Saturday, 10 October 2009

இலண்டனிலும் அம்சாவின் கைவரிசை?


நாய் சென்னையில் இருந்தாலும் இலண்டனில் இருந்தலும் ஒரே மாதிரித்தான் குரைக்கும். ஒரே மாதிரித்தான் காலைத் தூக்கும்.

இலங்கை ராச தந்திரிகளும் அப்படியே.

விபச்சார ஊடகங்கள் சென்னையிலும் உண்டு. இலண்டனிலும் உண்டு. ஜே. ஆர் ஜெயவர்த்தனேயை ஒரு துறவி என்று தமிழ் நாட்டு ஊடகம் ஒன்று சித்தரித்ததும் உண்டு. மஹிந்த ராஜபக்சேயை தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று தமிழ்நாட்டு ஊடகங்களில் எழுதுபவர்களும் உண்டு.

மேல் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஊடகத் துறையை விட்டு வைக்குமா. அவர்களுக்கும் பொருளாதார நெருக்கடி.

அண்மைக்காலமாக இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பற்றிக் காரசாரமாக விபரித்து வந்த The Economist சஞ்சிகை இந்தவாரம் ஒரு தனிப்பட்ட ஒருவருக்கு நடந்ததை வைத்து இலங்கை சிங்கள இராணுவத்தை நல்லவராகக் காட்ட மறைமுக முயற்ச்சியை மேற் கொள்கிறது.

இலண்டனில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று பாராளமன்றத்தின் முன் உண்ணாவிரதமிருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரன் McDonald's இனது BigMac சாப்பிட்டார் என்பது போலத் தலையங்கமிட்டுச் செய்தி வெளியிட்டது. இதற்கு ஆதாரமாக இலண்டன் காவற்துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரை "ஆதாரம்" காட்டி சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணவிரதமிருந்த கொட்டகைக்கு BigMac எடுத்துச் செல்லப் பட்டதை இலண்டன் காவற்துறையில் கண்காணிப்பு ஒளிப் பதிவுக் கருவியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்ணாவிரதக் கொட்டகைக்குள் பலரும் சென்று வந்த படியே இருந்தனர். அவர்கள் கையில் உணவுப் பொதிகளுடன் சென்று வருவதை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சுப்பிரமணியம் பரமேஸ்வரனுக்கு எடுத்துச் செல்லப் பட்டவை அல்ல. அவர் சாப்பிட்டதை எவரும் காணவில்லை. அவரை தமிழ் அமைப்புக்களின் மருத்துவர்களும் பிரித்தானியக் காவற்துறையின் மருத்துவர்களும் அடிக்கடி பரிசோதித்து வந்தனர். ஒரு கட்டத்தில் காவற்துறை அதிகாரி சுப்பிரமணியம் பரமேஸ்வரனிடம் உன்னைப்போன்ற இளைஞர்கள் எமது நாட்டுக்குத் தேவை நீ இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடு என்று வேண்டிக் கொண்டார். ஒருமுறை அவரைப் பரிசோதித்த காவற்துறை மருத்துவர் அவர் சிறுநீரகம் பாதிப் படைந்திருப்பதாகக் கூறினார்.

இலண்டன் நகராட்சிக்கு பெரும் தலையிடியையும் பலத்த செலவையும் ஏற்படுத்திய இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை பிர்த்தானியப் பாராளமன்றத்தின் முன் நடை பெற்ற தமிழர் ஆர்ப்பாட்டதின் ஒரு பகுதியாகவே சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.

பிந்திய இணைப்பு அதிர்வு இணையத் தளத்திலிருந்து- ஸ்கொட்லண்ட் யா(ர்)ட்டுடனான பேட்டி:

Friday, 9 October 2009

இலங்கை செல்லும் தமிழ் நாட்டுப் பாராளமன்ற உறுப்பினர்களிடம் சில கேள்விகள்.


தமிழ்நாட்டிலிருந்து ஒரு பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று இடைத் தங்கல் முகாம் எனப் படும் வதை முகாம்களைப் பார்வையிடவிருப்பதாக அறிந்து யாரும் மகிழ்ச்சி அடைய வில்லை. இப்படிப் பலர் செல்கிறார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை.

