Saturday, 3 October 2009

விகடனுக்கும் இலங்கை அரசிற்கும் என்ன தொடர்பு?


விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும்.

கதை இப்படி இருக்கும் போது விகடனின் ஒரு உதவி ஆசிரியர் இலங்கையிடம் இலஞ்சம் வாங்கிச் செயற்பட்டதாக செய்திகள் வந்தன.

இப்போது ஜூனியர் விகடனில் பத்மநாதன் தொடர்பான கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் மிகத் தவறான செய்தி ஒன்று குறிப்பிடப் பட்டுள்ளது:''இலங்கையில் ஆரம்ப கட்டத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கம் ராணுவரீதியாக போரைத் துவக்கி, தொடர்ந்து சண்டை நடத்த வட பகுதியில் செழிப்பாக இருந்த தமிழர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
1970களில் முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் இருந்தனர். தமிழர் கூட்டணியின் தேசியகீதத்தில் "வளர் முப்பத்தைந்து இலட்சம் மக்கள் கொண்ட..." என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

அடுத்த பொய்: கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்றனர்.

பிரித்தானியாவில் மட்டும் மூன்று இலட்சத்திற்குக் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர்.

இலங்கையிலோ அல்லது எந்த வெளிநாட்டிலோ வெளிவராத தகவல்கள் "முடிந்தது புலி வேட்டை தொடங்கியது தங்க வேட்டை" என்ற கட்டுரையில் ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது:
 • கிட்டத்தட்ட 6,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை சிங்களர் வசிக்கும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பரவலாக அவர்கள் மறைத்து வைத்ததாக இப்போது சிங்கள ராணுவம் கருதுகிறது.
 • இலங்கை முழுவ திலும் சுமார் 40 இடங்களில் ஆயுதப் புதையலும், 23 இடங் களில் தங்கப் புதையலையும் புலிகள் ஒளித்து வைத்திருப்பதாக போர் முடிந்ததுமே இலங்கை ராணுவ வட்டாரங்களுக்கு ரகசியத் தகவல் வந்து சேர்ந்தது.
 • இரு வாரங்களுக்கு முன்பு முல்லைத்தீவில் ஒரு பெரும் புதையலை கைப்பற்றியிருக் கிறார்கள். அடுத்த கட்டமாக மட்டக்களப்பு வாகரை பகுதி யிலும், இலுப்படிச்சேனை என்ற இடத்திலும் புதையலை எடுத்திருக்கிறார்கள். இதே மாதிரி கிழக்குப் பகுதியில் வெள்ளான்தோட்டத்திலும், கல்லடியிலும் புதையலைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
 • கொட்டயனாவில் இருக்கும் பொன்னம்பல வனேஸ்வரம் கோயிலின் பூசாரியான ரவி குருக்களிடமும் அப்படித்தான் விசாரணை கொண்டுபோன மேப்பை விரித்து, அதில் குறிப்பிட்ட ஓர் இடத்தை அடையாளம் கண்டு தோண்டச் சொல்லியிருக்கிறார்கள். ஐந்து அடிகள் தோண்டியவுடன், ஒரு பாதாள அறை இருந்திருக்கிறது. அதை திறந்து பார்த்த ராணுவத்துக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு பெரிய பட்டாலியன் ராணுவத்துக்குத் தேவை யான அளவுக்கு பெரும் ஆயுதக்குவியலே அங்கே இருந்திருக்கிறது. அதனுடன், 1,000 கிலோ தங்கம் இருந்திருக்கிறது. அதற்கடியில் மிக மிக முக்கியமான ஆவணங்களும், டைரிகளும் கிடைத்திருக்கிறதாம்.
 • ராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு டைரியில் குறிப்பிட்டிருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டிருக்கிறது. அங்கு ஒளிந்திருந்த புலிகளின் கெரில்லா படைப்பிரிவு தலைவர் ராதாவை கடந்த 25-ம் தேதி கைது செய்திருக்கிறார்கள். மேலும் இருவரையும் கைது செய்திருக்கும் ராணுவம், அவர்களை பற்றிய தகவல்களை வெளியே கசிய விடவில்லை.
 • தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு சரக்கு கப்பல் நிறுவனங்களும், இங்கிலாந்தில் 176 பெட்ரோல் பங்குகளும், கனடாவில் 193 பெட்ரோல் பங்குகளும் புலிகளுக்கு இருப்பதாக இப்போதைக்கு உறுதிப்பட்டிருக்கிறது
இவை எல்லாம் இலங்கையைப் பொறுத்தவரை மிகமிக இரகசியமான தகவல்கள். வேறு எங்கும் கிடைக்காத தகவல்கள். இவை எப்படி விகடனுக்குக் கிடைத்தன? இலங்கை அரசிற்கும் விகடனுக்கும் என்ன தொடர்பு?

