Friday, 22 January 2010

இலங்கைத் தேர்தல் நிலவரம் = குளறுபடிகள்இலங்கையில் இம் மாதம் 26-ம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தல் மிகவும் வன்முறை மிக்கதாகவும் மோசடிகள் நிறைந்ததாகவும் அமையவிருக்கிறது. குளறுபடியான் செய்திகளுக்கு பஞ்சமில்லை:

குளறுபடி - 1
இம்மாதம் 13-ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தியதாக தகவல் வந்தது. அவர்களை இந்தியா மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் படி வற்புறுத்தும் என்று எதிர்பார்ககப் பட்டது. தாம் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை இந்தியா ஆட்சேபிக்கவில்லை என்று தகவல் வந்தது. பொய்பிரச்சாரத்திற்கு பெயர்போன இலங்கையில் இது பற்றி வேறு விதமாக பேசப் படுகிறது. மஹிந்த தரப்பு ஒரு பொய்ச்செய்தியைப் பரவவிட்டுள்ளதாம்: இந்தியா த.தே.கூ. ஐ அழைக்கவில்லை. சரத் பொன்சேக்காவிற்கு இந்தியா ஆதரவு வழஙகும் படி இந்தியாவை வேண்டும்படி சரத் பொன்சேக்காவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவிகு அனுப்பிவைத்தாரம். இந்தியா-சரத்-த.தே.கூ சேர்ந்து இயங்குகிறாம்.

குளறுபடி - 2
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், இன்று தமது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவர் மஹிந்த ராஜபக்சவிற்காக தேர்தல் பிரசாரம் செய்வதாக வாக்குறுதி அளித்து இருந்தாராம். அப்படிச்செய்தால் தமிழ் மக்களால் துரோகிப் பட்டம் கட்டப் பட்டு விடுவார் என்று பயந்து தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள தன்னைத் தானே சுட்டுக் காயப்படுத்தினாராம். இதே போல் இன்னொரு தமிழ் நாடாளமன்ற உறுப்பினர் வெளிநாடு சென்று விட்டாராம்.

குளறுபடி - 3
இலங்கை மத்திய வங்கி திடீரென இலங்கையில் வாழும் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு திறந்து அதற்கு இலங்கையில் இருந்து பணம் அனுப்ப முடியுமென்று அறிவித்தது. இந்தச் அனுமதி ஒரிரு தினங்களில் இரத்துச் செய்யப்பட்டது. ராஜபக்சே குடும்பம் தமது செல்வங்களை வெளிநாட்டிற்கு அனுப்பவே இந்த ஏற்பாடு என்று சில செய்திகள் தெரிவித்தன.

குளறுபடி - 4
தேர்தலுக்கு அடுத்த நாள் ராஜபக்சே குடும்பம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஒரு விமானம் தயார் நிலையில் உள்ளதாம். பங்களாதேசத்தில் நடக்கும் விளையாட்டு விழாவைப் பார்க்கச் செல்ல என்று இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம்.

குளறுபடி - 5
அண்மையில் கோத்தபாய ராஜபக்சே இருதயச் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றாராம். அவர் சென்றது பெருந்தொகைப் பணத்தை அங்கு கொண்டு போய்ச் சேர்க்கவாம் என்றும் செய்திகள் வெளிவந்தன.

குளறுபடி - 6
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுடெனிஸ் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் வாக்களித்தால் தான் சரத் வெல்லுவார் என்று அறிந்துதான் இப்படி அறிக்கை விடப்பட்டதாம்.

குளறுபடி - 7
இந்தியாவில் இருந்து சில நிபுணர்கள் மஹிந்த ராஜபக்சே வெற்றி பெறச் செய்ய இலங்கை வந்து செயல் படுகிறார்களாம். சிதம்பர(ம் வென்ற) இரகசியம் இலங்கையிலுமா?

குளறுபடி - 8
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய வடக்கு - கிழக்கு மீளிணைப்பு தொடர்பான உடன்படிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் தெரிவித்துள்ளனர்.

குளறுபடி - 9
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்று தகவல் வெளியிட்டுள்ளது

குளறுபடி - 10
மஹிந்த தரப்பு 5இலட்சம் வாக்குக்கள் மோசடி செய்வதாகத் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி.

குளறுபடி - 11
விடுத்லைப் புலிகளின் பெயரில் தேர்தலைப் புறக்கணிக்கும் படி துண்டுப் பிரசுரங்களை தமிழினத் துரோகக் குழுக்கள் விநியோகிக்கின்றனவாம்.

குளறுபடி - 12
மஹிந்தவிற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழினத் துரோகக் குழுக்கள் சரத் பொன்சேக்காவை விமர்சிப்பதில்லையாம். அவர் வென்றால் அவர்காலையும் பிடிக்கவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.

குளறுபடி - 13
தேர்தல் ஒழுங்காக நடந்தால் சரத் பொன்சேக்கா வெல்லுவார் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றனவாம். மோசடி செய்து மஹிந்த வென்றால் தேர்தலைச் செல்லுபடியற்றதாக்க தேர்தல் ஆணையாளருடன் இணைந்து மேற்குநாடுகள் சதிசெய்கின்றனவாம்.

குளறுபடி - 14
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றால் இராணுவ ஆட்சியொன்றை அமைக்கும் நடவடிக்கையில் அரசுத் தரப்பு ஈடுபட்டு வருகின்றது என ஜே.வி.பி தெரிவிக்கிறது.

1 comment:

Anonymous said...

ஆக் 14 குளறுபடிகள் மட்டுமா? மிச்சம் எங்கே?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...