Saturday, 15 August 2009

அண்டன் பாலசிங்கம் அவர்களை பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்த்தது யார்?


விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்களுக்கு சிறுநீரகம் பாதிப்படந்ததுண்டு. தண்ணீரில்லாத காடுகளில் வாழ்க்கையின் இளம்பராயத்தை கழித்த படியால் இது ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரின் சிறுநீரகமும் பாதிக்கப் பட்டது. போதாக் குறைக்கு அவருக்கு நீரழிவு நோய் வேறு.
1998இல் சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசால் ஏ-9 நெடுஞ்சாலையைத் திறப்பதற்கான ஜயசிக்குரு போர் நடந்துகொண்டிருந்த வேளை அண்டன் பாலசிங்கத்திற்கு சிறுநீரக மாற்று சிகிச்சை உடனடியாக செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு சிறுநீரகம் தானம் வழங்க பல போராளிகள் முன் வந்தனர். ஆனால் வெளிநாடொன்றிற்கு அண்டன் பாலசிங்கத்தையும் சிறுநீரக கொடையாளியையும் பத்திரமாக அனுப்ப வேண்டும். மோசமான போர் நடந்து கொண்டிருந்தது. பத்திரமாகச் சேர்ப்பதற்கு அனுமதி வேண்டி செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக புலிகள் இலங்கை அரசைத் தொடர்பு கொண்டனர். இலங்கை அரசு பல நிபந்தனைகளை விதித்தது. ஏ-9 நெடுஞ்சாலையில் இருந்தும் பல முக்கிய நிலைகளில் இருந்தும் புலிகள் வெளியேற வேண்டும் என்றும் பலப் பல நிபந்தனைகளை சந்திரிகாவின் அரசு விதித்தது. இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பல பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது. சந்திரிக்க அரசு மசியவில்லை. பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகள்சந்திரிகா அரசிற்கு தெரிவித்தனர் "நாளை அண்டன் பாலசிங்கம் இலண்டனில் நிற்ப்பார்" என்று. அதிர்ந்தது இலங்கை அரசு. சொன்ன படியே நடந்தது. அண்டன் பாலசிங்கத்தை பத்திரமாக கொண்டுபோய் சேர்த்தது யார்?

சனி பார்வை கொடிது! இத்தாலிச் சனியாள் பார்வை?


சுதந்திரம் என்பது தம்மைத்தாமே ஆள்வது. இந்தியக் குடிமக்கள் அரும்பாடுபட்டு அந்நியரை அதிகாரத்திலிருந்து விரட்டினர். காந்தி குடும்பம் அந்நியர் கையில் அதிகாரத்தைக் கொடுத்தது.

Friday, 14 August 2009

ஈழத் தமிழர்களுடன் சந்திப்பு: சும்மா ஆடுமா அமெரிக்கக் குடுமிஎண்பதுகளில் பிலிப்பைன்சில் தனது தளங்களின் இருப்புக்கு சாவால்கள் எழுந்தபோதே அமெரிக்கா தன்து அடுத்த இலக்காக இலங்கையத் தேர்ந்தெடுத்தது. அமெரிக்காவின் டியாகோகசியத் தளம் நிலப் பரப்பு அளவில் சிறியது. ஈராக்கிற்கு எதிரான முதற் போர் புரியும் போது அது புலப்பட்டது. எண்பதுகளில் இலங்கையில் எரிபொருள் நிரப்பு வசதியும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான் தொடர்பாடல் வசதியும் அமெரிக்காவிற்கு தேவைப் பட்டது. அதிலிருந்து இலங்கையில் தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்படுதல் இந்திரா கந்தி அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இன்று தமிழர்கள் பலி கொடுக்கப் பட்டு எல்லாம் பறித்தெடுக்கப் பட்டு நிற்கதியாக நிற்கின்றனர். எண்பதுகளில் சீனா அமைதியாக இலங்கையில் நடப்பவற்றை ஏது மறியாது போலவும் தனக்கு இலங்கையில் நடக்கும் அமெரிக்க இந்திய ஆதிக்கப் போட்டியில் சம்பந்தம் இல்லாதது போலவும் இருந்து கொண்டு தனது பொருளாதார இராணுவ பலத்தைக் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டிக் கொண்டிருந்தது. இந்த அமைதியின் பின்னணியில் ஒரு நம்பிக்கை சீனாவிற்கு பலமாக இருந்தது. அதுதான் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த அமெரிக்க இந்திய எதிர்ப்பு உணர்வு. அமெரிக்காவை சர்வ தேசஅரசியல் ரீதியிலும் இந்தியாவை கலாச்சார சரித்திர பிரந்திய ஆதிக்க எதிர்ப்பு ரீதியிலும் சிங்களவர்கள் பலமாக எதிர்க்கின்றனர். சீனா தனது பொருளாதாரம் வளர்ச்சியடைய இலங்கையில் தனது பிடியை நிதானமாகவும் உறுதியாகவும் இறுக்கிக் கொண்டது.

