Saturday, 20 June 2009

இலண்டனில் தமிழர்கள் பேரணி - படங்கள்வன்னியின் அவலங்கள் இலண்டன் பெருந் தெருக்ளளில் உண்மைக் காட்சிகள்போல் சித்தரிக்கப் பட்டன. முட்கம்பி வேலிகளுக்கு பின் தமிழர்கள் தண்ணீர் கேட்டுக் கதறுவது போலவும் இராணுவம் தண்ணீரைக் காட்டி விட்டு கொடுக்காமல் ஏமாற்றுவது போலவும் அப்பாவிகளை அடித்து துன்புறுத்துவது போலவும் பேரணியில் செய்து காட்டப்பட்டதை பலரும் கண்டனர்.
ஈழப் பிரச்சனையும் வர்கக் கண்ணோட்டமும்.
இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டம் தமிழ்நாடு வாழ் தமிழர்களினதும் புலம் பெயரந்து வாழும் தமிர்களினதும் ஆதரவின்றிச் சாத்தியப் பட்டிருக்காது.

.
விடுதலைப் புலிகளின் எதிரிகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இலண்டன் தமிழர்களைத் தாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்து கொள்வர். இவர்கள் பொதுஉடமைவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டு இலண்டன் தமிழர்கள் இலங்கைப் பிரச்சனையை வர்கரீதியல் அணுகாத பிற்போக்கு வாதிகள் அரசியல் அறிவற்றவர்கள் என்று கூறிவருகின்றனர். அத்துடன் நின்று விடுவதில்லை இன்றைய தமிழர்களின் அவல நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் புலிப் பாசிச வாதிகளுக்கு வழங்கிய ஆதரவு தான் காரணம் என்றும் குற்றம் சாட்டி மகிழ்கின்றனர்.


இலங்கை இனப் பிரச்சனைக்கு வர்க்க ரீதியான அணுகு முறை என்பது சிங்கள தமிழ் மக்களுக்கிடையில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினர் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்து அவர்கள் தமக்கிடையில் உள்ள பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதுதான்.


இலங்கையின் இனப்பிரச்சனையைப் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒன்று தெரியும் இலங்கையில் நடந்த சகல இனக் கொலைகளிலும் இனக் கலவரங்களிலும் சிங்களப் பாட்டாளி வர்க்கமும் முதலாளி வர்க்கமும் தமிழர்களை வர்க்க பேதமின்றி தாக்கியது. தனிச் சிங்கள சட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்தது தன்னை இடது சாரி எனக் கூறிய ஒரு அரசுதான். இலங்கை பொது உடமைக் கட்சி இலங்கை சமசமாஜக் கட்சி ஆகியன தந்தை செல்வாவின் இணைப்பாட்சி(சமஷ்டி) கொள்கையை பலமாக எதிர்த்தவர்கள். "பொதுஉடமைவாத" ஆயுதப்புரட்சியில் ஈடுபட்ட ரோஹண விஜயவீர தமது இயக்கத்தில் தமிழர்களை இணைக்கவில்லை. அவரது தோல்விக்கு அடையாளம் காணம்பட்ட ஐந்து காரணங்களில் தமிழர்களை இணைக்காததும் ஒன்று. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பவர்கள் சிங்கள மக்களால் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. வாசுதேவ நாணயக்காரவும் கலாநிதி விக்கிரம பாகுவும் இதற்கு நம்முன் உள்ள நல்ல உதாரணங்கள்.


சிங்கள மக்கள் இலங்கைப் பிரச்சனையை வர்க்க ரீதியாக அணுகும் தலைவரைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் பின்னால் தமிழ்ப் பாட்டாளி வர்கம் திரளும். தமிழர்களுக்கு பிரச்சனை இருக்காது. இலண்டன் தமிழர்கள் அப்போது செல்லாக் காசாகிவிடுவார்கள். அவர்களும் தாயகத்துப் பிரச்சனைகளை மறந்து தமது வாழ்கையை அநுபவிப்பார்கள்.
.
ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கு வர்கக் கண்ணோட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து வைத்திருக்கின்றனர்.