Friday, 2 October 2009

மன்னிக்க வேண்டுகிறது மானங்கெட்ட டில்லி அரசு


பாக்கு நீரிணையில் தமிழ் மீனவர்கள் தாக்கப் பட்ட போது கொல்லப் பட்ட போது ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி மானபங்கப் படுத்திய போது மௌனமாயிருந்த மானங்கெட்ட டில்லி அரசு டில்லியில் உள்ள இலங்கைத் தூதுவரகம் தாக்கப் பட்டவுடன் இலங்கைக்கு வருத்தம் தெரிவித்து மன்றாடுகிறது.

இன்றுபிற்பகல் மூன்று மணியளவில் பத்துப் பேர் கொண்ட குழுவொன்று டில்லி சாணக்கியபுரியில் உள்ள (தமிழ் விரோத) சிங்கள அரசின் தூதுவராலயத்திற்குள் நுழந்து அங்குள்ள பூச்சட்டிகளை உடைத்தெறிந்து விட்டு அங்கு காவற் துறையினர் வருமுன் ஓடி மறைந்து விட்டது. இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்த கருத்து:

“We deeply regret this unfortunate incident which has involved an act of violence against a diplomatic mission, the external affairs ministry said here.

“The law enforcement agencies have swung into action. Security around the high commission premises has been strengthened, the ministry said.

“Action as prescribed by the law will be taken against the perpetrators of this incident, the ministry said.

இதே வேளை உத்தரப் பிரதேசப் பேரின வாதிகளின் அடிவருடியான ப. சிதம்பரம் இலங்கை கடற்படையினர் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது தவறானது என்று தெரிவித்துள்ளார். எல்லையைத் தாண்டும் மீனவர்கள்மீது மட்டும் தான் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடாத்துவார்கள் என்று அவர் புலம்பியுள்ளார்.

பிரித்தானிய தொழிற்கட்சி தமிழர்களை ஏமாற்றுகிறதா?


பிரித்தானியத் தொழிற் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய தமிழரான சென் கந்தையா அவர்கள்பிரித்தானியாவில் மூன்று இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் எல்லோரும் தொழிற்கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்றும் கூறினார். பதினொரு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தொழிற்கட்சி தமிழர்களுக்கு என்னசெய்தது?

 • உண்ணாவிரதம் இருந்த தயா இடைக்காடருக்கு அழித்த வாக்குறுதிகளை நிறவேற்றியதா?
 • ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி எழுப்பிய போதெல்லாம் இலங்கை அரசு ஜனநாயக முறைப் படி தேர்ந்தெடுக்க்கப் பட்ட அரசு என்றும் விடுதலைப் புலிகள் பயங்கர வாத இயக்கம் என்று தொடர்ந்து கூறிவந்தது.
 • இந்தியாவின் வற்புறுத்தலுக்கு இணங்க தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சட்டபூர்வமாக பயங்கரவாத முத்திரை குத்தியது தொழிற்கட்சி அரசு.
 • அத்துடன் நிற்காமல் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கர வாத முத்திரை குத்தியது இதே தொழிற்கட்சி அரசு.
 • இருதிங்களில் வன்னியில் அறுபதினாயிரம் மக்கள் கொல்லப் பட்ட போது எதுவுமே செய்யாதிருந்தது இதே தொழிற்கட்சி அரசுதான்.
தொழிற்கட்சி மாநாட்டில் மூன்று இலட்சம் மக்களைத் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானம் அற்றது என்று தீர்மானம் நிறை வேற்றினார்கள். அது சட்ட விரோதமானது என்றோ அல்லது அதைக் கண்டித்தோ தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? இதே தீர்மானத்தை ஏன் பாராளமன்றத்தில் நிறை வேற்றவில்லை? இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?

இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகையை பிரித்தானியா நினைத்திருந்தால் சென்ற ஆண்டே நிறுத்தியிருக்கலாம். இது பிரித்தானிய வர்த்தகத்தோடு சம்பந்தக்ப் பட்டது என்றபடியால் தொழிற்கட்சி அரசு எதுவும் செய்யவில்லை.

