Saturday, 29 August 2009

ஈழம்: உலகத்தின் பார்வை மீள்மையப் படுத்தப் படுமா?


1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் திகதி விடுதலைப் புலிகள் இராணுவத்திற்கு எதிராகசெய்த தாக்குதலை மையப் படுத்தியே உலகத்தின் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்பான பார்வை இதுவரை இருந்து வந்தது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பெரும்பாலான தமிழர்களின் வாக்குரிமை பறித்ததிற்கு எதிராக தமிழர்கள் ஆட்சேபித்தனர் ஆனால் ஆயுதம் ஏந்தவில்லை.

தமிழர்களின் நிலங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு அங்கு சிறையிலிருந்த சிங்களக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளித்து குடியேற்றியபோது தமிழர்கள் செய்வதறியாது கைபிசைந்து நின்றனர். கையில் ஆயுதம் ஏந்தவில்லை.

சிங்களம் ஆட்சி மொழியாக்கப் பட்ட போது தமிழர்கள் அமைதி வழியில் எதிர்ப்புத் தெரிவித்த போது மோசமான வன்முறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

இவற்றை எல்லாம் சர்வதேச சமூகம் அறிந்தும் அறியாதது போலிருந்தது.

1983இற்குபின் தமிழ் ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசுக்கு எதிராக செய்த தாக்குதல்கள் இலகுவாக பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தப் பட்டது. ஆயுத இயக்கங்களின் நடவடிக்கை சுமூகமான உலகமயமாக்கலுக்கு தடையென்றுணர்ந்த மேற்கு நாடுகளின் ஊடகங்கள் விடுதலைப் போராட்டங்களை கொச்சைப் படுத்தின.

பிராந்திய ஆதிக்கத்தை வளர்க்க நினைத்த நாடுகளும் தமிழர் உரிமைப் போராட்டத்தை தமக்கு சாதகமாக்கிவிட்டு அழிக்க முயன்றன.

ரொனால்ட் ரீகன் - மார்கரெட் தட்சர் ஆட்சிக் காலங்களில் சர்வதேச நியமங்கள் ஒரு அசிங்க வடிவத்தை எடுத்தன. உலகமயமாக்கலுக்காக எந்த நாடும் திரைமறைவில் எந்த அசிங்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைப்பாடு உரம் பெற்றது. சோவியத்தின் வீழ்ச்சியும் பனிப்போர் முடிவும் இதற்கு வசதி செய்து கொடுத்தன.

இத்தனை தடைகளுக்கும் மத்தியில் தமிழ்த்தேசியம் தனது ஆயுத போராட்டத்தை வலுப்படுத்திக் கொண்டே இருந்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து புஷ் நிர்வாகத்தின் மூடத்தனமான முடிவுகளால் நியாயமான ஆயுத போராட்டங்கள் பயங்கரவாதமென சட்டபூர்வ முத்திரை குத்தப்பட்டது. பிராந்திய ஆதிக்க வெறியர்களின் நிர்வாகத்தில் இருந்த சாதி வெறியர்களுக்கு சாதியத்தை ஒழித்த தமிழ்த்தேசிய போராட்டத்தை ஒழித்துக் கட்டக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சாதுரியமாகப் பயன்படுத்தினர். இலங்கை அரசிற்கு இனக்கொலைக்கான ஆதரவு இலகுவாக பல தரப்பிலிருந்தும் சித்தாந்த வேறுபாடோ சிந்தனை வேறுபாடோ இன்றிக் கிடைத்தது.

வரலாற்றில் என்றுமே இடம் பெறாத மோசமான இனக்கொலையும் வன்முறையும் இலங்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் தமிழர்கள் தமக்கெதிரான கொடுமைகளை ஒரளவிற்கு வெளிக்கொண்டுவர மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பெரும் பங்காற்றினர். கண்மூடித்தனமாக இருந்த ஐக்கிய நாடுகளின் உயர்மட்டத்தின் மூடிய கண்களுக்குள்ளும் தமிழர்களின் அவலம் எடுத்துச் செல்லப்பட்டது. பாராமுகங்களின் மூக்கடி வரை தமிழர் அவலங்கள் எடுத்துச் செல்லப் பட்டது.

