Wednesday, 2 September 2009

இலங்கை: இந்தியா தனது உண்மையான கொள்கையை வெளியிட வேண்டும்..


ஜவகர்லால் நேரு இலங்கையில் தமிழர்களைப் பிரித்து வைத்தார்.

லால் பகதூர் சாஸ்த்திரி தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கினார்.

இந்திரா காந்தி தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து சிங்களவர்களுடன் சண்டையிட வைத்தார்.

ராஜீவ் காந்தி தமிழர்களை அழிக்க முற்பட்டார்.

இப்போது இந்தியாவின் அதிகாரத்திலுள்ளவர்கள் தமிழர்களை நிற்கதியாக்கினர்.

இந்தியா இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக என்ன நிலைப் பாட்டில் இருக்கிறது.

தமிழர்களைப் பொறுத்தவரை மிகத் துர்ப்பாக்கிய நிலை தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்கையோர் எல்லாம் இந்தியவின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் தமது சுதந்திர வேட்கையை இந்திய சுதந்ததிர போராட்ட வீரர்களிடமிருந்தே பெற்றனர்.

இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது இலங்கையின் பதின்மூன்றாம் அரசியலமைப்பு தொடர்பான தகவல்கள் டெல்லியில் இருந்து வந்தன. பதின்மூன்றாம் திருத்தத்திலும் மேலாக அதிகாரப் பரவலாக்கம் செய்யப் படும் என்று டெல்லியில் இருந்து தகவல்கள் வந்தன. இப்போது அதைப் பற்றிய பேச்சே இல்லை.

ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தப் படி விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுத நடவடிக்கையில் இந்தியப் படையினர் ஈடுபட்டனர். அந்த ஒப்பந்தப் படி பதின்மூன்றாம் திருத்தம் நிறைவேற்றப் படாமைக்கு எதிராக இந்தியா என்ன நடவடிக்கை எடுககப் போகிறது? இந்தியாவின் கேணல் ஹரிகரன் இப்படிக் கூறுனார்:
இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா முன்னர் காத்திரமாகக் கருத்துத் தெரிவித்து வந்தது. பின்னர் 13 ஆவது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புவதாக அது இறங்கி வந்தது.

அதுவாவது நடக்குமா என்ற சந்தேகம் வந்தபோது இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்துவிட்டது.

எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத் தொடரின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேசிக்கொண்டதன் பின்னரே இந்தியா வாயை மூடி மௌனியானது.

தமிழர்களை கேவலப் படுத்திய கேணல் ஹரிஹரன்.
It is Hobson’s Choice for Tamils என்று ஒரு கட்டுரையை கேணல் ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார். ஹொப்சன் என்னும் குதிரை வாடகைக்கு விடும் ஆங்கிலேயர் தனது ஒரு குதிரையை மட்டும் எல்லோரும் வாடகைக்கு கேட்பதால் தான் கொடுக்கும் குதிரையை வாடகைக்கு பெறவேண்டும் அல்லது ஒரு குதிரையும் கிடைக்காது என்று நிபந்தனையை விதித்தாராம். ஆங்கிலத்தில் நடைமுறையில் இப்போது இல்லாத ஒரு சொற்தொடரை ஹரிஹரன் தேடி எடுத்து அதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் (என்னையும் அதன் தாற்பரியத்தை தேடி அலைய வைத்து) எழுதினார். அதாவது தமிழர்கள் முன் உள்ள ஒரே தெரிவு சிங்களவர்கள் கொடுப்பதைப் பெறுங்கள் அல்லது உங்களுக்கு எதுவுமில்லை என்று ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார்.

சோனியா காந்தி அம்மையார்
சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சோனியா அம்மையார் அங்கு சொன்னார் இலங்கையில் தமிழர்கள் கௌரமாகவும் சுதந்திரமாகவும் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று!!!!
31-03-2009 இலன்று சோனியா அம்மையார் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எழுதியகடிதத்தில் கூறியது:
As you are aware, the Congress Party has for nearly three decades espoused the cause of the Tamils in Sri Lanka and has urged successive Sri Lankan governments to ensure that all communities, particularly, the Tamil speaking people, are guaranteed and enjoy equal rights within the framework of a united Sri Lanka.

(கடந்த முப்பதாண்டு காலமாக காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் துணை நின்று வருவதை யும், ஒன்றுபட்ட இலங் கைக்கு உட்பட்டு அனைத்து சமுதாயத்தி னரும் குறிப்பாக இலங் கைத் தமிழர்களும் சம உரிமையோடு வாழ வேண் டும் என்பதைத் தொடர்ந்து வருகின்ற இலங்கை அரசுகளிடம் வலியுறுத்தி வருவதையும் தாங்கள் நன்கறிவீர்கள்)

இவை எதுவும் நடக்கவில்லை.
இந்தியா தமிழர்களைப் பொறுத்தவரை இரட்டை வேடம் போடுகிறது. பகிரங்கமாக அது தெரிவிப்பது வேறு திரைமறையில் அது சிங்களவர்களுக்கு தெரிவிப்பது வேறு என்பது இப்போது உறுதியாகிவிட்டது. தனது சிங்களவர்களுக்குச் சார்பானதும் தமிழர்களுக்கு எதிரானதுமான நிலைப் பாட்டை இந்தியா தனக்குத் திராணி இருந்தால் பகிரங்கப் படுத்தட்டும். அல்லது தமிழர்களுக்கு தான் வாக்குறுதியளித்தது போல் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நடக்கச் செய்யட்டும்.

3 comments:

ttpian said...

ஒளிவு மறைவு இல்லை!
தமிழ் இனத்தை அழிப்பதுதான்,இந்தியாவின் குறிக்கோள்!
துனை நிற்கும் மஞ்சல் துண்டு,மனம் மகிழ"கவனிப்பு" உண்டு

கறுப்பன் said...

நீங்கள் ஈழப்பிரச்சினையை ஆரிய-திராவிட கண்ணோட்டத்தோடும், தமிழர்-சிங்களவர் என்ற கண்ணோட்டத்தோடும் பார்க்க வெளிக்கிட்டால் உங்களால் இந்தப்பிரச்சினையை விளங்கிக்கொள்ளவே முடியாது.

//தனது சிங்களவர்களுக்குச் சார்பானதும் தமிழர்களுக்கு எதிரானதுமான நிலைப் பாட்டை இந்தியா தனக்குத் திராணி இருந்தால் பகிரங்கப் படுத்தட்டும். அல்லது தமிழர்களுக்கு தான் வாக்குறுதியளித்தது போல் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நடக்கச் செய்யட்டும். //

அப்பாவித்தனமாக கேட்கிறீர்கள்.

அப்படி எல்லாம் செய்தால் பிறகென்ன அரசியல்?

Anonymous said...

அப்பாவித்தனமான கேள்விதான்! அரசியலும் அதுதான் இப்படி எல்லாம் கேட்டால்தான் இந்தையாவிற்கு வால் பிடிக்கும் துரோகிகளுக்கு விளங்கும்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...