இந்த மாதமும் இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்யும் நடவடிக்கையை தொழிற்கட்சி செய்யாவிட்டால் தமிழர்கள் எல்லோரும் தொழிற் கட்சிக்கு எதிராக் கிளர்ந்து எழ வேண்டும்.

வர்த்தகர்களின் மிரட்டலுக்கு சனல் -4 பணிந்ததா?


பிரித்தானியத் தொலைக் காட்சியான சனல்-4 நேற்று தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய Siobhain McDonagh MP அவர்கள்
Next time you want to buy underwear from Marks & Spencer’s, you want to buy a T-shirt from Next, you want to go on a holiday of a lifetime on a beautiful island off the coast of India, do you really want to spend your money on a government that chooses to lock 300,000 people up behind barbed wire?" "A country that is the most dangerous in the world to be a journalist." கூறியதாக செய்தி வெளியிட்டு அதன் காணொளியையும் தனது இணையத் தளத்தில் பதிவு செய்திருந்தது. சில மணித்தியாலங்களுக்குள் சனல்-4 தனது இணையத் தளத்திலிருந்து அவரது உரையை நீக்கிவிட்டது. மேற்படிவர்த்தக நிறுவனங்கள் சனல்-4 மீது அழுத்தம் பிரயோகித்தனவா? எதிர்காலத்தில் விளம்பரம் தரமாட்டோம் என்று மிரட்டப்பட்டதா?

Thursday, 1 October 2009

காணொளி: பிரித்தானியத் தொழிற்கட்சி மாநாட்டில் இலங்கை மானம் கப்பலேறியது


பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் உரையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் சியொபெய்ன் மக்னோ அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை அங்கு எடுத்துக் காட்டி இலங்கையுடன் வர்த்தகம் செய்யும் Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது அல்லது இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லும் போது நீங்கள் கொடுக்கும் பணம் மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் அரசுக்கு செல்லத்தான் வேண்டுமா என்று யோசியுங்கள் என்றார்.

உலகத்திலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு இலங்கை என்றும் அவர் குரலெழுப்பினார்.

The Labour party conference in Brighton turned its attention to the aftermath of the civil war in Sri Lanka today.

In his speech, Foreign Secretary David Miliband said –

"In those democracies, like Sri Lanka, where civil war claimed lives and liberty, we say governments have a duty to uphold the civil, social and political rights of all their citizens, whatever their ethnicity or religion."

The conference went on to debate – and pass – a resolution which condemned "the detention by the Sri Lankan government of 300,000 men, women and children" as inhumane.

The resolution also called for journalists to be allowed to enter Sri Lanka and report what is happening in the camps, and for the withdrawal of Sri Lanka’s favoured trading status.

Debating the resolution, former Labour whip Siobhain McDonagh described Sri Lanka as "a country where we can see on Channel 4 News young men, naked and bound, shot at close range."


இலங்கையில் அமெரிக்காவின் அவிற் பாகம்


இலங்கைப் போரில் நடந்த சகல வரம்பு மீறல்கள் தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகள் இறுதிப் போரில் காயப்பட்ட மக்கள் உயிருடன் புதைக்கப் பட்டமை தொடர்பான ஒளிப்பதிவுகளை அமெரிக்கா செய்மதி மூலம் பதிவு செய்து வைத்துள்ளது அது தருணம் வரும் போது அவற்றைப் பவிக்கும் என்று ஏற்கனவே இங்கு பதியப்பட்டுள்ளது அதை காண இங்கு சொடுக்கவும்

இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க அரசாங்க அறிக்கை தயாரிக்கப் பட்டுவிட்டது. அவ்வறிக்கையை அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப் படுமுன் இலங்கையில் இருந்து ஒரு உயர்மட்டக் குழு அமெரிக்கா சென்று அமெரிக்க நடவடிக்கைக்கு எதிராக களமிறங்கி விட்டது. இதனால் அறிக்கை அமெரிக்கக் காங்கிரசிற்கு சமர்பிப்பது இடை நிறுத்தப் பட்டுள்ளது.

