Monday, 31 August 2009

ஈழத் தமிழர் கொலை:பான் கீ மூன் பதவி விலக வேண்டும்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் இலங்கையில் இருந்தபோது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார். இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் அவர்களிடமும் இது தொடர்பாக புலித்தேவன் தெரிவித்தார். விஜய் நம்பியார் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர்பான வேண்டுகோளுடன் பிரித்தானிய ஊடகவியலாளரான மேரி கொல்வின் அவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதி ஒருவரும் விஜய் நம்பியாரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். சரணடைவதாக இருந்தால் இலங்கை படையினரிடம்தான் சரணடைய வேண்டுமே தவிர மூன்றாவது தரப்பினரிடம் அல்ல என்பதை இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது என்ற செய்தியை விஜய் நம்பியார் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். சரணடைவதற்கு விரும்பிய நடேசனிடமும், புலித்தேவனிடமும் வெள்ளைக்கொடியை ஏந்தி இலங்கை படையினரிடம் காட்டினால் போதும், பாதுகாப்பாக சரணடையலாம் என்று விஜய் நம்பியார் கூறியிருக்கிறார். நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி வேண்டுகோள் ஊடகவியலாளர் மேரி கொல்வின் மூலமாக விஜய் நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உரிய முறையில் இலங்கை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டனர். இதன் பின்னால் ஒரு சதி இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வேரோடு அழித்தொழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறது. அதன் இராணுவ ஆலோசகர் சதீஷ் நம்பியார் அவரின் சகோதரர் விஜய் நம்பியாரை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குத் தூதுவராக அனுப்பியது ஒரு சதியன்றி வேறு எது? இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு செல்லும்படி அவரிடம் வலியுறுத்திய போது அவர் அதைத் தட்டிக் கழித்து விட்டு போர் முடிந்த பின் இலங்கை சென்றார். சம்பந்தமில்லாமல் கண்டி சென்றார். மிக உயரத்தில் இருந்து வன்னி முகாம்களை பார்வையிட்டுவிட்டு அறிக்கை விட்டார். இதனால்தால் Foreign Policy இணையத்தளம் மிக ஆபத்தான கொரியர் என்று விமர்சித்தது. The Economist சஞ்சிகை இலங்கை விவகாரத்தில் அவரது செயற்பாட்டை வைத்து அவருக்கு பத்துக்கு மூன்று புள்ளிகள் வழங்கியது. பான் கீ மூனுடன் பணியாற்ற முடியாதளவிற்கு அவர் அடிக்கடி ஆத்திரமடைகிறார் என்றும் தலைமைத்துவத்தைப் பேண முடியாமல் தத்தளிக்கிறார் என்றும் பொறுப்பற்றவராக காணப்படுகிறார் என்றும் ஐ.நா. வுக்கான நோர்வே தூதுவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்தரங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒஸ்லோ தினசரி ஆவ்தென்போஸ்டன் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா. ஸ்தாபனமும் உலக நெருக்கடிகளுக்கு தீர்வும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அவசியப்படும் இந்தக் காலகட்டத்தில் பான் கீ மூனும் ஐ.நா. ஸ்தாபனமும் ஆச்சரியகரமான முறையில் மெளனம் சாதிப்பதாக ஜுலின் அறிக்கை கூறுகிறது.

இப்போது
The Economist சஞ்சிகை மீண்டும் பான் கீ மூன் அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என பிரபல தி எகனோமிஸ்ட் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் பான் கீ மூன் வெறும் பார்வையாளராக செயற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, நோர்வேயின் சுழல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இப்படிப் பல முனைகளிலும் இருந்து விமர்சிக்கப் படும் பான் கீ மூன் தனது பதவியில் இருந்து விலக வேண்டும்.

4 comments:

Anonymous said...

Wanning MOON should vanish from UN

Anonymous said...

Yes he is the most dangerous Korean...

yalini said...

He should be thrown out of UN.

Anonymous said...

After seeing the critism by Norwegian diplomat, he must have resigned

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...