இலங்கை ஒரு சர்வாதிகார நாடகலாம்
சீன ஆதரவுக் கொள்கையைக் கொண்ட ஒரு சர்வாதிகார நாடாக மாறும் சாத்தியம் இலங்கையில் ஏற்படுகிறது. இலங்கைக்கு இப்போது சர்வதேச ரீதியாகவும் பொருளாதார இராணுவ ரீதியாகவும் சீனாவின் ஆதரவு இருக்கிறது. இதன் வெளிப்பாடே அமெரிக்கா வன்னி முகாம்களில் இருக்கும் மக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த போது அமெரிக்கவிற்கு செருப்படி கொடுப்பது போல ஹெகேலிய ரம்புக்வேல பதிலளித்தார்.

தமிழர்கள் மீது அமெரிக்க கரிசனை
இலங்கையின் தற்போதைய மனிதாபிமான சூழ்நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்க இராஜதந்திர உத்தியோகத்தர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
இலங்கையின் மனிதாபிமான நிலைமை மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கரின் பிரதி செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் மூர்ஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் நீதி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களை ஒன்றிணைத்து நடைமுறைச் சாத்தியப்பாடுடைய ஓர் தீர்வுத்திட்டத்தை வழங்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமை மீறல் போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இலங்கை தொடர்பாக தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்க அணுகு முறை இந்திராகந்தியினது அணுகுமுறைபோல் சுய நலன் கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால் நடுக்கடலில் தத்தளிப்பது போல் நிலையில் இருக்கும் தமிழர்களுக்கு இப்போது எதைக் கிடைத்தாலும் பற்றிக் கொள்வர்.

உலகவர்த்தகதின் மூன்றில் இரு பகுதி இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாகவே நடை பெறுகிறது. அப்பிரந்தியத்தில் சீன வல்லாதிக்கத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது. இலங்கைக்கு எதிராக ஒரு புதிய திட்டம் அமெரிக்காவிற்கு உண்டு என்பதையே மனித உரிமைக் கழகம் அண்மையில் வெளியிட்ட புகைப் படங்களும் புலப் படுத்துகின்றன. இதுவரைகாலமும் விடுதலைப் புலிகளின் தலைமை தமிழர்களை எந்த ஒரு நாட்டின் பிடிக்குள்ளும் செல்லவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அதனால் அவர்கள் நம்பிய இந்தியாவால் துரோகமிழைக்கப் பட்டு தனிமைப் படுத்தப் பட்டனர். இனிதமிழர்கள் ஒரு பலமிக்க நாடு சார்ந்தே தமது சுதந்திர போராட்டத்தை முன்னெடுப்பர்.

Thursday, 13 August 2009

தமிழ் தலை(யில்லாத)வர்கள் இன்னமும் இந்தியாவை நம்புகிறார்கள்.


இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியத் தலைவர்கள் எப்படி நட்ந்து கொண்டனர்?

ஐம்பதுகளில் ஜவகர்லால் நேரு
பிரிந்திருக்கும் தமிழர்களை தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்க முற்பட்டார். ஆ. தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே செய்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார்.

