Saturday, 7 March 2009

காணொளியில் - கண்ணீரில் நனைந்த பிரித்தானியத் தமிழர்களின் தோள்கள்.


உலகத்தின் மனச்சாட்சியை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் திறக்க வேண்டி ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தின் முன் தீக்குளித்து மாண்ட இலண்டனைச் சேர்ந்த வர்ணகுலசிங்கம் முருகதாஸிற்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இலண்டனில் உள்ள Northalt என்னம் இடத்தில் திரண்டனர். கண்ணீர் மல்க அவர்கள் மாவீரன் வர்ணகுலசிங்கம் முருகதாஸிற்கு அஞ்சலி செலுத்தினர். காணொளியில்காண:
click on play sign:


தமிழக மீனவரகள் மீது சிங்களக் கடற்படையினர் மீணடும் தாக்குதல். மெளனமாயிருக்கும் மானம் கெட்ட இந்திய அரசு.


தமிழக மீனவரகள் மீது சிங்களக் கடற்படையினர் மீணடும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். வழமைபோல் இந்திய அரசு இது தொடர்பாக மெளனமாக இருக்கிறது. ஆள்பவன் ஆரியன் அடி படுபவன் தமிழன்!

Friday, 6 March 2009

கட்டுக்கடங்காமல் காயப்படும் இலங்கை இராணுவம். கபடமாக உதவும் இந்தியா

விடுதலைப்புலிகள் ஒரு புதிய உத்தி மூலம் ஆயிரக்கணக்கான இலங்கை இராணுவத்தை எதிர் கொள்கின்றனர். பதினைந்து அல்லது அதற்குக் குறைந்த எண்ணிக்கையுடைய விடுதலைப்புலிகள் ஆயிரக்கணக்கில் உள்ள சிங்களப் படையணியை எதிர் கொண்டு பலத்த இழப்பை இனக்கொலைப் படைகளுக்கு ஏற்படுத்துகின்றனர். இவர்களுள் ஈழத்துக்குள் பின் கதவால் நுழைந்த ஆரியப் பிணந்தின்னி நாய்களும் அடங்குவர்.

திணறும் இலங்கை மருத்துவ சேவை
அதிக அளவில் காயப்படும் இராணுவத்தினரைச் சமாளிக்க முடியாமல் இலங்கை மருத்துவ சேவை திணறுவதாக அறிவிக்கப் படுகிறது. அண்மையில் ஏற்பட்ட மருந்துத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக இந்தியா பெருமளவிலான மருந்துப் பொருட்களை அண்மையில் அனுப்பியிருந்தது.

கபடமாக மருத்துவர்களையும் தாதிகளையும் இந்தியா அனுப்புகிறது?
மருந்துத்தட்டுப்பாட்டை சமாளிக்க உதவிய இந்தியா இப்போது ஆள் பற்றாக்குறையை நீக்க மருத்துவர்களையும் தாதிகளையும் இந்தியா காயப்பட்ட தமிழர்களுக்கு உதவும் போர்வையில் அனுப்பவிருப்பதாகச் சொல்லப் படுகிற்து.

Thursday, 5 March 2009

Cannot be hidden in the shadow of time


The babies you killed
With the aerial bombardments
Cannot be hidden
In the shadow of time

The hospitals you destroyed
With the rain of shells
Cannot be hidden
In the pages of history book

The places of worships
That you demolished
Can never be forgotten
In the vengeful memories of ours

The girls you raped and murdered
Will be reincarnated
To come and teach you
How to observer Buddhism

Nothing will go forever
Everything is subject to change
There will be a turning point
The day will come to retaliate

ஈழக் குழந்தைகள் கொலையும் திமுகாவும்.


இலங்கையில் மாதம்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இலங்கைப் படையினரின் விமானக்குண்டு வீச்சாலும் எறிகணை வீச்சாலும் உடல் சிதறி கொடூரமான முறையில் கொல்லப் படுகின்றனர். இந்த இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் பயிற்ச்சிகள் என்பன இந்திய ஆட்சியாளர்களால் வழங்கப் படுகின்றன. அந்த ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்காளியாக உள்ளது.

