Saturday, 14 March 2009

இந்திய சிங்களக் கூட்டமைப்பிடம் தோல்வி கண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள்


இந்திய சிங்களக் கூட்டமைப்பிடம் தோல்வி கண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள்
இந்தியாவும் சிங்களவரும் ராஜுவ் காந்தி தலைமையில் கைகோத்துக் கொண்டனர். சோனியா-மேனன் அதிகார மையத்தில் இந்தக் கூட்டமைப்பு மிக உறுதியாக உள்ளது. இலங்கையில் நடக்கும் தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்த தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணவாளர்கள் பல முயற்சிகள் எடுத்தனர். நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், சின்னத்திரையினர் மாணவர் அமைப்பு வழக்குரைஞர்கள் இப்படிப் பலரும் போராட்டம் நடாத்தினர். கொட்டும் மழையில் கைகோத்து நின்றனர். சிலர் தீக்குளித்து மாண்டனர். இவர்களால் இந்திய சிங்கள கூட்டமைப்பை அசைக்கவே முடியவில்லை.
தமிழ்நாடு சட்டசபை யுத்த நிறுத்தம் இலங்கையில் வேண்டுமென்று
இரு தீர்மானங்களை நிறைவேற்றியது. நடந்தது என்ன? பாராளமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா நாடகம் எங்கு முடிந்தது?
பொன்சேகாவின் கோமாளிகள் என்ன செய்வார்கள் என்று சோனியா-மேனன் அதிகார மையத்திற்கு நன்கு தெரியும்.

இறுதியில் நாம் கண்டது:
பார்பனன் உடலில் முட்டை உடைந்ததால் வழக்குரைஞர்கள் மண்டை உடையும்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை சரணடைந்தது. ரூபா பாரிய வீழ்ச்சியடையும்.


சர்வ தேச நாணயத்தின் நிபந்தனைகளுக்கு பணியமுடியாது என்று வீராப்பு பேசிவந்த இலங்கை அரசு இறுதியில் நிதியத்தின் நிபந்தனைகளுக்கு பணிந்தது.

பிழையான நிதி முகாமைத்துவம்
நிதியமைச்சராகவும் பணிபுரியும் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தனது தவறான நிதி முகாமைத்துவத்தால் இலங்கையின் நிதி நிலைமையை அரச ஊழியர்களுக்குக் கூட ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார். 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரச ஆவண விற்பனை மூலம் திரட்ட முயன்றபோது ஒரு மில்லியன் மட்டுமே திரட்ட முடிந்தது. தனியார் வங்கிக் கடன் பெற முயன்றபோது வங்கிகள் மிக அதிக வட்டி கேட்டதால் அம் முயற்சியையும் கைவிட்ட இலங்கை அரசு சர்வ தேச நாணய நிதியத்தை நாடியது.

கடும் நிபந்தனைகள் விதிக்கும் சர்வ தேச நாணய நிதியம்
சர்வ தேச நாணய நிதியம் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு பல நிபந்தனைகள் விதித்துள்ளது. நிபந்தனைகளைத் தணிக்க இலங்கை எடுத்த பலத்த முயற்ச்சி படு தோல்வியை அடைந்துள்ளது. இதனால் இலங்கை ரூபாவின் நாணய மதிப்பு விரைவில் குறைக்கப்படும். அரசின் பல சமூக நலன் திட்டங்கள் கைவிடப்படலாம். இது மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கைக் குறைக்கும்.

மேலும் பல பொருளாதாரப் பிரச்சனைகள்
பல ஆடை உற்பத்தியாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேறத் தொடங்கி விட்டார்கள். இதனால் பல ஆடைஉற்பத்தி ஆலைகள் மூடப் பட்டுள்ளன. இத்துடன் புலம் பெயரந்த தமிழ் மக்கள் இலங்கைப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கும் போராட்டத்தில் இறஙகியுள்ளனர். இதனால் மேலும் பல பொருளாதாரப் பிரச்சனைகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்.

Friday, 13 March 2009

பிளவுபட்டது ஐக்கிய இலங்கை - புல்மோட்டையில் இந்தியா - அம்பாந்தோட்டையில் சீனாபோர் முனையில் பல பலிகள்
போராளிகள் யார்
குழந்தைகள் யார்

இந்தியா கொடுக்கிறது ஆயுதம்
ஒன்று பட்ட இலங்கைக்கா
தமிழின அழிப்புக்கா

காணாமற் போகின்றோர் பலர்
அரச இயந்திரமா
அரச பயங்கரவாதமா

வருகின்றனர் இழுத்துச் செல்கின்றனர்
அதிகார கைதுகளா
ஆட் கடத்தல்களா

பிளவுபட்டது ஐக்கிய இலங்கை
புல்மோட்டையில் இந்தியா
அம்பாந்தோட்டையில் சீனா

Thursday, 12 March 2009

மேலும் பல இந்தியப் படையினர் ஈழத்திற்கு செல்வார்களா?