Friday, 19 June 2009

உயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்


மெல்லச் சிரித்து வந்தாள்
கண்கள் எரித்து வந்தாள்
.
நெஞ்சகம் புகுந்தாள்
வஞ்சகம் புரிந்தாள்
.
மனம் சிதற வைத்தாள்
இதயம் பதற வைத்தாள்
.
உருவம் மெலியவைத்தாள்
உள்ளம் நலிய வைத்தாள்
.
உயிர் உருக வைத்தாள்
ஊன் எரிய வைத்தாள்
.
என் காதல் கொன்றாள்
ஏனோதான் சென்றாள்

பிரித்தானியத் தொலைக் காட்சிவெளியிடும் சிங்களத்து அட்டூழியங்கள்

பிரித்தானியத் தொலைக் காட்சி Channel - 4 தொடர்ந்து வெளியிடும் சிங்களத்து அட்டூழியங்கள். இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப் படும் சொல்லோணா உலகம் மறக்கும் நிலையில் ஐநா மறைக்கும் நிலையில் Channel - 4 பல அட்டூழியங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. உண்மை நிலை இதிலும் மிக மிக மோசமானது.


Members of Sri Lanka’s ethnic Sinhalese majority also expressed deep misgivings about the fate of the island’s Tamil minority now that the Tamil Tigers have been so decisively defeated. Despite severe restrictions on access to camps for displaced civilians, evidence is emerging of maltreatment, despite a promise made by President Mahinda Rajapaksa in his “victory speech” to Sri Lanka’s parliament.

Thursday, 18 June 2009

இலங்கையில் மேலும் இறுகும் சீனப் பிடிஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை உரையாடும் உறுப்பினராகச் சேர்க்கப் பட்டமை இலங்கையில் சீனாவின் பிடி இறுகுகின்றதென்பதற்கு மேலும் ஒரு அறிகுறியாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு சபை சீனா, கஷகஸ்த்தான், இரசியா, தஜிகிஸ்த்தான் உஷ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பில் இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் பார்வையாளராக கலந்துகொள்ளும் உரித்துடையன. இலங்கைக்கு இந்த அமைப்பில் உரையாடும் உறுப்புரிமை வழங்கப்பட்டமை இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டது.
.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை சீனா நன்கு உணர்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் சீனா பலமான ஒரு வர்த்தக உறவை 1960களில் இருந்தே ஏற்படுத்தி வருகிறது. ஆபிரிக்காவின் மூலவளமும் மத்திய கிழக்கின் எரிபொருள் வளமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின , பங்காற்றி வருகின்றன. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் வழியாக இலங்கையைக் கடந்தே செல்ல வேண்டும். இதனால் இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா விரும்புகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை இணைந்து கொண்டமை மேற்குலகிற்கு எதிராக இலங்கை எடுத்து வைக்கும் ஒரு அடி அல்ல என்று இலங்கை வெளியுறவுச்செயலர் தெரிவித்திருந்த போதிலும் அதுதான் உண்மை என்றும் கருதப்பட வேண்டியுள்ளது. மேற்குலகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுப்பும் போர் குற்றச்சாட்டிலிருந்து தப்ப இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு புகலிடம் தேவை. அது சீனாவைத்தவிர வேறு எந்த நாட்டாலும் முடியாது. உண்மையில் இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவின் தீவிரஆதரவாளர்களாக இருப்பதால்தான் மேற்குலகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்குற்றம் என்ற ஆயுதத்தை எடுத்துள்ளனர்.
.
ஏற்கனவே ஈரானிய-சீனக் கூட்டமைப்பில் இலங்கையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.இந்திய முன்னாள் பிரதமரின் துரோகத்தை மறைத்த தினமணிசிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமா பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 நாடற்றவர்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
.
இதை வன்மையாக எதிர்த்தவர் ஈழத் தமிழர்களின் தலைவர் தந்தை செல்வா அவர்கள். அவர் இதை அதிகார அரசியலுக்காக அரை மில்லியன் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டது பன்னாட்டு அரசியலில் முன்னெப்பொழுதும் இல்லாத நடவடிக்கை என விபரித்தார்.
..
ஒருவரை நாடற்றவர் என்று சொல்வது சர்வ தேசச் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணானது. நட்ட நடுக்கடலில் செல்லும் ஒரு கப்பலில் ஒரு பிள்ளை பிறந்தால் கூட அது அந்தக் கப்பல் எந்த நாட்டிற்கு அடுத்து செல்கிறதோ அந்த நாட்டின் குடியுரிமை அப்பிள்ளைக்கு உண்டு. உலகத்தில் நாடற்றவர் என்று ஒருவர் இருக்கக் கூடாது என்பதே சர்வதேச நியமம். இப்படியிருக்க 150,000 மக்களை நாடற்றவர்களாக கையொப்பமிட்டவர் காங்கிரசுக் கட்சியின் பிரதம மந்திரி சாஸ்திரி அவர்கள். அவர் செய்த இந்த இனத் துரோகம் தமிழர்களின் வரலாற்றில் மறக்கப் படக் கூடாத ஒன்றாகும். இதை தினமணியில் தமிழர்களின் வரலாற்றை எழுதி வரும் பாவை சந்திரன் அவர்கள் மூடி மறைத்துள்ளார்.
.
இன்று இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களத் தலைவர்களுடன் கைகுலுக்கி அவர்களிடம் எதையோ எல்லாம் பெற்றுக் கொள்கிறார்கள் தமிழக மற்றும் இந்தியத் தலைவர்கள். சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருடன் அருகில் நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்; இராசகோபாலாச்சாரியார் அவர்கள்.