அறுபதுகளில் லால்பகதூர் சாஸ்த்திரி
சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமா பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 நாடற்றவர்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
.
இதை வன்மையாக எதிர்த்தவர் ஈழத் தமிழர்களின் தலைவர் தந்தை செல்வா அவர்கள். அவர் இதை அதிகார அரசியலுக்காக அரை மில்லியன் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டது பன்னாட்டு அரசியலில் முன்னெப்பொழுதும் இல்லாத நடவடிக்கை என விபரித்தார்.
..
ஒருவரை நாடற்றவர் என்று சொல்வது சர்வ தேசச் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணானது. நட்ட நடுக்கடலில் செல்லும் ஒரு கப்பலில் ஒரு பிள்ளை பிறந்தால் கூட அது அந்தக் கப்பல் எந்த நாட்டிற்கு அடுத்து செல்கிறதோ அந்த நாட்டின் குடியுரிமை அப்பிள்ளைக்கு உண்டு. உலகத்தில் நாடற்றவர் என்று ஒருவர் இருக்கக் கூடாது என்பதே சர்வதேச நியமம். இப்படியிருக்க 150,000 மக்களை நாடற்றவர்களாக கையொப்பமிட்டவர் காங்கிரசுக் கட்சியின் பிரதம மந்திரி சாஸ்திரி அவர்கள். அவர் செய்த இந்த இனத் துரோகம் தமிழர்களின் வரலாற்றில் மறக்கப் படக் கூடாத ஒன்றாகும்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்திரா காந்தி
இலங்கையை அமெரிக்கப் பிடிக்குள் செல்லவிடாமல் தடுப்பதற்கும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கும் இலங்கையின் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை இந்திராகாந்தி பயன் படுத்தினார். இலங்கைத் தமிழர்களில் அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டார். இலங்கையில் ஒன்றுக்கு ஒன்று போட்டியான ஆயுதக் குழுக்களை வளர அனுமதித்தார். இந்த ஆயுதக் குழுக்களைப் பாவித்து முதலில் இலங்கையை அடிபணியச் செய்வதும் பின்னர் ஆயுதக் குழுக்களிடையே மோதல்கள் ஏற்படுத்துவதும் அவரது திட்டமாக இருந்தது. அவர் கொல்லப் படாமல் இருந்திருந்தால் இவை நடந்திருக்கும். இன்றும் பலர் இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று பலரும் நம்புகின்றனர். அவர் இறந்த போது சிங்கள இராணுவம் கொண்டாடி மகிழ்ந்தது. தமிழர்கள் கண்ணீர் விட்டனர்.

எண்பதுகளின் பிற்பகுதியில் ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தியும் ஜே ஆர் ஜயவர்த்தனேயும் ஒருவருக்கு ஒருவர் முரண் பட்ட நிலையில் பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை இந்திய சிறப்புத் தூதுவராக இருந்த பார்த்தசாரதியை மாற்றும் படி ஜே ஆர் ராஜிவைப் பணித்தார். அவரும் அப்படியே செய்தார். உலக வரலாற்றில் மிகமோசமான முட்டாள்த் தனம் இது. இன்னொரு கட்டத்தில் ராஜீவ் காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த வேளை பத்திரிகையாளர் ஒருவருக்கு ராஜீவ் கொடுத்த கருத்து ஏற்கனவே அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் வெங்கடேசன் அவர்கள் சொன்ன கருத்துடன் முரண்பட்டிருந்தது. அதைப் பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டியபோது அப்படியாயின் நாம் ஒரு புதிய வெளியுறவுச் செயலரை பெறுவோம் என்று ஆணவமாகவும் அரசியல் நாகரீகத்திற்கு முரணாகவும் பதிலளித்தவர் ராஜீவ் காந்தி. இவையாவும் அவரது அரசில் கற்றுக் குட்டித்தனத்தை சுட்டிக் காட்டியது. இதை உணர்ந்த ஜே ஆர் ராஜீவை நாளடைவில் தந்து கைப் பொம்மைஆக்கிக் கொண்டார். விளைவு இந்திய அமைதிப் படை என்றுசொல்லிக் கொண்டு ஒரு அட்டூழியப் படை இலங்கை வந்தது.
எண்ணாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்றொழிக்கப் பட்டனர்.
மூவாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கற்பழிக்கப் பட்டனர்.
பதினையாயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோ வீடிழந்தனர்.