போரில் இலங்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கையில் உரிய பாகங்கள் வழங்கப் பட்டுவிட்டன. சீனாவிற்கு அம்பாந்தோட்டை, நுரைச் சோலை போனறவையும் இந்தியாவிற்கு திருகோணமலை, மன்னார், காங்கேசந்துறை போன்றவையும் பாக்கிஸ்த்தனிற்கு திரைமறைவிலும் அவரவர்களுக்கு உரிய அவிர்ப் பாகங்கள் வழங்கப் பட்டுவிட்டன. இப்போது அமெரிக்காவின் பங்கு எங்கே?

மாபலி என்ற மன்னன் பெரிய யாகத்தைச் செய்தான் தான் விரும்பியவற்றை அடைய. அங்கு தானம் கேட்டு வந்தவர்க்கெல்லாம் அவரவர்களுக்கு உரியபடி அவிர்ப்பாகங்களை வழங்கினான். அவன் யாகத்தை அழிக்க திருமால் திருவுளம்(?) கொண்டாராம். அதற்காக வாமன அவதாரம் எடுத்தார்.
வாமன அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, குள்ளமான உருவத்துடன் வந்திருப்பது பகவான் என்று அறியாத மகாபலி மன்னன், “மூன்றடி மண் தானே… தாராளமாக எடுத்துக்கொள் என்று சொல்ல…” பகவான் விஷ்வ ரூபம் எடுத்து ஒரு அடியால் பூமியையும் பாதாள லோகத்தையும் மறு அடியால் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க, திகைத்த மகாபலி மன்னன் “என் தலையில் வைக்கவும்…” என்றானாம். அவன் தலைவிதி அப்படி. நாராயணன் அவன் தலையில் கால் வைத்து அழுத்தி அவனைக் கொன்றாராம்.

இதுபோலத்தான் இப்போது அமெரிக்கா தனது பங்காக போர்குற்றங்களைச் சாட்டாக வைத்து இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவரப் போகிறது. அது மற்றப் பங்காளர்களுக்கு பேரிடியாக அமையப் போகிறது.

Wednesday, 30 September 2009

காணொளி: இந்தியாவை கடுமையாகச் சாடினார் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்.

இலண்டனில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் BJP ஆட்சியில் இருந்திருந்தாலும் தமிழர்களுக்கு எதிராகத்தான் நடந்து கொண்டிருந்திருக்கும் என்றுகூறி இத்தாலிச் சனியாளின் கட்சிக்கு மறைமுகமாக வக்காலாத்து வாங்கினார். ஆனால் இந்தியா தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதை ஒத்துக் கொண்டார். சர்வதேசமும் தமிழர்களுக்கு எதிராக நடந்தது என்றார். அதே கூட்டத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அரியநெந்திரன் ஜெயானந்தமூர்த்தி இந்தியாவைக் கடுமையாகச் சாடினார்:

Tuesday, 29 September 2009

I need a new hand to hold forever.


Pass, pass, pass, you dark clouds
Let the full moon shine on me
Blow, blow, blow, sweet breeze
Blow away her bitter memories
Let it be the thing of the past.
I need a new life as I need fresh air


Play, play, play, a new tune
I am fed up of the old one
Dance, dance, dance, with new moves
I am so fed up dancing with her
So unfaithful, so selfish and so deceitful
Let it be the thing of the past
I need a new life as I need a new tune.

Walk, walk, walk, a new way.
I so fed up of the old way
She left me in the middle of nowhere
So grievously I left all alone
Let it be the thing of the past
I need a new hand to hold forever.

இந்தியாவை இலங்கை மீண்டும் மிரட்டியதா?


இலங்கையில் போர் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை போர்முனையில் எழுபதாயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர்களை ஐநூறு புலிகள் தடுத்து வைத்திருப்பதாகாவும் இலங்கை அரசு பொய் கூறியது. ஆனால் செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டி ஐக்கிய நாடுகள சபை அதற்குள் இரண்டரை இலட்சம் பொதுமக்கள் இருப்பதாக கணக்கிட்ட தகவல் வெளிவந்தது. போர்முனையில் சகல நடவைக்கைகளையும் தனது செய்மதிகளூடாக அவதனித்துக் கொண்டிருந்த இந்தியா பதின் மூன்றாம் நாள் பாரதப் போரில் அஸ்வத்தாமனா இறந்தான் என்று துரோணாச்சாரியார் கேட்டபோது மௌனமாக இருந்து உண்மையை மறைத்த தருமரைப் போல் உண்மை தெரிந்தும் தெரியாதது போல் இருந்து அறுபதினாயிரம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்க உதவியது.