Wednesday, 17 June 2009

ஆரியப் பேய்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆப்பு வைப்பது அன்றே ஆரம்பித்தது.


ஆரியப் பேய்கள் ஈழத் தமிழர்களுக்கு அள்ளி வைக்கும் பணியை இன்று நேற்று ஆரம்பிக்க வில்லை. இலங்கை 1948 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களை ஒடுக்கும் பணியை சிங்களவர் ஆரம்பித்தனர். பிரித்தானியா தமது பிரித்தாளும் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கை மக்களைப் பல தேசிய இனங்களாக சட்டரீதியாக இனம் கண்டு பிரித்து வைத்திருந்தது. சிங்களவர் இந்தியத் தமிழர் இலங்கைத் தமிழர், முசுலிம்கள் இந்திய முசுலிம்கள், பறங்கியர், எனப் பல வகைப் படும். தமிழர்களில் கொழும்புச் செட்டி என்று கூட ஒரு தேசிய இனம் இருந்தது.
.
தமிழர்கள் அரசியல் கட்சி அடிப்படையில் இரு பெரும் கட்சிகளாகப் பிரிந்து நின்றனர். இந்தியத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் கீழும் இலங்கைத் தமிழர்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கீழும் செயற்பட்டனர். இவற்றின் தலைவர்களாக முறையே செ. தொண்டமானும் ஜி. ஜி. பொன்னம்பலமும் இருந்தனர். சிங்கள ஆதிக்கம் தமிழர்கள் மீது அதிகரித்து வருவதை உணர்ந்த பொன்னம்பலம் அவர்கள் தமிழர்களை ஒரு பலம் வாயந்த நிலைக்கு கொண்டுவரும் முகமாக தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் இலங்கைத் தமிழ் காங்கிரசையும் ஒன்றாக இணைக்கும் திட்டத்தை தொண்டமானிடம் முன்வைத்தார். இந்த ஆலோசனை தொண்டமானுக்குப் பிடித்திருந்தாலும் அவர் இதைப்பற்றி அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு தமிழர்கள் ஒரு பலமான சக்தியாக இலங்கையில் உருவாகுவதை விரும்பாமல் நீ பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று பணித்தார். தொண்டமானும் அதையே ஏற்றுக் கொண்டு தான் பெரும்பான்மை இனத்துடன் ஒத்துழைக்கப் போவதாக பொன்னம்பலத்திடம் தெரிவித்தார். இதனால் இலங்கைத்தமிழர்கள் மூன்றாந்தர நிலைக்குத் தள்ளப்படுவதால் பொன்னம் பலம் மிக ஆத்திரம் அடைந்தார். இப்போது சிங்களவர் விழித்துக் கொண்டனர். இரு தமிழ் பிரிவுகள் பின்னர் ஒன்றிணைந்து பெரும் சக்தியாக உருவெடுப்பதைத் தடுக்க இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கும் சட்டத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்க்க வேண்டும் என இலங்கைத் தமிழ் காங்கிரசில் இருந்து எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையில் ஒரு பிரிவு பொன்னம்பலத்திற்கு எதிராக எழுந்தது. அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை போனது. இலங்கைத் தமிழர்கள் இரு பிரிவாகினர். இத்தனைக்கும் காரணம் அந்த ஆரியப் பேய்கள்!!!!!
.
வரலாறு இப்படியிருக்க இன்றும் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் கொத்தடிமைகளும் சோ போன்ற பார்ப்பன நாய்களும் யாழ்ப்பாணத்தான் தான் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தான் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் சகலரும் தெரிந்து கொள்ள வேண்யது:

  • இலங்கைத் தமிழர்கள் கையில் அதிகாரம் என்றும் இருந்ததில்லை. அதிகாரம் கையில் இல்லாதவர்களால் இன்னொரு இனத்தின் வாக்குரிமையைப் பறித்திருக்க முடியாது.
  • அதிகாரம் கையில் வைத்திருந்த சிங்களவரே இதைச் செய்தனர்.
  • இந்தியத் தமிர்களின் வாக்குரிமை பறிக்கப் பட்டதை எதிர்த்ததால் இலங்கைத் தமிழர்கள் இரண்டாகப் பிரிந்தனர்.
  • இந்தியத் தமிழர்கள் தமது வாக்குரிமை பறிக்கப் பட்டதை இந்தியப் பிரதமர் நேருவிடம் முறையிட்டபோது இரு இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று சொல்லித் தட்டிக் கழித்துவிட்டார்.

Tuesday, 16 June 2009

அது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை


அது ஒரு அழகிய இரவு
அது போல் இது இல்லை
.
அந்தக் கடற்கரை மணலில்
மிக இருண்ட பின்னே
சிறு குழந்தைகள் போல்
கட்டிப் புரண்ட கணங்கள்
.
அது ஒரு மறக்கமுடியாத இரவு
அது போல் இது இல்லை
.
அன்று நீ அருகில்
மிக மிக அருகில்
உன் சுவாச ஒலியை
நான் கேட்கும் படி
என் அருகில்.
.
அது ஒரு அற்புத இரவு
அது போல் இது இல்லை
.
பன்னிற விளக்குகள்
பொன்னென மின்ன
எம் முதற் சந்திப்பு
நடனத்தில் இணைந்தோம்.
.
அது ஒரு இனிய இரவு
அது போல் இது இல்லை.
.
கைகள் இணைந்தன
உதடுகள் இணைந்தன
உள்ளங்கள் மட்டும்
ஏன் இணைய மறுத்தன?