சிங்-சோனியா ஆட்சி
இது தமிழர்களைப் பொறுத்தவரை மிகமோசமான நடவடிக்கைகளை எடுத்தது. இலங்கை அரசிற்கு படைப் பயிற்ச்சி, படைக் கலங்கள், ஆளணிகள் எல்லாம் வழங்கி தென் கிழக்காசியா கண்டிராத மாபெரும் மனித அவலத்தை உண்டு பண்ணியது. தமிழர்களின் ஆயுதபலத்தை மழுங்கடித்தது. இனி தமிழர்கள் இலங்கையில் சிங்களவர்களுக்கு அடங்கி அவர்கள் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு வாழவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த இப்போது முயல்கிறது.
அதுமட்டுமல்ல தொடர்ந்தும் தமிழ்த்தேசியத்தை இலங்கையிலும் பன்னாட்டு ரீதியிலும் சிதைக்க சிங்களத்துடன் சேர்ந்து செயற்படுகிறது.
இந்நிலையில் இன்னும் தமிழர்களில் சிலர் இந்தியாவை நம்புகின்றனர். இந்தியாவின் மூலமாகத்தான் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புகின்றனர்.

இந்தியாவின் குடும்ப நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாளர்களும் சாதிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதிகாரிகளைக் கொண்ட கொள்கை வகுப்பாளர்களும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு என்று எதிரானவர்களே என்பதை தமிழ்த் தலைமை இனி உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இந்தியாவின் உற்ற நண்பர்கள் நாம்தான்.
இந்தியாவின் நலன்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.
இந்தியா எமது நட்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவற்றை மீண்டும் மீண்டும் கூறிவந்த விடுதலை புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது?
அவர்கள் நீட்டிய நட்புக் கரங்களை ஏன் இந்தியா உதறித்தள்ளியது?
அவர்களை அழித்ததுடன் இந்தியா தனது பணியை நிறுத்தியாதா?

உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கு இந்தியாதான் முதல் எதிரி என்பதை மனதில் கொண்டு தமிழர்களின் தலைவர்கள் தமது எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

Wednesday, 12 August 2009

புலிகளின் சொத்துக்களைத் தேடி மஹிந்த சிங்கப்பூர் ஓடுகிறாரா?


விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு அதன் தலைமை வைத்த கட்டுப் பாடுகளில் முக்கியமானது அவர்கள் மதுபானம் அருந்தக் கூடாதென்பது. அப்படிப்பட்ட இயக்கம் பன்னாட்டு ரீதியில் போதைப் பொருள்களைக் கடத்தி பணம் ஈட்டியது என்ற அபாண்டமான குற்றச் சாட்டு வைக்கப் பட்டதுண்டு. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்களுள் தமிழர்களும் உள்ளனர். இவர்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களும் இருந்திருக்கலாம். அது மட்டுமல்ல பன்னாட்டு ஆயுத விற்பனையாளர்களுக்கும் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. ஆயுத விற்பனையாளர்களுக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் தொடர்பு உண்டு. அதுவே ஒரு சங்கிலித் தொடர்பை போதைப் பொருட் கடத்தல் காரர்களுக்கும் விடுதலை இயக்கங்களூக்கும் ஏற்படுத்தியது.

விடுதலைப் புலிகளின் வருமானம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களிடம் இருந்தே பெறப்பட்டது. இவ்வருமானங்களில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகள் பல நாடுகளிலும் முதலீடு செய்திருந்தனர். அதில் கப்பற் போக்குவரத்துத் துறை முக்கியமானதாகும்.

இப்போது இலங்கை அரசு விடுதலைப் புலிகளின் சொத்துக்களிலும் வருமானங்களிலும் குறிவைத்துள்ளது. அதற்கு சட்ட விரோதமாகக் கடத்தப் பட்ட பத்மநாதனைச் சித்திரவதை செய்து பெறப்பட்ட தகவல்களைப் பாவிக்கிறது.
இது தொடர்பான தகவல்களை பெற்ற மஹிந்த அவசரமாக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விடுதலைப் புலிகளின் சொத்தும் வருமானமும் தமிழ்த் தேசியவாதத்திற்கு சொந்தமானது.