வன்னி முகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவந்த போது தமிழ்நாட்டிலிருந்து ஒரு பார்ப்பன நாய் முகாமிற்கு சென்றுவிட்டு அங்கு முகாம்கள் சிறப்பாக நடப்பதாக மாபெரும் பொய்யை கூறியதை யாரும் மறக்கவில்லை.

இப்போது மீண்டும் வன்னி முகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவருகின்றன. அண்மையில் வந்த செய்தி:
குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரிதாபக்குரலே முகாமகள் எங்கும் கேட்கிறது என, பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் டொஸ்டருடன் அங்கு விஜயம் மேற்கொண்ட பி.பி.ஸி.செய்தியாளர் சார்ள்ஸ் ஹவிலான்ட் தெரிவித்துள்ளார்.

அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர் எனத் தெரிவித்துள்ள பி.பி.ஸி செய்தியாளர் இது குறித்து மேலும் தெரிவித்து:

முகாமின் உட்கட்டமைப்பு குறித்து நெருக்கமாக அவதானிப்பதற்கு பி.பி.ஸிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இதுவாகும். மெனிக் பார்மில் உள்ள வலயங்களில், வலயம் 2 அதிகளவு சன நெரிசல் கொண்டது. இங்கு தொடர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் வெள்ளத்தைத் தடுப்பதற்கு இது உதவும் என அரசு தெரிவிக்கின்றது. உள் வீதிகளில் சிறிய கடைகளைக் காண முடிகின்றது. முகாமில் உள்ளவர்கள் சிறிதளவு பணம் சம்பாதிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பே இந்தக் கடைகள். நிலக்கண்ணி வெடிகள் உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்லமுடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் முகாமில் உள்ளவர்களுடன் நாம் உரையாடிய ஐந்து நிமிடங்கள் மிகவும் வேதனையளிப்பனவாக அமைந்தன. • இப்படி வன்னிமுகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவரும் போது அதை மூடி மறைக்க இலங்கை அரசு உங்களைப் பயன் படுத்துகிறதா?
 • இலங்கைக்கு முகாம்களைப் பார்வையிடச் செல்பவர்களை மெனிக் பாம் முகாமின் சில பகுதிகளை மட்டும் பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்கிறது. மற்றமுகாம்களை உங்களால் பார்வையிட முடியுமா?
 • உங்கள் சொந்தத் தெரிவின்படி எந்த முகாமையாவது பார்வையிட முடியுமா?
 • முகாம்களில் உள்ளவர்களை உங்களால் தனிப் பட்ட ரீதியில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிய முடியுமா?
 • இறுதிப் போர் நடந்த பகுதிகளில் மனிதப் புதை குழிகள் உள்ள இடங்களுக்கு உங்களால் சென்று உண்மை அறிய முடியுமா?
 • நீங்கள் சென்று வந்தபின் நீங்கள் செய்யும் பரிந்துரைகளை உங்கள் மைய அரசு ஏற்று நிறைவேற்றுமா?
 • இது வரை ஈழத் தமிழர்கள் தொடர்பாக எத்தனை கோரிக்கைகளை உங்கள் மைய அரசு நிறைவேற்றியிருக்கிறது?

இலங்கை சென்று அவர்கள் தரும் விருந்துகளை(?) சுவைத்து மகிழும் படி உங்களை வாழ்த்தி அனுப்புகிறேன்.

Thursday, 8 October 2009

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதியில்லையா?


ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்திய உளவாளிகள் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பலத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாண நகரில் உள்ள விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து பல உளவாளிகள் ஊருடுவியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களின் பணி அங்குள்ள மக்களின் மன நிலையை அறிந்து அதை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதுதான் என்று அறியப் படுகிறது. இது போல இலங்கையின் பல பாகங்களிலும் இந்திய உளவாளிகள் செயற்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம் பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் வானொலி தொலைக் காட்சி சேவைகளின் நேயர் நேரங்களில் இதுவரை பங்கு பற்றி தகாத வார்த்தைப் பிரயோகம் வீண் வாதம் விடுதலை புலிகள்மீது வசை பாடுதல் போன்றவற்றை செய்து அவற்றைக் குழப்பி வந்த இந்திய உளவாளிகள் இப்போது தாம் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல அமைதியாகக் கதைத்து தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பரப்புரை செய்கின்றனர். அது மட்டுமல்ல தமிழர்கள் இன்றிருக்கும் நிலையில் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மூன்று இலட்சம் உறவுகள் முகாம்களில் வதை படும் போது உணர்வில்லாதவர்கள்தான் அமைதியாக் இருப்பர்.

