Thursday, 5 November 2009

கல்லக்குடி கொண்டான் கச்சதீவு இழந்தான்


அஞ்சுக அம்மை மடி தவழ்ந்தான்
இயற் பெயரோ தட்சிணாமூர்த்தி
அஞ்சுக மடி தவழ்ந்தாலும்
நீதிக் கட்சியில் நீ இணைந்தாய்
அகவை பதின்மூன்றில் தொண்டனாகினாய்.

நீதிக் கட்சியில் நீ இணைந்தாலும்
சொத்துச் சேர்ப்பது நின் இலக்கென்று
அறிந்தோம் இன்று நாமெல்லாம்
தெளிந்தோம் இன்று நாமெல்லாம்

தண்டவாளத்தில் தலை வைத்தாய்
கல்லக்குடியை நீ கொண்டாய்
அதனால் பதவி தேடிக் கொண்டாய்
பதவிக்காக கச்சத் தீவை ஏன் இழந்தாய்

கழகம் ஒரு குடும்பம் என்றாய்
குடும்பமே கழகம் என்றாக்கினாய்
கோபாலபுரத்தையே கோட்டையாக்கினாய்
சொந்தவீடாகவே நாட்டையாக்கினாய்

ஒரு தாலி போனதால் ஒரு இத்தாலி
பலி கொள்ள வந்தாள் பலதாலி
பலதாலி கட்டிய பைந்தமிழ்க் கலைஞனே
ஏன் இணைந்தனையோ அச்சனியாள் கூட.


வீழ்வது நானாகிலும் வாழட்டும் தமிழென்றாய்
வளமாய் வாழ்கின்றது நின் குடும்பம்
கொலைக்களமாகியது நம் ஈழம்
பதவிகள் பல கொண்டது நின் குடும்பம்

இரு பெண்டாட்டிகள் துணைக்கிருக்க
இரு குளிரூட்டிகள் அருகிருக்க
நன்றாய் ஆடினாய் நாடக மொன்று
நாலு மணிநேர உண்ணா விரத மென்று

நாலு மணி உண்ணா விரதம்
நாடகமாக நல்லாய் ஆடினாய்
பொய்யாய் பெரும் புகழ் தேடினாய்
தேர்தல் வாக்கு வேட்டையாடினாய்

ஈழத்தில் சாந்தி நிலவுகிறது
அமைதி திரும்பிவிட்டது
சான்றிதழ் கொடுத்தாய்
ராஜபக்சேயிற்கு
பெற்ற வெகுமதி என்ன?

தொல்காப்பியத்துக்கு உரை தந்தோன்
தொல்லைக் காப்பியமாய் நின்றதேன்
ஓயுமோ உன்றன் பொய்நா
சாயுமோ நின்றன் கொடுமை.

"கருணாநிதியின் வரலாறு" என்று கூகிளில் தேடினால் "கருணாநிதியை வரலாறு மன்னிக்காது" என்று பல நூற்றுக் கணக்கான பதிவுகள் கிடைத்தன.

1 comment:

Sai said...

இதில் கருணாநிதியை குறை கூறுவது எந்த நியாயமும் இல்லை. இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் தமிழக வாக்காளர்கள். ஆம் 1984 ஆண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருக்கும்போது, அதற்காக எதையும் செய்யாத MGR அரசையும், மத்திய காங்கிரஸ் அரசையும் எதிர்த்து கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தனர். ஆனால் அதன்பின் நடந்த தேர்தலில் அரசாண்ட அதே கட்சிகளுக்கு வாக்களித்து தமிழக மக்கள் தங்களுக்கும் இலங்கையில் நடக்கும் இனபோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தினர். இந்திராவோ அல்லது MGR நினைத்திருந்தால் அப்போதே இலங்கை தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கும். இலங்கை தமிழர்களின் முதல் துரோகிகள் இந்திராவும், MGR ம. சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும், தமிழக மக்கள் கருணாநிதியின் தமிழ் உணர்வுக்கு எந்த மதிப்பும் அளிக்கவில்லை. அதன்பின் 1989 ஆம் வருடம் திமுக ஆட்சி வந்ததும், அவர் இலங்கை தமிழர்கள் மேல் காட்டிய பரிதாப உணர்ச்சியை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி அவர் புலிகளுக்கு ஆதரவாக உள்ளார் என்று அந்த ஆட்சியை கலைகவைத்தார். அதன்பின் நடந்த தேர்தலிலும் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திமுகவை தோற்கடித்து உண்மையான தமிழன விரோதியான ஜெயலலிதாவுக்கு ஆட்சியை கொடுத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற சூழ்நிலையில், தன கையில் இருக்கும் அதிகாரத்தை இழந்து கருணாநிதி எப்படி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியும். அவ்வாறு துணிந்தாலும், முடிவு என்னவோ ஜெயலலிதாவுக்கு சாதகமாகத்தான் முடியும். இவர் இலங்கை தமிழர்களை ஆதரித்தால் உடனே ஜெயலலிதா காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு மொத்தமாக திமுக ஆட்சியை ஒழித்துவிடுவார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இப்போதிருக்கும் கொஞ்சநஞ்ச இலங்கைதமிழர்கான ஆதரவும் முழுதும் அழிந்துவிடும். வைகோ கைது போன்ற சம்பவங்கள் யாருக்கும் மறந்திருக்காது. தமிழக வாக்காளர்கள் ஜெயலலிதா போன்ற குள்ள நரித்தனமான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை என்று முழுவதுமாக நிராகரிகிறார்களோ அன்றுதான் இலங்கை தமிழர் வாழ்வில் அமைதி ஏற்படும். இதில் கருணாநிதியை மட்டும் குற்றம் சொல்வதில் எந்தபயனும இல்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...