Wednesday, 14 October 2009

திருமா: தன்னைத் தானே தாழ்த்தினாரா?தோழர் திருமாவளவனைச் சுட்டிக் காட்டி இலங்கைக் குடியரசுத் தலைவர் இவர் பிரபாகரனின் நண்பன். இவரின் நல்லகாலம் இவர் பிரபாகரனுடன் இருக்கவில்லை இருந்திருந்தால் இவரையும் போட்டுத் தள்ளியிருப்போம் என்று கிண்டலடித்தார்.
தோழர் திருமாவும் வேறு வழியின்றி அதைச் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே மேதகு பிரபாகரனுடன் இருந்த தோழர் திருமாவளவனை சந்தேகிப்பது தமிழினத்தின் சாபக்கேடு என்று அவரது இணையத் தளம் கூறுகிறது. நல்ல நண்பனைச் சந்தேகிக்கக் கூடாது என்பதை யாம் அனைவரும் அறிவோம்.

திருமாவை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் உற்ற நண்பனாகவே பார்க்கின்றனர். ஆனால் திருமாவை தமிழினக் கொலையாளிகளுடனும் எதிரிகளுடனும் துரோகிகளுடனும் படம் எடுத்துக் கொள்வதை தமிழ்த் தேசிய வாதிகள் விரும்புவார்களா? இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டார நாயக்க இந்தியாவிற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டபோது அவருடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொள்ள அப்போதைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரி மறுத்துவிட்டார். பின்னர் அது பற்றி அவரிடம் வினவியபோது "அந்த அம்ம தமிழர்கள் விஷ்யத்தில் நல்லமாதிரியாக நடந்து கொள்வதில்லை" என்றார். இத்தனைக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கொன்றதில்லை. ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்து கொள்ளையடித்து கற்பழித்து வதை முகாம்களில் தள்ளியவர்களுடன் தோழர் திருமாவளவன் இணைந்து நிற்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்?

இந்தத்தூதுக் குழுவை தோழர் தவிர்த்திருந்திருக்க வேண்டும்.
முகாம்களின் நிலைமை பற்றி அறிய வேண்டுமானால் மெனிக் பாம் முகாம்கள் மட்டுமல்ல மற்ற எந்த முகாமிலுள்ள நிலைமைகள் பற்றி தோழர் திருமாவளவனுக்கு நெருக்கமான தமிழ்தேசியவாதிகள் எடுத்துரைத்திருப்பார்கள். தோழர் திருமாவளவனை இலங்கையில் தமிழர்களைச் சந்திக்க இராணுவம் மறுத்து விட்டது. அவர் இலங்கைக்கு மேற்கொண்டது ஒரு இலங்கை அரசால் நெறிப்படுத்தப் பட்ட பயணம்தான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இப்பயணத்தால் தோழர் திருமாவளவன் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டாரா என்ற கேள்விக்கான விடை அவர் தமிழ் நாடு சென்று வெளிவிடும் பகிரங்க அறிக்கையில்தான் இருக்கும்.

8 comments:

Anonymous said...

வெட்கம் கெட்டவர்கள். பதிவிக்காக தமது சுயத்தையே இழந்த இவர்களை தலைவர், தோழர் என்று சொல்வதே தமிழினத்திற்கு அவமானம். வாய்சொல்லில் வீரர், அட்டைக் கத்தி சூரர். உண்மையான தமிழனாய் இருந்திருந்தால் காலிலிருந்ததைக் கழற்றி கொலைக்கார மஹிந்தவின் வாயில் அடித்திருக்க வேண்டும். மேடைதோறும் முழங்கிய இந்த கோமாளி வாயடைத்து நின்றது ஏன்?

ஜனா

எல்லாளன் said...

பிரபாகரனுடன் இருந்தவர் என்பதை விட ஆப்பு வைக்க இருந்தவர் என்பதே பொருத்தம்

இதற்குப் பின்னரும் இந்த திருமா என்ற விபச்சாரி திருவாய் மலர்ந்து ஈழம், தமிழீழம் என்று விபச்சாரம் செய்யத் தான் போகின்றது

அதற்கு சில எருமைக் கூட்டம் கைத்தட்டி ஆரவாரம் செய்யத் தான் போகின்றது

எல்லாளன் said...

திருமா தனது உண்மையான நண்பர்களுடன் இப்போது தான் படம் எடுத்திருக்கின்றார் பகிரங்கமாக

மற்றப்படி இது தான் அவர் இருக்கவேண்டிய இடமும் கூட

Anonymous said...

இந்த பன்னாடைகளை எல்லாம் புலம் பெயர்
சில பன்னாடைகள் வரவழைத்து பொன்னாடை போர்ப்பது தான் ஏனோ

Anonymous said...

Comments on facebook:
1. கொற்றவன் Kotravan:
திருமா என்ன உயர்ந்தவனா தன்னை தாழ்த்திக்கொள்ள.

2.Thamilini Maaran:
விடுதலைப் போராளிகள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து அவர் விழமாட்டார் என்று நம்புவோமாக....
3. கொற்றவன் Kotravan:
தமிழினி அவர்களே அவன் விழுத்து பல திங்கள்கள் ஆகின்றன.அவர்களுடன் இவ்வளவு ஆண்டுகளாக குப்பை கொட்டும் எங்களிக்கு தமிழ அரசியலாளர்கள் பற்றீ தெரியாதா

ttpian said...

கழுதை எப்போதுமே கழுதைதான் - புலியாக மாற முடியாது!

லெமூரியன்... said...

இந்திய உளவாளிகளுக்கு விலை போன வேசி இந்த திருமா...இவர் ஐந்தாம் கட்ட ஈழ விடுதலைக்கு பாடுபட போகிறார் என்பது மிகப்பெரிய கேலிக்குரிய விஷயமாகும்!

Anonymous said...

http://www.edigitallab.com/thiruma.mp3

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...