எனக்கொரு உடன் பிறப்புண்டு
சென்னையிலே கோபாலபுரத்திலே
குடும்பமோ பெரிய குடும்பம்
ரெட்டைக் குடுமியாம்
கலகக் கண்மணிகள் குடும்பம்
பிரான்சிலே சீக்கியத் தலைப்பாகைக்கு
இருக்கும் மரியாதை கூட
என் பிள்ளைகளுக்கில்லை
அவர்கள் உடல் சிதறி இறக்கின்றன
என்பிள்ளைகளை கொல்ல
ஆயுதம் கொடுப்பவளுடன்
ஒன்றாய் ஆட்சி செய்கிறது
என் உடன்பிறப்புWednesday, 4 March 2009

சோனியாவின் ஆட்சியில் இந்தியாவிலும் துடுப்பாட்டக்காரர்களுக்கு உயிராபத்து?

ஆட்சி ஒருவர் கையில் அதிகாரம் இன்னோருவர் கையில் என்ற இரண்டும் கெட்டான் இந்தியாவில் வெளிநாட்டுத் துடுப்பாட்டக்காரர்களுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய தீர்மானம் எடுக்க மிக அதிகமான நேரம் எடுத்தற்கு காரணம் இந்த இரண்டும் கெட்டான் கட்டமைப்புத்தான் என்று பலரும் கூறினர். தக்க தாக்குதல் அணியை அனுப்பாததால் பலத்த இழப்பை மும்பையில் சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது லாகூரில் இலங்கை அணியிர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாக்கிஸ்தானில் இருந்து மறைமுக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இனி இந்தியா வரும் வெளிநாட்டு துடுப்பாட்டக்காரர்களுக்கு உயிராபத்து வருமா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

இப்போது பாக்கிஸ்த்தான் துடுப்பாட்டத்தின் எதிர்காலம் மிக மிக சந்தேகமான நிலையை அடைந்துள்ளது. பாக்கிஸ்த்தானில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு எந்த பன்னாட்டு துடுப்பாட்டமும் நடக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் பாக்கிஸ்த்தான் தீவிரவாத அமைப்புக்கள் இனி இந்தியாவில் நடக்கும் துடுப்பாட்டத்தை குழப்ப என்ன செய்வார்கள்? இதைத் தடுத்து நிறுத்தும் வலுவும் திறனும் சோனியா காந்தியின் ஆட்சிக்கு இருக்கிறதா? இவை விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.

ஐநா பாது காப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கைப் பிரச்சினை இல்லை – இந்திய அழுத்தம்?


ஐநா பாது காப்புச் சபையின் மார்ச் மாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கைப் பிரச்சனை உள்ளடக்கப் படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்திற்கான தலைவரான லிபியப் பிரதிநிதி இப்ராஹிம் தபாசியிடம் சென்ற மாதத்தில் இடம் பெற்ற இலங்கை தொடர்பான விவாதம் இம்மாதமும் தொடருமா என வினவப் பட்டபோது முதலில் பதில் கூறுவதைத் தவிர்த்தார். தொடர்ந்து இது தொடர்பாகக் கேட்டபோது பெரும்பாலான உறுப்பினர்கள் இலங்கைப் பிரச்சினை நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுவதை விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பிரித்தானியப் பிரதிநிதி இது தொடர்பாக ஏதும் செய்யாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை தொடர்பான தீர்மானத்தை இந்தியாவின் வேண்டுதலின் பேரில் இரசியா வீட்டோ செய்யத் தயாராக இருப்பதால் இலங்கை விவகாரம் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப் படுகிறது. இருப்பினும் சிம்பாப்பே மியன்மார் தொடர்பான விடயங்கள் வீட்டோவிற்கு உள்ளாகும் என்றபோதிலும் பிற்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

Tuesday, 3 March 2009

ஒரு மானங் கெட்ட நாடுபோரில் இறந்த எதிரியின்
உடலைப் புணரும் பேய்களின்
நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது
ஒரு மானங் கெட்ட நாடு

பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச்
சொல்லிக் கொல்லும் காட்டேரிகளின் நாட்டின்
தேசிய ஒருமைப்பாட்டைப பேணுகிறது
ஒரு மானங் கெட்ட நாடு

நாளொன்றில் இருபதாயிரம் பேர் கொன்ற
நாய்களின் நாட்டிற்கு ஐநா மன்றில்
பராட்டுத் தெரிவித்து மகிழ்ந்தது
ஒரு மானங் கெட்ட நாடு

தாயின் முன் மகளைக் கெடுத்து
தாயைக் கொல்லும் நாய்களின்
நாட்டுக்கு உதவிபல செய்கிறது
ஒரு மானங் கெட்ட நாடு

