Saturday, 3 October 2009

விகடனுக்கும் இலங்கை அரசிற்கும் என்ன தொடர்பு?


விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும்.

கதை இப்படி இருக்கும் போது விகடனின் ஒரு உதவி ஆசிரியர் இலங்கையிடம் இலஞ்சம் வாங்கிச் செயற்பட்டதாக செய்திகள் வந்தன.

இப்போது ஜூனியர் விகடனில் பத்மநாதன் தொடர்பான கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் மிகத் தவறான செய்தி ஒன்று குறிப்பிடப் பட்டுள்ளது:''இலங்கையில் ஆரம்ப கட்டத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கம் ராணுவரீதியாக போரைத் துவக்கி, தொடர்ந்து சண்டை நடத்த வட பகுதியில் செழிப்பாக இருந்த தமிழர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
1970களில் முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் இருந்தனர். தமிழர் கூட்டணியின் தேசியகீதத்தில் "வளர் முப்பத்தைந்து இலட்சம் மக்கள் கொண்ட..." என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

அடுத்த பொய்: கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்றனர்.

பிரித்தானியாவில் மட்டும் மூன்று இலட்சத்திற்குக் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர்.

இலங்கையிலோ அல்லது எந்த வெளிநாட்டிலோ வெளிவராத தகவல்கள் "முடிந்தது புலி வேட்டை தொடங்கியது தங்க வேட்டை" என்ற கட்டுரையில் ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது:
  • கிட்டத்தட்ட 6,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை சிங்களர் வசிக்கும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பரவலாக அவர்கள் மறைத்து வைத்ததாக இப்போது சிங்கள ராணுவம் கருதுகிறது.
  • இலங்கை முழுவ திலும் சுமார் 40 இடங்களில் ஆயுதப் புதையலும், 23 இடங் களில் தங்கப் புதையலையும் புலிகள் ஒளித்து வைத்திருப்பதாக போர் முடிந்ததுமே இலங்கை ராணுவ வட்டாரங்களுக்கு ரகசியத் தகவல் வந்து சேர்ந்தது.
  • இரு வாரங்களுக்கு முன்பு முல்லைத்தீவில் ஒரு பெரும் புதையலை கைப்பற்றியிருக் கிறார்கள். அடுத்த கட்டமாக மட்டக்களப்பு வாகரை பகுதி யிலும், இலுப்படிச்சேனை என்ற இடத்திலும் புதையலை எடுத்திருக்கிறார்கள். இதே மாதிரி கிழக்குப் பகுதியில் வெள்ளான்தோட்டத்திலும், கல்லடியிலும் புதையலைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
  • கொட்டயனாவில் இருக்கும் பொன்னம்பல வனேஸ்வரம் கோயிலின் பூசாரியான ரவி குருக்களிடமும் அப்படித்தான் விசாரணை கொண்டுபோன மேப்பை விரித்து, அதில் குறிப்பிட்ட ஓர் இடத்தை அடையாளம் கண்டு தோண்டச் சொல்லியிருக்கிறார்கள். ஐந்து அடிகள் தோண்டியவுடன், ஒரு பாதாள அறை இருந்திருக்கிறது. அதை திறந்து பார்த்த ராணுவத்துக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு பெரிய பட்டாலியன் ராணுவத்துக்குத் தேவை யான அளவுக்கு பெரும் ஆயுதக்குவியலே அங்கே இருந்திருக்கிறது. அதனுடன், 1,000 கிலோ தங்கம் இருந்திருக்கிறது. அதற்கடியில் மிக மிக முக்கியமான ஆவணங்களும், டைரிகளும் கிடைத்திருக்கிறதாம்.
  • ராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு டைரியில் குறிப்பிட்டிருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டிருக்கிறது. அங்கு ஒளிந்திருந்த புலிகளின் கெரில்லா படைப்பிரிவு தலைவர் ராதாவை கடந்த 25-ம் தேதி கைது செய்திருக்கிறார்கள். மேலும் இருவரையும் கைது செய்திருக்கும் ராணுவம், அவர்களை பற்றிய தகவல்களை வெளியே கசிய விடவில்லை.
  • தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு சரக்கு கப்பல் நிறுவனங்களும், இங்கிலாந்தில் 176 பெட்ரோல் பங்குகளும், கனடாவில் 193 பெட்ரோல் பங்குகளும் புலிகளுக்கு இருப்பதாக இப்போதைக்கு உறுதிப்பட்டிருக்கிறது
இவை எல்லாம் இலங்கையைப் பொறுத்தவரை மிகமிக இரகசியமான தகவல்கள். வேறு எங்கும் கிடைக்காத தகவல்கள். இவை எப்படி விகடனுக்குக் கிடைத்தன? இலங்கை அரசிற்கும் விகடனுக்கும் என்ன தொடர்பு?

4 comments:

www.mdmkonline.com said...

நியாயமான கேள்வி ஈழ விசயத்தில் ஏன் துரோகிகளின் பட்டியல் மாட்டும் நீண்டு கொண்டே போகிறது?
இந்தியா மூலமாக இலங்கை பெற்ற பணம்தான் காரணமா? அல்லது தறுதலை தமிழனின் எட்டப்ப வேலை காரணமா?

உங்களின் பதிவு ஒரு எதிர்பார்வையை விகடன் மேல் பதிந்துள்ளது.

தோழர்
www.mdmkonline.com

Anonymous said...

yes you are correct

Anonymous said...

விகடனின் அந்தக் கட்டுரையில் இருப்பதுபோல் பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் எந்த தங்கமும் எடுக்கவில்லை. விகடன் சும்மா பொய் சொல்கிறது பார்ப்பனைத் திருத்தமுடியாது,

மனதின் கிறுக்கல்கள் said...

விகடனில் போடுவதை விட அதை ஒரு உண்மையான செய்தியபக காட்டிய உங்கள் ஆராய்ச்சி தான் வியக்கத்தக்கது.தேவையற்ற விடயங்களை அலசி ஆராய்வதே அதை ஒரு முக்கியமான விடையமாக காட்டும் செயல் தெரிந்து கொள்ளுங்கள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...