Saturday, 25 July 2009

1983 இலங்கை இனக் கொலை இந்திரா காந்திக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் நாள் இலங்கையில் இனக் கலவரம் என்ற போர்வையில் இடம்பெற்ற இனக் கொலையைப் பற்றி ஆராய்ந்த பலரும் ஒரு கருத்தை தெளிவாகக் கூறினர்: இது திட்டமிட்டு நடத்தப் பட்டது.

இக்கலவரம் தொடர்பான கதைகள் 1981இல் இருந்தே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பீக்க வேண்டும். கொழும்பில் அவர்கள் சொத்துக்களை அழித்து அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும். இப்படியாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்து 1981இல் இருந்து பரவி வந்தது.

திட்டமிட்டவர்கள்: சிங்களப் பேரின வாதிகள்.
சம்பந்தப் பட்டவரகள்: அரசியல் கட்சிகள், காவல்துறையினர், அரச படையினர், காடையர்கள்.

ஜேவிபியின் பங்கு
அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் திட்டமிட்டது என்றும் கூறப்பட்டத்து. அதேவேளை தமது போராட்டத்தை நசுக்கிய இந்தியாவைப் பழிவாங்க ஜேவிபி திட்டமிட்டதாம். அத்துடன் தமிழ் முதலாளிகளுகு எதிரான தனது நடவடிக்கையையும் எடுக்கத் திட்டமிட்டதாம். விளைவு கொழும்பில் இருந்த பல தமிழரல்லாத வட இந்தியரும் அவர்களது சொத்துக்களும் வர்த்தக நிலையங்களும் தாக்கப் பட்டன. ஹைட்ராமணி, குண்டன்மால்ஸ், ஜffர்ஜீஸ் போன்ற தமிழர் அல்லாதவர்களின் நிறுவனங்கள் தாக்கியழிக்கப் பட்டன. இந்த இனக் கொலை ஒருவாரமாக நடை பெற்றது.

இந்தியாவிற்கு தெரியாதா?
இந்தியாவின் உளவுத்துறை இலங்கையில் நன்கு செயற்பட்டு வந்தது. இதற்கான சான்று:
இலங்கையில் ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியினர் செய்த ஆயுதப் புரட்சியைஅடக்கியவிதம். இந்திரா காந்தி அம்மையார் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை தனது உளவுத்துறை மூலம் நன்கு கவனித்து வந்தார். இலங்கையிலும் பார்க்க இந்தியா அதன் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்தியா வெளிநாட்டமைச்சு தமது கடற்படைக் கப்பல் ஒன்று உங்கள் நாட்டுக்கு அண்மையில் பழுதடைந்து விட்டது உங்கள் கொழும்புத் துறை முகத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கேட்டுப் பெற்று கொழும்பில் ஒரு கடற்படைக் கப்பல் வந்துவிட்டது. அதே பாணியில் மறுநாள் இன்னொரு கப்பலும் வந்துவிட்டது. இரு கப்பல்கள் நிறைய கூர்க்காப் படையினர் தயார் நிலையில்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி தொடங்கியது இலங்கை அதிகாரிகள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயக்காவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர் சொகுசுப் படமாளிகை ஒன்றில் ஆங்கிலப் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் நாட்டின் சிலபாகங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள். உதவிக்கு சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்பு கொண்டார். இந்திரா அம்மையார் சொன்னார் "ஆம் பிரச்சனை இல்லை எங்கள் இரு கப்பல்கள் நிறைய வீரர்கள் கொழும்புத் துறைமுகத்தில் நிற்கிறார்கள்." பின்னர் இந்தியாவிலிருந்து ஒரு தொகை உலங்கு வானூர்திகளும் இலங்கை வந்தன. ஜேவிபியின் புரட்சி அடக்கப் பட்டது.

இப்படிப்பட்ட இந்தியாவிற்கு இலங்கையில் பாரிய இனக்கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டது தெரியாமல் இருந்திருக்குமா?

