Monday, 9 November 2009

வட்டுக் கோட்டைத் தீர்மான போர்வையில் ஊடுருவும் உளவாளிகள்


உலகின் பல பகுதிகளிலும் இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பாக கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாக்கெடுப்பு கட்சி சார்பற்றவர்களால் நடாத்தப் படவேண்டும் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நினைப்பதால் புதியவர்கள் இதில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

வட்டுக் கோட்டைத் தீர்மானம்.
1976-ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகம் என்னும் இடத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அறிஞர்களும் ஒன்று கூடி இலங்கைத் தமிழர்களுக்கு தனியான அரசு ஒன்று அமைக்க எடுத்த தீர்மானமாகும். இதைக் காண இங்கு சொடுக்கவும்: வட்டுக்கோட்டை.

உடுருவிய உளவாளிகள்
அண்மையில் தொலைக் காட்சி ஒன்றில் தோன்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் புலம் பெயர்ந்த மக்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தமக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்றும் இங்கிருப்பதிலும் பார்க்க(ஐரோப்பா) இலங்கையில் சிங்களவனி சிறையில் இருக்கலாம் என்றார். அந்த அளவிற்கு ஐரோப்பவில் உளவுத்துறைகள் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டன.

எண்பதுகளின் முற்பகுதியில் பல குழுக்கள் தனி ஈழம் என்ற குரலுடன் உருவாகியது போல் வெளிநாடுகளில் பல குழுக்கள் உருவாகுவதும். ஏற்கனவே இருக்கும் தமிழ் அமைப்புக்களில் யார் உண்மையான தமிழின உணர்வாளர் யார் உளவாளர் என்று அறிய முடியாத நிலை தமிழர்காள் வாழும் வெளிநாடுகளில் உருவாகிவிட்டது.

தமிழர்களின் ஆயுத பலத்தை மழுங்கடித்த ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு தமிழர்களின் பலம் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் மையங் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு அங்கு தமது கவனத்தை திருப்பியது. பிரித்தானியாவிற்கு மட்டும் மூவர் கொண்ட நூறு குழுக்கள் அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானவாக்கெடுப்பில் தீவிர மாக செயற்படும் ஒருவர் தமிழர் போராட்டம் தொடர்பாக ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அந்நூலின் அறிமுகம் என்ற போர்வையில் அவர் ஒரு பிரித்தானியத் தொலைக்காட்சியில் தோன்றினார். அவர் தனது புத்தகம் எழுதுவதற்கு டெல்லி சென்று பல இந்திய அதிகாரிகளை நேர்காணல் செய்ததாக தெரிவித்தார். இலங்கைத் தமிழர் ஒருவர் டெல்லி சென்று அதிகாரிகளை நேர்காணல் செய்வது என்பது இயலாத காரியம். இவருக்கு மட்டும் எப்படி அது சாத்தியமானது. இவர் எழுதிய புத்தகம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவது என்பது அவர் புத்தகத்தைப் பார்க்கும் போது சாத்திய மற்றது என்பது புலப்படும். இருந்தும் இவர் இதைச் செய்கின்றார் என்பதால் இவர் பின்னால் ஒரு அமைப்பு இருக்கிறது என்று ஊகிக்கலாம். இவர் தான் இப்புத்தகத்தைப் பற்றி தொலைக்காட்சியில் குறிப்பிடும்போது இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்திருந்தால் தமிழர்கள் பிரச்சனை தீர்த்திருக்கும் என்று குறிப்பிட்டார். இவர் இப்படி குறிப்பிட்டது இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணம் மருத்துவ மனைக்குள் புகுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த மருத்துவர்களையிம் தாதிகளையும் கையெடுத்து கும்பிட்டு மன்றாடியதையும் பொருட்படுத்தாமல் சுட்டுக் கொன்ற நினைவு தினத்தன்று. இந்தியப் படை தீர்க்க வந்ததா தமிழர்களைத் தீர்த்துக் கட்ட வந்ததா என்பது நாம் யாவரும் அறிவோம். இந்தியா செய்த அட்டுழியங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்தே நடக்கின்றன.

தமிழர்கள் அரசியல் கட்சி அடிப்படையில் இரு பெரும் கட்சிகளாகப் பிரிந்து நின்றனர். இந்தியத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் கீழும் இலங்கைத் தமிழர்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கீழும் செயற்பட்டனர். இவற்றின் தலைவர்களாக முறையே செ. தொண்டமானும் ஜி. ஜி. பொன்னம்பலமும் இருந்தனர். சிங்கள ஆதிக்கம் தமிழர்கள் மீது அதிகரித்து வருவதை உணர்ந்த பொன்னம்பலம் அவர்கள் தமிழர்களை ஒரு பலம் வாயந்த நிலைக்கு கொண்டுவரும் முகமாக தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் இலங்கைத் தமிழ் காங்கிரசையும் ஒன்றாக இணைக்கும் திட்டத்தை தொண்டமானிடம் முன்வைத்தார். இந்த ஆலோசனை தொண்டமானுக்குப் பிடித்திருந்தாலும் அவர் இதைப்பற்றி அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு தமிழர்கள் ஒரு பலமான சக்தியாக இலங்கையில் உருவாகுவதை விரும்பாமல் நீ பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று பணித்தார். தொண்டமானும் அதையே ஏற்றுக் கொண்டு தான் பெரும்பான்மை இனத்துடன் ஒத்துழைக்கப் போவதாக பொன்னம்பலத்திடம் தெரிவித்தார். இதனால் இலங்கைத்தமிழர்கள் மூன்றாந்தர நிலைக்குத் தள்ளப்படுவதால் பொன்னம் பலம் மிக ஆத்திரம் அடைந்தார். இப்போது சிங்களவர் விழித்துக் கொண்டனர். இரு தமிழ் பிரிவுகள் பின்னர் ஒன்றிணைந்து பெரும் சக்தியாக உருவெடுப்பதைத் தடுக்க இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கும் சட்டத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்க்க வேண்டும் என இலங்கைத் தமிழ் காங்கிரசில் இருந்து எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையில் ஒரு பிரிவு பொன்னம்பலத்திற்கு எதிராக எழுந்தது. அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை போனது. இலங்கைத் தமிழர்கள் இரு பிரிவாகினர். இத்தனைக்கும் காரணம் அந்த ஆரியப் பேய்கள்.

2 comments:

ஈழவன் said...

இன்று சில ஈழத் தமிழரினால் தந்தை என அழைக்கப்படும் செல்வநாயகத்தின் மகன் சந்திரகாந்தன் எனப்படும் நாயால் தான் ஆரியப் பேய்கள் எமதின அழிப்பில் வெற்றிகரமாக காய் நகர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றில் "ரோ" வில் இருக்கின்றான், தந்தை சொல் நடக்கும் தனையன். ஈழவன்

Vel Tharma said...

தமிழர்களின் உரிமைகளை மறுக்கும் தற்போதைய அரசியலமைப்பை ஆக்குவதில் ஜே ஆர் ஜயவர்த்தனேயுக்கு உதவி செய்தவை அவரது மைத்துனர் பேராசிரியர் ஏ. ஜே. வில்சன்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...