Saturday, 8 August 2009

பத்மநாதனுக்கு என்ன நடந்திருக்கலாம்? என்ன நடக்கும்?

இப்படத்தில் சொடுக்கவும் -
Click on the above picture to enlarge.

இலங்கை அரசால் பெயர் குறிப்பிடப் படாத நாடொன்றில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டவர் பத்மநாதன் தான் என்பது இப்போது உறுதி செய்யப் பட்டுள்ளது.

கைதா? கடத்தலா?
பத்மநாதனைச் சார்ந்தோர் அவர் கடத்தப் பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். கைது என்பது குற்றப் பத்திரிகை சமர்பித்து நீதிமன்ற ஆணையின் படி செய்யப் படுவது. அப்படி ஏதும் நடக்காததால் இது கடத்தலே.

எப்படி மாட்டியிருப்பார் பத்மநாதன்?
பல ஆண்டுகளாக சர்வதேசக் காவற்துறையால் கைது செய்ய முடியதவரை எப்படி பிடிக்க முடிந்தது. இச் சதியில் இன்னும் ஒரு நாடு நிச்சயம் சம்பத்தப் பட்டுள்ளது. அது தாய்லாந்து அல்ல என்பது உறுதி செய்யப் பட்டுளது. விடுதலைப்புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் அல்லது கே.பி. யின் கைது தொடர்பாக வெளியான செய்தி குறித்து விபரங்களை வழங்குமாறு தாய்லாந்தின் பாதுகாப்பு முகவர் அமைப்புகளுக்கு அந்நாட்டுப் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவா நேற்று வெள்ளிக்கிழமை உத்தவிட்டார். தனது நாட்டுக் குடிமகனின் கைதை அவர் சர்வதேச காவற் துறையால் வேண்டப் பட்டவராக இருந்தும் பிரதமர் அக்கறை எடுத்திருப்பது தாய்லாந்து இந்தியாவைப் போல் ஒரு மானம் கொட்ட நாடு அல்ல என்பதைக் காட்டுகிறது. இந்தியக் குடிமக்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப் படுவதை இங்கு கவனிக்கவும். தாய்லாந்து இதில் சம்பந்தப் படாததால் சந்தேகம் மலேசியாவின் மீது தான் ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் பத்மநாதன் குற்றமிழைத்தவர் அல்ல. மலேசியாவோ அல்லது வேறு ஒரு நாடோ தன் மண்ணிற்கு வந்த ஒரு வெளிநாட்டவரை அவர் விருப்பத்திற்கு மாறாக இன்னோரு நாட்டினர் வந்து கடத்திச் செல்ல அனுமதிப் பது சட்ட விரோதம். இந்தச் சட்டவிரோதச் செயலுக்கு சம்பந்தப் பட்ட நாட்டை தூண்டும் வலு இலங்கைக்கு இல்லை இலங்கையுடன் இன்னொரு நாடு அல்லது நாடுகள் இதில் சம்பந்தப் பட்டிருக்கவேண்டும். கடைசியாக பத்மநாதனைச் சந்தித்த வர்மன் அந்நாடு மலேசியாவே என்று உறுதி செய்துள்ளார். அவர் யாரையோ சந்திக்கச் சென்றவிடத்திலேயே கடத்தப் பட்டுள்ளார். அவரை யாரோ பேச்சு வார்த்தைக்கு வரச்சொல்லி அழைத்தே கடத்தியுள்ளனர். இலங்கை அப்படி அழைப்பு விடுத்தால் அதை பத்மநாதன் இலேசில் நம்பியிருக்க மாட்டார். அண்மைக்காலமாக பத்மநாதன் இந்தியாவின் ஆதரவை தமிழர்களுக்கு வேண்டி அறிக்கைகள் விட்டுள்ளார். அவரை பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்த நாடு பெரும்பாலும் இந்தியாவாகத்தான் இருக்க வேண்டும்.

பத்மநாதனுக்கு என்ன நடக்கும்?
பத்மநாதன் நீதிமன்றில் நிறுத்தப் பட்டால் அவர் கடத்தலில் சம்பந்தப் பட்ட மூன்றாம் நாட்டின் சதியும் அம்பலமாகும். அது அந்த நாட்டிற்கு எதிராக சட்டச் சிக்கலை உருவாக்கலாம். இப்போதைக்கு இலங்கையில் அவசிய தேவை பத்மநாதனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் நிதிக் கட்டமைப்பை கைப்பற்றுவது அல்லது சிதைப்பதாகவே இருக்கும். அதற்கு அவருக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதாலே சாத்தியம். நீதிமன்றில் சமர்ப்பித்தால் இவ் வன்முறைகள் வெளிவரும். பத்மநாதனை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான் சாத்தியங்கள் குறைவு. இவரின் மீது இலங்கைப் படை அதிகாரிகளுக்கு இருக்கும் ஆத்திரம் சொல்லில் அடங்காது. ஆகையால் அவருக்கு குட்டிமணி, தங்கத்துரை போன்றோருக்கு ஏற்பட்ட முடிவே பத்மநாதனுக்கும் நடக்கும்.

இந்தியாவிடம் பத்மநாதனக் கையளிக்க இலங்கை தயார் என்று கூறியுள்ளது ஆனால் இந்திய வெளியுறவுத் துறை இதுவரை பத்மநாதன் கைது தொடர்பாக எதுவும் தெரிவித்ததாக தெரியவில்லை.

Friday, 7 August 2009

பிரபாகரனின் தொலை பேசியை வைத்தே பத்மநாதனைக் கைது செய்தோமென்கிறது இலங்கை


தம்மால் "கொல்லப் பட்ட" பிரபாகரனின் உடலில் இருந்த செய்மதி தொலைபேசியில் இருந்த தடயங்களை வைத்தே முப்பது வருடங்களாக தமது கண்ணில் மண்ணத் தூவிய செ பத்மநாதனைக் கைது செய்ததாக இலங்கை தெரிவித்துள்ளது.