ஐநா நிபுணர்குழு அறிக்கையில்
குறிப்பிட்டபோர்க்குற்றவாளியை
பாதுகாத்தருள முயல்கிறது
ஒரு மானம் கெட்ட நாடு

தன் மீனவரை கொல்லும் பாவிக்கு
செங்கம்பள வரவேற்பளித்து
பெருமை தேடிக் கொண்டது
ஒரு மானங் கெட்ட நாடு

துடுப்பாட்டக்காரர் மீதான தாக்குதல் – விடுதலைப் புலிகளை சம்பத்தப் படுத்தாதது வியப்புக்குரியது

பாக்கிஸ்த்தானில் இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்மீது நடாத்தப் பட்ட தாக்குதலுடன் விடுதலைப் புலிகளைச் சம்பத்தப் படுத்தி இலங்கை அரசு இதுவரை அறிக்கை விடாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரம்புட்டான் மூஞ்சியோன் எனப் பலராலும் கிண்டலடிக்கப் படும் கெகலிய ரம்புக்வெல எனும் இலங்கை அமைச்சர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொய் மழை பொழியும் மேகம் என்று வர்ணிக்கப்படுபவர். மும்பையில் தீவிர வாதிகள் நடாத்திய தாக்குதலை இவர் விடுதலைப் புலிகளுடன் சம்பத்தப் படுத்தி அறிக்கையும் விட்டார். தமிழ்நாட்டு ஊடகங்கள் சில இதைப் பெருமையுடன் பிரசுரித்தன. இவர் விடும் அறிக்கைகள் தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிர்ப்பு ஊடகங்களுக்கு மிகவும் பிடித்தவையாகும். ஆனால் இந்தப் பதிவை தட்டச்சு செய்யும் வரை இலங்கை அரசு பாக்கிஸ்த்தான் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுடன் சம்பத்தப் படுத்தாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசியல் காரணங்களுக்காக துடுப்பாட்ட வீரர்களை பலிக்கடாவாக்கிய இலங்கை? நிதி நெருக்கடியில் பாக் துடுப்பாட்டச்சபை!

இந்தியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பாக்கிஸ்தான் பாதுகாப்பற்ற நாடு என்று ஒதுக்கிய நிலையில் இலங்கை தனது அரசியல் காரணங்களுக்காக தனது துடுப்பாட்ட வீரர்களை பாக்கிஸ்தானுக்கு அனுப்பியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பைத் தாக்குதலை அடுத்து இந்தியா தனது துடுப்பாட்ட வீரர்களை அனுப்ப மறுத்ததால் பாக் துடுப்பாட்ட சபைக்கு 20மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படவிருந்தது. பாதுகாப்பு நிலை பாக்கிஸ்த்தானில் உகந்ததாக இல்லை என்று அவுஸ்திரேலியாஅணி பாக்கி்த்தான் செல்ல மறுத்திருந்தது. இதே நிலைப்பாட்டை நியூசிலாந்து அணியும் எடுத்திருந்தது. இது பாக் துடுப்பாட்ட சபைக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இலங்கை இந்தியாவின் திரை மறைவு வேண்டுலை நிராகரித்து தனது வீரர்களை பாக்கிஸ்த்தானுக்கு அனுப்பியது.
பாக்கிஸ்த்தானுக்கு இலங்கை தனது துடுப்பாட்டக்காரர்களை அனுப்பியதன் நோக்கம் அரசியல் சார்ந்ததாகவே கருதப் படுகிறது. இலங்கை எப்போதும் பாக்கிஸ்த்தானுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதன் நோக்கம் இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளதும் என்பதாகும். பாக்கிஸ்தானுடனான அரசியல் உறவை மேம்படுத்துதற்காகவே இலங்கை தனது அணியை அனுப்பியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வங்குரோத்து நிலையில் பாக் துடுப்பாட்டச்சபை
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் கைவிடப்பட்ட போட்டிகளைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தான் துடுப்பாபட்டச் சபைக்கு பலத்த பண இழப்பு ஏற்படவுள்ளது.
ஏற்கனவே பணப்பற்றாக்குறையில் இருக்கும் சபைக்கு இது பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அத்துடன் இன்னும் இரு வருடங்களுக்கு வேறு எந்த நாட்டு அணியும் பாக்கிஸ்த்தானுக்குசெல்ல மாட்டாது. இது பாக் துடுப்பாட்டசபையின் வருமானத்தை பெரிதும் குறைக்கவுள்ளது.

