Saturday, 26 September 2009

காணொளி: வன்னி முகாம் - அல் ஜஸீராவின் பார்வை.


வன்னி முகாம்களின் அவலங்களைப் பற்றிய அல்ஜஸீரா தொலைக்காட்சியின் பார்வை அங்கிருந்து வெளியில் வந்த பூசகர் சம்பந்த ஐயரின் பேட்டியுடன் பதியப்பட்டுள்ளது:

தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகள் மூடி மறைக்கப் படுகின்றன.


வன்னியில் உள்ள மூன்று இலட்சம் அகதிகளின் அவலங்களைப் பற்றி ஓரிரு தகவல்கள் மட்டுமே வெளியில் வந்தன. கைத்தொலை பேசிகளில் இரகசியமாக எடுக்கப் பட்ட ஓரிரு காணொளிக் காட்சிகாளால் மொத்த மூன்று இலட்சம் மக்களின் அவலங்களை வெளிக் கொண்டு வர முடியாது. உண்மையான அவலங்கள் வெளிக் கொண்டுவரப் பட்ட அவலங்களிலும் பன்மடங்கானது. முகாமுக்குள் இருக்கும் காயப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் முகாமுக்குள் வைத்தே செய்யப் படுகின்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்த நிலையில் உள்ளனர். இவர்களில் எவருக்கும் வெளியில் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப் படவில்லை. இவர்கள் வெளியில் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப் பட்டால் இவர்களைக் காயமடையச் செய்த தடை செய்யப் பட்ட ஆயுதங்கள் பற்றிய உண்மை வெளிவந்துவிடாமல் மூடி மறைக்கவே இவர்கள் முகாமுக்குள் வைத்தே மருத்துவ வசதிகள்(?) செய்யப் படுகின்றன.

Friday, 25 September 2009

முகாமுக்குள் முகாம்கள்


ஒரு நாட்டில் மக்களாட்சி செவ்வனவே நடை பெற வேண்டுமாயின் அந்நாட்டில்:
  1. சட்டவாக்கற்துறை: பாராளமன்றம் போன்றவை
  2. நீதித்துறை
  3. நிர்வாகத்துறை
  4. ஊடகத்துறை
ஆகியன ஒழுங்காக செயலாற்ற வேண்டும். இவற்றை மக்களாட்சியின் நாலு தூண்கள் என்பர்.

இலங்கையின் அரசியலமைப்பும், அதன் கட்சி அரசியலும், அரசியற் கட்சிக்குள் அதன் உறுப்பினர்களுக்கு சுதந்திரமின்மையும் இலங்கயின் சட்டவாக்கற் துறையான பாராளமன்றம் ஆட்சியிலுள்ள கட்சிக்கு கட்டுப் பட்டதாக அமைகிறது ஆட்சியில் உள்ள கட்சி தனி ஒருவரின் அல்லது அவரின் குடும்ப அதிகாரத்துக்குள் அடங்குகிறது.

இலங்கையின் நீதித்துறைக்கு பாராளமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு வியாக்கியானம் அளிக்கும் அதிகாரம் உண்டு. பாராளமன்றம் கட்சி அரசியலுக்கு ஏற்றவகையில் அல்லது கட்சிக்கு ஏற்றவகையில் சட்டங்களை இயற்றும். தற்போது உள்ள அரசியலமைப்புச் சட்டம் முன்னாள் இலங்கை அதிபர் ஜே ஆர் ஜெயவர்த்தனேக்கு ஏற்ப இயற்றப்பட்டது என்று கூறுவார்கள்.

இலங்கையின் நிர்வாகத்துறை இலங்கை குடியரசுத்தலைவர் அவரின் கீழ் செயற்படும் மந்திரிகள் அவர்களின் கீழ் செயற்படும் அதிகாரிகள் என்றபடி அமையும். மொத்தத்தில் நிர்வாகத்துறை ஒருவருக்கு கட்டுப் பட்டதாக அமைகிறது.

இலங்கையின் ஊடகத்துறை பலத்த கட்டுப் பாட்டுக்கும் பயமுறுத்தலுக்கும் உள்ளாகி விட்டது.