குமரன் பத்மநாதன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி அந்தப் பணத்தை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் பத்து நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதில் உள்ள சட்டப் பிரச்சனையை இலங்கை அரசு அறியுமா? சொத்துக்களை அவற்றை முடக்க முடியும். கைப்பற்றுவது சிக்கல். கப்பல் நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்ட கூட்டுருக்களுக்கு (corporate bodies) சொந்தமானவையாக இருக்கும். அவற்றைக் கைப்பற்றுவதும் இலகுவல்ல. விடுதலைப் புலிகளின் வருமானம் என்பது தமிழ்தேசியத்தில் பற்றுக் கொண்ட தமிழர்களால் வழங்கப் படுவது. அவற்றை எவராலும் கைப்பற்றவும் முடியாது. முடக்கவும் முடியாது. உணர்வுள்ள தமிழர்கள் இருக்கும் வரை தமிழர்களின் விடுதலை நாடி அவை செல்லும்.

Tuesday, 11 August 2009

பத்மநாதனைக் கடத்தலும் கருணாவின் பிதற்றலும்


பத்மநாதனின் கைது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கருணா என்கிற முரளீதரன் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் பத்மநாதனைக் கைது செய்திருக்க முடியாது அவர் கைது செய்யப் பட்ட படியால் பிரபாகரனின் மரணம் உறுதியாகிவிட்டது என்பது போல் கூறியிருந்தார். அவரது கூற்று பிரபாகரனின் உடலை நேரில் கண்டு அடையாளம் காட்டி(க்கொடுத்த)ய கருணாவிற்கே அதில் சந்தேகம் இருப்பதாகத் தெரிகிறது. அல்லது அவர் சொல்லவதைப் பலர் நம்பவில்லை என்று அவருக்கு தன் மீதே சந்தேகம். வேறு யாராவது அடையாளம் காட்டியிருந்தால் மக்கள் நம்பி இருப்பார்கள். வேலிக்கு ஓணான்தான் சாட்சியம் கூற முடியும் என்பதால், கருணா போன்றவர் அடையாளம் காட்டியது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பத்மநாதனின் கைதுக்கும் பிரபாவின்
மரணத்துக்கும் சம்பந்தம் உண்டா?


பழைய கைது
ஒரு குறிப்பிட்ட நாடு பத்மநாதனைக் கைது செய்ததாம் . இதை கேள்விப்பட்ட ஆரிய சிங்களக் கூட்டமைப்பு உடன் அந்த நாட்டுக்கு விரைந்ததாம் பத்மநாதனை தமது நாட்டுக்கு கடத்திக் கொண்டுவர. அதற்குள் வன்னிக்காட்டுக்கு செய்தி போக பிரபாகரன் இருபது மில்லியன் டொலர்களுக்கு மேல் செலவழித்து(?) பத்மநாதனை மீட்டு விட்டாராம். இப்போது பத்மநாதனை கைது செய்தபோது அப்படிச் செய்யாத படியால் பிரபா உயிருடன் இல்லை. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் நல்ல முடிச்சு.

இப்போதைய கைது/கடத்தல்
இந்தமுறை நடந்தது பத்மநாதன் பெயர் தெரியாத் நாடு ஒன்றின் பிரதிநிதி, பெயர் குறிப்பிடப் படாத நாடு ஒன்றிற்கு பேச்சு வார்த்தைக்கு வரும் படி, பத்மநாதனை அழைத்து விட்டு அங்கிருந்து சர்வதேச நியமங்களுக்கு எதிராக அவரைக் கடத்திக் கொண்டுவந்து விட்டனர். கொழும்பு வந்த பின்னேதான் செய்திகள் வெளிவந்தன. பத்மநாதனுக்கு தனது மூக்குக் கண்ணாடியையோ அல்லது அவசிய மருந்துப் பொருட்களையோ எடுத்து வரக் கூட வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. இதை பிரபாகரன் மண்ணில் இருந்தாலும் (இப்போதைய நிலையில்) அறிய முடியாது அல்லது விண்ணில்(அல்லது துரோகக் குழுக்கள் சொல்வது போல் நரகத்தில்) இருந்தாலும் அறிய முடியாது.