மூன்று பிரிவினர் மூன்று நாடுகளில் தேடுதல்
இலங்கை அரசின் மூன்று குழுக்கள் மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பத்மநாதனைப் பிடிக்க அல்லது கொல்ல அனுப்பப் பட்டார்களாம். இலங்கைக்கு கொண்டுவருவதிலும் பார்க்க அவரை கண்ட இடத்தில் கொல்வதையே இலங்கை விரும்பியதாம். ஆனால் சம்பந்தப் பட்ட நாடுகளின் உளவுத் துறையினர் இதை விரும்பாததால் அவரை உயிருடன் இலங்கை கொண்டுவரும்படி நேர்ந்ததாம். இவற்றை ராயட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்த பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை இராணுவ அதிகாரிகள் செ பத்மநாதன் அடிக்கடி தனது தொலை பேசியையும் இருப்பிடத்தையும் மாற்றிக் கொண்டிருப்பவர் என்றும் கூறியுள்ளனர். இங்கு ஒரு முரண்பாடு: அப்படிப் பட்டவரை எப்படிப் பிரபாகரனின் தொலை பேசியில் உள்ள தடயங்களை வைத்துப் பிடித்தனர். இதுபற்றிய தொழில் நுட்ப அறிவு உள்ளவர்களுக்குத்தான் வெளிச்சம். இது இவ்வாறிருக்க தாய்லாந்தைத் தொடர்ந்து மலேசியாவும் பத்மநாதன் தமது நாட்டில் கைது செய்யப் படவில்லை என்று அறிவித்துள்ளது.

இலங்கைச் சட்டப் படியும் சர்வதேச நியமங்களுக்கு
அமையவும் விசாரிக்கப்படுவாராம்.

இதனிடையில் "கைது" செய்யப் பட்ட பத்மநாதன் இலங்கைச் சட்டப் படியும் சர்வதேச நியமங்களுக்கு அமையவும் விசாரிக்கப் படுவார் என்கிறது இலங்கை அரசு. குட்டிமணியும் தங்கத்துரையும் எப்படி விசாரிக்கப் பட்டனர் தண்டிக்கப் பட்டனர் என்பதை நாம் அறிவேம்.

தொடருமாம் தேடல்
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் காஸ்ரோ போன்ற மற்ற முக்கிய தலைகளை தேடி அழிக்கும் அல்லது பிடிக்கும் பணி தொடருமாம்.
=============================================================

பத்மநாதன்: நாடகமா? கைதானாரா? தண்ணிகாட்டினாரா?

பத்மநாதனின் முன்னைய படம்.

பத்மநாதனை கைது செய்ததாக இலங்கை பாதுகாப்பு இணையத்தளம் நேற்று அறிவித்தது. அவர் எங்கு எப்படி கைதானார் என்று தெரிவிக்கவில்லை.
சிறிலங்கா காடியன் இணையத் தளம் அவர் பாங்கொக்கில் கைது செய்யப் பட்டதாக தெரிவித்தது.
அவர் வெளிநாடொன்றில் கைது செய்யப் பட்டதாக டெய்லி நியூஸ் தெரிவித்தது.
டெய்லி மிறற் அவர் கைது செய்யப்பட்டதாக மட்டும் முதலில் அறிவித்தது. பின்னர் வெளிநாட்டில் உள்ள தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒரு ஊடகவியலாளரை ஆதாரம் காட்டி பத்மநாதன் மலேசியாவில் விடுதலைப் புலிகளின் உள்ளக காட்டிக் கொடுப்பின் பேரில் 'கைது' செய்யப் பட்டதாக கூறியது.

அல்ஜசிரா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப் பட்டதாக தெரிவித்தது.

இந்நிலையில் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்ததாக இலங்கை அரசின் தகவலை அறிந்த தாய்லாந்து அரசு அது தொடர்பாக விசாரித்து அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்தது. நள்ளிரவு தாய்லாந்து அதிகாரிகள் விழித் தெழுந்து இதைச் செய்யுமளவிற்கு அவர் அங்கு முக்கியத்துவமானவரா?

பத்மநாதன் கைது தொடர்பாக செய்தி வெளியிட்ட சகல வெளிநாட்டு செய்தி ஊடகங்களும் கொழும்புச் செய்திகளையே ஆதாரம் காட்டின. அவர் கைது செய்த நாட்டிலிருந்து செய்தி வெளிவிடவில்லை.

பத்மநாதனின் ஊடக உதவியாளரின் தகவலின்படி:
நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.

பிற்பகல் அளவில் குறிப்பிட்ட அந்த 'ரியூன்' விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், அவர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.

பின்னர் - பிற்பகல் 2:00 மணியளவில் - தனக்கு வந்த ஒரு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது தெரியவநு்துள்ளது.


பத்மநாதனின் ஊடக உதவியாளரின் தகவலின் படி கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தொலைபேசியில் உரையாடும் போது தான் சட்டவல்லுனர் ருத்திரகுமாருடன் நீண்டநாட்களாக கதைக்கவில்லை என்று கூறியது தனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். பத்மநாதனின் கைது தொடர்பாக தமிழ்நெற்றும் ஐபிசி வானொலியும் மௌனமாகவே இருக்கின்றன. தமிழ்நெற்றின் மௌனம் எப்போதும் பாரிய மர்மத்தின் அறிகுறி!

