Monday, 29 June 2009

விகடனின் கபடம் – பிரபாகரனின் இறப்பு விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டன. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. (அவர் எப்படி சட்டக்கல்லூரியில் தேர்ச்சி பெற்றார் என எமக்குத் தெரியும்.) இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. 

விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை. .
பிரபாகரனின் முடிவு இரு வாரங்களுக்கு முன்னர் பிரபாகரனின் முடிவு பற்றி கொழும்பின் ஒரு கதை பரவி இருந்தது. பிரபாகரன் சரின் நஞ்சு வாயுக் குண்டு மூலம் மயங்க வைக்கப் பட்டு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப் பட்டார். கைது செய்யப் பட்டவர்களுள் பிரபாகரனின் மனைவி மதிவதனி 14 வயது மகன் பாலச்சந்திரனும் அடங்குவர். தந்தைமுன் மகன் சித்திரவதை செய்யப்பட்டார். இந்த மாதிரிப் போனது அப் பொய்க்கதை. உண்மையில் எஞ்சியுள்ள ஒவ்வொரு விடுதலைப் புலிகளின் பிரிவுகள் ஒவ்வொன்றாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று ஒத்துக் கொண்டபின் கொழும்,பிலுள்ள தமிழ்த்தேசிய விரோதிகள் பிரபாகரன் எப்படி இறந்தார் என்று கதை கட்டுவது என்று அறை போட்டு யோசிக்கத் தொடங்கிவிட்டனர். விடுதலைப் புலிகள் தரப்பில் பிரபாகரன் எப்படி இறந்தார் என்று தெரிவிக்கவில்லை. அது இவர்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. அவிழ்த்து விட்டாங்களய்யா ஒரு கதை. இக்கதை விகடன் முன்னர் வெளியிட்ட பிரபாகரனின் முடிவு தொடர்பான பலகதைகளுக்கு முரண்பாடானது.ஜுனியர் விகடன் தனது கடைசிப் பதிவில் இக் கட்டுக்கதையைப் பிரசுரித்துள்ளது. . விகடனின் கதை இப்படிப் போகிறது: ''பிரபாகரனின் நெற்றியின் மேல்பகுதியில் ஜெனரல் ஜகத் டயஸ் என்ற ராணுவ அதிகாரி அங்கிருந்த கோடரியால் தாக்கியதைத் தொடர்ந்தே இறப்பு நிகழ்ந்ததாக ராணுவத் தரப்பிலிருந்து தகவல் வருகிறது. அதற்கு முன்பாக, காய்ச்சிய கம்பிகளாலும் பிரபாகரன் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அந்த வரிக் காயங்கள் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் நந்திக்கடல் நீர்நிலை அருகே உடம்பைக் கண்டெடுத்தாகக் காட்டிய பதிவுகளில், உடையோடு காட்டினார்கள். சீருடை இல்லாமல் காட்டிய மற்றொரு படத்தில் காயங்களின் மீது சேற்றைப் பூசி வைத்திருந்தார்கள் போலி ருக்கிறது...'' என்றும் சொல்கிறார் இவர். . இப்பதிவின் நோக்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது பற்றியல்ல. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றியுமல்ல. தமிழ்த் தேசியத்தின் விரோதிகளின் பொய்ப் பிரசாரங்களைப் பற்றியதே. . இலங்கை அரசு பிரபாகரனின் இறந்த உடலின் பல படங்களை வெளியிட்டது. இதில் எந்தப் படமும் பிரபாகரனுடையது அல்ல. மேலுள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். தலையில் காயத்துடன் இருக்கும் படம் இலங்கை அரசு வெளியிட்ட படம் அதையே விகடனும் மறு பிரசுரம் செய்துள்ளது. மற்றப் படம் உண்மையான பிரபாகரனின் படம். பிரபாகரனின் அகன்றமுகம் இறந்த உடலில் இல்லை. நாடியின் மத்தியில் உள்ள பிளவைக் கவனியுங்கள். பிரபாகரனின் தோற்றமுடைய கொழும்பு நகைக் கடை உரிமையாளர் எங்கே? அவர் எப்படிக் காணாமற் போனார்? ஏன் காணாமற் போனார்? சிந்தித்துப் பாருங்கள் ஏதாவது விடை கிடைக்கும். . இலங்கை அரசு வெளிவிட்ட எந்த ஒரு படத்திலும் அதன் முகம் சரின் நஞ்சுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான ஒருவரின் முகம்போல் இல்லை. சரின் குண்டுத் தாக்குதலுக் குள்ளானவர்களின் படங்களை இதற்கு முன்னர் தொலைக் காட்சிகளின் பார்த்திருக்கிறேன். முகம் நன்கு கறுதிருக்கும். சரின் நஞ்சுக் குண்டுகளைப் பற்றி ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்: In 1995, Japan's Aum Shinrikyo cult unleashed sarin gas in Tokyo's subways, killing 12 people and sickening thousands. In February of this year, Japanese courts convicted the cult's former leader, Shoko Asahara, and sentence him to be executed. Developed in the mid-1930s by Nazi scientists, a single drop of sarin can cause quick, agonizing choking death. Nerve gases work by inhibiting key enzymes in the nervous system, blocking their transmission. Small exposures can be treated with antidotes, if administered quickly. Antidotes to nerve gases similar to sarin are so effective that top poison gas researchers predict they eventually will cease to be a war threat. xxx Even at very low concentrations, sarin can be fatal. Death may follow in one minute after direct ingestion of a lethal dose if antidotes, typically atropine and pralidoxime, are not quickly administered.[2] Atropine, an antagonist to muscarinic acetylcholine receptors, is given to treat the physiological symptoms of poisoning. Since muscular response to acetylcholine is mediated through nicotinic acetylcholine receptors, atropine does not counteract the muscular symptoms. Pralidoxime can regenerate cholinesterases if administered within approximately five hours. It is estimated that sarin is more than 500 times more toxic than cyanide.[7] The short- and long-term symptoms experienced by those affected included: coma convulsions death difficulty breathing disturbed sleep and nightmares extreme sensitivity to light foaming at the mouth high fevers influenza-like symptoms loss of consciousness loss of memory loss of bowel control nausea and vomiting paralysis post-traumatic stress disorder respiratory problems seizures uncontrollable trembling vision problems, both temporary and permanent.