1983ஜூலை மாதத்தை மையப் படுத்திய உலகத்தின் பார்வை இப்போது 2009 மே மாதத்தை மையப் படுத்தி பார்க்க ஆரம்பித்து விட்டது.

Friday, 28 August 2009

காணொளி: "வன்னி வதை முகாமைத் திற!" என்று பிரித்தானிய பிரதமர் வதிவிடத்தின் முன் ஆர்ப்பட்டம்.


வன்னி வதை முகாங்களில் அடை பட்டிருக்கும் மக்களைத் திறந்து விட நடவடிக்கை எடுக்கும் படி பல்லாயிரம் மக்கள் பிரித்தானியப் பிரதமர் வதிவிடத்தின் முன் கூடிக் கோரிக்கை விடுத்தனர். இலங்கை, இந்திய அரசுகளைப் பயங்கரவாதிகள் என மக்கள் குரலெழுப்பினர்.
Click on play sign to watch:

முகாம்களைத் திற!

பிபிசியின் கபடம் - இலங்கைக் கொலைகளை மூடி மறைக்க உதவுகிறதா?


உலகத்தில் மிக மோசமான செய்தி இரட்டடிப்பு இலங்கையில் கடந்த பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் இலங்கை முன்னணி வகிக்கின்றது. இலங்கை அரசிற்கு எதிராக செய்தி வெளியிடும் செய்தி நிறுவனங்கள் இலங்கையிற் செயற்பட முடியாமற் பண்ணப் படும் என்று இலங்கை பகிரங்கமாகவே அறிவித்தது. ராயட்டர் செய்தி நிறுவனம் இலங்கை அரசு கொடுக்கும் செய்திகளை மட்டுமே தெரிவிக்கின்றது. வன்னி வதை முகாம்களில் நடக்கும் வன்முறைகளை கற்பழிப்புக்களை வெளியிட்டதற்காக சனல்-4 இன் செய்தியாளர் கைது செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டார். அத்துடன் சனல்-4 தன் இலங்கைச் செயற்பாட்டை முடிக்கவில்லை. எங்கு செய்து இரட்டடிப்பு செய்யப் படுகிறதோ அங்கிருந்து செய்திகளைக் கொண்டுவருவதுதான் சிறந்த ஊடகத்தின் கடமை. தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை இதிலிருந்து பிபிசி தவறிவிட்டது.

யூதர்கள் கையில் பிபிசி?
மார்கரெட் தச்சரின் ஆட்சிக்கு முன்னர் பிபிசியில் சிறந்த முற்போக்குச் சிந்தனையுடைய ஊழியர்கள் பிபிசியில் இருந்தனர். மத்தியகிழக்கு போரில் இஸ்ரேலின் பல அட்டூழியங்களை பிபிசி வெளிக் கொணர்ந்தது. அப்போது பிபிசி இடது சாரிப் போக்குடையது சோவியத் சார்பானது என்ற குற்றச் சாட்டுக்கள் பிபிசி மீது சுமத்தப் பட்டது. இப்போது பிபிசியில் சுமத்தப் படும் குற்றச் சாட்டு அது யூதர்களின் கையில் விழுந்து விட்டது என்பதாகும். அது உண்மையா? அமெரிக்க சி.என்.என் பிபிசி ஆகியன தமக்கு எதிரானவை என் உணர்ந்துதான் அரபு மக்கள் அல்ஜசீரா தொலைக் காட்சியை ஆரம்பித்தனர் என்றும் கூறப் படுகிறது.

பிபிசியின் கபடம்.
நேற்று பிபிசியானது, சனல்-4 தொலைக்காட்சியின் தமிழர்களை நிவாணமாக்கி கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டு சுட்டுக் கொல்லும் காணொளி தொடர்பாக பிரித்தானியத் தூதுவர் நிஹால் ஜயசிங்கவைப் பேட்டி கண்டது. பொதுவாக சர்ச்சைக்குரிய விடயங்களைப் இப்படிப் பேட்டி காணும் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் பேட்டி காணுவதை வழக்கமாக எல்லா தொலைக்காட்சி செய்திச் சேவைகளும் வழக்கமாகிக் கொண்டுள்ளன. ஆனால் நிஹால் ஜயசிங்கவைப் பேட்டி காணும் போது பிபிசி அதைச் செய்யாதது ஏன்?
இலங்கையின் இனக் கொலையைப் பற்றி அறிந்தவர்களையோ அல்லது குறிப்பிட்ட காணொளியை வெளிக் கொண்டு வந்த ஊடக அமைப்பைச் சேர்ந்தவர்களையோ ஏன் பேட்டி காணவில்லை? இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு பெருந்தொகையைச் செலவிடுவதை நாம் அறிவோம்.