சென்ற வாரம் மேற்கு நாடுகளில் வெளிவரும் பரபரப்பு பத்திரிகை பத்மனாதனின் தற்போதைய படம் என்று சொல்லி ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அப்படம் அவரே தமக்கு வழங்கியதாகவும் அப் பத்திரிகை தெரிவித்தது.
இப்படத்தை பத்மநாதனின் சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் உள்ள உருவத்துடன் ஒப்பிட முடியவில்லை. திடீரென்று தனது படமென்று சொல்லி ஒரு படத்தை வெளியிடக் காரணமென்ன? இன்னொருவரை மாட்டிவிட்டாரா?

இலங்கை அரசின் நாடகமா?
கைது செய்ததாகச் சொல்லப் படும் ஒட்டலின் உள்ளக கணகாணிப்பு ஒளிப்பதிவுகளில் அந்த இடத்திலிருந்து எவரும் விருப்பத்திற்கு மாறாக அப்புறப் படுத்தப் பட்டதாக பதியப்படவில்லை. இலங்கை அரசே ஒருவரை அமர்த்தி இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் சம்பவம் நடந்த இடத்தில் பத்மநாதனைச் சந்திக்கச் சென்ற வர்மன் என்ற ஊடக வியலாளர் ஜிடிவிக்கு அளித்த பேட்டியிலிருந்து தெரிய வருகிறது. ஆரிய-சிங்களக் கூட்டமைப்புடன் நல்ல உறவுகளைப் பேணி வரும் மலேசியாவிற்கு பத்மனாதன் செல்வாரா? பத்மனாதனின் நடவடிக்கைகள் சிங்கப்பூர் சார்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது.
கைது செய்யப்பட்டவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து முகத்தை மூடியபடியே ஏன் கொண்டு செல்லவேண்டும். இப்போது ஒரு கேள்வி எழலாம்! ஏன் இலங்கை இந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்? புலிகளை ஒழித்து விட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு சர்வதேசிய ரீதியில் புலிகள் நாடுகடந்த அரசாங்கம் ஒன்று அமைக்க முயல்வது. சிங்கள மக்கள மத்தியில் புலிகளை அழிக்க முடியாது என்ற எண்ணத்தை மீண்டும் வளர்த்துவிடும். சரத் பொன்சேகாவின் அதிருப்தியும் அதனால் அவர் வெளிநாடு செல்லவ்இருக்கிறார் என்ற செய்தியும் ராஜபக்சே குடும்பத்திற்கு தேர்தல் ரீதியாகச் சாதகமானதல்ல. பொன்சேகவிற்க்கு அப்பாலும் தம்மால் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக வெற்றி பெறமுடியும் என்று காட்ட முடியும். பத்மநாதனை நீதிமன்றில் நிறுத்தும் வரை அல்லது பகிரங்கப் படுத்தும் வரை இச் சந்தேகம் இருக்கும்!!!!
07/08/2009 GMT 10:45 வரை இன்ரர்போல்(Interpol - சர்வதேசக் காவற்துறை அமைப்பு) இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.

Thursday, 6 August 2009

பார்ப்பன அன்பர்கள் எனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்களா?


முதலில் இந்தப் பக்கத்திற்கு சென்று (எச்சரிக்கை: படங்கள் மிகவும் மோசமானவை உங்கள் மனதைப் வெகுவாகப் பாதிக்கலாம்) இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களைப் பாருங்கள்:
http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartIV?feat=embedwebsite#

இலங்கையில் இந்தனை கொடூரங்களும் நடந்தேறிவிட்டன. இதை எதிர்த்து சிங்களவர்கள் பலர் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் குரல்கள் முடக்கப்பட்டுவிட்டன. ஒரு சிங்கள இராணுவ அதிகாரியே இராணுவ உயர்மட்டக் கூட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் மோசமான வன்முறையை பற்றி தனது அதிருப்தியைத் தெரிவித்தாராம்.

இப்போது எனது கேள்வி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக எத்தனை பார்ப்பன அமைப்புக்கள் குரல் கொடுத்தன. இலங்கைத் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் சங்கராச்சாரியார் உட்பட பல இந்து மதத் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றும் படி வேண்டினார். இதற்கு இவர்கள் செய்தது என்ன? இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணிய சுவாமி, மணிசங்கர ஐயர் போன்றோர் மட்டும் பார்ப்பனர் அல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் தமிழ்நாட்டில் வாழும் பார்பனர்கள் தமிழர் பக்கமா அல்லது சிங்களவர் பக்கமா அல்லது "தர்மத்தின்" பக்கமா என்று அறியத்துடிக்கிறோம். தயவு செய்து யாராவது பதில் தாருங்கள்.

Wednesday, 5 August 2009

காட்டுக்குள் புலிகள்: விகடன் நக்கீரன் புளுகுப் போட்டி!


விடுதலைப் புலிகளின் பலத்தைப் பற்றி விடனின் பிரசுரங்கள் 2008-ம் ஆண்டிலிருந்தே மிகைப் படுத்திக் கூறிக் கொண்டுவந்தன. இவையாவும் வெளிநாடுகளின் வாழும் தமிழர்களிடையே தனது விற்பனையைப் பெருக்கிக் கொள்ளும் பொறுக்கித் தந்திரம். விடனுக்குப் போட்டியாக களத்தில் இறங்கியவர் நக்கீரன்.

விடுதலைப் புலிகளுடன் பணியாற்றிய "அரசறிவியலாளர்" திருநாவுக்கரசு அவர்களின் பேட்டியை அண்மையில் வெளியிட்ட விகடன் வன்னிக்காட்டுக்குள் இரண்டாயிரம் புலிகள் இருப்பதாக திருநாவுக்கரசு சொல்வதாக தெரிவித்தது. வன்னிமுகாமில் இருந்த திருநாவுக்கரசிடம் அம் முகாம்களில் நடைபெறும் மோசமான பாலியல் வதைளைப் பற்றியோ அல்லது மனித உரிமை மீறல்களைப் பற்றியோ கேட்டறியவில்லை. அதை வெளிக் கொண்டுவந்தால் அவர்களது "எஜமானர்களுக்கு" கோபம் ஏற்படலாம் என்று விட்டு விட்டதா?

