Tuesday, 28 July 2009

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியக் கடன்: தாற்பரியங்களும் தாக்கங்களும்.
இனக் கொலைக்கான சர்வதேச் அங்கீகாரம்.
இலங்கையில் ஒரு தினத்தில் மட்டும் இருபதினாயிரம் அப்பாவிகள் கொல்லப் பட்டதுடன் இந்த ஆண்டில் மட்டும் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் அறுபதினாயிரம் அப்பாவித்தமிழர்கள் கொல்லப் பட்டதாக பரவலாக கூறப் படுகிறது. இவர்கள் மீது மோசமான ஆயுதங்கள் பாவிக்கப் பட்டுள்ளதாக ஊடகங்கள் ஆதாரங்களுடன் வெளியிட்டன. சர்வ தேச நாணய நிதியம் இந்நிலையில் இலங்கைக்கு கேட்டதிலும் அதிகமான தொகைப் பணத்தை கொடுத்தது இலங்கையில் நடந்த இனக்கொலைக்குக் கிடைத்த சர்வ தேச அங்கீகாரமாகவே கருதப் படவேண்டும்.

இலங்கை முன்னுதாரணமாகுமா?
போர் நடக்கும் இடத்தில் ஊடகங்களை அனுமதிக்காமல், மருந்துப் பொருட்கள் உணவுப் பொருட்களை அனுமதிக்காமல், தொண்டு நிறுவனங்க்களை அனுமதிக்காமல் சர்வதேச நியமங்களுக்கு முற்றிலும் முரணாகச் செயற்பட்டு நடந்தவற்றிக்கான சாட்சியங்களை மறைத்து, சாட்சி சொல்ல வேண்டியவர்களைத் தடுத்து வைத்து மிரட்டி ஊடகங்களுக்கு முன் தனக்கு சாதகமாக சாட்சி சொல்லவைத்து, தனது குற்றங்களை எப்படி மூடி மறப்பது என்பது சம்பந்தமாக உரிமைப் போராட்டங்களை நசுக்குவதில் மற்ற நாடுகளுக்கு இலங்கை ஒரு முன் உதாரணமாக அமையுமா? இவற்றை எல்லாம் செய்துவிட்டு அயல் நாட்டிலிருந்து ஒரு கேவலமான ஊடகவியலாளரை அழைத்து அவருக்கு செய்ய வேண்டியதைச் செய்து தமக்கு சாதகமாக அறிக்கைவிடச் செய்வதும் நல்ல முன்உதாரணம்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இரட்டை வேடம் போட்டனவா?
ஹிலரி கிளிண்டன் இப்படிச் சொன்னாராம்:
WASHINGTON (AFP) — US Secretary of State Hillary Clinton said here Thursday it "is not an appropriate time" to consider a massive International Monetary Fund loan for Sri Lanka.

Clinton told reporters that the United States has been "trying to convince both sides," the Sri Lankan government and the Tamil Tiger guerrillas, to stop fighting.

"We have also raised questions about the IMF loan at this time. We think that it is not an appropriate time to consider that (loan) until there is a resolution of the conflict," Clinton added.

The United States is the main shareholder in the IMF and its approval is key to the release of the loan.

பிரித்தானியப் பிரதிநிதி ஐநாவில் ஊடகவியலாளரிடம் பேசும் போது இலங்கைக்கு சர்வ தேச நாணய நிதியம் கடனுதவி செய்வதற்கு இது உகந்த தருணமல்ல என்று கூறினார். பிரித்தனியப் பத்திரிகையான ரைம்ஸ் இப்ப்டிச் சொன்னது:

24/07/2009.

Britain was poised tonight to take an unprecedented stand against a US $2.5 billion loan being extended by the International Monetary Fund (IMF) to Sri Lanka because of fears over the humanitarian situation in the county.

A British Government source said that that it was “not the right time to go forward” with the loan, because Sri Lanka is forcibly detaining nearly 300,000 mostly Tamil refugees in internment camps and spending a large proportion of its wealth on its military - even though the country’s bloody 26-year civil war ended in May.

இப்படி இருந்தும் சர்வதேச நாணய நிதியத்தின் வாககெடுப்பில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்சும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை?

முன்னுக்குப் பின் முரண்படும் சர்வதேச நாணய(மில்லா) நிதியம்.