பேட்டி காணும் போது முதற் கேள்விக்கு ஏற்கனவே மனப் பாடம் செய்துவைந்திருந்து ஒப்புவிக்கும் மூன்றாம் வகுப்புப் மாணவன் போல் தன் பதிலை ஒப்புவித்தார். இது இலங்கை அரசிற்கு தனது பரப்புரையை மேற்கொள்ள பிபிசி மேடை அமைத்துக் கொடுக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

குறித்த காணொளி என்று, எப்போது, எங்கு எவரால் பதியப் பட்டது, கொல்வது யார், கொல்லப் படுவது யார் என்பது தெரியாதென்று நிஹால் ஜயசிங்க பதிலளித்தார். பிபிசி செய்தியாளர் அதில் உள்ளவர்கள் இலங்கை இராணுவம் போல் உடையணிந்துள்ளனரே என்று கேட்டதற்கு விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம் போல் உடையணிந்து செயற்படுவது எல்லோரும் அறிந்த விடயம் என்றார் நிஹால் ஜயசிங்க.

ஊடகங்களை சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்தால் இது தொடர்பான பிரச்சனை எழாது என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிஹால் ஜயசிங்க அங்கு பிரித்தானியாவின் டெய்லி ரெலிகிறாf இனதும் மெயில் ஒன் சண்டேயினதும் பத்திரிகையாளர்களை அங்கு தான் அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகையாளர்கள் அங்கு அனுமதிக்கப் படுவதில்லை என்பது உண்மையில்லை என்றும் புரட்டினார். டெய்லி ரெலிகிறாf இனதும் மெயில் ஒன் சண்டேயினதும் இலங்கை அரசுடன் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை பிரித்தானியா வாழ் தமிழர்கள் நன்கு அறிவர். இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு பெருந்தொகையைச் செலவிடுவதை நாம் அறிவோம்.

பானையில் இருந்தது அகப்பையில் வந்தது -
தமிழர் சரித்திரம் முடிந்துவிட்டதாம்!

இன்னொரு மனித உரிமை தொடர்பான விசாரணை சம்பந்தமான கேள்விக்கு பதிலளிக்கையில் கேள்விக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இலங்கையில் தமிழ்ர்களின் சரித்திரம் முடிந்து விட்டது என்றார் நிஹால் ஜயசிங்க. பின்னர் தன்னைத் திருத்திக் கொண்டு விடுதலைப் புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டதென்றார்.

Thursday, 27 August 2009

தமிழின எதிரிகள் - கொலையாளிகள்


அவனவனுக்கு அவனவன் பிரச்சனை
அவனவனுக்கு அவனவன் கவலை

கொலையாளிக்கும் பிரச்சனை
கொல்ல உதவியவனுக்கும் பிரச்சனை


கருவறுத்தவனுக்கும் கவலை
கருக்கலைத்தவனுக்கும் கவலை

புரட்டுபவனுக்கும் கவலை
உருட்டுபவனுக்கும் கவலை

இந்தியாவின் கபடமும் இந்துவின் நயவஞ்சகமும்


இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ். கிருஷ்ணா ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், தாம் பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் காணொளி விடயம் குறித்து அதிக கரிசனை செலுத்தி வருகின்றார் என்றும், சம்பந்தப்பட்ட வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடமிருந்து இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப் படுகிறது.

இலங்கையில் நடப்பது எதுவும் தமக்குத்தெரியாது என்பது போல் இந்தியா கபடத்தனமாக செய்திவெளியிடுகிறது. யுத்தத்தில் இருந்து தப்பிவந்தவர்களின் கூற்றுப்படி 10,000இற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் இலங்கையில் இருந்திருக்கின்றனர்.