ஆக மொத்தத்தில் இலங்கையில் மக்களாட்சியே இல்லை என்றே சொல்ல வேண்டும். இலங்கை ஒரு தனிநபரினதும் அவரது குடும்பத்தினரதும் கட்டுப் பாட்டுக்குள் தன்னை அறியாமலே சென்று கொண்டிருக்கிறது.

இலங்கை மக்கள் பலருக்கு இப்போது பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்ற போதை மருந்து வெற்றிகரமாக ஊட்டப் பட்டு விட்டது. முழு இலங்கையுமே ஒரு முகாமாக மாறிவருகிறது.

இதன் விளைவை இனி வருங்காலங்களில் நாம் உணரலாம். மாற்றுக் கருத்து மிரட்டப் பட்டு இல்லாமல் செய்யப் பட்டது போல் மாற்று அரசியல் கட்சிகளுக்கும் இனி ஆபத்து ஏற்படும். இதன் விளைவாக சிங்களவர்கள் மத்தியில் பாரிய கலவரங்கள் நிலக்கீழ் இயக்கங்கள் உருவாகும்.

1972இல் சிங்களவர்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்பட்டு பல சிங்கள மக்கள் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப் பட்ட போது சுதந்திரன் என்னும் ஒரு பத்திரிகையின் ஒரு ஆசிரியத் தலையங்கம் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று இருந்தது.

ஹொண்டாவின் புதிய ஒற்றைச் சில்லு வண்டி


ஹொண்டா நிறுவனத்தினர் ஒரு புதிய வகையான பட்டரியில் (battery) இயங்கும் ஒற்றைச் சில்லு வண்டியைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் உட்கார்ந்து நீங்கள் போக வேண்டிய இடத்தை நோக்கிச் சாய்ந்தால் அது உங்களை எடுத்துச் செல்லும். பத்துக் கிலோ எடையுள்ள மணித்தியாலத்திற்க்கு ஆறு கிலோமிற்றர் தூரம் செல்லக்கூடிய இந்த வாகனம் மற்ற ஒற்றைச் சில்லு வண்டிகளைப் போல் அல்லாமல் தன்னைத்தானே சமநிலைப் படுத்தக் கூடியது. இதற்கு U3-X எனப் பெயரிடப் பட்டுள்ளது. கால் பலவீனமான வயதானவர்களுக்கு இந்த வண்டி உகந்ததாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்று ஹொண்டா நிறுவனத்தின் தலைவர் ரக்கனொபு ஐரொ தெரிவித்துள்ளார். இந்த வாகனம் சந்தைக்கு வர சில காலம் எடுக்கும்.

Thursday, 24 September 2009

Hard drive will drive hard.


Hey, download my love

Baby unzip your heart

Extract it to full version

Install there forever.


If you let me have ACCESS

I will EXCEL in your heart

You need not say a WORD

The OUTLOOK would be fantastic


As we surf through

www.heaven.com

No need for Norton

Since the software

Are so firmed together


Hard drive will drive hard

To make our love soft

No need to be monitored

The love is printed deep into my heart

வன்னி வதை முகாம்கள் போரின் ஒரு பகுதியே.


இலங்கையில் போர் முடிந்துவிட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப் பட்டு விட்டது இனி அமைதிதான் இனி இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டியதுதான். உல்லாசப் பிரயாணிகள் வரலாம், இலங்கையில் முதலீடு செய்யலாம் கிழக்கில் உதயம் வடக்கில் வசந்தம் இப்படித்தான் செய்திகளை இப்போது பார்க்கிறோம்.