இலங்கை துடுப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் மூன்றாவது நாடு சம்பந்தம்?

ஓரு நாடு தனது உள்ளகப் பிரச்சினைகளை கட்டுமீறிப் போக விடும் நிலையில் அந்நியத் தலையீடு அந்நிய நாடு சார் ஆயுதக்குழுக்கள் மிக அதிகரித்தே இருக்கும். இதை நாம் எண்பதுகளில் இலங்கையில் கண்கூடாகக் கண்டோம். அந்நிய சக்திகளுக்கு சார்பான இயக்கங்கள் பல தீய செயல்களைச் செய்வதும் அந்தப் பழியை புனிதமாகப் போராடும் இயக்கங்கள்மீது போடுவதும் நாளாந்த நிகழ்வுகளாக இருக்கும். ஒரு சிறு உதாரணம். யாழ் நகரில் உள்ள கோவில் நகைகள் ஒரு இயக்கம் கொள்ளை அடித்தது. அந்த (இயக்கம் இப்போது துரோகக் குழுவாக சிங்களவருடன் இணைந்து தமிழர்களைக் கொல்கிறது) விடுதலைப் புலிகள் ஆலயத்தைக் கொள்ளையடித்ததாக இந்திய உளவுத்துறை சார்புப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. இந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது இலங்கை பாக்கிஸ்தான் உறவை துண்டாட விரும்பும் நாடு ஒன்று இலங்கைக் துடுப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இலங்கை பாக்கிஸ்த்தானுடன் நெருங்கிய உறவைப் பேணாதிருக்க இலங்கைக்கு பணத்தையும் கொடுத்து 6000 பிணந்தின்னி நாய்களையும் அனுப்பி தமிழினகொலைக்கு உதவுபவர்களை நாம் நன்கறிவோம்

Monday, 2 March 2009

யுத்த நிறுத்தம் வேண்டாம்யுத்த நிறுத்தம் வேண்டாம்
ஐநா தலையீடு வேண்டாம்
பிரித்தானியத் தூதர் வேண்டாம்
மருத்துவ மனையில் குண்டு விழும்
பாதுகாப்பு வலயத்தில் குண்டு விழும்
வயோதிபர் மனையில் குண்டு விழும்
பச்சிளம் பாலகர் மேல் குண்டு விழும்
உரைக்கும் ஊடகர்கள் கொல்லப் படுவர்
துதிப் பாடகர்கள் அணைக்கப் படுவர்
பக்க பலமய் இந்தியாவுண்டு
தக்க துணையாய் பாக்கியுண்டு
ஆயுதம் தர சீனாவுண்டு

நினைவிருந்தால் துயரிருக்கும்.


எங்கும் கேட்பது அவர் அவலம்
எங்கும் பார்ப்பது அவர் கண்ணீர்
எங்கும் உணர்வது அவர் துயரம்
என்று மறையும் அயலவர் துரோகம்
உறவென்று இருந்தால்
நினைவொன்றிருக்கும்
நினைவோடிருந்தால்
துயர்தான் மிச்சமா?
====

As I walk down the lane very far
A gentle breeze passes my ear
Telling me the pain of my Tamils
Living thousands of miles away
Every raindrop that falls on me
Reminds me of the teardrops of Tamils
Living thousands of miles away

Sunday, 1 March 2009

ஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்

திருப்பு முனையொன்று வருமா?
எதிரிப் படை சிதறி ஓடுமா?
வேங்கை சீறிப் பாயுமா? – எம்
வேதனைக்கு முடிவு வருமா?

ஆறரைக் கோடியிருந்தும் பயனுண்டோ?
ஆட்சி அதிகாரமின்றி துணை தருமோ?
ஆரியப் பேய்கள் ஆட்சி செய்கின்ற
அயல் நாட்டிலே..............................!

சர்வதேசமே உன்னிலை தகுமோ?
அறிக்கைகளும் கவலைகளும்
கண்ணீர் துடைத்திடுமோ?
பிணந்தின்னி நாட்டிலே....!

தமிழின விரோதி ஒழிப்புச் செய்வீர்!

யாமறிந்த நாய்களிலே முட்டைக்கண் சோ போல்,
சுப்பிரமணிய சுவாமி போல் இந்துராமைப்போல்,
கேவலமா
யாங்கணுமே அறிந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
-
தமிழன்
சேமமுற வேண்டுமெனில் உலகெல்லாம்
தமிழின விரோதி ஒழிப்புச் செய்வீர்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...