Monday, 12 October 2009

டி. ஆர் பாலு சார் கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடுங்களேன்!


இலங்கை வந்துள்ள இந்திய ஆளும் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் குழுவின் நோக்கம் தொடர்பாக தமிழ் மக்கள் மிகவும் குழம்பிக் காணப்படுகின்றனர். இவர்கள் வரவால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் வேறு எதற்கு வந்தார்கள் என்ற கேள்விக்கு விடை காண்பதில் உள்ளகுழப்பம் இன்னும் தெளிந்த பாடில்லை.
ஆனால் டி. ஆர். பாலு சார் பழைய பல்லவியைப் பாடினார்: "இலங்கையில் தமிழர்கள் கௌரவமாக வாழ இந்தியா வகை செய்யும்". இப்படி இந்திராகாந்தியின் காலத்திலிருந்தே சொல்லிச் சொல்லி 150,000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டு விட்டாரகள்.

புறக்கணித்த யாழ் மக்கள்
1987இல் இந்தியப் படை வந்த போதி சுமார் 30கிலோமீற்றர் நீள காங்கேசன் துறை வீதியின் இருமருங்கும் சிற்றுண்டிகளுடனும் குளிர் பானங்களுடனும் பெருந்தொகையான மக்கள் வரவேற்றனர். ஆனால் டி. ஆர். பாலு சார் தலைமையிலன குழு யாழ்ப்பாணம் சென்றபோது பெரும்பாலான மக்கள் அவர்களைப் புறக்கணித்தார்கள். பெரும்பாலும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களே இவர்களின் வருகையின் போது சமூகமளித்திருந்தனர்.

போட்டானய்யா ஒரு போடு
டி. ஆர். பாலு சார் யாழ்ப்பாணத்தில் மக்களைச் சந்தித்த போது ஒரு பல்கலைகழக மாணவன் ராஜீவ் காந்தி கொலையைச் சாட்டி இன்னும் எத்தனை பேர்களைக் கொல்லப் போகிறீர்கள் என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மனதிலும் உள்ள கேள்வி. இதற்கு விடை தேவை. அத்துடன் அந்த மாணவன் உயிருக்கு இனி உத்தரவாதம் இலங்கையில் இல்லை.

சிடு மூஞ்சி சனீஸ்வரன் டி. ஆர். பாலு.
டி. ஆர். பாலு சார் மிகவும் கடுகடுப் பாகநடந்து கொண்டதாலும் மக்களைச் ச்ந்திக்க முயன்ற கனிமொழியையும் திருமாவளவனையும் தன் பார்வையால் மிரட்டியதாலும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகையான வலம்புரி அவரை சனீஸ்வரன் என்று விமர்சித்துள்ளது.

அதிர்ச்சியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பாராளமன்ற உறுப்பினர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் பின்வருவனவற்றால் அதிர்ச்சியடைந்துள்ளனர்:
  • அவர்களுடனான சந்திப்பு அவசரப் பட்டு ஒழுங்கு செய்யப் பட்டது.
  • அவர்களுடனான சந்திப்பு பூரணமடையாமல் இடையில் நிறுத்தப் பட்டது.
  • முகாமில் உள்ள மக்களை விடுவித்தால் மஹிந்தவிற்கு எதிராக இராணுவம் கிளர்ந்த்து எழும் என்று அவர்களை டி. ஆர். பாலு சார் தலைமையிலான குழு மிரட்டியது.

வீரம் பேசிய கனிமொழிக்கு என்ன நடந்தது.
இது ஒரு Guided tour அல்ல என்று தனது இலங்கைப் பயணத்தைப் பற்றி கனிமொழி கூறியிருந்தார். ஆனால் அவர்கள் இலங்கை அரசின் காட்சி முகாம்களாகிய மெனிக் பாம் முகாம்களை மட்டும் பார்வையிட அனுமதிக்கப் பட்டார். மிக மிக மிக......மோசமான நிலையில் உள்ள மற்ற முகாம்களை ஏன் பார்வையிடவில்லை.

பணம் கொடுக்க ஏற்ப்பாடு செய்யப் பட்ட பயணம்.
டி. ஆர். பாலு சார் தலைமையில் வந்த குழுவின் நோக்கம் இலங்கைக்கு நிதி உதவி செய்ய இந்தியா ஆடும் நாடகம் என்று ஏற்கனவே இங்கு தெரிவிக்கப் பட்டது. அதை காண இங்கு சொடுக்கவும்.
மெனிக் பாமிற்கு செல்லுபவர்களிடம் அரசாங்கம் ஏற்கனவே கூறியிருந்ததை மட்டுமே தம் குறைபாடுகளாக அங்கு தடுத்து வைத்திருக்கப் பட்டிருக்கும் மக்கள் தெரிவிப்பர். டி. ஆர். பாலு சார் தலைமையில் வந்த குழுவினரிடம் மக்கள் தெரிவித்த குறைபாடுகள்:
"கழிவு நீர் வசதி இல்லை, சுகாதாரமான குடிநீர் கிடையாது, ஒரு நாளைக்கு ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 லிட்டர் குடிநீர்தான் தருகிறார்கள்.

ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீரும், குளிக்கும் நீரும் தரப்படுகிறது.முகாம்களுக்கு குடிநீர் தர உதவி வரும் ஆறு வறண்டு போய்க் கிடக்கிறது. அரிசி மட்டும் அரசு தருகிறது.

ஆனால், எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களை அரசு தருவதில்லை.

மழைக்காலம் நெருங்கி வருகிறது. ஆனால் இங்கு துப்புரவு சுத்தமாக இல்லை. மழைக்காலத்தில் இந்தப் பகுதி பெரும் நரகமாகி விடும் அபாயம் உள்ளது. நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகமாக உள்ளது".

இவற்றைக் கூறும்படி இலங்கை அரசு முகாமிலுள்ள மக்களிடம் கூறியதா? இதை நிவர்த்தி செய்வது என்ற போர்வையில் இந்தியா இலங்கைக்கு சீனாவிற்குப் போட்டியாக நிதி உதவி செய்யப் போகிறதா?

விடுதலைப் புலிகளுக்கான எதிரான போரின் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்து அகதிகள் எதுவும் கூறாதது ஏன்?

ஏன் கிழக்கு மாகாணம் செல்லவில்லை?
டி. ஆர். பாலு சார் தலைமையில் வந்த குழு வவுனியா சென்று அங்கு அரச அதிபர்(கலெக்டர்) மேல் சீறிப்பாய்ந்தார் பாலு; யாழ்சென்று சிடுமூஞ்சித்தனத்தைக் காட்டினார்; மலையகம் சென்று கலைஞர் வாழ்க என்ற மக்கள் ஆரவாரம் பெற்றனர்; ஏன் கிழக்கு மாகாணம் செல்லவில்லை? கருணா-பிள்ளையான் போட்டி காரணமாகவா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...