூட்டுச் சேரா நாடுகள் அணியில் இணையச் செய்ய முன்னாள் இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன் படி இலங்கையில் இருந்து தோட்டத் தொழில் செய்து கொண்டிருந்த பல இலட்சம் தமிழர்கள் வெளியேற்றப் பட்டனர். அதன் பிரதி உபகாரமாக இலங்கை அமெரிக்காவுடன் சேராமல் கூட்டுச் சேரா நாடுகளுடன் இணைந்து கொண்டது.
இலங்கை 1948இல் சுதந்திரமடைந்தபின் தமிழர்களின் இரு முக்கிய கட்சிகளான தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் இணைக்க தமிழ் காங்கிரசுத் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் முயன்ற போது அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் தோட்டத் தொழிலாளர் காங்கிரசுத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானிடம் நீ சிறுபான்மை இனமாகிய தமிழர்களுடன் சேராமல் பெரும்பான்மை இனமான சிங்களவர்களுடன் ஒத்துழை என்று பணித்தார். தொண்டமானும் அப்படியே செய்தார். அவருக்கு சிங்களவர்கள் கொடுத்தபரிசு தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தமையாகும். இது பற்றி நேருவிடம் தோட்டத் தொழிலாளர்கள் முறையிட்டபோது இது உள் நாட்டுப் பிரச்சனை இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டார். இது இந்தியா தமிழினத்திற்கு இந்தியா செய்த பெரும் துரோகம்.

இதன் பின் 1964இல் இந்தியா இலங்கையுடன் சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் சர்வதேச நியமங்களுக்கு எதிராக கைச்சாத்திட்டு 150,000 தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. இத்துடன் நின்றுவிடவில்லை இந்தியத் துரோகம்.

1980களின் ஆரம்பப்பகுதியில் இலங்கை வாழ் தமிழர்களிடை பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவற்றை சிங்களவர்களுடன் மோதவிட்டதுடன் அக்குழுக்களை ரோ அமைப்பின் சதி மூலம் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டது. இது தமிழ்த் தேசிய போராட்டத்தை பலவீனப் படுத்தவும் இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டுவடவும் செய்த சதி.

மாலைதீவில் தமிழ் ஆயுதக் குழு ஒன்று நடாத்திய தாக்குதல், ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் உட்பட பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையில் இன அழிப்புப் போர் 2008/09 போரை இந்தியா முன்நின்று நடாத்தியது. அப்போதே இலங்கைக்கு 500கோடி கைக்கூலியாக இந்தியப் பொதுத் தேர்தலுக்கு பின் தருவதாக இந்தியா இலங்கைக்கு வாக்குறுதி அளித்ததாக நம்பப்படுகிறது. போர் நடந்து கொண்டிருக்கும் போது இலங்கைய இந்தியா போர் நிறுத்தம் கேட்பதாக "பாவ்லா" காட்டிக் கொண்டிருந்தது. நாம் போர் நிறுத்தம் செய்யும் படி கேட்பது போல் கேட்கிறோம் நீ கொன்று குவி! பத்தாயிரம் ஆரியப் பேய்கள் வன்னியில் நின்று போரை முன்னெடுத்ததாம்.

இந்த சரித்திரப் பின்னணியை தமிழத் தேசியம் கூட்டமைப்பு நன்குணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அது பின் வருவனவற்றில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது:
  • தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களை ஓரம் கட்டுதல்.
  • இந்தியாவின் துரோகங்களை உணர்ந்து செயற்படும் தமிழின உணர்வாளர்களை ஓரம் கட்டுதல்.
  • வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புறக்கணித்து தமது அரசியல் நடவைக்கைகளை எடுத்துச் செல்லுதல்.
இவற்றைப் பார்க்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்கு எதிராக இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. தமிழ்த் தேசிய போராட்டம் புலம் பெயர்ந்த மக்கள் கையில் ஒப்படைப்பதாகவே போராளிகள் கடைசியாகத் தெரிவித்த கருத்து என்பதை கூட்டமைப்புக் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றித் தெரிந்து கொண்டுதான் அதன் கையில் ஒப்படைக்கவில்லையோ?

2 comments:

Anonymous said...

நீங்கள் தமிழ் தேசிய வாதிகள் என்று குரிபிடுவது யாரை? கிஷோர்? தங்கேஸ்வரி? கனகசபை? ஸ்ரீ கந்தா? வினோ? கனகரத்தினம்?

Anonymous said...

ஈழத்தின் வட,கிழக்குப் பகுதிகளிலேயே அலுவலகங்களைக் கொண்டிராத த.தே.கூட்டமைப்பு டெல்லியிலும்,கொழும்பிலும் அவற்றைத் திறக்கப் போவதாக அறிவித்திருப்பது எங்கோ இடிப்பது போல் இல்லை?முன்னாளில் வி.புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு பா.உ க்களான சிலருக்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படாதது நெருடலாக இருக்கிறது!வி.புலிகள் இல்லாதது?குளிர் விட்டுப் போய் விட்டதோ? நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை!புரிந்து கொண்டால் சரி!!(சம்பந்தப்பட்ட தரப்புக்கள்)ஒரு சிலர் தாயகம்,தேசியம்,தன்னாட்சி என்ற கொள்கையில் மாறுபடாமலிருக்கிறார்கள்.பெரும்பான்மையினருடன் இணந்து,ஒத்துப் போய் தான் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால் எதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று பெயர்?சிங்களவர் சார்பில் போட்டியிடும் ஏனைய வால் பிடி,கால் பிடி,எலும்பு பொறுக்கும் கூட்டத்துக்கே வாக்களித்து தெரிவு செய்து விடலாமே?ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று பாடினோம்.சுருதி சரி வரவில்லை!அது வேறு!இது வேறு பதிமூன்றாவது திருத்தத்துக்கே முகாரி ராகம் பாடுவோரை,அதற்குமப்பால் கொண்டு செல்ல என்ன செய்யலாமென்று யோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர பழி வாங்கல்,ஓரம் கட்டல்கள் கவைக்குதவாது!!!!!!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...