Tuesday, 28 April 2009

காணொளியில்கனிமொழியின் பொய் மொழி- இலங்கையில் போர் நின்று விட்டதாம்.


இலங்கையில் போர் நிறுத்தம் என்று இலங்கை அரசு சொன்னதாம் இது கனிமொழியின் கனி வாய் மொழி.
பேச்சுக்கு புது இலக்கணம் வகுத்தவரின் மடியில் வளர்ந்தவரது வாய் என் இப்படித்தடுமாறுகிறது? பொய் கூறுவதலா?


மேனன்-நாராயணன் சதியும் அமெரிக்க எச்சரிக்கையும்
உண்ணா விரத கபடமும்.
இந்தியாவின் சிவ் சங்கர மேனனும் நாராயணனும் கொழும்புக்கு செய்த பயணத்தில் ஒரு பயங்கரத் திட்டம் இருந்தது. இரண்டொரு நாட்களில் எஞ்சியிருக்கும் பிரதேசத்தையும் இலங்கை கைப்பற்ற வேண்டும் என்பதும் இதை பெரிய வெற்றியாக இந்தியா வட மாநிலங்களில் பறைசாற்றுவதும் தான் அத்திட்டம். இதற்கு முன்னோடியாக பல வட இந்திய ஊடகங்களில் விடுதலைப் புலிகளை மோசமான பயங்கரவாதிகளாக பறைசாற்றப் பட்டன. புலிகளைத் தோற்கடித்த பின் இலங்கை இந்தியா ஒரு கூட்டறிக்கையை விடும் திட்டமும் இதில் அடக்கம். இக்கூட்டறிக்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு தடையாக இருந்த விடுதலைப் புலிகள் ஒழிக்கப் பட்டு விட்டனர் என்று கூறப்படவிருந்தது, விரைவில் இனப் பிரச்சினை சுமூகமாகத் தீர்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு வாக்காளர்களையும் ஏமாற்றலாம் என்ற நம்பிக்கை!
.
இந்திய-இலங்கையின் இந்த இனக் கொலைத்திட்டம் பாரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று மேற்குலக நாடுகள் அஞ்சின. அத்துடன் அங்குள்ள தமிழர்கள் திரண்டெழுவது தமக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்த்தன. இதனால் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு காட்டமான அறிக்கை இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்டது. இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா ஏற்கனவே பல திரைமறைவு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை போர்நிறுத்தம் செய்யும்படி மூன்று தடவைகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததைத் தொடரந்து சில வாரங்களுக்கு முன்னர் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்தும் படி வற்புறுத்தியிருந்தது. அமெரிக்கா இதே கனரக ஆயுதப் பாவிப்பு நிறுத்தக் கோரிக்கையை திரைமறைவாக இலங்கையிடம் பகிரங்கமாக விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்தபோது இலங்கையால் மறுக்க முடியவில்லை. உடன் இந்தியாவைத் தொடர்பு கொண்டது. இந்தியாவும் சம்மதித்து ஒரு நாள் கழித்து இதைச் செய்யும் படி இலங்கையைப் பணித்தது. இப்போது அரசியல் கட்சிகள் தமது வாக்கு வேட்டை நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கின. அதுதான் முதல்வர் கருணாநிதி, தங்கபாலு ஆகியோரின் உண்ணாவிரத நாடகம். கருணாநிதி அவர்களின் உண்ணாவிரதத்தின் பின் சிதம்பரம் அவர்கள் இலங்கையில் போர்நிறுத்தப் பட்டுவிட்டது என்று அறிவித்ததன் பின்னர் 272 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

3 comments:

supersubra said...

இலங்கை அரசின் அதிகார பூர்வ செய்தி தளம்

LTTE யை அடியோடு ஒழித்து கட்ட இதை விட சிறந்த தருணம் கிடையாது. Former IPKF Commander அசோக் மேத்தா.

http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=9387&Itemid=44

Anonymous said...

அசோக் மேத்தா!! DID LTTE RAPE YOUR DAUGHTER?OR YOUR WHIFE???

Anonymous said...

கனிமொழி பேசவில்லை அவரது சுவிஸ் வங்கியில் இருக்கும் 500கோடி பேசுகின்றது, இவளே ஒரு ஓடுகாலிக் கழுதை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...