ஏன் இந்தப் பிதற்றல்.

Monday, 10 August 2009

இந்தியாவிற்கு திராணியிருந்தால் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தை நிறைவேற்றட்டும்.


tamilspy என்னும் பெயரில் இயங்கும் இணையத்தளம்
இந்த பதிவை திருடிவிட்டது


இந்தியாவின் போலியான மீள் குடியேற்றக் கோரிக்கைகள்
இலங்கையின் இன அழிப்புப் போரின் பின் இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை ஆறு மாதங்களுக்குள் குடியேற்றாவிடில் இந்தியப் படைகள் இலங்கை வந்து கண்ணிவெடிகளை அகற்றி அவர்களைக் குடியேற்றும் என்று டெல்லி வீராப்பு பேசியது. ஆறுமாதங்களுக்குள் குடியேற்றுவது முடியாத காரியம் என்று இலங்கை அறிவித்தது. இந்தியாவிலிருந்து கண்ணிவெடி அகற்றுதல் என்ற போர்வையில் ஒரு தொகுதி படையினர் இலங்கை வந்தனர். எந்தனை பேர் வந்தனர் என்பதில் முரண்பட்ட செய்திகளே வருகின்றன. 500 படையினர் வந்தனர் என்றும் செய்தி வந்துள்ளது 5000 என்றும் செய்தி வந்துள்ளது. எப்படி இருந்தும் வந்தவர்கள் முதலில் தெரிவித்தது கண்ணிவெடி அகற்ற ஆண்டுக் கணக்கில் நேரம் எடுக்கும் என்பதே. இந்தியப் படையினர் மீண்டும் வந்தது மீண்டும் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவே. ஆறு மாதம் என்று முதலில் இந்தியா கூறியது அப்பட்டமான பொய். இப்போது ஆண்டுக் கணக்கில் என்று சொல்வதும் பொய். படை வல்லுனர்களின் கணிப்பின்படி 25%மான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் இருந்தன. கண்ணிவெடிகள் பரவலாக இருந்திருந்தால் இலங்கைப் படையினரால் இந்தளவு வேகமாக விடுதலை புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றி இருக்க முடியாது. கண்ணிவெடியும் மீள் குடியேற்றத் தாமதமும் இலங்கை இந்தியக் கூட்டுச் சதியே. இந்தியப் படைகள் வந்தது காடுகளில் இன்னும் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்களா என்பதை அறியவா? இருந்தால் அவர்களைத் தேடி அழிக்கவா?

இந்தியாவின் போலியான போர் நிறுத்தக் கோரிக்கைகள்
இலங்கையில் மும்முரமாக இன அழிப்புப் போர் நடந்தபோது இந்தியா பலமுறை போர்நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் முன் வைத்தது. இலங்கை அரசும் உதாசினம் செய்தது. இது இலங்கை இந்திய உறவைப் பாதிக்கவில்லை. ஏன்? இந்தியா பகிரங்கமாக போலியான போர்நிறுத்தமே கேட்டது. திரை மறைவில் இந்தையாவே போரை நடாத்தியது. சிவ் சங்கர மேனனும் நாராயணனும் இலங்கைக்கு மேற்கொண்டபயணங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே நடந்தேறின.