சில நாடுகள் போர்தான் முடிந்துள்ளது இனப் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் என்று சொல்கின்றன. இனப் பிரச்சனை தீர்ந்தால்தான் தமது உலகமயமாக்குதலுக்கு ஏற்ற சூழல் இலங்கையில் ஏற்படும் என்று அவை கருதுகின்றன. அவரிகளின் அக்கறை தமிழர் நலன் சார்ந்ததல்ல. தமது வர்த்தகங்களை ஒழுங்காக மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்த அவை விரும்புகின்றன. அமெரிக்காவின் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது உலக ஒழுங்கை நிலை நாட்ட அமெரிக்காவல் மட்டும் தனித்து செயற்பட முடியாது மற்ற நாடுகளும் அதற்குத் துணைபோகவேண்டும் என்று அறை கூவல் விடுத்தார். அவர் அங்கு சொன்னதன் தாற்பரியம் அமெரிக்கா தனித்து பன்னாட்டுக் காவற்துறையினர் என்ற பணியாற்றி உலகமயமாக்கலுக்கான சூழலை ஏற்படுத்த மற்றநாடுகள் அமெரிக்கா சிரமப் பட்டு ஏற்படுத்திய சூழலில் வர்த்தகச் சுரண்டலை மேற்கொள்ளுவது முறையல்ல என்பது தான்.

இலங்கையில் போர் முடிந்து விட்டது ஆனால் அமைதி திரும்பவில்லை. இனி அமைதி கெடலாம் என்று எண்ணும் நாடுகள் இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு இலங்கையை உலகமயமாக்கலுக்கு உகந்த நாடாக மாற்ற வேண்டுகின்றன.

இலங்கைப் பேரினவாதிகள் இலங்கையில் இனப் பிரச்சனை என்று ஒன்று இல்லை அதைப் பற்றிக் கதைக்கத் தேவையில்லை என்று சொல்கின்றனர்.

இலங்கையின் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டிருப்பதை மனித நேய அமைப்புக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் சில நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. அல்லாவிடில் தமது மனித நேய முகமூடி கிழிக்கப் பட்டு விடும் என்று இவை அஞ்சுகின்றன. அமெரிக்கா இதில் தனி அக்கறை காட்டுவது இதற்க்காகத்தான்.

ஆனால் ஆரிய சிங்களக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இன அழிப்புப் போரின் ஒரு பகுதியே இந்த முகாம்கள். அவர்களை இலகுவில் வெளியில் விடும் எண்ணம் அதற்கு இல்லை. ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் இந்த முகாம்களை நடத்துவதில் ஈடுபட்டுள்ளனர். போர் முனை எப்படி வெளி உலகிற்கு மூடி மறைக்கப் பட்டதோ அதே போல் முகாம் நிலைகளும் வெளி உலகிற்கு மூடி மறைக்கப் படுகிறது. அங்கு போர் வேறு ஒரு வடிவத்தில் நடக்கிறது.

காணொளி: பிபிசி வன்னி முகாம்களின் கொடுமையை திரிபு படுத்துகிறது


சனல்-4 தொலைக்காட்சி வன்னி முகாமில் நடக்கும் அவலங்களை வெளிக் கொண்டு வந்து உலகையே உலுக்கியது. இதனால் சிலர் பி.பி.சி தொலைக் காட்சி யைத் தாக்கியும் பேசினர். பின்னர் சனல்-4 தொலைக்காட்சிக்கு பதிலளிக்க பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவருக்கு பி.பி.சி தொலைக் காட்சி களம் அமைத்துக் கொடுத்தது. அதில் அவர் தமிழர்கள் சரித்திரம் இலங்கையில் முடிந்துவிட்டதென்றார்.

இப்போது பி.பி.சி தொலைக் காட்சி தனது பங்கிற்கு வன்னி முகாம்களில் இரகசியமாக ஒளி பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளிப் பதிவை ஒலி பரப்பி அதில் உள்ள மிக மோசமான நிலைமையை புரிந்து கொள்ளாமல் பி.பி.சி தொலைக் காட்சியின் செய்தியாளர் "It doesnt look that bad to me." என்று இலங்கை அரசிற்கு வக்காலாத்து வாங்கினார். அதிக உயரம் கூட இல்லாத முகாம், நிலமெங்கும் சேறு. ஒரு காற்றடித்தால் பறந்துவிடும் கட்டமைப்பு. அது அவருக்கு அந்தளவு மோசமில்லையாம். அத்துடன் நிற்கவில்லை இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க ஒரு புத்தகத்தை காட்டி முகாம்களில் கல்வி கற்பித்தல் பரீட்சை நாடாத்துதல் போன்றவை நடக்கின்றன என்று புளுகியதையும் பி.பி.சி தொலைக் காட்சி ஒளிபரப்பியது. மெனிக் பாம் என்னும் முகாமை காட்சிப் பொருளாக வைத்து அதை வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குக் காட்டி இலங்கை அரசு ஏமாற்றுவதை பி.பி.சி தொலைக் காட்சியும் செய்கிறது.