இதேவேளை தமிழ்நாட்டில் சீமானின் பரப்புரைகளை தடுக்க அவரை கைது செய்தல் அல்லது திருமாவளவன் மூலமாக இன்னோரு ஈழ் ஆதரவு பிரச்சாரத்தைத் தொடக்கி சீமானின் பரப்புரைகளை முறியடிப்பது போன்ற சதிகளை இந்திய உளவுப் பிரிவு தொடங்கலாம். அல்லது கலைஞரே நேரடியாக இன்னொரு நாடகமாடலாம்.

இந்திய உளவுத்துறை தமிழர்களின் மனங்கைளை மாற்ற முயன்று வரும் வேளையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வன்னி வதை முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றுவது உடனடியாகச் சாத்தியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதற்கு இலங்கை அரசு கூறிய சாட்டையே அவரும் கூறுகிறார். கண்ணிவெடி அகற்றுவதால் தாமதமாம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் தோன்றி சாட்சியமளித்த International Crisis Groupஐச் சார்ந்தவர்கள் இலங்கியில் மக்கள் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைத்திருப்பது இலங்கைச் சட்டத்திற்கும் உலகச் சட்டத்திற்கும் முரணானது என்பதை நிரூபித்துள்ளனர். அதுமட்டுமல்ல கண்ணிவெடி அகற்றுதல் இல்லாமலே மீள்குடியேற்றத்திற்கு சாத்தியம் உண்டேன்றும் சுட்டிக் காட்டியுள்ளர். சட்டமே படிக்காத ஒரு சாதாரண மனிதன் கூட ஒருவரை நீதிமன்றில் நிறுத்தாமல் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைத்திருப்பது குற்றம் என்பதை அறிவான். அப்படியிருக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு வக்காலத்து வாங்குவது இந்தியாவின் தமிழின அழிப்புப் போரில் இந்தியாவிற்கு இலங்கை உதவியது என்ற உண்மைக்கு வலுவூட்டுகிறது.

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதி இல்லையா?
அல்லது
இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு எதிரி இல்லையா?
இந்தியா உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களே முடிவு செய்யுங்கள்!

Wednesday, 7 October 2009

காந்தியின் பெயரைக் களவாடி காந்தியத்தை அழித்தார்கள்இத்தாலியில் பிறந்து
இந்தியாவில் புகுந்து
இலங்கையில் தமிழரை
அழித்த சனியே!

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது.


இலங்கைத் தமிழர்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு "ரவுண்டு கட்டித்" தாக்கியது.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் ஆளும் குடும்பத்தினதும் ஆதிக்கச் சாதியினரதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்பட்டனர்.

இதை நான் சொல்லவில்லை. இந்தியாவின் முன்னாள் படை அதிகாரி ஆர். கரிகாலன் சொல்லுவது இது:
How much of a worry is it for India that China is investing in these ports(around India in tha name of "string of pearl")?

While India should not 'worry' on each specific Chinese action, it should be concerned about any factor potentially destabilising to its strategic security, introduced in its area of influence. And Hambantota in Sri Lanka is one such case. Unfortunately, our political decision making process on strategic issues is often influenced more by concerns other than national strategic security. India can develop Trincomalee on eastern coast of Sri Lanka as major commercial pub for Indian Ocean traffic. This would balance Chinese influence. But we seem to be lethargic in acting on such issues and we will pay the price when the time comes.


இந்தியத் தலைமையின் தீர்மானம் எடுக்கும் முறைமை தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் வேறு விடயங்களை கருத்தில் கொள்கிறதாம். அது என்ன வேறுவிடயங்கள்? குடும்ப நலன், கட்சி நலன், அதிகாரிகளின் ஊழல், முக்கிய அதிகாரிகள் தமது சாதி நலன்களைப் பேணுதல்....இவற்றைத்தவிர வேறு உண்டா?