அப்போது இலங்கை தொடர்பாக இந்தியாவின் பலம் என்ன?
பங்களாதேசப் போரின் போது இலங்கையூடாக பாக்கிஸ்தானிய விமானங்கள் கட்டுநாயக்காவிமன நிலையத்தைப் பாவித்து பறப்புக்களின் ஈடுபட்டன. இது தொடர்பாக இந்தியாவில் சர்ச்சை எழுந்தபாது அப்போதைய பாதுகாபபு அமைச்சர் ஜெகஜீவன் ராம் கூறியது: இலங்கை எமக்கு எதிராக செயற்படுமானால் ஒன்பது நிமிடங்களில் எம்மால் இலங்கையை எமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும். அப்படிப் பட்ட இந்தியா ஒருவாரமாக நடந்த இனக் கொலையை தடுக்க முடியாமற் போனது ஏன்?

எங்க ஏரியா உள்ளே வராதே! This is my backyard.
1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தைத் தொடர்ந்து இந்திரா காந்தி அம்மையார் தான் செல்லும் நாடுகளில் எல்லாம் இலங்கை இனப் பிரச்சனையப் பற்றி கதைத்து வந்தார். கதைத்து அவர் வலியுறுத்தியது: இலங்கையின் இனப்பிரச்சனை எனது நாட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எனது நாட்டின் பாது காப்புடனும் பிராந்திய ஒருமைப் பாட்டுடனும் சம்பந்தப் பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் உரிமை எனக்கு உண்டு என்பதை வலியுறுத்தி அதைப்பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்தார். இலங்கையை தனது பிடிக்குள் இறுக்கினார் இந்திரா அம்மையார். இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்று இனக் கொலை அனுமதிக்கப் பட்டதா?

Friday, 24 July 2009

கனிமோழி இலங்கை செல்லத் தேவையில்லையா?முதல்வர் கலைஞரின் வாரிசும் இலங்கத்தமிழர் விவகாரங்களின் அக்கறை உள்ளவருமான கனிமொழி அவர்கள் இலங்கை சென்று வன்னி முகாம்களில் உள்ள தமிழர்களின் அவலத்தைப் பார்வையிடுவதாக இருந்தது. இவரை அங்கு அனுப்புவதன் நோக்கம் அவர் அங்கு சென்றபின் இலங்கை அரசிற்க்கு அதிக
பணம்தேவை என்று அறிக்கை அவரைக் கொண்டு விடச்செய்து இதைச் சாட்டாகவைத்து இலங்கைக்கு ஏற்கனவே உறுதியளித்த 500கோடியிலும் கூடுதலான கடனுதவியை இந்தியா வழங்கவிருப்பதாக சொல்லப் பட்டது. ஆனால் இப்போது இந்தியா ஹிலரி கிளிண்டனுடன் கதைத்து சர்வதேச் நாணய(மில்லாத) நிதியம் கேட்டதிலும் அதிக உதவி பல மனித உரிமை அமைப்புகளின் ஆட்சேபங்களுக்கு மத்தியில் செய்யவிருப்பதாக அறியப் படுகிறது. எனவே கனிமொழி வன்னி செல்ல மாட்டாரா?

செங்கல்பட்டு அகதி முகாமில் 60இற்கு மேற்பட்ட தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.


அமெரிக்கா கியூபாவில் நடாத்தும் குவாண்டானாமோ முகாமை ஒத்த 1993இல் அமைக்கப் பட்ட செங்கல்பட்டு அகதி முகாமில் இலங்கையைச் சேர்ந்த 60 தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்பும் தமக்கு இழைக்கப் படும் அநீதிகளை எதிர்த்து 20தடவைகள் இவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டும் எந்த பயனும் கிடைக்கவில்லை. மாறாக இவர்களது நிலைமை மோசமடந்து கொண்டே போகிறது. விடுதலைப் புலிகளுக்கு உதவினாரகள் என்ற சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் மீது எந்த விதமான குற்றச் சாட்டுகளும் எந்த நீதிமன்றிலும் முன்வைக்கப்படவில்லை. இவர்களில் பலர் மனநிலையும் உடல் நிலையும் பாதிக்கப் பட்டுள்ளனர். 25 அறைகளின் 86பேர் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இதற்கு முன்னர் செய்த உண்ணாவிரதப் பேராட்டங்கள் பயனளிக்காத நிலையில் இவர்கள் இப்போது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இம்முறை அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நாடாத்தப் போவதில்லை என்றும் அரசியல் வாதிகளுடன் மட்டும் பேசப் போவதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை இனக்கொலை- ஐநாவைச் சாடுகிறார் பேராசிரியர் Noam Chomsky
ஐக்கிய நாடுகள் சபை தனது பாதுகாக்கும் பொறுப்பை இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கொடூரங்களில் நிறைவேற்றத் தவறியது என்று போருக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பேராசிரியர் Noam Chomsky அவர்கள் கூறியுள்ளார். மேற்குலக நாடுகள் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

He said the Western powers just didn't have enough interest, although something "could have been done." He analogized it to Rwanda, both the genocide in 1994 and the lead-up, including with "structural adjustment," in the 1970s.