வழமையாக இப்படிப்பட்டவற்றை ஒளிபரப்பும் போது இருதரப்பு நியாயங்களைக் கேட்கும் பி.பி.சி தொலைக் காட்சி இதில் சிங்களத் தரப்பில் பேச இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்கவை அனுமதித்தது ஆனால் தமிழர்தரப்பில் பேச எவரையும் அழைக்கவில்லை.

தட்டிக் கேட்க ஆளில்லாமல் இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க சண்டப் பிரசண்டனாகி சனல்-4 தொலைக்காட்சியை வெளுத்து வாங்கினார்.

BBC இன் கன்றாவியை இங்கு காணலாம்:

http://www.youtube.com/watch?v=eGjVfwEgnt0Wednesday, 23 September 2009

வன்னி முகாமிலிருந்து தப்பியவர் மஹிந்த ஆட்சியை சகிக்காமல் மீண்டும் முகாமுக்குத் திரும்பினாராம்.


வன்னி வதை முகாம்களின் ஒன்றான பூந்தோட்ட முகாமிலிருந்து தப்பி ஓடியவர் ஒருவர் வெளியில் மஹிந்த ஆட்சியில் மக்கள் இருக்கும் நிலையைக் காணச் சகிக்காமலோ என்னவோ திரும்ப முகாமுக்குள் நுழைய முற்பட்டபோது பிடிபட்டாராம்.

இலங்கைத் காவல் துறையின் பேச்சாளரான மூத்த பிரது கவற் துறை பேரதிபர் நிமால் மெடிவக்கவின் தகவலின் படி பூந்தோட்ட முகாமிலிருந்து ஒருவர் தப்பி ஓடினாராம் பின்னர் திரும்பி வந்து விட்டாராம்.

வேறு இடங்களில் இருந்து வரும் தகவலின் படி பூந்தோட்ட முகாமிலிருந்து ஒருவர் வெளியே "அழைத்துச்" செல்லப் பட்டார். அவர் கொல்லப் பட்டு விடுவார் என்று அறிந்த அவருடன் இருக்கும் மற்ற முகாம்வாசிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இப்போது ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் வேளையில் முகாமுக்குள் ஒரு கலவரத்தையோ அவர்களைக் கொன்று குவிப்பதையோ விரும்பாமல் அவரை மீண்டும் கொண்டுவந்து முகாமுக்குள் சேர்த்துவிட்டனராம். அதற்கு விடும் கயிறுதான் தப்பி ஓடியவர் திரும்பி வந்தார் என்பது.

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வரப் போகிறதா?முதலில் தனது பரம்பரைத் தொழிலான அடுத்த இந்தியப் பிரதமர் வேலையை விரைவில் செய்யவிருக்கும் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரு சுற்றுப் பயணம் மேற் கொண்டார்.

கொடாநாட்டுக் கொடியிடையாள் துயிலெழுந்து சனல்-4 தொலைக்காட்சி பற்றிக் குரலெழுப்புகிறார்.

கோபாலபுரத் தாத்தா தான் மைய அரசிற்க்கு கொடுத்த அழுத்தத்தால் மைய அரசு இலங்கையை மிரட்டுகிறதாம். இலங்கை பயந்து நடுங்கி இனி பணிந்து விடும் பாருங்கோ! முகாமில் வதை படும் மூன்று இலட்சம் தமிழர்களுக்கும் இனி உல்லாச வாழ்க்கைதான்.

தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் மன்மோகன் சிங்கையும் சேலையணிந்த முசோலினி என வர்ணிக்கப் படும் சோனியாவையும் சந்தித்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை பற்றி எடுத்துரைத்தார்களாம். குற்றாவாளிகளிடம் நீதி கேட்கிறார்கள்.

இந்தக் குடுமிகள் சும் ஆடுமுங்களா? தேர்தல் விரைவில் வரப் போகிறது போலிருக்கிறது. வாழை இலைக்கு மேல் புரியாணிக்கும் கீழ் காந்திதாத்தா படம் அச்சிட்டதாளுக்கும் தயாராகுங்கள்.

