Wednesday, 25 March 2009

இலங்கை அரசின் கூற்றுக்களை மறுதலிக்கும் ஐநா வட்டாரம்.


நவநீதம் பிள்ளையும் பான் கீ மூனும்
இலங்கை வெளியுறவுச் செயலர் பாலிதகோஹென்ன: இலங்கைக்கு எதிராக ஐநா எந்தக் குற்றச் சாட்டையும் முன்வைக்கவில்லை!!!!
ஐநா பொதுச் செயலர் தனது தொலைபேசி அழைப்பின் மூலம் அப்பாவி மக்கள் கொலை செய்யப் படுவதைத் நிறுத்தும் படி கேட்டுள்ளார்.
நலநீதம் பிள்ளை: இலங்கை அரசு யுத்தக் குற்றங்களைப் புரிவதற்கான ஆதாரங்கள் உள்ளது.
இலங்கை வெளியுறவுச் செயலர் பாலிதகோஹென்ன: இலங்கையில் நடப்பதை சிம்பாவேயில் நடப்பதுடன் ஒப்பிட முடியாது.
ஐநா: இலங்கையில் நடக்கும் மனித அழிவு சிம்பாவேயிலும் அதிகம்.
இலங்கை வெளியுறவுச் செயலர் பாலிதகோஹென்ன: நவநீதம் பிள்ளை ஐநா அல்ல.
Inner City Press at UN: the claim that the Office of the High Commissioner for Human Rights "is not the UN" is ludicrous.
மனித உரிமைக்கான துாதர் ஐநா அல்ல என்பது வேடிக்கையானது.
இலங்கை வெளியுறவுச் செயலர் பாலிதகோஹென்ன: ஐநா பாதுகாப்புச் சபையின் ஒரு நிரந்தர உறுப்பினர் எதிர்த்தாலும் இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப் படமாட்டாது.
Inner City Office: சிம்பாபே தொடர்பாக இவ்வித எதிர்ப்புக்களையும் மீறி ஐநா விவாதித்துள்ளது.

Tuesday, 24 March 2009

ஐநாவில் ஈழத் தமிழர் விவகாரம் - ஜப்பானும் ஆதரவு.


ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடலுக்கு ஜப்பானும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இப்போது உள்ள பிரச்சனை இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் இரசியாவும், இலங்கையைத் தன்பிடியல் வைத்திருக்க முனையும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை பாவிக்கும் என்பதே. ஆஸ்திரியா இலங்கை தொடர்பான விவாதம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுவதை விரும்புகிறது. ஆக மொத்தத்தில் இடங்கை இனக்கொலை விடயத்தில் எதிரிகளான சீனாவும் இந்தியாவும் ஒன்றுபட்டு இருக்கின்றன.

ஆப்பிழுத்த இந்திய வெளியுறவுக் கொள்கை.

விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்துதினால் விடுதலைப் புலிக்ள மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை இல்லாமல் செய்யப்படும். இதனால் சாதியத்தை தகர்த்தெறிந்த ஈழத் தமிழ்த் தேசியவாதத்தை இல்லாமல் செய்ய முடியும் என்று சாதிய அமைப்பை கட்டிக்காக்கும் உறுதி பூண்ட இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் திட்டம் தவிடுபொடியானது மட்டுமல்ல எதிர் விளைவுளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடக்கும் போர் முன்பு என்றும் இல்லாதவகையில் இப்போது உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும் பலத்த ஆதரவைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கையில் இனப் படுகொலை நடப்பதை உலகெங்கும் பறைசாற்றியுள்ளது. இலங்கைப் பிரச்சனை ஐக்கிய நாடுகள் வரை எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியத் தேசியத்தின் மீது பலத்த வெறுப்பை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழ் இனக் கொலைக்கு சோனியா-மேனன் அதிகார மையத்தின் பங்களிப்பு பல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இந்தியத் தேசியத்தின் மீது பெரும் வெறுப்பபை ஏற்படுத்தியுள்ளது.

Monday, 23 March 2009

அவன் போகின்றான்


அவன் போகின்றான்
துணிவுதான் அவன் வழித்துணை
துணைக்கு வந்தவன் துாரோகியாகினான்
தீர்க்க வந்தவன் தீர்த்துக் கட்டினான்
அவன் போகின்றான்
துணிவுதான் அவன் வழித்துணை
உலகமே அவனுக்கு எதிரானது
உடன் பிறப்பு உதவாமல் போனது
அவன் போகின்றான்
துணிவுதான் அவன் வழித்துணை
பங்காளிகளாய் வந்தோர் பகையாளிகளாயினர்
உதவிக்கு வந்தோர் உதைத்துத் தள்ளினர்
அவன் போகின்றான்
துணிவுதான் அவன் வழித்துணை

Sunday, 22 March 2009

ஆரிய உளவு அமைப்பு கருணா - பிள்ளையான் கும்பல்கள் மீது சீற்றம்


கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு பின்னர் அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது சிறுமியின் குடும்பத்தினர் பணம்திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கொடூரக் கொலையை கருணா கும்பல் செய்ததாக பிள்ளையான் கும்பலும் பிள்ளையான் கும்பல் செய்ததாக கருணா கும்பலும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சுமத்துகின்றன. இது ஆரியப் பேய்களின் உளவமைப்பை பெரும் சீற்றமடைய வைத்துள்ளது. நடந்த கொலைக்கான பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தாமல் இப்படித் தேவையில்லாமல் மோதுவதே உளவமைப்பின் சீற்றத்திற்கு காரணம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...