Chomsky went on, regarding the UK, to say that former prime minister Tony Blair may have been involved in Israel's deal with British Gas for natural gas off the coast of the Gaza Strip. It's reminiscent of Sri Lanka's move to redeliniate its sea claims, and the little reported finding of oil and gas off the coast of North Sri Lanka. Does that as some say explain the military assault? Time will tell.

Noam Chomsky இன் கருத்தின் காணொளியை இங்கு காணலாம்:here

Thursday, 23 July 2009

விடுதலைப் புலிகளின் தலைவர் பத்மநாதனின் பேட்டி காணொளியில்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் செ. பத்மநாதன் அவர்கள் பிரித்தானியத் தொலைக் காட்சி சனல்-4 இற்கு இனங்காணப் படாத இடத்திலிருந்து தனது உருவத்தை முழுமையாகக் கட்டாமல் வழங்கிய பேட்டி: அவர் இலங்கை இடைத்தங்கல் முகாம்கள் உண்மையில் வதை முகாம்கள் என்றும் இலங்கை அதிபர் பிரச்சனையைத் தீர்க்கும் உண்மையான தலைவராக இருந்தால் அவர் சரியான தீர்வை முன் வைக்க வேண்டும் என்றும் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். இவரது பேட்டி பற்றிக் கருத்து தெரிவித்த பிரித்தானியாவிற்கான இலங்கத் தூதுவர் இலங்கையில் விடுதலைப் புலிகள் என்று ஒரு இயக்கம் இல்லை என்றும் அது துடைத்தழிக்கப் பட்டு விட்டதாகவும் கூறினார்.

Wednesday, 22 July 2009

நெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு


கொட்டாஞ்சேனைக் கோவிலிலே
வசந்த மண்டப வாசலிலே
பக்தியோடு நின்றேனே
பாவை ஒருத்தி வந்தாளே
ஓரக் கண்ணால் பார்த்தாளே
என்னை இழந்தேனே – நான்
காதலில் விழுந்தேனே.

சோதனைச் சாவடி யொன்றிலே
கால்கடுக்க நின்றேனே
பின்னால் வந்து நின்றாளே
உரசி உரசி அசைந்தாளே
ஒத்தடங்கள் தந்தாளே
எப்படிச் சொல்வேனோ-சுகம்
என்ன வென்பேனொ

யாழ் செல்லும் விமானத்திலே
அருகில் வந்து அமர்ந்தாளே
அறிமுகமாய் ஆனோமே
ஒரு முகமாய் போனோமே
எப்படி மறப்பேனோ – அதை
என்றும் மறவேனே.

வெள்ளவத்தைக் கடலருகே
தாழை மர நிழலடியே
கொஞ்சிக் குலவி மகிழ்ந்தோமே
எம்மை மறந்து இருந்தோமே
சுகம் பல கண்டோமே
சுவை பல கொண்டோமே

பம்பலப்பிட்டி சந்தியிலே
பஸ் தரிப்பின் பின்னாலே
காத்து காத்து நின்றேனே
கன்னியங்கு வந்தாளே
கையில் ஒரு கவருடனே - தன்
கல்யாண அழைப்பிதழ் என்றாளே – என்
நெஞ்சில் வெடித்த குண்டு கிளமோரே!
அடி இது முறையோ அடி இது தகுமோ

என் குடும்பந்தான்! எனக்கு மட்டும்தான்!