சிங்களக் கட்சியான ஜேவிபி வெளியிட்ட தகவலின் படி வன்னி இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த வேளை இந்திய வெளிவிவகார அமைச்சு தனது உள்வாளிகள் ஐம்பதிற்கு மேற்பட்டோர் புலிகளுடன் இருப்பதாகவும் அவர்களை பாதுகாக்கும் படியும் கேட்டுக் கொண்டதாம்.

சனல்-4 தொலைக்காட்சியில் காட்டப் பட்டதிலும் மோசமான நடவடிக்கைகளில் அமைதிப் படை ஈடுபட்டதை பலரும் அறிவர்.

எனது வீட்டிற்கு வந்து அமைதிப்படையினர் பாவித்த உடைகள் உட்பட பலவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இப்படிப்பட்ட இந்தியா தமிழர் மீது கரிசனை காட்டுகிறதாம்.

போர் மும்மரமாக நடந்த வேளை விஜய் நம்பியார் செய்த அடாவடித் தனங்களை யார் மறப்பர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கையின் போர் குற்றங்களை கண்டிக்க சில நாடுகள் முற்பட்ட போது அதை மறுத்து இலங்கைக்கு பாராட்டுத்தெரிவித்த கயவர் யார்?

இந்துவின் நயவஞ்சனை
பிரித்தானியத் தொலைக்காட்சி சனல்-4 இன் காணொளி பற்றி சில தமிழ் நாட்டு ஊடகங்கள் தினமணி உட்பட செய்திகள் வெளியிட்டன. இங்கிலாந்து உதைபந்தாட்டக் கழகமான லிவர்பூல் அஷ்டன் வில்லா விடம் தோல்வியடந்ததை முற்பக்க செய்தியாக வெளியிட்ட இந்துப் பத்திரிகை தமிழர்கள் நிர்வாணமக்கி கொல்லப் பட்டதை செய்தியாக வெளியிட்டதா? இந்து ராம் இனி இந்திய அமைதிப் படைகள் தமிழர்களை நாடாதியதிலும் பார்க்க இலங்கைப் படையினர் கௌரமாக நாடாத்துகின்றனர் என்று பேட்டி கொடுப்பாரா?

Wednesday, 26 August 2009

புலிப் பாசிசம் எனப் புலம்பும் புத்தியில்லாஜீவிகள்


பிரித்தானியத் தொலைக்காட்சி சனல்-4 வெளியிட்ட காணொளிக்காட்சிகள் இந்த வருடம் நடந்த இனக் கொலைகளை காட்டுகிறது. இதை சிங்களம் ஏற்கப் போவதில்லை. இது இந்த வருடம் ஆரம்பித்ததுமல்ல 1983இல் ஆரம்பித்ததுமல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நடக்கிறது. 1956இல் தமிழ் குழந்தையை கொதிதாரில் போட்டது எந்த காணொளிக் கருவிகளிலும் பதியப் படவில்லை. சனல்-4 இல் காட்டியதிலும் பார்க்க மோசமான கொலைகள் கொடூரங்கள் சிங்களவரால் மட்டுமல்ல இந்திய அமைதிப் படையாலும் நடத்தப் பட்டது.

1948இல் இருந்து "அபே ஆண்டுவே" (எங்கள் அரசு) மனப்பாங்கு சிங்கள மக்கள் சகலரிடையும் பரவியுள்ளது. மதவாதி சிங்களவன் கம்யூனிசவாதி சிங்களவன் அப்பாவிச் சிங்களவன் படித்த சிங்களவன் என எல்லோரிடையும் இது உண்டு. சிங்கள மக்களுடன் பழகியவர்கள் இதை நன்கு உணர்வர்.

தமிழனைக் கொன்றால் சொர்க்கத்திற்கு செல்வாய் எனப் போதிக்கும் பௌத்தம் சிங்கள பௌத்தம்.

தமிழர்கள் மீது மிகமோசமான வன்முறைகள் 1956இல் இருந்து கட்டவிழ்து விடப்பட்டுவருகிறது. இது முள்ளிவாய்க்காலில் முடிவடையவில்லை. தொடர்ந்து தமிழர்கள் வகை தொகையின்றிக் கொல்லப் படுவர்.

இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டிற்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சில நாடுகள் தமிழினக் கொலைக்கு உதவிக் கொண்டே இருக்கும்.

பல இன மக்கள் வாழும் நாட்டுக்கு சமஷ்டி ஆட்சி சிறந்த முறை என்று லெனின் சொல்லியிருக்க இலங்கையில் சமஷ்டி என்ற வார்த்தையையே கொச்சைப் படுத்தியவர்கள் சிங்களக் கம்யூனிஸ்டுகள்(பொதுவுடமை வாதிகள்).

மர்க்சிசத்தை கரைத்துக் குடித்த சிங்களக் கம்யூனிஸ்டுகள்(பொதுவுடமை வாதிகள்) அதிகாரம் சிறிதளவு கையில் வந்தவுடன் பேரினவாதிகளாக மாறிவிடுவர் என்பதற்கு என் எம் பெரேரா கொல்வின் ஆர் டி சில்வா போன்றோர் எடுத்துக் காட்டு.

சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற பேரினவாதிகளாக மாறிய பொதுவுடமை வாதிகள் பல பேர்கள்.

80விழுக்காட்டுக்கு மேல் சிங்கள மக்களைக் கொண்ட இலங்கையில் மக்களாட்சி முறைப்படி தமிழர்கள் எதையும் பெறமுடியாது. தமிழர்கள் மேலும் மேலும் ஒடுக்கப் படுகிறார்கள் என்று உணர்ந்து தமிழர்கள் தமது உரிமைகளை ஆயுத போராட்டத்தின் மூலம்தான் பெறமுடியும் என்று முடிவெடுத்தனர் எழுபதுகளில்.
அப்போது தமிழர்கள் மீது மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தமிழர்களின் ஆயுத போராட்டத்தி மேலும் கூர்மைப் படுத்தியது.

ஊருடுவும் கொள்கை(Penetration Policy)

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த எழுபதுகளில் வல்லாதிக்க அரசுகள் மற்ற நாட்டு அரசுகளில் மற்ற நாட்டு அரசு எதிர்ப்பு இயக்கங்களில் ஊருடுவும் கொள்கையை வகுத்துச் செயற்பட்டன. இதனால் தமிழர்களிடை 30 மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் உருவானது. தமிழ் மக்களின் விழிப்புணர்வற்ற தன்மையை பயன்படுத்தி இக்குழுக்கள் யாவும் தமிழர்களின் செல்லப் பிள்ளைகள் ஆயின. "இயக்கப் பெடியங்கள்" என்று அன்பாக அழைக்கப் பட்டு ஆதரிக்கப் பட்டனர். இவர்களை அரசிற்கு காட்டிக் கொடுக்க மக்கள் மறுத்தனர். பொதுவுடமை வாத அறிஞர்கள் தமிழரிடையே ஆயுதப் புரட்சிக்குரிய சூழ்நிலை நிலவுவதாக பறை சாற்றினர். திசைமாறிய கம்யூனிச அரசு ஆட்சி செய்யும் நாடுகள் அவர்களின் கைக்கூலிள் மூலமாக இந்த இயக்கங்கள் எனப் படும் ஆயுதக் குழுக்களிடை ஊருடுவினர். இந்தியாவும் ஊருடுவியது. பல நாடுகள் ஊருடுவின.