இப்போது விகடனின் செய்திக்கு நக்கீரன் ஒருபடி மேலே போய்விட்டது. "புதிய பயிற்ச்சியில் புலிகள்... அதிரும் காடுகள்" என்று தலைபிட்டு ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றியும் பீற்றிக் கொண்டுள்ளது: நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும்.
மேலும் நக்கீரன் சொல்கிறார்: காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறி வச்சுத் தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும்.

கிளிநொச்சியை விட்டு விலகும் போது ஒரு புலிகளின் படையணி இலங்கை இராணுவ சீருடையுடன் கிளிநொச்சியில் இருந்து முதலில் தெற்குப் புறமாக நகர்ந்து பின்னர் மன்னார் காடுகளுக்குள் சென்று மறந்துள்ளது. இது இலங்கை இராணுவத்தைப் பின்புறமாக இருந்து தாக்கும் நோக்கதுடன் செய்யப் பட்டது. ஆனால் பின்னர் இப் படையணிக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. மே மாதம் பதினேழாம் திகதி இலங்கை இராணுவத்தால சுற்றி வளைக்கப் பட்ட விடுதலை புலிகள் சரணடையச் சென்ற அரசியற் பிரிவினரை கொன்றபின் பலமுனைகளில் ஊடறுப்புத் தாககுதல் செய் அல்லது செத்து மடி என்ற பாணியில் செய்து தப்பி ஓட முயற்சித்தனர். இதில் பலர் கொல்லப் பட்டதுண்டு. காயமடைந்த நிலையில் பலர் உயிருடன் புதைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் கைது செய்யப் பட்டதும் உண்டு. இதில் எத்தனை பேர் தப்பிச் சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
தப்பிச் சென்றவர்கள் மீண்டும் திரண்டு செயற்பாட்டில் இன்னும் ஈடுபடவில்லை. தேடிச் சென்ற இராணுவத்தினர் நூற்றி ஐம்பது பேர் கொல்லப் பட்டனர் என்பதெல்லாம் பொய் வதந்திகள். இலங்கை ஆரிய சிங்களக் கூட்டமைப்பினரிடமிருக்கும் நவீன கருவிகள் வசதிகளை மீறி புலிகள் காடு அதிரும் படி பயிற்ச்சி செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மோசமான எரி குண்டுகளை அக்காட்டுக்குள் வீசி எல்லோரையும் சாம்பலாக்கிவிட ஆரிய சிங்களக் கூட்டமைப்பினால் முடியும். நக்கீரனும் விகடனும் தங்கள் விற்பனையப் பெருக்கிக்கொள்ளப் போட்டியிருகின்றன.

Facebookசனியன் மாற்றப் பலன்கள்


மேஷம்
இதுவரை உங்கள் inboxஇல் அமர்ந்து கொண்டு மூன்றாம் பார்வையாக உங்கள் profile ஐப் பார்த்து பல தொல்லைகளையும் தந்து வந்த சனிபகவான் இனி application இல் மறைவதால் உங்கள் profile புதுப் பொலிவுடன் மிளிரும் பல நண்பர்களும் நண்பிகளும் இணைவாரகள். புது group தொடங்கினால் பலரும் இணைவார்கள். உங்கள் inbox இல் message நிறைந்து வழியும். ஆனாலும் உங்கள் யோகாதிபதி பாதகாதிபதி வீட்டில் பதுங்கு குழி அமைத்து அமர்ந்திருப்பதால் சில தடைகள் அவ்வப்போது ஏற்பட வாய்ப்புண்டு. சில விடயங்களில் கவனமாக இருக்கவும். இந்து ராம் சிங்கள்வனிடம் வாங்கி நக்கிவிட்டு வாலாட்டுமொரு நாய் என்று உங்கள் profileஇல் எழுதிவைத்திவிட்டுப் பிரச்சனையில் மாட்ட வேண்டாம். இதற்குப் பரிகாரமாக ஸ்ரீநமீதாம்பாள் படத்தை உங்கள் album இல் இணைத்துப் பூசிக்கவும். “ஸ்ரீநமீதாம்பாள் நாசமாய்போவாய் நமஹ “ என்னும் மந்திரத்தை தினசரி மூன்று வேளையும் 9 தடவை உச்சாடனம் செய்யவும்.

இடபம்.
இதுவரை உங்கள் inbox இல் ஒரே message மழையாக இருந்தது சனிபகவான் இப்போது உங்கள் profile இல் அமர்வதால் பல சிக்கல்களும் ஏற்படும். chat box ஐ off line இல் எப்போதும் வைத்திருக்கவும். இந்தியா உதவியதால்தான் இலங்கை விடுதலைப் புலிகளை வென்றது என்ற உண்மையை தமிழ் நாட்டு பார்ப்பன நண்பர்களிடம் சொல்லி வம்பில் மாட்ட வேண்டாம். சிரமங்களில் இருந்து விடுபட விஜய்க்கு வெடிவைப்போர் சங்கத்திலோ அல்லது வில்லுப் பார்த்து நொந்தவர்கள் சங்கத்திலோ இணைந்து நற்பணிகள் செய்யவும். அட்றா அட்றா நாக்க முக்கா சுலோகத்தைப் படித்துப் பயன் பெறவும்.