நாணயமில்லா நாணய நிதியம் நாணயமில்லா நாட்டிற்கு நாணய உதவி செய்கிறதுஇலங்கையில் நிலமை என்ன?
 • கிழக்கின் உதயம் என்ற பெயரில் அங்கு சிறுவர்கள் கடத்தல்கள் கொலைகள் நடக்கின்றன.
 • மக்கள் நாடெங்கும் மிகுந்த பயத்துடன் வாழ்கிறார்கள்.
 • ஊடகவியலாளர்கள் கொல்லப் படுகிறார்கள்.
 • போர் முடிந்த நிலையிலும் நாட்டில் அவசர கால நிலைச் சட்டம் தொடர்ந்தும் அமூலில் இருக்கிறது.
 • மூன்று இலட்சம் மக்கள் வதை முகாம்களில் அடை பட்டுள்ளனர். அவர்களில் வாரந்தோறும் ஆயிரக் கணக்கில் இறக்கின்றனர். இன்னும் பல இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
 • கடற்கரைகளில் கொலை செய்யப் பட்ட சடலங்கள் வந்து ஒதுங்குகின்றன. 12000 ஆயிரம் படையினர் தேவைப் படும் ஒரு நாட்டில் இரண்டு இலட்சம் படையினர் பணியில் உள்ளனர்.
 • பாதுகாப்புச் செலவீனம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
 • அரசு ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தை எதிர் பார்க்க முடியாது.
 • செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகள் கட்டுப் படுத்தப் படுகின்றன.
 • ஐநா ஊழியர்கள் சர்வதேச நியமங்களுக்கு முரணாகத் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
கேட்டது 1.9பில்லியன் கொடுப்பது 2.5 பில்லியன்
இந்நிலையில் இலங்கைக்கு கேட்டதிலும் அதிகமாக சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கியுள்ளது. சிலவாரங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதில் சகல தரப்பினரினதும் கருத்துக்கள் கணக்கில் எடுக்கப் படும் என்று கூறியது. பிரித்தானிய அதிகாரிகள் இலங்கையில் கடனுதவி செய்வதற்கான சூழல் இல்லை என்றனர். அமெரிக்க செனட்டிலும் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. ஆனாலும் இப்போது இலங்கைக்கு கடனுதவி வழங்கும் படி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை பரிந்துரை செய்துள்ளது.

பணிப்பாளர் சபை பரிந்துரை செய்தது ஏன்?
சர்வதேச நாணய நிதியத்தைப் பொறுத்தவரை அது வழங்கும் கடனானது கடன் வாங்கும் நாடு மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் திறனை அதிகரிப்பதாகும். இலங்கையில் நடந்த போரால் கிளிநொச்சியில் Kentacky Fried Chicken, McDonalds போன்றவை வியாபாரம் நடாத்த முடியவில்லை. ஜப்பானியப் பொருட்கள் வன்னி வீடுகளில் இல்லை. அவற்றை இப்போது ஏற்படுத்த வேண்டும். அதற்கு போரால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் பொருளாதர அபிவிருத்திகள் செய்யப் படவேண்டும். அதற்கு போதிய நிதி இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டும். இலங்கை அரசு போரால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் செய்யும். நாணயமில்லா நாணய நிதியம் நாணயமில்லா நாட்டிற்கு நாணய உதவி செய்கிறது.

அமெரிக்காவும் பிரித்தனியாவும் எதிர்த்தது ஏன்?
சர்வதேச நாணயா நிதியதிதின் நிபந்தனைகளுக்கு இலங்கை ஆரம்பத்தில் அடிபணிய மறுத்தது. அந்நிலையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்த்தன. இப்போது இலங்கை நாணய நிதியத்தின் நிபந்தனகளுக்கு அடி பணிந்து விட்டன. அதனால் எதிர்ப்பு கைவிடப் பட்டதா?

Tuesday, 21 July 2009

சோனியாவும் ஹிலரியும்

ஈழம்: கொள்ளி வைத்த அமெரிக்கா அள்ளி வைக்குமா?


யாரோ விமானங்களைக் கொண்டு போய் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியதற்கு உலகெங்கும் உள்ள விடுதலை போராளிகளை எல்லாம் பயங்கரவாதிகளாக்கி அவர்களை அழிக்க கொள்ளிவைத்தது அமெரிக்கா.

இலங்கையில் பாவிக்கப் பட்ட பேரழிவு ஆயுதங்களை செய்மதிகள் மூலம் படம் பிடித்து வைத்திருந்தும் அவற்றை வெளியிடாமல் வைத்திருக்கிறது அமெரிக்கா.

இன அழிப்புப் போரில் தனது அந்நியச் செலவாணியை காலி செய்துவிட்டுத் தவிக்கிறது சிங்களம். அதற்கு உதவி செய்ய சீனாவிற்குப் போட்டியாகத் துடிக்கிறது ஆரியப் பேய்கள்.

