Friday, 27 November 2009

இந்தியச் சதியும் தமிழர் வாக்குரிமையும்.


இப்போது இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறது. இந்தியாவால் நிர்க்கதி ஆக்கப் பட்ட தமிழர்கள் கைகளில் உள்ளது அவர்கள் வாக்குரிமை அதை இந்தியா தனது சுயநலத்திற்காக பாவிக்க பல சதிகள் செய்கின்றது.

  • இலங்கையில் வாழும் தமிழர்களை ஜவகர்லால் நேரு இரண்டாகப் பிரித்தார்.
  • லால்பகதூர் சாஸ்த்திரி பதினைந்து இலட்சம் தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கினார்.
  • இந்திரா காந்தி தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து சிங்களவர்களுடன் மோதவிட்டார்.
  • ராஜீவ் காந்தி அமைதிப் படை என்னும் கொலை வெறி நாய்களை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களைக் கொன்று குவித்தார்.
  • சோனியா காந்தி சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கினார்.


போர் முடிந்ததும் ஆறு மாதத்தில் முகாம்களில் சட்ட விரோதமாக தடுத்து வைத்திருப்போர் விடுவிக்கப் படுவார்கள் என்று பொய் முழக்கம் இட்ட இந்தியா இன்றுவரை 130,000 மேற்பட்டோர் இலங்கைக் கொடுங்கோல் அரசு தடுத்து வைத்திருப்பதை ஆதரிக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனக்கு தீர்வு காண இலங்கை எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இலங்கை இந்திய உறவு அமையும் என்று பொய் கூறிய இந்தியா இது வரை இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வுகாண் எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை.

போர் முடிந்த நிலையில் இந்தியாவை இப்போது இலங்கைக்கு பெரிதாகத் தேவைப் படாது. இலங்கைக்கு பண உதவி செய்ய சீன இருக்கிறது. இலங்கையில் தனது பிடியை ஏற்படுத்த பாவம் இந்தியா தமிழர்களின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த பல சதிகள் செய்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதால் அவர்கள் பிரச்சனைதீர்க்கப் படும் என்ற ஒரு நிலை இருக்குமாயின் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்றுதான் பொருள்படும். தமிழர்கள் தமக்குத் தேவையான அரசை வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்து தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதுவரை காலமும் தமிழர்கள் பாராளமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிந்து எடுத்து வருகின்றனர். இவர்களால் எதையாவது சாதிக்க முடிந்ததா? இல்லை. அதுதான் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை சுயநிர்ணயம் இல்லை என்பதற்கான சான்று. மலையகத் தமிழர்கள் ஜே. ஆர் ஜயவர்த்தனேக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததால் அவர்கள் பிரச்சனை தீர்க்கப் பட்டதா? ஒரு சிலர்களுக்கு கண்துடைப்பு மந்திரிப் பதவி கிடைத்தது. அவ்வளவுதான். அதே வேளை யாழ்ப்பாண மாவட்டம் ஜே ஆருக்கு எதிராக வாக்களித்தது. யாழ் நூலகத்தை எரித்ததற்கான ஆத்திர வாக்களிப்பு அது. அதனால் அவர்களுக்கு சுதந்திரக் கட்சிதான் ஏதாவது செய்ததா?

கோபாலபுரத்தில் இருந்து ஒரு சாத்தான் வேதம் ஓதுயது. தமிழர்கள் கடந்த இலங்கைக் குடியரசுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே என்ற சிங்களவனுக்கு வாக்களித்திருந்தால் தமிழர்கள் நலமுடன் இருத்திருப்பார்களாம். அது அவரது டெல்லி எஜமானர்களின் உத்தரவுப்படி அவரி ஓதியது. ரணிலைப் பற்றியும் அவர் யாருடைய வாரிசு என்பதையும் அவர் தமிழர்களுக்கு என்ன செய்தார் அவர் என்ன செய்திருப்பான் என்பதை கோபாலபுரத்துச் சாத்தான் அறியாது. ஆனால் தமிழர்கள் அறிவார்கள். இப்போது ரணில் இந்திய விரோதி சரத் பொன்சேக்காவின் தலைமயின் கீழ் கூட்டுச் சேர்ந்து விட்டான். இப்போது டெல்லி என்ன உத்தரவை கோபாலபுரத்திற்கு இடப் போகிறது. இப்போது டெல்லிக்கு மஹிந்தத சரணம் கச்சாமியா? மஹிந்தவைப் போற்றி ஒரு கவிதை எழுதப் படுமா? டெல்லியின் சதிக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது.

சுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு இனம் தேர்தல் வாக்களிப்பு மூலம் எதையும் சாதிக்க முடியாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...