பின்நகர்வு என்பது பின்னடைவு அல்ல
சென்ற வார இறுதியில் இன்னும் ஒரு வாரத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஐந்து நாட்கள் சென்றுவிட்டன. இதற்கிடையில் 10-ம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறு குழுவாகச் சென்ற விடுதலைப் புலிகள் விசுவமடுவில் பாரிய ஆயுத சேதத்தை இலங்கைப் படையினருக்கு ஏற்படுத்திவிட்டு திரும்பி விட்டனர். யுத்தத்தில் பின்நகர்வு என்பது புலிகளைப் பொறுத்தவரை பின்னடைவு அல்ல என்று மீண்டும் நிரூபித்து விட்டனர். எந்த ஒரு விடுதலைப் புலிகளின் முகாமைச் சுற்றி வளைத்து தாக்கியளித்ததாக கடந்த இரு ஆண்டுகளில் எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. அண்மைக் காலங்களில் நான்கு தடவை இலங்கை இராணுவம் பாரிய ஆயுத இழப்பைச் சந்தித்துள்ளது.

தமிழ் நாட்டுக்கு வாய்ப் பூட்டு?
லோக் சபா தேர்தலுக்கு முன் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டுமென்பது சோனியா - மேனன் அதிகார மையத்தின் திட்டமென்று பலராலும் கருதப் படுகிறது. ஆனால் அது தற்போதைய கள நிலவரப் படி சாத்தியமாகாது என்பது உறுதியான கருத்தாகும். தற்போது 6000 இந்தியப் படைகள் இலங்கையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்களாலும் இலங்கைப் படையினராலும் பாரிய அழிவை புலிகளுக்கு ஏற்படுத்த முடியவில்லை. தேர்தலுக்கு முன் புலிகளை ஒழிப்பதற்கு மேலும் இந்தியப் படைகள் இலங்கைக்கு செல்லவேண்டியிருக்கும். இது தமிழ்நாட்டில் சோனியாவின் காங்கிரசிற்கு தேர்தலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு முன் ஏற்படாக தேர்தலில் ஈழப்பிரச்சினைக்கு வாய்ப்பூட்டு போடப்படும். தேர்தல் ஆணையகமும் இது தொடர்பாக அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதாவது தேர்தலில் ஈழப் பிரச்சனை தொடர்பாக பேசுதல் சுவரொட்டி ஒட்டுதல் போன்றவை தடை செய்யப் பட்டுள்ளது. இது சோனியா-மேனன் அதிகார மையம் ஈழத்தமிழர் தொடர்பாக மேலும் மோசாமான முடிவுகளை எடுக்கவிருப்பதையே காட்டுகிறது. படை அனுப்புவதற்கு முன்னேற்பாடாக மருத்துவக் குழுவை இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது இவர்கள் காயமடைந்த தமிழர்களுக்கு உதவுவது என்ற போர்வையில் வந்து கட்டுக்கு அடங்காத அளவில் காயப் பட்ட இலங்கை இராணுவத்திற்கு உதவுவதோடு காயமடைந்த தமிழர்களிடமிருந்து உளவுத்தகவல்களையும் திரட்டலாம். ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவர்களில் பலர் இனி வரும் வாரங்களில் கைது செய்யப் படலாம்.

Wednesday, 11 March 2009

என்ன செய்வாயடா சிவசங்கர மேனா?பாடுங்கள் ஒரு விசுவமடுப் பரணி
கேட்கட்டும் புலிவீரத்தைத் தரணி
சென்றது பத்துப் பேரோடு ஓரணி
நெஞ்சில் கொண்டது ஈழக் கனி

இத்தாலிச் சனியாள் கொடுத்தாள் பணம்
பாக்கிஸ்த்தானில் வாங்கியது ஆயுத பலம்
எக்காளமிட்டு நின்றது கொடுஞ் சிங்களம்
அழிவின் விளிம்பில் நிற்கிறது நம்மினம்

பல தூரம் துணிவோடு கடந்தது புலியினம்
கைப்பறிறக் கொண்டது எதிரியின் பெரும்பலம்
சிறார்களைச் சிதறடித்த எறிகணைத் தளம்
நம்பூமியை தினமாக்கியது கொலைக்களம்

சிதறித் தலை தெறித்தோடியது பேயினம்
இந்தியா கொடுத்த பயிற்ச்சிதான் உதவுமோ
புலிவீரன் துணிவின் முன் நிலைத்திடுமோ
எதிரியின் ஆயுதத்தால் எதிரிகளைச் சரித்தனர்

என்ன செய்வாயடா சிவசங்கர மேனா
இன்னும் எத்தனை உண்டென்றறிவாயோடா
அனுப்படா இன்னும் ஆயுதங்கள் பல
அனுப்படா மருந்தும் மருத்துவர்களும்.