இந்தியாவின் போலியான அரசியல் தீர்வுக் கோரிக்கைகள்
இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழர்கள் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வு காணமுடியாது அரசியரல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று இந்தியா பலமுறை அறிகை விட்டது. இதுவும் போலியானதே. போர் முடிந்து விட்டது. இலங்கையை அரசியல் தீர்விற்கு இந்தியா நிர்பந்திக்கவில்லை. மாறாக பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்கு இந்தியா பணம் வழங்கியுள்ளது.
ஜேஆர்-ராஜிவ் ஒப்பந்தமும் ஒரு சதியா?
1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தியும் அப்போதைய இலங்கைத் தலைவர் குள்ள நரி ஜே. ஆர். ஜயவர்த்தனேயும் ஒரு ஒப்பந்தத்தை செய்தனர். இதன் விளைவு தான் இலங்கையின் அரசியலமைப்பிற்க்கான 13வது திருத்தம். இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப் பட்டன. இந்த ஒப்பந்தப் படி இலங்கையின் திருகோணமலையிலும் சிலாபத்திலும் அமெரிக்கா காலூன்றுவது தடுக்கப் பட்டது. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் இதுவரை நிறை வேற்றப் படவில்லை. ஏற்கனவே இந்த ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு சாதக மான அம்சங்கள் நிறை வேற்றப் படத்தேவையில்லை என்று திரை மறைவில் இலங்கையும் இந்தியாவும் சதி செய்தனவா? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நிறிவேற்றும் பணி எந்த நிலையில் உள்ளது? இந்தியாவிற்கு திராணியும் நேர்மையும் இருக்குமானால் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறை வேற்றட்டும். அல்லது தன் போலித்தனத்தை பகிரங்கப் படுத்தட்டும்.

Sunday, 9 August 2009

இலங்கையில் நடந்தது வெறும் பயங்கரவாத ஒழிப்பா? அல்லது ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் சதியா?. .
தமிழ்த்தேசியத்தின் ஆயுதப் போராட்டம் ஒருநாளில் அல்லது ஒரு வருடத்தில் உருவானதல்ல. இலங்கை சுதந்திரமடைந்த பின் தமிழர்களின் மொழியுரிமையப் பறித்து அவர்களது நிலங்களை அபகரித்து கலாச்சாரத்தை சீரழித்து வாக்குரிமைகளைப் பறித்து...இப்படிப் பல கொடுமைகளைச் செய்த போது அதை எதிர்த்து அமைதியான வழியில் குரல் கொடுத்தபோது அவர்கள் மீது பயங்கர கொதிக்கும் தாரில் குழந்தைகளைப் போட்டெடுத்தமை உட்படப் பல கொடுமைகளைச் செய்தபோது அவர்கள் மீது திணிக்கப் பட்டது. இப்படிப்பட்ட அரச/பேரினவாத பயங்கரவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படது. முப்பாதாண்டுகால அடக்குமுறையின் விளைவாகவே தமிழர்களின் ஆயுதப் போராட்டம் உருவானது

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் ஆட்சி உரிமையை இழந்ததில் தமிழர்கள் மத்தியில் இருந்த துரோகிகளுக்குப் பெரும் பங்குண்டு. அதே போல் இன்று தமிழ்தேசியத்தின் ஆயுத போராட்டம் ஆரிய சிங்களக் கூட்டமைப்பால் மழுங்கடிக்கப் பட்டதிலும் துரேகிகளுக்கும் பங்குண்டு.

தமிழ்த் தேசியவாதத்தை ஒழிப்பதில் ஆரிய-சிங்கள பேரினவாதிகள் கைகளை இணைத்துக் கொண்டமை ஒரு சம்பவத்துடன் சம்பந்தப் பட்டதல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத்தான் தூக்குமாம்.
தமிழ்த்தேசியத்தைப் பற்றிய பேச்சு எழும்போது உத்தரப் பிரதேசவாதிகளின் தமிழ்நாட்டுக் கொத்தடிமைகள் முதலில் சொல்லுவது "போபஸ்-காந்தியின் கொலை".
ஆனால் இதற்கு முன்னதாகவே ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டு விட்டது. இவர்கள் வலுவாகும் அடாவடித்தனமாகவும் தமக்கு ஆதரமாக எடுக்கும் கொலையானது தமிழ்த்தேசிய வாதத்தை ஒடுக்குவதற்காக ஒழுங்கு செய்யப் பட்ட நாடகமா என்ற சந்தேகத்தைபலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்தது ஒரு தேசிய இனத்தின் உரிமைப் போருக்கு எதிராக

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...