கைது செய்யப் படலாமென்று பயந்துதான் ராஜபக்சே ஐநாவிற்கு செல்லவில்லையா?


சந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்க இலங்கையின் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒல்லாந்துக்கு ஒரு பயணம் மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அவரை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கைது செய்து விசாரிக்கும் படி நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் சமர்க்கிப்பட்ட சாட்சியங்கள் போதாது என்று அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப் பட்டது.

இன்று நடக்கும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் இலங்கை சார்பில் மஹிந்த ராஜபக்சே அவர்கள் பெரிய பரிவாரத்துடன் பங்கு பற்றுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. பின்னர் அது காரணங்கள் தெரிவிக்காமல் இரத்துச் செய்யப்பட்டு விட்டது. அவர்மீது அமெரிக்காவில் வழக்குத் தொடுக்கப் படும் சாத்தியம் நிறைய உண்டு. இலங்கைப் போரில் உடல் சிதறடிக்கப் பட்டு கொல்லப் பட்ட ஆயிரக் கணக்கான குழந்தைகளின் பல படங்கள் ஆதாரமாக உண்டு. தமிழர்மீதான் அட்டூழியங்களுக்கான காணொளிக் காட்சிகள் பல உண்டு. தமிழர் மீதான கோடூரங்களை நேரில் கண்ட சாட்சியங்கள் உண்டு. ஆகவே மஹின்த மீது வழக்குத் தொடுக்கப் பட்டு அவர் அமெரிக்காவில் கைது செய்யப் படும் சாத்தியம் உண்டு. இதற்க்குப் பயந்துதான் அவர் அமெரிக்கா செல்லவில்லையா?

Tuesday, 22 September 2009

புலிகளின் தலைமை செயற்படுகிறது.


இந்தமாதம் ஐந்தாம் திகதி இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் இரு விடுதலைப் புலிகள் கொல்லப் பட்டனர் என்ற செய்தியிலிருந்து இன்னும் விடுதலைப் புலிகள் எஞ்சி இருக்கின்றனர் என்று ஊகித்துக் கொள்ளலாம். விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் இலங்கையின் சகல பகுதிகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களின் சரியான எண்ணிக்கை இப்போது அறிய முடியாது. அவர்களில் சிலர் எஞ்சியிருப்பதை இலங்கை அரசு உட்பட பலதரப்பினரும் ஒத்துக் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது.

இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்கே நாராயணன் புதுடில்லியில் காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் புலம்பும் போது விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப் பட்டாலும் அவர்களுக்கு நிதிவழங்கிய புலம் பெயர்ந்த கட்டமைப்பு இபோதும் பாதுகாப்பாக உள்ளது என்றார்.

ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு சுற்றும் பயணம் செய்தபோது மோசாமான பாதுகாப்புக் கெடுபிடி இருந்தது. குற்றமுள்ள நெஞ்சின் உணர்வு அது. அவரது பயணத்திற்கு பாதுகாப்பிற்க்காக பெருமளவில் செலவழிக்கப் பட்டது.

ஒரு தொகை விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பி இருக்கின்றனர் என்பது உறுதி. அவர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதை கற்பனை கூடப் பண்ணிப்பார்க்க முடியாது. ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் சதியால் அவர்கள் வாழ்வை அர்ப்பணித்து வளர்த்த போராட்டம் மழுங்கடிக்கப் பட்டது. அவர்கள் யாருடைய உரிமைக்கும் வாழ்வுக்குமாக தம்மை அர்பணித்தார்களே அந்த தமிழ் மக்கள், அவர்கள் குழந்தைகள், அவர்கள் உடன் பிறந்தவர்கள், அவர்கள் உற்றார் உடல் சிதறடிக்கப் பட்டுக் கொல்லப் பட்டனர்; உயிருடன் புதைக்கப் பட்டனர்; கேவலமாக நடத்தப்பட்டு வதை முகாம்களுக்குள் அடைக்கப் பட்டனர். இதற்குப் பழிவாங்க அவர்களில் ஒரு சிலராவது துடிக்கலாம். ஆனால் அவர்களில் எவரும் அப்படி இதுவரை எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இது ஏன் என்பதற்கான விடைகள்:

  • விடுதலைப் புலிகளுக்கு ஒரு தலைமை இப்போதும் இருக்கிறது.
  • விடுதலைப் புலிகளின் தலைமை சகல மட்டங்களிலும் தனது தொடர்பை வைத்திருக்கிறது.
  • விடுதலைப் புலிகளின் தலைமையின் உத்தரவிற்கு அமைய எஞ்சிய விடுதலைப் புலிகள் பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Monday, 21 September 2009

பத்மநாதனைக் கடத்தியது பிரபாகரன் இருக்கும் இடத்தை அறியவா?


பத்மநாதன் இலகுவில் கைது செய்யப் படக் கூடியவர் அல்லர். ஆரிய சிங்களக் கூட்டமைப்புடன் மூன்றாவது ஒரு நாடும் பத்மநாதனை கள்ளத்தனமாக கடத்தப் பட்டதில் சம்பந்தப் பட்டுள்ளது. அம் மூன்றாவது நாட்டில் இருந்துதான் விடுதலைப் புலிகள் இனிச் செயற்படும் சாத்தியம் இருப்பதாக இந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கொழும்பு தெரிவித்தது. பிரபாகரன் அந்த மூன்றாவது நாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று கூடக் கொழும்பில் இருந்து செய்திகள் வெளிவந்தன. அந்த அளவிற்கு விடுதலைப் புலிகளுக்கும் அம் மூன்றாவது நாட்டிற்கும் நெருக்கம் இருந்தது. அம் மூன்றாவது நாட்டுக்குரியவர்களுக்கு பெருந்தொகை இலாபமீட்டக் கூடிய வர்த்தக உடன்பாட்டு வாக்குறுதி அளித்து பத்மநாதனை சட்டவிரோதாமாகக் கடத்தும் நடவடிக்கை எடுக்கப் பட்டதாம். பத்மநாதன் பன்னாட்டுக் காவற்துறையால் தேடப் படுபவர். அவரை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்காமல் இப்படி கள்ளத்தனமாக கடத்தியது ஏன்?

முள்ளிவாய்க்காலைக் கைப்பற்றியவர்களுக்கு பிரபாகரனை உயிருடனோ அலது பிணமாகவோ கைப்பற்ற முடியவில்லை. இலங்கை இராணுவம் காட்டிய படங்கள் எதுவும் பிரபாகரனை ஒத்தது அல்ல. காட்டிய படங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. பிரபாகரன் தனது உடல் கூட எதிரியின் கைகளுக்கு சிக்கக் கூடாது என்று உருத்தெரியாத மாதிரி தற்கொலை செய்திருக்கவேண்டும் என்ற முடிபு அவரது உடலை முள்ளிவாய்க்காலில் தேடியவர்கள் எடுத்துவிட்டனர். அதன் பிறகு அவரது உடலைக் கைப்பற்றி அதை கருணாவும் தயா மாஸ்டரும் அடையாளம் காட்டியபின் தாம் எரித்து விட்டதாக அறிவித்த இலங்கை அரசு இன்றுவரை பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை வழங்கவில்லை.

பத்மநாதன் முதலில் பிரபாகரன் இறக்கவில்லை என்றார். பின் இறந்து விட்டார் என்றார். ஆனால் பிரபாகரனுக்கு யாரும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அஞ்சலிக் கூட்டம் ஏறபாடு செய்யவில்லை. பிரபாகரனின் உத்தரவின் பேரில்தான் பிரபாகரன் இறந்து விட்டதாக பத்மநாதன் தான் முதலில் அவர் உயிருடன் இருக்கிறார் என்று சொன்னதை மாற்றி அறிவித்தாரா?

இலங்கை அரசுக்கு தனது பாதுகாப்புச் செலவீனங்களையோ படைத்துறை பலத்தையோ அல்லது அதன் எண்ணிக்கையையோ குறைக்கும் எண்ணம் கிடையவே கிடையாது. பொருளாதர நெருக்கடியில் இருக்கும் இலங்கை ஏன் இதைச் செய்யத் தயங்குகிறது?