Baby! Come back and reboot me


I kept you in my hard disk and in my memory
Why did you use me as a screensaver?
Why did your window close for me forever?
My explorer is tired of searching for you.
My inbox is thirsty of your messages.
My word is lost for words to explain my pain.
My excel could not calculate properly
My sage could not balance the accounts
My paint has gone blurred and blurred
Baby! Come back and reboot me.

Tuesday, 10 March 2009

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஏன் புலிகளை எதிர்க்கிறார்கள்?விடுதலைப்புலிகளை ஆரியர் ஏன் எதிர்க்கிறார்கள்? ஒரு பலமான அமைப்பு விடுதலைப் புலிகளை எதிர்கின்றது என்பது உண்மை.

இராஜிவ் காந்தி கொலை

இராஜிவ் காந்தி கொலை செய்யப் படாமல் இருந்தாலும் இந்த எதிர்ப்பு இருந்திருக்கும் என்பது உண்மை. புலிகள் தனிநாடாகப் பிரிந்தால் தமிழ்நாடும் பிரிந்து விடுமா? இந்தியாவைப்பற்றி பொருளாதார இராணுவ வல்லுனர்கள் கூறுவதைப் பார்த்தால் வரும் காலத்தில அது ஒரு வல்லரசாக மாறும். பல கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு சில இலட்சம் மக்களுக்கு பயப்படத்தேவையே இல்லை. ஈழத்தால் இந்தியாவைப் பிரிக்க முடியாது. சீன பாக்கிஸ்த்தானிய ஆதிக்கம் இலங்கையில் இல்லாதிருக்க இந்தியா இலங்கைக்கு உதவுகிறாதா? இந்தியா உதவினால் என்ன உதவாவிட்டால் என்ன இலங்கை எப்போதும் அவர்கள் பக்கம்தான் இருக்கும் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளார்கள் நன்கறிவர். புலிகளை ஒழித்துகட்ட இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதற்கு வேறு என்ன காரணம்.

விடுதலைப் புலிகளின் பலம் என்ன?
விடுதலைப் புலிகளின் பலம் என்பது அவர்களின் மன உறுதியா? கரும் புலிகளா? வெளி நாட்டிலிருந்து கிடைக்கும் பணமா? அதன் தலைவரா? அவர்கள் சாதித்தது என்ன? அவர்களின் மிகப் பெரிய வெற்றி சாதி அமைப்பைத் தகர்த்தெறிந்தது. இதுதான் அவர்களின் மிகப் பெரிய வெற்றி. இதுதான் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை அதாவது பார்ப்பனியர்களை அவர்களுக்கு எதிராக திரும்பவைத்தது.

தமிழ் இனக் கொலை- உண்மையை மறைத்து வைத்திருக்கும் ஐ. நா


ஜோன் ஹோல்ம்ஸ்

இலங்கைப் போரில் இறந்தவர்களின் தொகை தன்னிடம் இருந்தும் அதை வெளியிட ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது. Inner City Press கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே இந்த உண்மை வெளிவந்துள்ளது. ஐநாவின் நிவாரண இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் பொதுமக்கள் இறப்பு தொடர்பாக ஐநா சொந்தமாக செய்த முயற்சியில் ஒரு கணிப்பை எடுத்துள்ளதாகவும் அது உறுதிப்படுத்தப்படாமையால் அதி வெளியிட முடியாதென்றும் கூறினார்.