இந்தியாவைச் சுற்றிவர சீனா கட்டும் துறை முகங்கள் சீனா இந்தியாவிற்குப் போடும் சுருக்குக் கயிறு என பல இராணுவ வல்லுனர்கள் கூறினர். ஆனால் இந்திய அதிகாரிகள் அவை வெறும் வர்த்தகத் துறைமுகங்களே என்று கூறுகின்றனர். ஆனால் இராணுவ வல்லுனர்கள் அவை வர்த்தகத் துறை முகங்கள் என்ற போர்வையில் உள்ளன என்றும் அவை தேவை ஏற்படும் கட்டத்தில் இராணுவ நிலைகளாக மாற்றப் படக்கூடியன என்கின்றனர்.

ஒபாமாவின் அமெரிக்கா.
பராக் ஒபாமா தேர்தலில் போட்டியிடும் போது தன்னை ஒரு இந்திய விசுவாசியாகக் காட்டிக் கொண்டார். அவர் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுகக் கூடும் என்று கூட எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் அமெரிக்கக் கொள்கைவகுப்பாளர்களோ இராணுவ வல்லுனர்களே அமெரிக்க் இராணுவ வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டு வேறுவிதமாகச் செயற்படுகின்றனர். பராம் ஒபாமாவும் அதையே ஏற்றுக்கொண்டு செயற்படுகிறார். அமெரிக்காவின் தற்போதைய கருத்துப் படி இந்திய ஆட்சியாளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாதவர்கள். இதற்கான காரணம்: குடும்பம், கட்சி, கூட்டணி, சாதிவெறி பிடித்த அதிகாரிகள் என்ற சிக்கலுக்குள் இந்தியாவின் அதிகாரம் சிக்குண்டிருக்கின்றது. இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்தத்தை சிக்கலாக்கியது இந்த சிக்கலான கட்டமைப்பே என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது. அதனால் இந்தியாவை நம்பி சீனாவையோ பாக்கிஸ்த்தானையோ பகைத்துக் கொள்ள அமெரிக்கா தயாரில்லை. பல அமெரிக்காவின் இராணுவ பொருளாதார வல்லுனர்கள் அமெரிக்கவிற்கு போட்டியாக வளரும் சீனாவுடன் முரண்பட்டு மோதுவதிலும் பார்க்க சீனாவின் பங்காளனாக அமெரிக்கா செயற்பட்டு சீனாவைச் சுரண்டுவது சிறந்தது என்று கருதுகின்றனர்.

அருணாச்சலப் பிரதேசமும் அமெரிக்காவும்.
அருணாச்சலப் பிரதேசம் இந்திய சீனப் பிணக்கின் உச்சப் பிரச்சனையாக மாறிவருகிறது. இதை மையாமாகக் கொண்டு ஒரு போர் மூளலாம். இதில் அமெரிக்கா தான் நடுநிலை வகிக்கப் போவதாக அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்து விட்டதாம். இரசியாவும் சீனாவுடன் நட்புறவைப் பேணி தனது கிழக்குப் பிராந்திய நாடுகளில் (முந்தைய சோவியத் ஒன்றிய நாடுகள்) அமெரிக்கா காலூன்றாமல் தடுப்பதற்கு முயல்கிறது. இன்நிலையில் இரசியா இந்தியாவிற்கு கைகொடுக்கும் நிலையில் இல்லை.

பாக்கிஸ்த்தானிய அணு ஆயுதங்கள் அங்குள்ள தீவிரவாதிகளின் கைகளுக்கு மாறுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவிற்கு எதிராகப் பவிக்கப் படுமா? அடுத்து ஈரான் சீனாவுடன் தனது உறவை வலுப் படுத்திக் கொண்டு போகிறது.ஆக் மொத்தத்தில் இந்தியா தனிமைப் படுத்தப் படுகிறது.

தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர்களிலும் பார்க்க டெல்லியில் உள்ள சிங்களவர்களின் தூதுவராலயத்தில் உள்ள பூந்தொட்டிகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன நடக்கும்?

Tuesday, 6 October 2009

திருமாவளவனும் திசை மாறிவிட்டாரா?


