Monday, 3 August 2009

தமிழினத்திற்கு எதிராக இந்தியாவின் அடுத்த சதி ஆரம்பம்.


இலங்கை 1948இல் சுதந்திரமடைந்தபின் தமிழர்களின் இரு முக்கிய கட்சிகளான தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் இணைக்க தமிழ் காங்கிரசுத் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் முயன்ற போது அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் தோட்டத் தொழிலாளர் காங்கிரசுத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானிடம் நீ சிறுபான்மை இனமாகிய தமிழர்களுடன் சேராமல் பெரும்பான்மை இனமான சிங்களவர்களுடன் ஒத்துழை என்று பணித்தார். தொண்டமானும் அப்படியே செய்தார். அவருக்கு சிங்களவர்கள் கொடுத்தபரிசு தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தமையாகும். இது பற்றி நேருவிடம் தோட்டத் தொழிலாளர்கள் முறையிட்டபோது இது உள் நாட்டுப் பிரச்சனை இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டார். இது இந்தியா தமிழினத்திற்கு இந்தியா செய்த பெரும் துரோகம்.

இதன் பின் 1964இல் இந்தியா இலங்கையுடன் சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் சர்வதேச நியமங்களுக்கு எதிராக கைச்சாத்திட்டு 150,000 தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. இத்துடன் நின்றுவிடவில்லை இந்தியத் துரோகம்.

1980களின் ஆரம்பப்பகுதியில் இலங்கை வாழ் தமிழர்களிடை பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவற்றை சிங்களவர்களுடன் மோதவிட்டதுடன் அக்குழுக்களை ரோ அமைப்பின் சதி மூலம் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டது. இது தமிழ்த் தேசிய போராட்டத்தை பலவீனப் படுத்தவும் இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டுவடவும் செய்த சதி.

மாலைதீவில் தமிழ் ஆயுதக் குழு ஒன்று நடாத்திய தாக்குதல், ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் உட்பட பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையில் இன அழிப்புப் போர் 2008/09 போரை இந்தியா முன்நின்று நடாத்தியது. அப்போதே இலங்கைக்கு 500கோடி கைக்கூலியாக இந்தியப் பொதுத் தேர்தலுக்கு பின் தருவதாக இந்தியா இலங்கைக்கு வாக்குறுதி அளித்ததாக நம்பப்படுகிறது. போர் நடந்து கொண்டிருக்கும் போது இலங்கைய இந்தியா போர் நிறுத்தம் கேட்பதாக "பாவ்லா" காட்டிக் கொண்டிருந்தது. நாம் போர் நிறுத்தம் செய்யும் படி கேட்பது போல் கேட்கிறோம் நீ கொன்று குவி! பத்தாயிரம் ஆரியப் பேய்கள் வன்னியில் நின்று போரை முன்னெடுத்ததாம்.

இப்போது அடுத்த சதி: ஆறுமாதத்திற்குள் வதை முகாம்களில் இருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விட்டுக் கொண்டே இருக்கும் ஆனால் இலங்கை அவர்களை கால வரையின்றி வதை முகாம்களில் வைத்துப் படிப்படியாக சாகவிடும். இதுவரை பத்தொன்பதினாயிரத்திற்கும் மேற்பட்டோர் வதை முகாம்களில் இருந்து காணாமல் போயுள்ளனர். இடையில் ஒரு வீராப்புக் கதையும் இந்தியா பேசியது: ஆறு மாதத்திற்குள் குடியேற்றாவிடில் இந்திய இராணுவம் வந்து கண்ணிவெடிகளை அகற்றும். இது இந்தியப் படை இலங்கை வந்து தமிழர் பிரதேசங்களை சிங்கள இராணுவத்திற்கு உதவுவதற்கான சதி.

சிங்களத்தின் திட்டம்: முதலில் தமிழர் பகுதிகளில் அறுபதினாயிரம் சிங்களப் படையினரை குடியமர்த்தி அதன்பின்னர் தான் அங்கு தமிழர்கள் குடியமர்தப் படுவார்கள். தமிழரின் தாயகத்தை இதன் மூலம் கூறு போடப்படும். அங்கு சிங்களவர்கள் ஆள்பவர்களாகவும் தமிழர்கள் அடிமைகளாகவும் உருவாகுவார்கள். சிங்களப்படைகளுக்கு வளமான பகுதிகள் வளமான பகுதிகள் வழங்கப் படும் தமிழர்கள் அங்கு கூலிகளாக்கப் படுவர். இதற்கு உத்தரப் பிரதேசப் பேரின வாதிகள் உதவப் போகிறார்கள்.

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...