சோற்றுப் பார்சல் இயக்கம்
எந்த வெளிச் சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல் விடுதலைப் புலி அமைப்பு வளர்ந்தது. மற்ற இயக்கங்கள் விடுதலைப் புலி அமைப்பிற்கு எதிராக செயற் படத் தொடங்கின. விடுதலிப் புலிகளுக்கு பண உதவி செய்வோரைக் கொல்வது கொள்ளை அடிப்பது என்று ஆரம்பித்தன்ர். புளொட் என்ற பெயரில் ஒரு இயக்கம் அதிக ஆளணிகளையும் பணவரவையும் கொண்டிருந்தது. இது தனது உறுப்பினர்களுக்கு எந்த பணக் கொடுப்பனவும் செய்வதில்லை. அவர்கள் மக்களிடம் இருந்து பெறுவதன் மூலம் தமது வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டும் என்று உறுப்பினர்களைப் பணித்திருந்தது. அதன் உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று தமக்கு உணவுப் பொதிகள் வழங்குமாறு கேட்பர். இதனால் இவர்கள் சோற்றுப் பார்சல் இயக்கம் என்றழைகப் பட்டனர். இவர்கள் எந்த ஒரு தடவையாவது இவரகள் வரலாற்றில் ஒரு சிங்களவனுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டியது கிடையாது. ஆனால் பல விடுதலைப் புலிகளைக் கொன்றிருக்கின்றனர். இவர்கள் செயற்பாடுகள் முழுவதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே இருந்தது. இவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எனச் சேர்த்த பணத்தை என்ன செய்தார்களோ?

புலிகளை அழிக்க வளர்த்த இயக்கம்.
இன்னும் ஒரு தமிழீழ விடுதலை அமைப்பை இந்திய சாதிய வெறியர்களின் கைப்பொம்மையான ஒரு உளவு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க உருவாக்கியது. சாதி குறைந்த ஒருவன் தலைமையில் ஒரு தமிழ் விடுதலை அமைப்பு இருக்கக் கூடாது என்பது அந்தச் சாதி வெறியர்களின் நோக்கம்.

திசை மாறிய கம்யூனிச(பொதுவுடமை வாத)
நாடுகளின் கைப்பொம்மைகள்

சில இயக்கங்கள் திசைமாறிய கம்யூனிச நாடுகளின் கைப்பொம்மைகளாக உருவெடுத்தன. இவையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே செயற்பட்டனர்.

மேற்படிநாடுகளின் கைக்கூலிகள் தமிழீழ விடுதலிப் புலிஅமைப்புக்குள்ளும் ஊருடுவினர். தமிழீழ விடுதலைப் புலிகள் பலமுனையில் எதிரிகளை முகங்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். தம்மை ஒழிக்க முயலும் எதிரிகளுக்கு எதிராக தயவு ஏதுமில்லாமல் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர். இந்த நடவடிக்கையை மற்ற கையாலாகாத இயக்கங்களும் திசைமாறிய கம்யூனிச நாடிகளின் கைக்கூலிக்ளும் முற்போக்கு என்ற போர்வையைப் போர்திக்கொண்டு புலிப்பாசிசம் என்று புலம்புகின்றர்.

பாசிசம் என்றால் என்ன என்பதோ,
ஆயுதப் புரட்சி என்றால என்ன என்பது பற்றியோ,
ஆயுதப் புரட்சிக்காலத்தில் ஆயுதப் புரட்சி செய்யும் அமைப்பு எப்படிச் செயற்பட வேண்டும் என்பது பற்றியோ,
அறிந்திராத புத்தியில்லா ஜீவிகள் இவர்கள்.

Tuesday, 25 August 2009

காணொளி இனக் கொலைச் சாட்சியத்தை அம்பலப் படுத்திய Channel - 4 TV

இந்திய உதவியுடனும் பயிற்ச்சியுடனும் ஆசியுடனும் ( இந்தியப் படைகளின் நேரடிப் பிரச்னமும் இருப்பதாகக் கருதப் படுகிறது) இலங்கை மேற்கொண்ட இன அழிப்பிற்கான ஆதாரங்களை பிரித்தானிய தொலைக்காட்சியான Channel - 4 TV மீண்டும் அம்பலப் படுத்தியுள்ளது.

கொலை செய்யும் இராணுவத்தினர் கொலை செய்யும் போது சகசமாக உரையாடுவதையும் சிரிப்பதையும் கவனிக்கும் போது இது அவர்களது அன்றாடக் கடமைகளில் ஒன்று என்பது போலத் தெரிகிறது. பட்டப் பகலில் வெட்ட வெளியில் நடக்கும் இக்கொலைகள் நன்கு திட்டமிடப் பட்டு ஒளிவு மறைவின்றிச் செய்யப் படுவதைப் பார்த்தால் இராணுவத்தின் மேலிடம் இதை நன்கு அறிந்துள்ளது என்று புலப் படுகிறது.