முதலில் plasticine clayஆல் செய்யபட்ட ஒரு முகத்தை இறந்த ஒருவரின் தலையில் பொருத்திக் காட்டினார்கள் அது மேலுள்ள படத்தின் இடதுபக்க மேல் மூலையில் உள்ளது. அதில் நன்கு சவரம் செய்யப்பட்ட முகம்.  நாள் முழுக்க குண்டுமழைக்கு நடுவில் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு முகம் சவரம் செய்து அழகாக தோற்றமளிக்க முடியுமா என்றும் தலை பிளந்து இரத்தம் போன பின்பு முகம் சுருங்காமல் இருக்குமா என்ற கேள்வி எழுப்பிய பின்னர் வேறு ஒருவரின் உடலை சவரம் செய்யாத முகத்துடன் காட்டினார்கள். பிரபாகரனின் நாடியில் உள்ள பிளவு இலங்கை அரசு வெளியிட்ட இரண்டு படத்திலும் இல்லை. 

பிரபாகரனின் உடல் என்று யாரோ ஒருவருடைய உடலை சவரம் செய்யப்படாத முகத்துடன் பின்னர் படமாக வெளியிட்டனர். பிரபாகரனைப் போல் தோற்றமுடைய ஒருவர் கொழும்பில் நகைக்கடை வைத்திருந்தார். அவர் 2009 மே மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். மேலுள்ள படத்தின் வலது பக்க மேல் மூலையில் உள்ள படம் அதுவாக இருக்கலாம். 

இலங்கை அரசின் உளவுத்துறை பொய்ப்பரப்புரைக்காக பெரும் செலவு செய்கின்றது. அதில் கணிசமான பகுதி விகடன் குழுமத்திற்கு செல்கின்றதா? சென்னைக்கான துணைத்தூதுவரகத்தில் பணிபுரியும் ஹம்சா குணவர்த்தனா எப்படி தமிழ்நாட்டு ஊடகர்களை தன் கைப்பொம்மைகளாக வைத்து ஆட்டிப்படைத்தார் என்பதை நாம் அறிவோம். 

6 comments:

Anonymous said...

பிரபாகரன் இருக்கிறாரா இறந்திட்டாரா என்ற விடயத்தை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், ஒருவர் இறந்து சிலநாட்களானால் முகம் கொஞ்சம் வீங்கும்/அதைச்சுப் போகும். அதனால நாடியிலுள்ள வெட்டு தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறதல்லவா?

Anonymous said...

But here the face gone smaller...

Anonymous said...

இரண்டாவது படத்தில் அல்லவா முகம் அதைத்துப் போயிருக்கிறது. இறந்த படதில் முகம் சிறிதாக இருக்கிறது.
இனி ஒருவர் பின்னூடம் இடுவார் இரத்தம் கடுமையாகப் போனதால் முகம் சுருங்கி விட்டது என்று. அது எப்படி நாடியடி மட்டும் சுருங்கும்?

நாதாரி said...

இன்னும் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது ஈழஉரிமைப்போர் நடக்கும் அதுவரைக்கும் தலைமையேற்று இருந்தாகவேண்டும் என்று பிரபாவை நாம் யாரும் கட்டாயப்படுத்தமுடியாது

அவர் இருந்தாலும், இல்லையென்றாலும் பல்வேறுவடிவங்களில் இந்த தாகம் முன்னெடுக்கப்படும் என்பதை எதிர்நிலையில் இருப்பவர்கள் மிகநன்றாக புரிந்துவைத்திருக்கிறார்கள் அதுதான் நம்மை ஓரு சுழலுக்குள் சிக்கவைத்து கண்ணாமூச்சி ஆடவிட்டிருக்கிறார்கள்

அவர்களின் ஆசைப்படி புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டால் கூட சதைத்துணுக்களிலின்றும் டெர்மினேட்டர்களைப்போலஒரு இயக்கம் உருவெடுக்கும் ஏனென்றால் சமூகவிதி ஆககூடுதல் பலமானதாகும்

அவதானியுங்கள் முன்பைவிடவும் இப்போது தீவிரமாக ஈழத்தை முன்னிறுத்துவதற்க்கான காரணங்களை சிங்களம் ஏற்படுத்தியிருக்கிறது.

பலம் உள்ளது ஜெயிக்கும் என்ற நீட்சேவின் வரிகளை கொஞ்சம் பொய்யாக்கிவிடுகிற நிலைமையை அவர்களே ஏற்படுத்தி தருவார்கள்

Sindhu said...

கானகத்தில் இருந்து வழிகாட்டியவன்......
(??????இறந்திருந்தாலும்?????????)
வானகத்தில் இருந்து வழிகாட்டுவான்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...