Monday, 15 June 2009

பின்னாலே குத்தியோரின் பின்னாலே செல்பவர்கள்
முன்னாலே சென்றவரின்
பின்னாலே செல்வோமென்று
சொன்னாலே விளங்குது
பின்னாலே தள்ளுவது

புதினங்கள் புதிர்களாகின்றன
வின்னுகள் மண்ணாகின்றன
நெற்றின் மௌனம் பேசுவதென்ன
நெருடலா இல்லை வருடலா?
விகடனின் கபடமா?
நக்கீரனுக்கும் மூன்றாம் கண்ணா?
உயிர் காக்கப் பொய் சொல்லலாம்
உணர்வழிக்கப் பொய் சொல்லலாமா?
உணர்வின்றி உயிர் எதற்கு?

புலத்தின் பலத்தில்தான்
இனத்தின் விடிவுண்டா?
புலத்தையும் பிரித்தாண்டால்
பலத்தையும் அழிக்கலாம்.

பேயகமொன்றை
தாயகமென நம்பி
சேயகம் இங்கு
நோயகமானது

எதிரிகளின் பின்னாலே
சென்றவர்கள் தொடர்கின்றனர்
பின்னாலே எம்மினத்தைத்
தள்ளி விடுகின்றனர்


.ஆண்ட பரம்பரை
மீள ஆள நினைக்கிறதா?
அடி வாங்கிய பரம்பரை
மீண்டும் அடி வாங்குகிறதா?


.
இவ்வளவு நடந்த பின்னும்
இப்படியான பின்னும்எம்
முதுகில் இன்னும்
இடந் தேடுகின்றனர்.

முன்னாலே வாழ்ந்த தமிழர்கு
ஒரு நீண்ட வரலாறுண்டு
தமிழன் வரலாறு
துரோகத்தின் வரலாறு
காக்கை வன்னியனில்தொடங்கவுமில்லை
நேற்றோடு முடியவுமில்லை

விடுதலைப் புலிகளுக்கு வீழ்ச்சியைக் கொடுத்த இந்திய விசுவாசம்


விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைப் பீடத்திலிருந்து கடந்த மூன்று வருடங்களாக வெளிவந்த அறிக்கைகள் பல இந்தியாவின் கொள்கை தமக்கு சார்பாக மாறவேண்டும் என்பதாக இருந்தது. சரணடையச் சென்ற வேளையில் படுகொலை செய்யப் பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பலதடவை இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தாம் என்று சொல்லியுள்ளார். இந்தியப் படைகளும் ஆயுதங்களும் பயிற்ச்சிகளும் தமது எதிரியுடன் நின்ற இறுதிக்கட்டப் போரில் கூட இந்தியாவைத் தாக்கி ஒரு அறிக்கை கூட விடுதலை புலிகளால் வெளியிடப் படவில்லை.
.
1988-1990 இல் சீனாவிற்கு சில விட்டுக்கொடுப்பை விடுதலைப் புலிகள் செய்திருந்தால் சீனாவிடமிருந்து நவீன ஆயுதங்கள் உட்பட பல உதவிகளை புலிகள் பெற்றிருக்கலாம். அந்த இக்கட்டான கட்டத்திலும் விடுதலை புலிகளின் தலைமை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க மறுத்தது.
.
1999 இல் விடுதலைப் புலிகள் பலமிக்கவர்களாக இருந்தபோது அமெரிக்கா திருக்கோணாமலையும் ஜப்பான் காங்கேசந்துறையையும் தமக்குத் தரும்படியும் கேட்டனவாம். பதிலாக தனிநாடு அமைப்பதற்கான உதவிகளை அவை விடுதலைப் புலிகளுக்கு வழங்கத் தயாராக இருந்தனவாம். இதையும் விடுதலைப் புலிகளின் தலைமை மறுத்தது. அதிலிருந்து மேற்குலகம் விடுதலைப் புலிகள் தொடர்பான தமது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டன. இறுதியில் இதே விடுதலைப் புலிகளின் இறுதிக்காலத்தில் நண்பர்கள் யாருமற்ற நிலையை உருவாககியது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...