இதன் காணொளிப் பதிவை கீழ்க் காணலாம்:இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் அவரது கைத்தொலைபேசியில் எடுக்கப் பட்ட காணொளிப்பதிவை இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு இலங்கையில் இருந்து கடத்திச் சென்று அம்பலப் படுத்தியுள்ளது.

Channel - 4 TV இன் செய்தியாளர் கிருஷ்ணன் குருமூர்த்தி இதை Channel - 4 TV செய்தியில் வெளிப் படுத்தினார்.

தமிழின உணர்வாளர்களுக்கு ஆபத்து - எல்லை தாண்டிய சிங்களப் பயங்கரவாதிகளால்


செ. பத்மநாதன் இலகுவாக கடத்திச் செல்லப் பட்டமையும் அதற்கு எதிராக எவராலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல போனதும் சிங்களத்தின் பயங்கரவாதம் எல்லை தாண்டி செயற்பட முடியும் என்பதையும் எல்லை மீறி நிற்பதையும் உணர்த்தி நிற்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று சிங்களம் கொக்கரித்து நிற்கிறது.

சிங்களப் பயங்கரவாதத்திற்கான ஆதரவு டெல்லியிலிருந்து மட்டுமல்ல கோபாலபுரத்திலிருந்தும் கிடைக்கிறதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டாம் ராஜபக்சே கொடுப்பதை வாங்கிக் கொள்ளவேண்டியதுதான் என்று கோபால புரத்திலிருந்து அறிக்கை வெளிவந்தது மட்டுமல்ல இலங்கையில் இப்போது சுமூக நிலை திரும்பிவிட்டது என்று கூட கோபாலபுரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் இந்திமொழியை ஆட்சி மொழியாக்க வேண்டியது ஒன்றுதான் மிச்சமிருக்கிறது.

தமிழ் மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப் படுவதை கண்டும் காணமல் இருப்பவர்கள் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக சிங்களம் நடவடிக்கை எடுத்தால் தடுப்பார்களா?

சிங்களம் இப்போது இருக்கும் திமிர் பிடித்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்காது. ஈழத்தமிழ்த் தேசிய போராட்டம் மீண்டும் உக்கிரம் கொண்டு எழுவதற்கு தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும் மற்ற வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள்.
இந்த ஆதரவுப் பலத்தை சிதறடிக்க சிங்களம் எதுவும் செய்யும். அதனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழின உணர்வாளர்களுக்கு சிங்களத்தால் ஆபத்து உண்டு.

Monday, 24 August 2009

பத்மநாதனுக்காக ஆட்கொணர்வு மனு தாக்கப்ப்டாதது ஏன்?
குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப் பட்டு மூன்று வாரங்கள் சென்று விட்டன. இன்னும் அவரது குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ அவரைப் பற்றி ஏதுவும் தெரிவிக்கவில்லை. அவருக்கு ஒரு மனைவியும் மகளும் இருப்பதாகக் கூறப் படுகிறது. அவர்கள் இதுவரை வாய் திறந்ததாகத் தகவல் இல்லை.

பத்மநாதன் சட்ட விரோதமாகக் கடத்தப் பட்டார். அவருக்காக ஆட் கொணர்வு மனு ஏன் இன்னும் தாக்கல் செய்யப் படவில்லை? அவர்களது குடும்பத்தினர் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் மிரட்டப் பட்டுள்ளனரா?

நீரழிவு நோய் இருதய நோய் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்ட ஒருவர் பயங்கர வாத ஒழிப்பு என்ற போர்வையில் சட்ட விரோதமாகக் கடத்தப் பட்டு இதுவரை நீதிமன்றில் நிறுத்தப் படாமல் விசாரிக்கப் படுகிறார்.

தந்தை வழி செல்லும் தனயன் ஸ்டாலின்


கழகம் ஒரு குடும்பம்!!
குடும்பமே கழகம்!!

Sunday, 23 August 2009

அமெரிக்கா தமிழர்கள் மீது காட்டும் திடீர் கரிசனை எதற்காக?

.
.
.
உலகளாவிய அமெரிக்கத் தளங்களைப் பொறுத்தவரை இந்து சமூத்திரத்தில் உள்ள இடை வெளியை நிரப்ப அமெரிக்காவிற்கு இலங்கை உகந்த இடமா?

