Friday, 29 May 2009

சர்வ தேச அரங்கில் தமிழர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் இந்தியா!


தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு இலங்கையில் முடிவு கட்டியதற்கு(?) பெரும் பங்காற்றிய இந்தியா இப்போது உலக அரங்கில் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. உலகெங்கும் வாழ் தமிழ் மக்கள் தமது அயாராத் போராட்டத்தால் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில நாடுகளைத் ஈழத்தமிழர்களின் அவலத்தை நோக்கி அவர்களது பார்வையைச் செலுத்த வைத்தனர். இதன் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன் வைத்த தீர்மானத்தை நீதிக்கு எதிரான வகையில் இந்தியா எதிர்த்தது. இலங்கைக்கு எதிராக தமிழர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்: • தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இடைத்தங்கல் முகாம் எனப் படும் வதை முகாம்களில் தடுத்து வைத்திருத்தல்.


 • அம் முகாம் களில் உள்ள மிக மோசமான நிலை.


 • அம் முகாம்களில் உள்ள இளைஞர்கள் காணாமல் போதல் அல்லது கொலை செய்யப்படல்.


 • அம் முகாம்களில் உள்ள யுவதிகள் பாலியல் அடிமைகளாக்கப் பட்டமை.


 • அம் முகாம்களுக்கு தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமை.


 • காயப்பட்டவர்களின் உடலுறுப்புகளைத் திருடிவிட்டு அவர்களைக் கொல்லுதல்.


 • அம் முகாம்களுக்கு பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தமை.


 • அம் முகாம்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை.


 • பாதுகாப்பு வலய மென்று அறிவித்த பிரதேசத்தில் குண்டுகள் வீசி அப்பாவி பொதுமக்களைக் கொன்றமை.


 • போர் நடந்த்து கொண்டிருந்தவேளை பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு மருந்துப் பொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப் படுவதைத் தடுத்தமை.


இப்படிப் பல குற்றச்சாட்டுக்கள் இலன்கைக்கு எதிராக ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தாம் தயாராக இருப்பதாக தமிழர் தரப்புக் கூறுக்கிறது. ஐநா மனித உரிமை மன்றில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை இந்தியா எதிர்த்ததுடன் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் படி சில நாடுகளை வலியுறுத்தியதாகவும் சொல்லப் படுகிறது.


தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்பு
தமிழ்த் தேசிய வாதத்தின் ஆயுத பலம் மழுங்கடிக்கப் பட்ட நிலையில் அதன் பன்னாட்டுக் கட்டமைப்பு இன்னும் உறுதியுடனும் புதிய உத்வேகத்துடனுமே இருக்கிறது. ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் அடுத்த நடவடிக்கை இந்த கட்டமைப்பைத் தகர்த்தெறிவதாகவே இருக்கும். அதற்கு ஆரிய சிங்களக் கூட்டமைப்பு தமிழ்த்தேசிய வாததிற்க்கு எதிராக இலங்கையில் செய்ததுபோல் பன்னாட்டு மட்டத்திலும் பின் வருபவனற்றைச் செய்யலாம்: 1. தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்புக்குள் தமது உளவாளிகளை ஊருடுவச் செய்தல்.


 2. தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தி சகோதர யுத்தம் புரிய வைத்தல்.


 3. தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்பின் சொத்துக்களை அழித்தல்.


 4. தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்பு செயல்படும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தல்.


 5. கொலை கொள்ளைகளின் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்புடன் சம்பந்தப் படுத்தல்.


இப்படிப் பட்ட செயல்களை ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக செய்து முடித்தது. அந்த அனுபவம் இதற்கு நன்கு உதவும்.

3 comments:

மதிபாலா said...

ஆரிய சிங்களக்///

???

தவறு. சிங்களமும் ஆரியத்தின் ஒருபகுதியே. சிங்கள மொழியே ஒரு இன் டோ ஆரிய மொழிதானே?

மற்றபடி உங்கள் பதிவோடு ஒத்துப் போகிறேன்

Anonymous said...

இப்போதுள்ள சிங்கள இனம் நாகர், வங்காளிகள், சேரர், சோழர், பாண்டியர்,போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்ற பல இனங்களின் சங்கமம்.

கவிக்கிழவன் said...

supper

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...