Tuesday, 2 June 2009

தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது


இலங்கையில் இந்த ஆண்டு மட்டும் முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு இந்தியாவும் உதவியது. இந்தியா தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென தேர்தல் காலக்கூச்சல்கள் தமிழ் நாட்டில் எழுந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்? இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்?

.

இந்தியா தொடர்பாக அண்மையில் வெளிவந்த கருத்துககள்:  • இலங்கைப் போருக்கு இந்தியா உதவியதை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிறட் அடம்சும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • இலங்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட இருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்த பிறகும் இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாததற்காக அந்த நாடு என்ன காரணங்களை கூறினாலும் அதனை ஏற்க முடியாது.

  • இதில் இந்தியா சற்று தீவிரமாக செயல்பட்டிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என 'த ரைம்ஸ்' நாளிதழிடம் பிறட் அடம்ஸ் கூறினார்.

  • இலங்கைப் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

மீண்டும் மேலுள்ள கேள்விக்கு வருவோம்: இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?


இலங்கை சுதந்திரமடைந்தவுடன் பத்து இலட்சம் தமிழ் வாககாளர்களின் வாககுரிமை பறிக்கப் பட்டது. இந்தியாவின் நேரு இதைப்பற்றிக் கூறுகையில் அது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் என்றார். இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?


பின்னர் வந்த இந்தியப் பிரதமர் சாஸ்திரி இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயககவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன் படி பல இலட்சக் கணக்கான தமிழ் மககள் நாடற்றவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது சகல மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் அப்பாற் பட்ட நடவடிக்கை. பன்னாட்டுச் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணானது. ஆனாலும் இந்தியா இதைச் செய்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?


1958இல் இலங்கையில் பெரும் இனக்கொலை நடந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?


1972 சிங்கள பொது உடமைவாத இளைஞர்கள் ஆயுதப் புரட்சி செய்தனர். இந்தியப் படையினர் இலங்கைக்கு சென்று அதை அடக்கினர்.


1977 இல் இலங்கையில் பெரும் இனக் கொலை நடந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?


அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தைக் குத்தகைக்கும், சிலாபத்தில் வானொலி நிலையம் என்ற பெயரில் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான தொலை தொடர்பு நிலையத்தையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டது. இப்போது இந்திரா காந்தி அம்மையார் தமிழர் பிரச்சினையில் அக்கறை(?) காட்டத்தொடங்கினார். தமிழ்ப் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தார். ஆயுதம் கொடுத்தார். ஆனால் வெளிநாடு ஒன்றில் இருந்து ஆயுதக் குழுவொன்று கொள்வனவு செய்த அதி நவீன ஆயுதங்கள் இந்தியாவால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய உளவுத்துறை தமிழ் குழுக்களுக்கிடையில் சண்டை மூட்டிவிட்டது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?


தமிழ் குழுக்கள் வேறு நாடுகளுடன் நட்பு பாராட்டுவதை இந்தியா எதிர்த்தது. அவர்கள் தம்முடன் மட்டுமே உறவுகளை வைத்திருக்க வேண்டுமென்று வற்புறுத்தியது. தமிழ்க்குழுக்களும் அவற்றை ஏற்று நடந்தன. தமிழ் குழுக்களை மற்ற நாடுகள் வெறுத்தன. தமிழர்கள் தனிமைப் படுத்த்ப் பட்டனர். தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவின் தயவையே நாடி நின்றன.


1985 இல் வல்வெட்டித்துறையில் இரு பாடசாலைகளில் பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப் பட்டனர். இதற்குப் பழி வாங்கும் முகமாக ஒரு பேரூந்தில் விடுதலைப் புலிகள் அனுராதபுரத்தை தாக்கினர். அனுராதபுரம் அவர்களது கட்டுப்பாட்டில் பல மணி நேரம் இருந்தது. இப்படியான தாக்குதல் இலங்கையில் எப் பாகத்திலும் நடத்தப் படலாம் என்று இலங்கைப் புலனாய்வுத் துறை தெரிவித்தது. இப்போது இலங்கை தமது நாட்டுப் பிரச்சனையை தீர்க்க இந்தியாவை நாடியது. திருகோணமலைத் துறை முக குத்தகைத் திட்டமும் சிலாபத்தில் அமைக்கவிருந்த வானொலித்திட்டமும் கைவிடப் பட்டது. இலங்கை இந்தியாவிற்கு பணிந்தது. இது தமிழர்களின் தோளில் ஏறியிருந்து இந்தியா சாதித்தது. ராஜீவும் ஜேஆரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இதன் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளிக்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தியது. அவர்களின் பாதுகாப்பிற்கு தாம் உத்தரவாதம் என்றது. ஆனால் புலேந்திரன் குமரப்பா போன்றோ கைது செய்யப் பட்டு மரணித்த போது இந்தியா வெறுமனெ கைகட்டி நின்றது. இந்திய அரசிடம் சில கோரிக்கககலை வைத்து உண்ணா விரதம் இருந்து அன்னை பூபதி தியாகி திலீபன் மரணமடைந்தனர். புலிகளை ஒழிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனவின் முதிர்ந்த அரசியல் தந்திரத்திற்கு கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தி பலியனார்.


இந்திய அமைதிப் படையின் கசப்பான அனுபவங்களிற்குப் பின் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதில்லை எனக் கூறிக் கொண்டு சிங்களப் படையினருக்கு ஆயுதங்களையும் பயிற்ச்சிகளையும் வழங்கி வந்தது. தமிழ் மீனவர்களைக் கண்டபடி சுட்டுக் கொன்றது இலங்கை இராணுவம். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இந்தியா ஏன் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?


திரை மறைவில் இந்தியா இலங்கைக்குப் வழங்கி வந்த பல உதவிகள் ராஜீவின் மகள் பிரியங்கா ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினி சந்தித்த பின் தீவிரமடைந்த்தாக நம்பப் படுகிறது. இந்தியப் படையினர் நேரடியாக இலங்கை வந்து இனக்கொலை செய்யும் இலங்கை இராணுவத்தினருக்கு உதவினர் என்றும் நம்பப் படுகிறது. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர், அவயங்களை இழந்தனர். பல்லாயிரக் கணக்கான வீடுகள் அழிக்கப் பட்டன. இரண்டு இலட்சத்திற்கு மேலான மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப் பட்டனர். இவர்களுக்கு உதவுவது யார்?

1 comment:

Unknown said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...