வதை முகாம்கள்

இலங்கை அரசு இடைத்தங்கல் முகாம் என்ற போர்வையில் நாடாத்தும் வதை முகாம்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டபோது அம் முகாம்களுக்கு தாம் நிதி உதவி செய்வதையும் நிவாரண இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளார். பன்னாட்டு நியமங்களுக்கு ஏற்ப இல்லாத முகாம்களுக்கு தம்மால் தொடர்ந்து உதவி செய்யமுடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஐநாவின் முரண்பட்ட நிலை

Inner City Press ஐநா பொதுமக்கள் கொலை தொடர்பாக சூடானில் எடுக்கும் நடவடிக்கைகும் இலங்கையில் எடுக்கும் நடவடிக்கைகும் முரண்பட்ட நிலை காணப் ப்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Monday, 9 March 2009

சேலையணிந்த முசோலினியும் சால்வையணிந்த ஹிட்லரும்எமது தமிழநாட்டு உயிரிலும் மேலான உறவுகளே
உடன் பிறப்புக்களே இரத்தத்தின் இரத்தங்களே
ஈழத்தோர் துயர்கண்டு துடித்தெழுந்தீரே
உடல் சிதறி இறக்கும் எம் சிறார்களைக் கண்டு
உங்கள் நெஞ்சு தவித்ததே துடிதுடித்ததே
உண்ணா விரதம் இருந்தீரே
கொட்டும் மழையில் கைகோத்து நின்றீரே
தீக்குளித்து இறந்து மடிந்தீரே
நடிகர் சங்கம் இயக்குனர் சங்கம்
சின்னத் திரையினர் வழக்குரையினர்
இன்னும் எத்தனை அமைப்புக்கள்
எமக்காக குரல் கொடுத்தன
பொங்கி எழுந்தன பேரணி நடாதின
சேலையணிந்த முசோலினியின் செவியில் விழுந்ததா
சால்வையணிந்த ஹிட்லர் பணிந்தானா
ஆரியசிங்களக் கூட்டமைப்பு அசைந்த்தா
ஏன் என்று சிந்தித்துப் பார்ப்போமா
தமிழ்நாடு அரசு என்பது ஒரு பாரிய மாநகர சபை
அதிகாரம் கையில் இல்லாத அரசு
அதிகாரம் குவிந்திருப்பது டில்லியில்
டில்லி யார் கையில் சிந்தியுங்கள்
உங்கள் உடனடித் தேவை
சுயநிர்ணய உரிமை சுய ஆட்சி
உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின்
கொத்தடிமைகளிடமிருந்து
மீட்டெடுங்கள் தமிழ் மண்ணை.

Sunday, 8 March 2009

இலங்கைக்கு சட்ட விரோத இரசாயன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சட்ட விரோத இரசாயன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக http://www.greenleft.org.au/ என்னும் இணையத்தளம் அறிவித்துள்ளது.
http://www.greenleft.org.au/2009/786/40464 என்னும் இணைப்பில் இதைக்காணலாம்.

அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, பாக்கிஸ்த்தான் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதாக குற்றம் சாட்டும் அத்தளம் இலங்கை இராணுவம் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு வரச்சொல்லி அங்கு குண்டுகளை வீசி அவர்களைக் கொல்லுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அறிந்து கொள்ளப் படாத இனப்படு கொலை என்ற தலைப்புடன் வெளியான செய்திக் குறிப்பில் இலங்கை இராணுவம் தடைசெய்யப்பட்ட பரவல் குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் பாவித்து வருவதாகவும் தெரிவித்தள்ளது.

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையும் நீதியும் வழங்கப்படாதவரை அமைதி நிலவாது எனக் கட்டியம் கூறியுள்ளது.

ஆரியப் பேய்கள் ஆயுதம் கொடுத்துதவுதே.தமிழினம் படும் துயரம் கண்டு கண்டு
என் மனம் தினம் தவித்தேங்குதே – தோழா
தமிழினம் படும் துயரம் கண்டு கண்டு
என் மனம் தினம் தவித்தேங்குதே

கோபாலபுரத்திலோர் உடன் பிறப்பிருந்தும்
கபாலம் சிதறி குழந்தைகள் இறக்குதே - தோழா
சின்னம் சிறு குழந்தைகள் இறக்குதே
சிங்களமும் ஆரியமும் சேர்ந்தியங்குதே
தமிழனைக் கொல்லச் சேர்ந்தியங்குதே

சிங்கள வெறிநாய்கள் எம் சகோதரியரை
அடிமையாய் கொள்ளுகின்றவே – படுக்கை
அடிமையாய் கொள்ளுகின்றனவே
ஆரியப் பேய்கள் ஆயுதம் கொடுத்துதவுதே.
மருந்தும் மருத்துவ உதவியும் செய்யுதே


எழுந்திடும் எம்படை எதிர்திடும் எதிரியை
கொழுத்திடும் கொடியோரை வீழ்திடும் வீணரை
முடிந்திடும் நம் துயர் ஒடிந்துடும் அவர் படை
படித்திடும் பெரும் பாடம் விடிந்திடும் நம்மீழம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...