Sunday, 12 July 2009

கனி மொழியின் இலங்கைப் பயணம்- சில சந்தேகங்கள்.


கலைஞர்களின் வாரிசுகளின் கனிமொழி அவர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் கனிமொழி அவர்களது பங்களிப்பு உன்னதமானது. கனிமொழி அவர்கள் வன்னி அகதி முகாம்களைச் சென்று பார்க்கவிருக்கிறார் என்பது மகிழ்ச்சியைத் தரவில்லை. சில சந்தேகங்களை எழுப்புகிறது.

தனக்குச் சார்பானவர்களை மட்டுமே வன்னி முகாம்களைச் சென்று பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்கிறது. இந்து ராம் அவர்களை அனுமதித்து அவர் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தினமணியிடம் முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இலங்கையின் அரசியலிலும் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் வன்னி முகாம்கள் இனிப் பெரும் பங்கு வகிக்க விருக்கிறது. இதை வைத்து தனது வெளிநாட்டுச் செலவாணிப் பற்றாக் குறைய தீர்ப்பது இலங்கையின் நோக்கமாகக் கருதப் படுகிறது.

தமிழ்த் தேசியவாதத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவதானால் வன்னி முகாம்களின் இருப்பவர்களுக்கு முறையான படம் படிப்பித்தே ஆக வேண்டும்.

சில மேற்குலக நாடுகள் தமது பிராந்திய நலன்களைப் பாதுகாப்பதற்கு வன்னி அகதி முகாம்களைத் தமது துருப்புச் சீட்டாக வன்னி முகாம்களைப் பாவிக்கலாம் எனக் கருதப் படுகிறது.

இந்தியா சீனா இலங்கையில் எடுத்தது போக எச்சங்களைத் தான் எடுத்துக் கொள்ளக் காத்திருக்கிறது. இலங்கையில் இந்த மாதிரி தானும் சீனாவும் "பங்கு போட்டுக் கொள்ள" தயாரக இருக்கிறது. இந்தப் பங்கு போடுதலில் மேற்குலக நாடுகளும் இணைவதை இந்தியா விரும்பவில்லைப் போலிருக்கிறது. இப்போது தமிழ்தேசியப் போராட்டதின் ஆயுதபலம் இந்தியாவின் ஒரு குடும்ப நலனுக்காகவும் ஒரு சாதியின் ஆதிக்கத்திற்காகவும் மழுங்கடிக்கப் பட்ட நிலையில் இலங்கைமீதான இந்தியாவின் பிடி தளர்ந்து போயிருக்கிறது. தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்து கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த தொடர் உதவி செய்தலும் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடங்கியிருக்கச் செய்தலுமே இந்திவின் குறைந்த பட்சப் பிடியிலாவது இலங்கையை வைத்திருக்க முடியும். இதன் ஒரு அம்சமாகவே தமிழக முதல்வர் கலஞர் இலங்கையில் தமிழர்கள் (தாம் உத்தர பிரதேச பேரின வாதிகளுக்கு அடங்கியுருப்பதைப் போலவே) சிங்களவர்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று அண்மையில் கருத்து வெளியிட்டார். இந்நிலையில் கனிமொழியை இலங்கை அரசு அனுமதித்தது சந்தேகத்தைத் தருகிறது. போர் முடிந்தவுடன் கலைஞரை இலங்கை வரும்படி இலங்கை அதிபர் அழைத்திருந்தார். அவர் அழைப்பின் உள்நோக்கம் வெளிப்படையானது. கலைஞரை எப்படியாவது தன் வழிக்குள் கொண்டுவருவதே அதன் நோக்கம். ஆரிய சிங்களக் கூட்டமைப்பு இப்போது எப்படியாவது வன்னிமுகாம்கள் ஒழுங்காக நடக்கிறது என்று உலகிற்கு பறைசாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது. இதற்குக் கனிமொழி தெரிந்தோ தெரியாமலோ பலிக்கடாவாகப் போகிறார்.

கனிமொழி நீந்தத் தெரியாத மீன் குஞ்சு அல்ல. அவர் வன்னி சென்று வந்து முகாம்களில் உள்ள குறைபாடுகளி எடுத்துச் சொல்வது போல் சொல்வார். தம்மை இலங்கை அரசு நட்புடன் நடத்தியதாகவும் சொல்வார். வன்னி முகாம்களுக்கு மேலும் பண உதவிகள் தேவை என்று அறிக்கை சமர்ப்பிப்பார். அதையொட்டி இலங்கைக்கு இந்தியா வழங்கவிருக்கும் 500 கோடி ரூபா நிதி உதவி மேலும் அதிகரிக்கப் படும். அதன் பிறகு கனிமொழிக்கு இலங்கைத் தமிர்களின் துயர் துடைத்தவர் என்று பாராட்டுக் கூட்டமும் நடாட்த்தப்பட்டு ஈழவர் காவல்த் தேவதை என்று பட்டமும் வழங்கப் படும்.

5 comments:

Anonymous said...

இப்போது தமிழர்களைத் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே பாதுகாக்க முடியும். அவர்களும் எதிரணியில் இணைந்தால்??????

Barari said...

ELLAVATRIYUME SANTHEKA KAN KONDU PAARTHTHU ETHAI SAATHIKKA POKIREERKAL.KAIYARU NILAIYIL ULLA NAAM ETHAIYAAVATHU YAARAIYAAVATHU NAMBITHTHAAN AAKA VENDUM.

Anonymous said...

இருபது நாடுகள் இலங்கையுடன் சேர்ந்து சாதித்தது: மூன்று இலட்சம் தமிழர்களை நிர்க்கதியாக்கியது.
இப்போது இவர்களுக் உதவ யாருமில்லை.

தமிழினியன் said...

இன்று (12/07/2009) அன்னா அறிவாலயத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் “தமிழினத் தலைவர்” கலைஞருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் “மௌண்ட் ரோடு மகாவிஷ்னுவின் தற்போதைய தலைமைக்குருக்கள்” என்.ராம் .

கணிமொழியின் கட்டுரைக்கு அடுத்த நாளோ அல்லது அன்றேயோ ஹிந்து’வில் இடஒதுக்கீடு வழங்கப்படலாம்.

இடஒதுக்கீடு காத்த சமூகநீதிவீரர் ராமுக்கு அருகாமையில் இடம் வழங்குவது தவறு இல்லை எனவும். அவருக்கு சமூகநீதிகாவலர் பட்டம் வழங்கவும் முன்வரலாம். ராம் ஸ்ரீலங்கா ரத்னா விருதோடு இதையும் சேர்த்து தொங்கவிடலாம்.

யாரின் பிடியில் யார்?

Anonymous said...

karunanidhiyin kudumba arasiyal aadayam appavi tamil makkal bali

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...