மிதுனம்
இயல்பாகவே எப்போதும் chat box இல் வார்த்தைகளால் சரசமாடும் நீங்கள் இனிப் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வீர்கள். உங்களுடன் படு விரசமாக வார்த்தைகளால் நீலப் படம் காட்டுவது போல் உம்முடன் chat box இல் கதைத்தவர் பெண் அல்ல ஆண் என்று அறிந்து அதிர்ச்சி அடைவீர்கள். விரக்தியால் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. வன்னியில் நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். பரிகாரமாக அஜித்துக்கு ஆப்பு வைப்போர் சங்கம் ஏகனை எதிர்ப்போர் சங்கங்களில் இருந்து உடன் விலகவும். “இத்தாலியாள் பாவாடைக்குள் மாட்டிய காங்கிரஸ் நமஹ” எனும் மந்திரத்தை அடிக்கடி உச்சாடனம் செய்யவும். பொலிவூட்டில் உள்ள ஸ்ரீதிரிஷாம்பாள் திருத்தலம் சென்று தரிசிக்கவும்,.

கடகம்
உங்களுக்கு இப்போது இன்பமும் துன்பமும் கலந்த பலன் கிடைக்கும். நல்ல figure உடன் chatபணணத் தொடங்கும் போது computerஐ விட்டு எழுந்து போக வேண்டி வரும். அல்லது மனைவி குளித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்து பெண்களின் profile படங்களைப் பார்த்து வழிந்து கொண்டிருக்கும் போது மனைவி பின்னால் வந்து நிற்பாள். கவனமாக இருக்கவும். பிரபாகரன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்ற சர்ச்சையில் ஈடுபட வேண்டாம். இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு facebook மூலம் நல்ல வரன் அமையும். ஆனாலும் நன்கு விசாரித்த பின் முடிவு எடுத்தல் நன்று.

சிங்கம்
உங்களுக்கு ஏழரைச் சனி கடைக் கூறு என்பதால் உங்கள் சுய விபரங்களை மறைத்து வைத்திருப்பது நல்லது. உங்கள் மொபைல் இலக்கம் விலாசம் முதலியவற்றை யாருக்கும் தர வேண்டாம். மற்றவர்களின் profile இற்கு தேவையற்ற comment அடிப்பதைத் தவிர்க்கவும். படங்களை album இல் இணைக்கும் போது நிதானம் தேவை. இலண்டனில் இருக்கும் நண்பர் ஆற்ப்பாட்ட ஊர்வலத்தில் எடுத்த படத்தை உங்கள் album இல் உங்களுடைய படம் என்று இணத்து நீங்களும் இலண்டனின் இருப்பதாக தம்பட்டம் அடிக்க வேண்டாம். புதிதாக group தொடங்க உகந்த காலம் அல்ல.

கன்னி
இப்போது உங்களுக்கு ஏழரைச்சனி நடுக்கூறு நடந்து கொண்டிருக்கிறது. குருபகவானும் சாதகமாக இல்லை. உங்கள் facebook account suspend செய்யப் பட வாய்ப்பிருக்கிறது. மஹிந்த ராஜபக்சவைப் பற்றியோ சோனியாகாந்தியைப் பற்றியோ notes எழுதுவதைத் தவிர்க்கவும். ஷிரேயாம்பாள் படத்தை screen saver ஆக வைத்திருந்து அடிக்கடி தரிசிக்கவும். “தீபிகா படுகோன் இடை சுவாஹ தொடை நமஹ” என்ற சுலோகத்தை உங்கள் profile இல் எழுதி அடிக்கடி உச்சாடனம் செய்யவும்.

துலாம்
இப்போது உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. married என்று இருக்கவேண்டிய உங்கள் profile single என்று இருப்பதை மாற்றவும். chat box இல் உங்கள் வயதைக் குறைத்துக் கூற வேண்டாம். கொட்டாஞ்சேனையில் இருப்பவர்கள் நியூயோர்க்கில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கவேண்டாம். அமிஞ்சிக்கரையில் இருப்பவர்க்கள் அமெரிக்காவில் இருப்பதாக பொய் சொல்லவேண்டாம். வன்னி இனக் கொலையை பற்றிய படங்களை இணைக்க வேண்டாம். போலியாக இன்னொரு account திறக்க வேண்டாம்.

விருச்சிகம்
உங்கள் 11ம் வீட்டில் சனி அமர்வதால் நல்ல வருவாய் ஏற்படும். அதிக நண்பர்களை இணைத்து. அவர்களின் e-mail address எடுத்து வியாபார நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். தமனாவின் உதட்டை இரசிப்போர் சங்கம் அமைத்தால் அதிக நண்பர்கள் சேருவாரகள். பல e-mail address வந்து சேரும். விடுதலைப் புலிகளைத் தாக்கி எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியும் உண்டாகுவாள். மங்களம் உண்டாகட்டும்.

தனு
உங்கள் ராசிக்குரிய குறி வில்லு. பலவில்லங்கங்கள் வந்து சேரும். உங்கள் profile picture எடுத்து விட்டு ciniglitz.comஇல் உள்ள நடிகருடையதோ அல்லது நடிகையினதோ படத்தை இணைக்கவும். பல அதிர்ச்சிகளும் காத்திருக்கும். உங்களுடன் இதுவரை chat box தினசரி மூன்று வேளை இலண்டனில் இருப்பதாகக் கூறி கதைத்து வந்த நண்பனோ நண்பியோ இலண்டனில் இல்லை உங்கள் உடன் படிக்கும் ஒரு மட்டமான figure அல்லது boy தான் என்று அறிந்து அதிர்ந்து போவீர்கள்.
ஓம் பூர் புவஹ ராணி முகர்ஜி
தத் சவித்தூர் ஐஸ்வர்யா
பர்கோ திவிய திரிஷாய
அசின் நமஹ நமஹ
என்ற மந்திரத்தை அடிக்கடி உச்சாடனம் செய்யவும்.