திருமாவளவன் அண்மையில் இலண்டனில் புங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தின் நிகழ்வில் உரையாற்றினார். அவரது உரை சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை நீடித்தது. இலண்டனைப் பொறுத்தவரை இது ஒரு மிக நீண்ட உரை. ஆனாலும் மக்கள் சலிக்காமல் இருந்து செவிமடுத்தனர். உரையின் முடிவில் எழுந்து நின்று கைதட்டினர். எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி எழுந்திருக்கவில்லை. அவரிடம் ஏன் என்று வினவியபோது இவங்களால் எமக்கு எந்தப் பயனும் இல்லை என்றார். அவர் ஒன்றும் சாதாரணப் பெண்மணியுமல்ல. ஒரு மருத்துவர். தமிழ்த்தேசியப் போராட்டதில் அவரது குடும்பமே நீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றது. ஆனாலும் ஈழத் தமிழர்களது போராட்டத்திற்கு நீண்டகாலமாக ஆதரவு கொடுத்துவரும் திருமாவைப் பற்றி - தமிழ்நாட்டின் தலித் மக்களிடம், வறிய மக்களிடம் ஈழப் போராட்டத்தை எடுத்துச் சென்ற திருமாவைப் பற்றி ஏன் இப்படிச் சொன்னார்? இது பற்றி சற்று விபரமாகத் தகவல் திரட்ட முயற்ச்சித்தேன்.

ஒரு நல்லவரைச் சந்தேகித்தல் துரோகிகளின் செயலிலும் கொடிது என்பதை யாவரும் அறிவோம்.

ஆனாலும் தோழர் திருமாவளவனுக்கும் இலண்டன் தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் இடையில் என்ன பிணக்கு?

திருமாவளவனில் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும் படி ஒரு குறுந்தகவல் இலண்டனில் உலாவியது.

திருமாவளவனின் நிகழ்ச்சியில் தமிழ் இளையோர் அமைப்போ அல்லது பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களோ பங்குபற்றவில்லை.

இலண்டனில் உள்ள தமிழ்த்தேசிய வாதிகள் திருமா இந்திரா காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் நின்றதை வரவேற்கவில்லை.
இலண்டனில் தோழர் திருமாவின் உரையிலும் அவர் ஜீடிவி எனும் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சிலகருத்துக்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன:
 • இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திரா காங்கிரசு ஆட்சி செய்ததையே செய்திருக்கும்.
 • தமிழர்களுக்கு இந்தியா மட்டும் எதிரி இல்லை, சகல நாடுகளூமே எதிரி.
 • தோழர் திருமாவளவன் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்ற பொருள்படப் பேசினார்.
 • எல்லா வற்றிலும் மேலாக, இலங்கையில் சீனா காலூன்றாமல் இருக்க இலங்கைக்கு இந்தியா உதவிவருகிறது. உங்களின் எதிரியான இலங்கைக்கு உதவுவதால் இந்தியாவை உங்கள் எதிரியாக எண்ணாதீர்கள் என்று சொன்னது பல தமிழின உணர்வாளர்களை ஆச்சரியப் பட வைத்தது.

தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதில் இலங்கையிலும் பார்க்க இந்தியாஅதிக முனைப்புக் காட்டியதை யாவரும் அறிவர்.

இந்தியாவிற்கு தமிழ்த்தேசிய போராட்டத்தை ஒழிக்க இலங்கை உதவியதாக பலரும் நம்புகின்றனர்.

இந்நிலையில் திருமா இப்படிக் கூறியது அவர் இந்திய உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலில் அகப் பட்டு விட்டாரா என்ற சந்தேகத்தைச் சிலருக்கு உண்டாக்கியுள்ளது.

இது எங்க (இந்தியாவின்) ஏரியா உள்ளே வராதே!
இந்தியாவை விட்டால் உங்களுக்கு உதவயாரும் இல்லை என்ற கருத்தை தமிழருவி மணியனும் முன்வைத்தார். மே மாதம் 17-ம் திகதிக்கு முன்னர் பிரித்தானியாவுடன் இணந்து ஒரு கடற்படையை அனுப்பி போரில் அகப் பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாக்கத் தயார் என்று பிரான்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. ஆனால் இதைத் தடுத்தது யார் என்பதை திருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

அமெரிக்கா திரைமறைவில் ஒரு கடற்படையை இலங்கை நோக்கி நகர்த்தியது அது எடுக்க இருந்த நடவடிக்கையைதிருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

ஸ்கண்டிநேவிய நாடுகள் அரச மட்டத்தில் பல அழுத்தங்களைப் பிரயோகித்தன அதை எதிர்க்க இலங்கைக்கு பக்கபலமாக இருந்தது யார் என்பதை திருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு உதவ யாருமில்லையா?

இருந்தும் ஏன் இந்தப் பொய்?

இந்தியா தமிழனுக்கு உதவ யாரையும் விடவில்லை என்பதே உண்மை.

