Tuesday, 3 November 2009

சரத் பொன்சேகாவை அமெரிக்கா தடுத்து வைக்கும்?


சரத் பொன்சேகா ஒரு அரச தந்திரி அவரை விருப்பத்திற்கு மாறாக விசாரிக்க முடியாது என்று அமெரிக்காவிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவுடன் அமெரிக்க உள்ளக பாதுகாப்பகம் நாளை புதன் கிழமை (04-11-2009) "நேர்காணல்" நடாத்தவுள்ளது. அவருக்கென்று அரச தந்திரச் சிறப்புரிமை உண்டு .(diplomatic immunity) என்று இலங்கை அரசு வாதிடுகிறது.

ஒரு நாட்டின் அரச தந்திரிகள் இன்னொரு நாட்டில்செயற்படும் போது அவர்களுக்கென்று சிறப்புரிமைகள்உண்டு.(diplomatic immunity -A principle of international law that provides foreign diplomats with protection from legal action in the country in which they work)
இந்தச் சிறப்புரிமைகள் 1961 ஆண்டு நடந்த வியன்னா அரச தந்திரிகளுக்கான மாநாட்டில் உலக நாடுகளால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. அரச தந்திரி ஒருவர் தான் செயற்படுகம் நாட்டில் குற்றமிழைத்தால் அவரைக் கைது செய்யவோ தண்டிக்கவோ அவர் செயற்படும் நாட்டிற்கு உரிமை இல்லை. அதிக பட்சமாக அவரை நாட்டை விட்டு வெளியேற்றலாம். உதாரணமாகஇலங்கைக்கான பர்மாவின் தூதுவர் தனது மனைவியை இலங்கையில் வைத்துக் கொலை செய்தால் அவரை பர்மாவில்தான் விசாரிக்க முடியும்.

பாரிய குற்றங்கள் இழைக்கப் படுமிடத்தில் அரச தந்திரி ஒருவர் தனது அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமையை இழக்க வாய்ப்புண்டு.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் இருவரை இலங்கை அரசு வன்னி முகாம்களில் தடுத்து வைத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் என்றவகையில் இவர்களுக்கு அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை உண்டு. இது பற்றி Inner City Press ஐக்கிய நாட்டு அதிகாரிகளிடம் அவர்களின் அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை பற்றியும் அவர்களது தடுத்து வைப்பு சர்வதேச நியமங்களுக்கு முரணானது என்றும் பல தடவைகல்சுட்டிக் காட்டியது அவர்கள் இக் கேள்விகளுக்கு பதில் கூறாமல் இழுத்தடித்து விட்டு இறுதியில் இருவரும் இலங்கைக் குடிமக்கள் என்பதால் அவர்களிற்கு அவர்களின் சொந்த நாட்டில் அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை இல்லை என்று ஐக்கிய நாடுகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

இதே பிரச்சனை இப்பொது சரத் பொன்சேகாவிற்கு ஏற்பட்டுள்ளது. அவரை அமெரிக்க அரசு தடுத்து வைக்க முடியாது அவருக்கு அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை உண்டு என்று இலங்கை அரசு கருதுகிறது. அதில் உள்ள சட்டச் சிக்கல்கள்:
  • சரத் பொன்சேகா இலங்கை அரச அதிகாரிதான் ஆனால் அவர் அரச தந்திரியா?
  • சரத் பொன்சேகா அமெரிக்கக் குடியுரிமை உடையவர். அவரை அமெரிக்க அரசு தடுத்து வைக்கலாம்.
  • அவர் இழைத்த குற்றம் பாரதூரமானது அதனால் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை நீக்கி (waiving the diplomatic immunity) அமெரிக்க அரசு முற்படலாம்.
  • அமெரிக்கச் சட்டப் படி 12மாதங்களுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப் படக்கூடிய ஒருவருக்கு அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமையை நீக்கி அவர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான ரிச்சட் நிக்ஷன், ரொனால்ட் றீகன், ஜோர்ஜ் டபிள்பூ புஷ் ஆகியோருக்கான வெள்ளை மாளிகை சட்ட ஆலோசராக விளங்கிய பிரெட் பீல்டிங், "சரத் பொன்சேகா உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும். அவர்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் உண்மையான பதிலை வழங்கவேண்டும்'' என அறிவுறுத்தியுள்ளார்.


கடந்த கால உதாரணங்கள்
  • 1984 இல் இலண்டனில் உள்ள் லிபியத் தூதுவரகத்துக்குள் இருந்து மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிச் சூடு வெளியில் இருந்த காவற்துறை அதிகாரியைக் கொன்றது. இதற்காக அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை நீக்கி லிபிய நாடு கொலைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
  • 1991இல் ஜோர்யிய அரச தந்திரி ஒருவர் அமெரிக்காவில் வாகன விபத்தொன்றிற்காகத் தண்டிக்கப்பட்டார்.
  • 1960இல் பிரித்தானியாவில் தீர்வை இன்றி இறக்குமதி செய்த சிகரெட்டை விற்பனை செய்தமைக்காக ஹொலண்ட் நாட்டைச் சேர்ந்தவர் தண்டிக்கப் பட்டார். அதே குற்றத்தைச் செய்த அமெரிக்க அரச தந்திரி தண்டனையில் இருந்து அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமையால் தப்பினார்.
அமெரிக்காவும் அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமைகளும்:


Category

May Be Arrested
or Detained
Residence May be Entered Subject to Ordinary Procedures May Be Issued Traffic Citation
May Be Subpoenaed as Witness

May Be Prosecuted

Recognized Family Member
Diplomatic
Diplomatic Agent No1 No Yes No No Same as sponsor (full immunity and inviolability).
Member of Administrative and Technical Staff No1 No Yes No No Same as sponsor (full immunity and inviolability).
Service Staff Yes Yes Yes Yes Yes No immunity or inviolability.2
Consular
Career Consular Officers Yes, if for a felony and pursuant to a warrant.2 Yes4 Yes No--for official acts. Testimony may not be compelled in any case. No--for official acts. Otherwise, yes.2 No immunity or inviolability.2
Honorary Consular Officers Yes Yes Yes No--for official acts. Yes, in all other cases. No--for official acts. Otherwise, yes. No immunity or inviolability.
Consular Employees Yes2 Yes Yes No--for official acts. Yes, in all other cases. No--for official acts. Otherwise, yes.2 No immunity or inviolability.2
International Organizations
International OrganizationsStaff3 Yes3 Yes3 Yes No--for official acts. Yes, in all other cases. No--for official acts. Otherwise, yes.3 No immunity or inviolability.
Diplomatic-Level Staff of Missions to International Organizations No1 No Yes No No Same as sponsor (full immunity and inviolability).
Support Staff of Missions to International Organizations Yes Yes Yes No--for official acts. Yes, in all other cases. No--for official acts. Otherwise, yes. No immunity or inviolability.

2 comments:

Unknown said...

Sarath fonseka does not have immunity as he is a dual national and he is a USA national but he does not have diplomatic responsibilty in the USA. He is an ordinary national in the USA. In addition, Chillian formar president who arrived in the UK with diplomatic passport was taken to court because the offenders of serious violation of humabn rights can not be protected by the immunity

At present, anyone from Sri Lankan Cabinet can be brought before the ICJ or American Court.

Vel Tharma said...

Dear Kaadumaram,
Thanx 4 dat valuable comment,

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...