மகரம்
உங்களுக்கு எல்லாக் கிரகங்களும் சாதகமாக அமைந்துள்ளது. இலண்டனில் படித்துக் கொண்டிருக்கும் supper figure வலிய வந்து மாட்டும். ஆனால் கவனமாக கதைத்து காரியத்தைச் சாதிக்கவும். உங்கள் மட்ட ரகமான ஆங்கில அறிவை வெளிக்காட்ட வேண்டாம். ஆனாலும் புதிதாக நண்பர்களை இணைக்கும் போது கவனமாக இருக்கவும்.

கும்பம்
உங்களுக்கு இப்போது அட்டமத்துச் சனி ஆரம்பித்துவிட்டது. Facebook account ஐ deactivate செய்துவிட்டு சிவனே என்று இருக்கவும். பொழுது போகாவிடில் solitaire, freecell போன்ற இலகு விளையாட்டுக்களை விளையாடவும். செ. பத்மனாதன் துரேகியா தூவரா என்ற சர்ச்சையில் உங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். பிரபாகரன் மாவிரர் தினத்திற்கு முன் வந்துவிடுவார் என்று யாருக்கும் சொல்லவேண்டாம். மறந்திருந்து வழிகாட்டியவன் மறைந்தாலும் வழிகாட்டுவான் என்று நம்பி இருக்கவும்,.

மீனம்
உங்கள் பலன்கள் பொதுவானவை. ஆங்கிலத்தை கொலைசெய்து notes, comments போன்றவை எழுதி மாட்டிக் கொள்ளவேண்டாம். தி என்ற எழுத்தில் தொடங்கும் நண்பர்களை விலக்கி விடவும். மற்றவர்களுக்கு nuisance message இனியும் அனுப்பவேண்டாம். யாராவது எழுதிய கவிதையை உங்கள் கவிதை என்று notes இல் பிரசுரிக்க வேண்டாம். Copyright சட்டம் உங்கள் மேல் பாயும்.

Tuesday, 4 August 2009

தமிழ் மீனவர் மீது தாக்குதல்: மானம் கெட்ட இந்தியா என்ன செய்யப் போகிறது?


தமிழ் மீனவர்கள் மீது மீண்டும் சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடாத்தி உள்ளனர். தமிழ் மீனவர்களைத் தாக்கிக் காயப் படுத்தி அவர்களைக் கொள்ளையடித்து நிர்வாணமாக்கி அவமானப் படுத்தியுள்ளது சிங்களக் கடற்படை. இதற்கு எதிராக இந்தியா என்ன செய்யப் போகிறது?

அண்மையில் நடுக்கடலில் பழுதடைந்த இந்திய மீனவர்களின் படகைக் கட்டி இழுத்துச் செல்வதற்கு இந்தியக் கரையோரக் காவற் படையினர் தயாராகிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இந்தியர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர். பயந்து நடுங்கிய இந்தியக் கரையோரக் காவற் படையினர் தமது கைகளை உயர்த்தி அவர்களிடாம் சரணடைந்தனர். அவர்கள் கப்பலுக்குள் ஏறி சோதனையிட்ட பின் இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர். இதற்கு இந்தியா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தியா தமிழர்களைத் தன்னாட்டுப் குடிமக்கள் என்று எண்ணுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் வாழும் ஆறு கோடி தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

  • மீனவர்கள் நம்ம "ஜாதி" இல்லை அந்த ஜாதிக்காரங்க இதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று விடப் போகிறார்களா?
  • கொட்டும் மழையில் கைகோத்து நிற்கப் போகிறார்களா?
  • கொடும்பாவி கட்டி எரிக்கப் போகிறார்களா?
  • டெல்லிக்குக் கடிதம் எடுக்கப் போகிறார்களா?
  • நாலு மணித்தியால உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களா?
  • மிகச் சிறந்த பரிகாரம்: நாயிற் கேவலமான ஒரு பத்திரிகை ஆசிரியரை இது தொடர்பாக அறிக்கை விடச் செய்ய வேண்டும். அவருக்கு இதற்குப் பணம் கொடுக்கவேண்டும். அறிக்கையில் கூறப் பட வேண்டியது: இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை இந்தியக் கடற்படையிலும் பார்க்க மரியாதையாக நடாத்துகிறார்கள்.

Monday, 3 August 2009

சமஷ்டியும் அதிகாரப் பகிர்வும் காணாமல் போகவில்லை கேணல் ஹரிகரன் அவர்களே


இந்திய உளவுத்துறைக்காக இன்னும் பல முன்னாள் அதிகாரிகள் ஊடகங்கள் முலமான பிரச்சாரங்களால் தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்பட்டு வருகிறார்கள் அவர்கள் இரண்டு வகைப்படுவர். ஒன்று சிங்களப் பேரின ஆதரவுப் பிரிவு. மற்றது தமிழர்களை இந்தியாவிற்கு எதிராக போகமல் இருக்க தமிழின ஆதரவாளர்கள் போல் நடிக்கும் பிரிவு.