மோசமான மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிந்த சிங்களத்திற்கு சர்வ தேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெற எந்த அருகதையும் இல்லை.

இலங்கைக்கு கடனுதவி புரியும்படி சர்வ தேச நாணய நிதியத்திடம் வற்புறுத்த விருக்கிறது ஆரியப் பேய்கள்.

மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி சர்வ தேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கைக்கு வழங்கக்கூடாது என சில நாடுகளும் பொது அமைப்புகளும் கூறிவருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? சர்வ தேச நாணய நிதியத்தைப் பொறுத்தவரை அது பெரும் கடனுதவியை வளர்ச்சியடந்து வரும் நாடுகளுக்கு கொடுக்கவிருக்கிறது. இப்போதைய சர்வ தேச பொருளாதர நெருக்கடியில் இப்படிக் கொடுக்கும் கடனுதவியால் வளர்ச்சியடந்து வரும் நாடுகள் பெருமளவில் இறக்குமதியை மேற்குலக நாடுகளிடமிருந்து செய்யும். இவ்விறக்குமதிகள் நெருக்கடியில் இருக்கும் மேற்குலக நாடுகளின் வியாபாரிகளின் வருவாயைப் பெருக்கும்.

அமெரிக்கப் பத்திரிகைகளும் சிங்களம் தமிழர்மீது கட்டவிழ்த்து விட்டுள்ள காடைத்தனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனலும் அமெரிக்கா இலங்கை சீனாவின் பக்கம் சாயாமல் இருக்க சர்வ தேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியை ஆதரிக்கும் என்று சந்தேகிக்கப் படுகிறது.

சர்வ தேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோமென்று வீர வசனம் பேசிய சிங்களம் இப்போது நிபந்தனைகளுக்கு கட்டுப் படுவதாக அறிவித்துள்ளது!

Monday, 20 July 2009

குங்குமம்: தமிழர் பண்பாடும் ஆரியரின் அசிங்கமும்.


பெண்கள் நெற்றியில் குங்குமப் பொட்டிடுவதற்க்கு தமிழர் பாண்பாடு கொடுத்த விளக்கம்: நெற்றியின் புருவ மத்தியில் சில சிறப்பு வாய்ந்த நாடி நரம்புகள் சந்திக்கின்றன. இதில் குங்குமப் பொட்டிட்ட பெண் பிற ஆடவரின் பார்வைக்கு மயங்கமாட்டாள். குங்குமப் பொட்டு இட்டிருக்கும் பெண்ணை மனோவசியக் கலை(hypnotism) அறிந்தவரால் வசப்படுத்த முடியாது. இதற்காக பெண்கள் குங்குமப் பொட்டிடவேண்டும்.

ஆரிய அசிங்கம்
இந்துமதம் குங்குமப் பொட்டிடுவதற்கு கொடுக்கும் விளக்கம்: ஒரு முறை சிவபெருமான் வழமையிலும் பார்க்க வேகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது அவர் தலையில் இருந்த கங்கைக்கு நடனத்தின் கடுமையான குலுக்கல் காரணமாக மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அதனால் வடிந்த இரத்தம் சிவபெருமானின் நெற்றியில் வடிந்து அவரின் உடற் சூட்டால் அங்கு காய்ந்து விட்டது. இது ஒரு செந்நிறப் பொட்டுப் பொட்டுப் போல பதிந்து விட்டது. மற்றவர்கள் இந்த முறையப் பின்பற்ற நெற்றியில் குங்குமத் திலகமிட்டுக் கொண்டனர்.

சீதனம் வாங்கிய சிவபெருமான்.

பார்வதிதேவி சிவபெருமானை திருமணம் புரியத் தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தல் மகிழ்ந்த்தேன். உன்னுடைய பிரார்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார். சிவபெருமானுக்கு நெற்றியில் கண். பார்வதிதேவிக்கு நெற்றியில் செந்நிறக் காயம். அதையே மற்றவர்களும் பின்பற்றி திருமணத்தின் போது ஆண் பெண் நெற்றியில் பொட்டிடுவதை வழக்கமாகக் கொண்டனர்.

Sunday, 19 July 2009

பிரபாகரனின் மரணமும் திருநாவுக்கரசின் பேட்டியும் தரும் சந்தேகங்கள்.


விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த ஊடகவியலாளர் திருநாவுக்கரசு உயிருடன் தப்பினார் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஊடகங்களூடாக மிகத்தெளிவாகவும் உகந்த ஆழ அகல ஆய்வுகளுடனும் விடுதலைப் புலிகளின் நிலைப் பாட்டை மக்களுக்கு விளக்கியவர் இவர். மற்ற ஒரு சிறந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி இலங்கைப் படையினரால் கொல்லப் பட்டு விட்டார்.

திருநாவுக்கரசு ஜுனியர் விகடனுக்கு சொன்னவற்றில் சில:
 • எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில்(பிரபாகரனிடத்தில்) இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.
 • சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம்.
 • கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது.
 • அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு(''பிரபாகரனின் நிலை என்ன ஆனது?'') யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!
 • ''பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?''
  ''அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது.
 • பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார்.
 • போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவத னியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் 'மதிவதனி வெளியேறக் கூடாது...' என உறுதியாக அறி வித்து விட்டார் பிரபாகரன். 'மக்கள் வேறு... குடும்பத்தினர் வேறு...' என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.
 • பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை.
 • பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடி யில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!(உண்மையில்லை)
திருநாவுக்கரசு அவர்களால் எப்படித் தப்பிக்கமுடிந்தது?
பலத்த கெடுபிடிகளின் மத்தியில் இருக்கும் வன்னி முகாமில் இருந்து திருநாவுக்கரசு அவர்களால் எப்படித் தப்பிக்க முடிந்தது? இவருக்கு யார் உதவிசெய்தார்கள்? முகாம்களில் இருப்பவர்களை சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுதக் குழுக்கள் பணம் வாங்கிக்கொண்டு தப்பிச் செல்ல உதவுவதாக கதைகள் அடிபடுகின்றன! இவருக்கு அப்படி யாராவது உதவியிருக்கலாம். அல்லது அப்படிப்பட்டவர்கள் யாராவது இவருக்கு நெருங்கிய உற்வினராயிருக்கலாம்! இவற்றைவிட இவரை எஞ்சியுள்ள புலிகளிக்கு எதிராகப் பயன் படுத்த யாரவது முயற்சிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஏற்படவாய்ப்புண்டு! ஆனால் விடுதலைப் புலிகளுக்கோ அதன் தலைவருக்கோ எந்தவித களங்கமும் ஏற்படுத்தக் கூடிய வகையில் இவர் பேட்டியளிக்கவில்லை. இந்த நிலை தொடரும் என நம்புவோமாக. ஆனால் ஒரு நியாயமான சந்தேகம் இங்குண்டு: தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த இவரை ஏன் இந்திய அரசு கைது செய்யவில்லை? இதற்கான விடைக்கு நாம் பொறுத்திருக்க வேண்டும்.

அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது. இப்படி திருநாவுக்கரசு சொல்லும் போது வெளிநாட்டில் இருப்பவர்களால் எப்படி பிரபாகரனின் மரணத்தைப் பற்றிக் கூறமுடிகிறது?

பேட்டியில் முரண்பாடு
வழமையில் தெளிவாக எல்லாவற்றையும் ஊடகங்கள் மூலமா மக்களுக்கு விளக்கும் திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய பேட்டியில் ஏன் முரண்பாடுகள் இருக்கிறது என்ற சந்தேகம் பின்னுள்ள இரு வாசகங்களைப் பார்த்தவுடன் ஏற்படுகிறது:
1. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம்.
2. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக... அதாவது காலம் கடந்த பிறகே புரிந்து கொண்டனர்.
இருகருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன.

'திருநாவுக்கரசுகூறியது: "போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ராணுவத்திடம் சரணடைந் தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந் தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங் கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை."
இக்கூற்றில் கணக்கு உதைக்கிறது! 5000 புலிகளுக்கு என்ன நடந்தது? அது மட்டுமல்ல திருநாவுக்கரசு இங்கு காட்டிக் கொடுத்துவிட்டார். சனிக்கிழமை இப்பேட்டி வெளிவந்தது. வெளிவந்த சில மணித்தியாலங்களில் இலங்கை விமானப் படை காட்டுப் பகுதிகளில் குண்டுகள் வீசின. இவர் 2000 புலிகளை காட்டிக் கொடுத்துவிட்டார். பேட்டியின் இப்பகுதியைத் தவிர்த்திருக்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...