Monday, 5 October 2009

இலங்கைமீது தொடரும் குற்றச் சாட்டுக்கள்


ஐரோப்பிர ஒன்றியத்தின் இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை நீடித்தல் தொடர்பான விசாரணைகளின் போது இலங்கையின் மீது பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டுள்ளன. GSP+சலுகையைப் பெறுவதற்கு என்று சில நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும். அதில் முக்கியமானது 27 சர்வதேச உடன்படிக்கைகளில் சலுகை பெறமுயலும் நாடு கையொப்பமிட்டிருக்க வேண்டும். அந்த உடன்படிக்கையை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை மனித உரிமைகள் சம்பந்தமானது. அந்த 27இல் மூன்று உடன்படிக்கையை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் இலங்கைமீது ஒரு அறிக்கை மூலம் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
 1. International Covenant on Civil and Political Rights (ICCPR),
 2. Convention Against Torture and other Cruel, Inhuman, or Degrading Treatment or Punishment (CAT)
 3. Convention on the Rights of the Child (CRC)
ஆகிய மூன்று உடன்படிக்கைகளை இலங்கை மீறியுள்ளதாக இலங்கை மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அவர்கள் எடுத்துக் காட்டிய விடயங்கள்:
 • குற்றம் சுமத்தம் படுபவரை நிரபராதி என்று நீதிமன்றம் பார்ப்பதில்லை. நீதிமன்றத்தில் நிறுத்தப் படும் ஒருவர் நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படும் வரை அவரை நீதிமன்றம் நிரபராதியாகப் பார்ப்பது வழக்கம். தற்போது இலங்கையில் உள்ள அவசரகாலச் சட்டம் அதற்கு இடமளிப்பதில்லை.
 • இலங்கை குடியரசுத் தலைவரின் தலையீடுகள். இலங்கை அரசியலமைப்பின் 17வது திருத்தம் அமூல் செய்யப் படாமையினால் இலங்கையின் நீதித்துறையிலும் நிர்வாகத்துறையிலும் காவற் துறையிலும் ஆட்சியாளர்களின் தலையீடு அதிகரித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 17வது திருத்தம் காவற்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றை நிர்வகிக்க ஒரு சுதந்திர ஆணைக்குழு அமைக்கப் படவேண்டும் என்று கூறுகிறது.
 • அதிகரிக்கும்கொலைகள். இலங்கையில் நடக்கும் நூற்றுக்கணககான கொலைகளுக்கு உரிய விசாரணைகளை காவற்துறை மேற்கொள்வதில்லை. அத்துடன் கடத்தல்கள் காணாமற் போதல்கள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் கருணாவின் நடவடிக்கைகளும் குறிப்பிடப் பட்டுள்ளன. அரசியல் ரீதியிலான ஆர்வமின்மை காரணமாக இலங்கையில் பல குற்றச் செயல்கள் தண்டிக்கப் படாமற் போகின்றன என்று குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. சட்டமா அதிபரை குடியரசுத் தலைவர் அரசியலமைப்புக்கு முரணான வகையில் நியமித்ததையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
 • அதிகரித்தநீதித்துறையில். அரசியல் தலையீடுகள் அதிகரித்தமையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
 • அரசியல் மயமாக்கல். இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு தேறமைக்கு இலங்கையின் நீதித்துறை அரசியல் மயமாக்கப் பட்டமையே காரணம்.
 • பலவீனமான நீதித்துறை. இலங்கையின் நீதித்துறை அரசினாலும் பிரதம நீதியரசரினாலும் பலவீனப் படுத்தப் பட்டுள்ளது. முன்னாள் நீதியரசர் அரசியல் மயமான வழக்குகளை சில மூத்த நீதிபதிகள் கையாளாமல் பார்த்துக் கொண்டார்.
 • அவசரகாலச் சட்டம். இலங்கையில் உள்ள அவசரகாலச் சட்டம் மக்களுக்கு சரியானவகையில் நீதிகிடைப்பதை தடை செய்கிறது.
 • சட்டத்திற்கு புறம்பான கொலைகள். இலங்கை ஆயுதப் படைகளாலும் காவற்துறையினராலும் அரசுடன் தொடர்புடைய குழுக்களாலும் மேற்கொள்ளப் படும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இலங்கையில் உள்ள மிகப் பெரும் பிரச்சனையாகும்.
 • ஊடகங்கள் மீதான தாக்குதல்கள். ஊடகங்கள் மீதும் ஊடகத்துறையினர் மீதும் எண்ணற்ற தாக்குதல்கள் நடக்கின்றன.
 • சித்திரவதை ஒரு வழமையான நடைமுறை. இலங்கை அவசரகாலச் சட்டத்தின் கீழ் காவற்துறை சந்தேக நபர்களைக் கைது செய்து சித்திரவதைசெய்வது என்பது ஒரு வழமையான நடைமுறை ஆகிவிட்டது.
 • கைது செய்தலும் தடுத்து வைத்திருதலும். இலங்கையில் மக்கள் எழுந்தமான மாகக் கைது செய்யப் பட்டுத் தடுத்து வைக்கப் படுகின்றனர்.
 • காணாமற் போவோர். டிசெம்பர் 2005. இற்கும் டிசெம்பர் 2007இற்கும் இடையில் 1500 பேர்வரை காணாமற் போயுள்ளனர்.
 • கருத்துச் சுதந்திரம். இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை நடைமுறைப் படுத்துவது என்பது மாபெரும் பிரச்சனையாகி உள்ளது.
 • பாரிய தடுத்து வைப்பு. இலங்கியில் பெருந்தொகையானோர் சுதந்திர நடமாட்டமின்றித் தடுத்து வைக்க்ப்பட்டுள்ளனர்.
 • பாராபட்சத்திற்கு எதிரான பாதுகாப்பு. இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்கள் குறிப்பாக தமிழினம் பாராபட்சத்திற்கு எதிரான பாதுகாப்பு இன்றியே காணப்படுகிறது.
மேற்கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் உண்மையானதும் நியாயமானதும் என்பதை இலங்கையைப் பற்றி அறிந்த சகலரும் உணர்வர். ஐரோப்பிய ஒன்றியம் GSP+ வர்த்தகச் சலுகை சம்பந்தமாக எப்படித் தீர்மானிக்கப் போகிறது?