சிங்கள பேரின ஆதரவுப் பிரிவு
இப் பிரிவினர் அப்பட்டமாக தமிழ்தேசியத்திற்கு எதிராக எழுதுபவர்கள். இவர்களின் பணி சிங்களப் பேரினவாதிகளை இந்தியாவின் பக்கம் இழுப்பது. இவர்களின் கருத்துக்கள் சிங்களப் பேரின வாதிகளுக்கு அறிவுரை சொல்வது போன்றிருக்கும். ஆனால் அவர்கள் சிங்களப் பேரின வாதிகளை தம் பக்கம் இழுக்கும் முயற்ச்சியில் இதுவரை வெற்றி காணவில்லை. சிங்களப் பேரின வாதிகள் இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை இன்றும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் இலங்க்கையில் சீனத் தலையீட்டை எதிர்ப்பதில்லை மாறாக கை நீட்டி வரவேற்கிறார்கள். ஆனாலும் இந்திய உளவுத்துறை என்னும் விக்ரமன் தன் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராமல் சிங்களப் பேரின வாதம் எனும் உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நேக்கி நடந்து கொண்டே இருக்கிறது.

தமிழர்களுக்கு ஆதரவு போல் நடிக்கும் பிரிவினர்.
இப்பிரிவினர் இந்தியாவின் செயல்களை அவ்வப் போது கண்டித்து எழுதுவார்கள். இலங்க அரசின் செயற்ப்பாட்டைக் கண்டிப்பார்கள். தமிழர்களின் நிலைப் பாட்டை நியாயப் படுத்துவது போலும் எழுதுவார்கள். ஆனால் தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது பிரிந்து போவதுதான் ஒரே வழி என்ற உண்மையை மறைத்து விடுவார்கள். ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வு, இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டை இந்தியா மதிக்கிறது என்பன இவர்களது வரட்டு வேதாந்தங்கள். இப்பிரிவின் நோக்கம் இந்தியாவில் தமிழர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் இந்தியா எமது தந்தை நாடு என்ற மாய எண்ணத்தை தமிழர்கள் மத்தியில் விதைப்பது. அதில் இவர்கள் பலத்த வெற்றி கண்டுள்ளனர். இப்பிரிவில் இருந்து இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தபோது அதனது புலனாய்வுத்துறையின் தலைவராகச் செயற்பட்ட கேணல் ஹரிகரன் என்பவர் தனது திருவாயால் அண்மையில் கூறியதில் முக்கியமானவை:

சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும்.

சிறிலங்காவை அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. அங்குள்ள அரசியல் கட்சிகள், அவர்களின் தலைவர்கள் பலரைப் போலவே இவ்வாறு குத்துக்கரணம் அடிப்பது வழமையானதுதான். இது மாதிரியான நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. அது அவர்களின் அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது.

இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா முன்னர் காத்திரமாகக் கருத்துத் தெரிவித்து வந்தது. பின்னர் 13 ஆவது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புவதாக அது இறங்கி வந்தது.

அதுவாவது நடக்குமா என்ற சந்தேகம் வந்தபோது இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்துவிட்டது.

எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத் தொடரின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேசிக்கொண்டதன் பின்னரே இந்தியா வாயை மூடி மௌனியானது

கத்துக் குட்டி ராஜீவ்
ஐயா ஹரிகரன் அவர்களே சமஷ்டி என்ற வர்த்தை சிங்களவர்களின் மத்தியில் இருந்து காணமல் போகவில்லை. மாறாக அவர்கள் மத்தியில் இது தமக்கு ஆபத்தான ஒன்று என்று அவர்கள் மந்தில் மிக மிக ஆழமாகப் பதிக்கப் பட்டுவிட்டது .சமஷ்டி என்ற சொல் காணாமல் போயிருந்தால் மீண்டும் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் அது நஞ்சாக்கப் பட்டுவிட்டது.
ஹரிகரன் ஐயா அவர்களே உங்கள் கத்துக் குட்டியான முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கும் இதில் பங்குண்டு. அவர் உதிர்த்த திருவாசகம்: இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கத்திலும் கூடிய ஒரு தீர்வை தமிழர்களுக்கு வழங்கும் படி நான் இலங்கையை வற்புறுத்தமாட்டேன். இந்தியாவின் இந்த நிலைப் பாட்டிற்கு பிறகு இலங்கைத்தமிழர்கள் சமஷ்டி என்ற கோரிக்கையை முன் வைக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

13+ இல் இருந்து 13-விற்கு மாறிய இந்தியா.
இலங்கை இன அழிப்புப் போரை நடாத்திக் கொண்டிருந்த வேளை டெல்லியில் இருந்து வெளிவந்த தகவல்களின் படி இந்தியா இலங்கை பயங்கரவாதத்தை (?) ஒழித்தபின் 13-ம் அரசியல் திருத்தத்திற்கும் அப்பாற் சென்று இன்னும் கூடிய அதிகாரங்களுடனான தீர்வை முன்வைக்கும்படி இலங்கையை வலியுறுத்தும் என்று கூறப் பட்டது. இது அப்போது இந்தியா தமிழினக் கொலையில் தனது நேரடிப் பங்களிப்பை மூடிமறக்க செய்த தந்திரம். இப்போதுஇந்தியா கொடுக்கும் சமிக்ஞை ஏதோ கொடுப்பதை கொடு.

கெடுத்ததெல்லாம் கெடுத்தாய்
யாருக்காகக் கெடுத்தாய்
ஒரு தடவையா கெடுத்தாய்.

தமிழினத்திற்கு எதிராக இந்தியாவின் அடுத்த சதி ஆரம்பம்.


இலங்கை 1948இல் சுதந்திரமடைந்தபின் தமிழர்களின் இரு முக்கிய கட்சிகளான தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் இணைக்க தமிழ் காங்கிரசுத் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் முயன்ற போது அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் தோட்டத் தொழிலாளர் காங்கிரசுத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானிடம் நீ சிறுபான்மை இனமாகிய தமிழர்களுடன் சேராமல் பெரும்பான்மை இனமான சிங்களவர்களுடன் ஒத்துழை என்று பணித்தார். தொண்டமானும் அப்படியே செய்தார். அவருக்கு சிங்களவர்கள் கொடுத்தபரிசு தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தமையாகும். இது பற்றி நேருவிடம் தோட்டத் தொழிலாளர்கள் முறையிட்டபோது இது உள் நாட்டுப் பிரச்சனை இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டார். இது இந்தியா தமிழினத்திற்கு இந்தியா செய்த பெரும் துரோகம்.