எல்லையில் சீன ஊடுருவல் பாக்கிஸ்த்தானியத் தீவிர வாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்கே நாராயணன் புதுடில்லியில் காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் புலம்பினார்: விடுதலைப் புலிகளின் புலம் பெயர்ந்த தமிழர்களின் கட்டமைப்பு இப்போதும் அப்படியே இருக்கிறது. அவர் ஏன் இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு பயப் படுகிறார்?

இவற்றிலிருந்து ஒன்று தெரிகிறது: விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இறுதியில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது. ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் முக்கிய குழப்பம் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது என்பதுதான். இதற்கு விடை கொடுக்கக் கூடியவர் பத்மநாதன்தான். இதற்க்காகத் தான் பத்மநாதன் சட்ட விரோதமாகக் கடத்தப் பட்டார். இதனால்தான் பத்மநாதன் கடத்தலுக்குப் பிறகு இலங்கை தனது கவனத்தை எரித்திரியாமீது திருப்பியது. அங்கு அவசரம் அவசரமாக இலங்கைத் தூதுவராலயம் திறக்கப் பட்டு இலங்கை இராணுவப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரா தூதுவராக நியமிக்கப் பட்டார். விடுதலிப் புலிகளின் தலைமை எரித்திரியாவிலா?

ஷாருக் கானைத் துணைக்கு இழுக்கும் ராஜபக்சே.


நடிகர் ஷாருக் கான் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த இந்திய சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
அதற்காக 14-08-2009 வெள்ளிக் கிழமை இரவு அவர் அமெரிக்காவின் நியூஜெர்சி நியுவார்க் விமான நிலையம் சென்று இறங்கினார்.
விமான நிலையத்தில் அவரை அமெரிக்கக் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அவரை விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரம் விமான நிலையத்தில் சிறை வைத்தனர்.
ஷாருக் கான் ஒரு நடிகர் என்று எவ்வளவோ விளக்கம் அளித்தும் ஏற்கவில்லை.
இது பற்றி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் எட்டியதும் அவர்கள் விரைந்து சென்று விளக்கம் அளித்து ஷாருக் கானை விடுவித்தனர்.

கான் என்ற பெயர் இருந்ததமைக்காக ஷாருக் கானுக்க்கு இப்படி அநியாயம் செய்த அமெரிக்காதான் தன்னை மனித உரிமை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று துடிக்கிறது என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே புலம்பியுள்ளார்.

Sunday, 20 September 2009

ராஜபக்சே எனும் அப்பாவியச் சுற்றிக் கழுகுகள் வட்டமிடுகின்றனவாம்.


ராஜபக்சே எனும் அப்பாவியச் சுற்றிக் கழுகுகள் வட்டமிடுகின்றன என்று கொழும்புப் பத்திரிகை ஒன்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளது.

அது சுட்டிக்காட்டும் கழுகுகள்: ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா.

இலங்கை அசாதாரண அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் அப்பாவியான் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டை இலங்கை தனது ஆசிய ஆபிரிக்க நண்பர்களுடன் இணைந்து முறியடித்தைப் பொறுக்க முடியாமல் மேற்கு நாடுகள் தவிக்கின்றனவாம்.

சிறு பயண அனுமதி(விசா) மறுப்பிலிருந்து பாரிய ஜீஎஸ்பி+ வர்த்தகச் சலுகை மறுப்பிலிருந்து வரை தம்மைத் தாக்குவதுடன் நிற்காமல் அமெரிக்க காங்கிரசு விசாரணைவரை அழுத்தம் கொடுத்து தமது மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக விசாரிக்கத் தூண்டுகின்றன்வாம்.

இதே வேளை இலங்கையின் மட்பாண்டத் தொழில் ஜீஎஸ்பி+ வர்த்தகச் சலுகை நிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப் படுமாம். இதனாலும் ஆடைத்தொழில் இழப்பாலும் பல பெண்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கப் போகின்றனராம். தமிழன் தந்து வாழ்வையே இழந்து விட்டானே எரி குண்டுகளாலும் கொத்துக் குண்டுகளாலும்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...