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதில் சகல தரப் பினரதும் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப் படும் என்று சொன்ன சர்வதேச் நாணய நிதிய அதிகாரி பிறையன் அற்கின்சன் மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களைப் புறக்கணித்தது ஏன்?

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய பி. அற்கின்சன் அவர்கள் ஒருகட்டத்தில் கூறியது:

: Maybe I start with the second question. The IMF’s money does not directly fund the government’s budget efforts. It’s lent entirely to the central bank to rebuild reserves.

பிறகு இன்னொரு கட்டத்தில் இதற்கு முரணான கருத்தைத் தெரிவிக்கிறார்.

But, in Sri Lanka’s case, they have been hit by the global crisis, and the IMF’s mandate is to address and ward off balance of payments crises. Now that’s the balance of payments crisis sounds rather dry, but it really would have a devastating impact on the economy and on the people, particularly the most vulnerable as we’ve seen in other countries. So our job, our mandate is to prevent such a crisis.


பிறகு இப்படிக் கூறுகிறார்:

As you know, the program targets reserves. And, depending on the supply and demand for foreign exchange to meet those reserve targets, then the exchange rate will be the one factor that equilibrates the supply and demand, but the reserve targets are the foundation of the program.

ஆனால் பொருளாதர நிபுணர்களின் கருத்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைப் பொருளாதாரத்தை இனி வழிநடத்த்ப் போகிறது என்பதாகும்.

இலங்கை ரூபாவின் மதிப்பு ஏன் ஏறவில்லை?

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைத்தவுடன் ரூபாவின் மதிப்பு ஏறி இருக்க வேண்டும் ஆனால் ஏறவில்லை! இலங்கையின் மத்திய வங்கிக்கு சர்வ தேச நாணய நிதியம் ரூபாவின் மதிப்பை ஏறாமல் பார்துக் கொள்ளும்படி கட்டளையிட்டதா?

இது தொடர்பாக பி. அற்கின்சன் மழுப்பலான பதிலையே கூறினார். அவர் உள்ளூர் அரசியலைக் கருத்தில் கொண்டாரா?

கடன் கொடுத்து கொடுத்த கடனை வாங்குகின்றனரா?

சென்ற ஆண்டு இலங்கைக்கான கடன் வழங்கு தரத்தை தர நிர்ணய அமைப்புக்கள் தரம் தாழ்திய நிலையில் HSBC வங்கி இலங்கையின் கடன் வழங்கி இருந்தது. வங்கிகள் யாவும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் இக்கடனை இலங்கை திருப்பிக் கொடுக்காத நிலை ஏற்பட்டால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு மேலும் அடி விழும். நாணய நிதியம் வழங்கிய கடனுதவி ஏற்கனவே இலங்கை பெற்றுள்ள கடன்களி திருப்பியளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்ததா?

இலங்கை மக்கள்மீது பாரிய வரிச்சுமை?

இலங்கைசர்வ தேச நாணய நிதியத்திற்கு வழங்கிய உறுதி மொழிகளில் வருமான வரி விதிப்பு முறைமை முற்றாக மறு சீரமைக்கப் படும் என்பதும் ஒன்றாகும். வரிவசூலிக்கும் முறைமை ப்ரவலாக்கப் ப்டுமாம். இதனால் இதற்கு முன்பு வரிசெலுத்தாத மக்களிடமிருந்தும் வரி அறவிடும் முறை உருவாகலாம்.

பி. அற்கின்சன் இப்படிக் கூறினார்:

I believe that the government is trying to, as they state in their Memorandum of Economic Policies, intends to target some payments, transfers, better so that they can go to the people who need it most. So that is one of the reasons why the government feels that they need to raise revenue under their program.

எதிர்வரும் இலங்கை அதிபர் தேர்தலைத் தொடர்ந்து மக்கள்மீது பாரிய வரிச் சுமை ஏற்படுத்தப் படலாம்.மானியங்கள் நிறுத்தப் படும்

இலங்கை இதுவரை இலங்கை மின்சார சபை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,போன்ற பல அரசுடமை அமைப்புக்களுக்கு வழங்கிவந்த மானியங்கள் 2011 இல் இருந்து நிறுத்தப் படும். இதனால் மின்சாரம் எரிபொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...