.

எதிர்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் காட்டும் கரிசனையில் தான் அவர்களுக்கான உதவிகள் நிர்ணயிக்கப்படும்.
சிறீலங்காவில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சரியான அதிகாரப் பகிர்வு வழங்கப்படாவிட்டால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நேரிடும் எனவும், இதனை ஓர் அச்சுறுத்தலாக விடுக்கவில்லை.
அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும், சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான றொபேர்ட் ஓ பிளேக் அவர்களே மேற்கூறிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்?

அதுமட்டுமல்ல றொபேர்ட் ஓ பிளேக் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நாடாத்தியதுடன் நிற்காமல் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தீர்க்கும் போது புலம் பெயர்ந்த தமிழர்களின் கருத்துக்களும் அறியப் படவேண்டும் என்றார்.

இவற்றைக் கேட்ட இலங்கை அரசு சும்மா இருக்கவில்லை அமெரிக்காவில் உள்ள தனது தூதுவர் மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியது.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் இலங்கைக்கு உதவிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்கா தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டுவது ஏன்?

அமெரிக்கா நியாயப் படி தமிழர் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் என்ற உண்மைய உணர்ந்து அதை வலியுறுத்துகிறதா? இருக்காது! அமெரிக்காவைப் பொறுத்தவரை சர்வதேசிய அரசியலில் நியாயம் நீதி என்ற பேச்சுக்கு இடமில்லை.

அமெரிக்கா தமிழர்களை தன்பக்கம் இழுக்க முயல்கிறதா? இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலம் பெற்றிருந்த நிலையில் அமெரிக்காவும் ஜப்பானும் விடுதலைப் புலிகளைத் தம் பக்கம் இழுக்க முயன்றனராம். அவர்கள் ஈழத்திற்கு கேட்ட விலை திருக்கோணாமலையும் காங்கேசந்துறையுமாம். ஆனால் விடுதலைப் புலிகளின் இந்திய விசுவாசம் இதற்கு இடம் கொடுக்கவில்லை. அமெரிக்கா இப்போது மறுபடி அதற்கு முயற்ச்சிக்கிறதா?

வன்னி முகாம்களில் இருக்கும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கை எந்த நாடுகளினதோ அல்லது அமைப்புக்களினதோ வேண்டுதல்களை நிராகரித்து அடாவடித்தனமாக நிற்பதற்கு இலங்கைக்கு பின்னால் சீனா இருப்பது தான் காரணமாக இருக்க வேண்டும். சீனா இலங்கையை சர்வதேச ரீதியில் மியன்மாரைப்(பர்மா) போல் தனிமைப் படுத்தி தன்வசமாக்கும் முயற்ச்சியில் ஈடு பட்டுள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது. இதை உறுதி செய்யுமாற் போல் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இலங்கையின் அபிவிருத்தியில் சீனா முக்கிய பங்காளன் என்று குறிப்பிட்டுள்ளார். சீனப் பிடியில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கு அல்லது சீன நிகழ்ச்சி நிரலில் இருந்து இலங்கையை விலக்குவதற்கு அமெரிக்காவிற்கு தமிழர்கள் தேவைப் படுகிறனரா?

உலகளாவிய அமெரிக்கத் தளங்களைப் பொறுத்தவரை இந்து சமுத்திரத்தில் உள்ள அமெரிக்கத் தள இடை வெளியை நிரப்ப இலங்கை உகந்த இடம். அதனால் தமிழர்கள் மீது அமெரிக்கவிற்கு அக்கறையா?

தமிழர்கள் இப்போது நிற்கதியாக நிற்கிறார்கள் என்று அமெரிக்கா நினைக்கிறதா? அதனால் அவர்களைத் தன் பக்கம் இழுத்துப் போட்டுவிடலாம் என்று அமெரிக்கா நினைக்கிறதா?

தமிழர்களின் ஆயுத போராட்டம் இனிவருங் காலங்களில் வீறு கொண்டு எழும் அதை தடுத்து தன் வழிப்படுத்த அமெரிக்கா சதி செய்கிறதா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...