Sunday, 4 October 2009

தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு சவால்


சென்னையில் உள்ள உதவி இலங்கைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின் கூற்றுக்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் கடுமையாகச் சாடி அவரை வெளியேற்றும் படி குரலெழுப்பியுள்ளனர்.

"இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை எடுத்து வருகிறது என்று உண்மைக்குப் புறம்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவிழ்த்து விட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்கள் எதையும் துளியும் மதிக்காமல் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்ட நிலையில் சிங்கள அரசு இப்பொழுது கோயபல்ஸ் பிரசாரத்தில் இறங்கியுள்ளது.

மேலும் கச்சத்தீவு பிரச்சனையிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார்.

இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க முயற்சி நடைபெறும் வேளையில் அவர்களை அவமதிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் பேசித் திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும். என தெரிவித்துள்ளார்.

இப்போது வ. கிருஷ்ணமூர்த்தி ஒரு பல்டியும் அடித்துள்ளார். அது வன்னி வதை முகாம்கள் மிருகக் காட்சிச் சாலைகள் அல்ல என்பதை மட்டுமே!

கடல் எல்லையைத் தாண்டியவர்கள் மீது நடவைக்கை எடுக்கலாம். கைது செய்யலாம். தடுத்துவைக்கலாம். சுட்டுக் கொல்லலாமா? இது போர்நடக்கும் இரு நாட்டுகளுக்கு இடையில் மட்டுமே நடக்கும். அதுவும் படையினர் எனச் சந்தேகிக்கப் படும் இடத்தில் மட்டுமே. தாக்கி நிவாணப் படுத்துவது பாக்கு நீரிணையில் மட்டுமே நடக்கும். தமிழனுக்கு எதிராக சிங்களவனால் மட்டுமே இதைச் செய்யமுடியும். இதை நியாயப்படுத்தும் வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தமிழின உணர்வாளர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா? உங்கள் கோரிக்கைகளை மைய அரசு ஏற்குமா? எத்தனையோ முறை போர்நிறுத்தம் இலங்கையில் வேண்டி என்வோ எல்லாம் செய்தீர்கள். நடந்ததா?

தமிழின உணர்வாளர்களுக்கு விடுக்கப் படும் சவால்: வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக உங்கள் மைய அரசால் ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...