போர் நடக்கும் போது போர் நிறுத்தம் போர் நிறுத்தம் என்று தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுக்கப் பட்டபோது அதை ஏற்றுக் கொள்வது போல் இந்தியா பாசாங்கு செய்து இரு தமிழின விரோதிகளை இலங்கைக்கு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த அனுப்பவது போல் நாடகமாடி தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் இந்தியா மேற் கொள்ளப் பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்பது போல் இந்தியா போலியாகக் கூறிவந்தது. அதற்கு இலங்கையின் பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வு காணப் படவேண்டும் என்று இந்தியா புலம்பிவந்தது. அண்மையில் எகிப்தில் நடந்த அணிசேரா மாநாட்டின் போது இந்தியப் பிரதமரை சந்தித்த மஹிந்த ராஜபக்சே இனி இனப்பிரச்சனைத் தீர்வைப் பற்றிக் கதைக்கக் கூடாது என்று மிரட்டினாராம். அதைத் தொடர்ந்து இந்தியா இனப் பிரச்சனைத் தீர்வைப் பற்றிக் கதைப் பதை விட்டுவிட்டது.

இந்த மாதம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் டெல்லி சென்று முகாம்களில் அடைபட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் தொடர்பாகக் கதைத்ததின் பின் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை அரசினரைச் சந்தித்து முகாமில் இருக்கும் மக்கள் தொடர்பாகக் கதைத்தாராம். டெல்லியில் இருந்து இலங்கைக்கு இது தொடர்பாக கடிதமும் சென்றது. ஆனால் நியூயோர்க்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்ததை தொடர்ந்து இந்தியா இலங்கையின் வன்னி முகாமில் சட்டவிரோதமாக அடைக்கப் பட்டிருக்கும் மக்கள் தொடர்பாகக் கதைப்பதை நிறுத்திக் கொண்டது. இலங்கை வெளிவிகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சரை மிரட்டினாரா?

Monday, 28 September 2009

முள்ளிவாய்க்கால மர்மங்கள் விரைவில் வெளிவரும் என்கிறார் ஜெயானந்தமூர்த்தி (பா.உ)


முள்ளிவாய்க்காலில் நடந்த மர்மங்கள் விரைவில் வெளிவரும் என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் திரு அரியனெந்திரன் தயானந்தமூர்த்தி. அவை வெளிவரும்போது தலைவர் பிரபாகரன் என்னவிதமான தந்திரோபாயங்களை இறுதியில் செய்தார் என்ற மர்மமும் வெளிவரும் என்றார் மேலு அவர். அவர் இலண்டனில் நிகழ்த்திய உரையின் காணொளி:Sunday, 27 September 2009

காணொளி: இலண்டனில் திருமாவளவன்


இலண்டனில் நடந்த நிகழ்வொன்றில் விடுதலைச் சிறுத்தைக்ளின் தலைவரும் இந்திய பாராளமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்துவருபவருமான தோழர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வைப் புறக்கணிக்கும் படி இலண்டனில் ஒரு குறுந்தகவல் உலாவியது.


காணொளி: இலண்டனில் தமிழருவி மணியன்இலண்டனில் நடந்த நிகழ்வொன்றில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் தமிழருவி மணியனும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இருவருமே நிகழ்ச்சிக்குது தாமதமாகவே வந்தாரகள். ஈழத் தமிழர் பிரச்சனைக்காக பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முன்னாள் ஐரோப்பியப் பாராளமன்ற உறுப்பினர் றொபெர்ட் இவன்ஸ் அவர்கள் நிகழ்ச்சி மிகத்தாமதமாக ஆரம்பித்ததால் சற்று மனம் குழம்பி நிகழ்ச்சி GMT நேரப்படி நடக்காமல் LTT (London Tamil Time) நேரப்படி நடக்கிறது என்று சொன்னார்.

தமிழருவி மணியனும் திருமாவளவனும் தமது உரையில் தமிழ்நாட்டு அரசியலை இழுக்கத் தவறவில்லை. திருமாவளவன் ஜெயலலிதாவையும் மணியன் கருணாநிதியையும் தாக்குவதில் கணிசமான அளவு நேரத்தைச் செலவிட்டனர்.

தமிழருவி மணியனின் உரை:

திருமாவளவனின் உரை தொடரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...