இதன் பின் 1964இல் இந்தியா இலங்கையுடன் சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் சர்வதேச நியமங்களுக்கு எதிராக கைச்சாத்திட்டு 150,000 தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. இத்துடன் நின்றுவிடவில்லை இந்தியத் துரோகம்.

1980களின் ஆரம்பப்பகுதியில் இலங்கை வாழ் தமிழர்களிடை பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவற்றை சிங்களவர்களுடன் மோதவிட்டதுடன் அக்குழுக்களை ரோ அமைப்பின் சதி மூலம் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டது. இது தமிழ்த் தேசிய போராட்டத்தை பலவீனப் படுத்தவும் இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டுவடவும் செய்த சதி.

மாலைதீவில் தமிழ் ஆயுதக் குழு ஒன்று நடாத்திய தாக்குதல், ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் உட்பட பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையில் இன அழிப்புப் போர் 2008/09 போரை இந்தியா முன்நின்று நடாத்தியது. அப்போதே இலங்கைக்கு 500கோடி கைக்கூலியாக இந்தியப் பொதுத் தேர்தலுக்கு பின் தருவதாக இந்தியா இலங்கைக்கு வாக்குறுதி அளித்ததாக நம்பப்படுகிறது. போர் நடந்து கொண்டிருக்கும் போது இலங்கைய இந்தியா போர் நிறுத்தம் கேட்பதாக "பாவ்லா" காட்டிக் கொண்டிருந்தது. நாம் போர் நிறுத்தம் செய்யும் படி கேட்பது போல் கேட்கிறோம் நீ கொன்று குவி! பத்தாயிரம் ஆரியப் பேய்கள் வன்னியில் நின்று போரை முன்னெடுத்ததாம்.

இப்போது அடுத்த சதி: ஆறுமாதத்திற்குள் வதை முகாம்களில் இருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விட்டுக் கொண்டே இருக்கும் ஆனால் இலங்கை அவர்களை கால வரையின்றி வதை முகாம்களில் வைத்துப் படிப்படியாக சாகவிடும். இதுவரை பத்தொன்பதினாயிரத்திற்கும் மேற்பட்டோர் வதை முகாம்களில் இருந்து காணாமல் போயுள்ளனர். இடையில் ஒரு வீராப்புக் கதையும் இந்தியா பேசியது: ஆறு மாதத்திற்குள் குடியேற்றாவிடில் இந்திய இராணுவம் வந்து கண்ணிவெடிகளை அகற்றும். இது இந்தியப் படை இலங்கை வந்து தமிழர் பிரதேசங்களை சிங்கள இராணுவத்திற்கு உதவுவதற்கான சதி.

சிங்களத்தின் திட்டம்: முதலில் தமிழர் பகுதிகளில் அறுபதினாயிரம் சிங்களப் படையினரை குடியமர்த்தி அதன்பின்னர் தான் அங்கு தமிழர்கள் குடியமர்தப் படுவார்கள். தமிழரின் தாயகத்தை இதன் மூலம் கூறு போடப்படும். அங்கு சிங்களவர்கள் ஆள்பவர்களாகவும் தமிழர்கள் அடிமைகளாகவும் உருவாகுவார்கள். சிங்களப்படைகளுக்கு வளமான பகுதிகள் வளமான பகுதிகள் வழங்கப் படும் தமிழர்கள் அங்கு கூலிகளாக்கப் படுவர். இதற்கு உத்தரப் பிரதேசப் பேரின வாதிகள் உதவப் போகிறார்கள்.

Sunday, 2 August 2009

யாழ் தேர்தல்: சுதந்திரமும் மக்களாட்சியும்


மக்களாட்சி என்பது ஒரு இனிய சொல். உலகின் பெரும் பகுதிகளில் மக்களாட்சி என்பது அடக்கு முறையாளர்களின் போலிப் போர்வையே. உலகின் பல நாடுகளின் அடக்குமுறை ஆட்சியாளர்கள் ஒழுங்காக தேர்தல் நடந்தி முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே. ஜேர்மனியின் ஹிட்லர் கூட மக்களாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர். ஒழுங்காகத் தேர்தல் நடத்தப் படாமல் தேர்தெடுக்கப்படும் அரசுகளும் உண்டு. பெரும்பாலான அரசுகள்பொய்யான வாக்குறுதிகளாலும் ஊடகங்களால் தவறான வழிநடத்தல்களாலும் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. தன்னை மக்களாட்சி நாடெனக் கூறும் அமெரிக்காவில் தங்கள் வாக்குக்கல் கணக்கில் எடுக்கப் படுவதில்லை என பல இலட்சக் கணக்கான மக்கள் குறை கூறுவது உண்டு.
சுதந்திரமாக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாத இடத்தில் தேர்தல் நடத்துவதால் என்ன பயடும் இல்லை.

யாழ்ப்பாண மாநகரத் தேர்தலை ஒட்டி நடாத்தப் பட்ட கருத்துக் கணிப்பு வாக்களிப்பில் தேர்தலில் வாக்களிபீர்களா என்ற கேள்விக்கு 85% மக்கள் பதிலளிக்கவில்லை! இந்நிலையில் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப் படுகின்றன. தேர்தல் நடாத்தும் சூழ்நிலை இல்லாப் பகுதியில் தேர்தல் தேவையா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...